search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆன்டனி பிளிங்கன்"

    • அமெரிக்கா, சீனா இடையே வர்த்தக மோதல் இருந்து வருகிறது.
    • வெளியுறவு மந்திரி ஆன்டனி பிளிங்கன் ஷாங்காய் மற்றும் பீஜிங் செல்கிறார்.

    வாஷிங்டன்:

    அமெரிக்கா, சீனா என்னும் இரு பெரும் பொருளாதார வல்லரசு நாடுகள் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நிலவிவருகிறது.

    தைவான் மீதான சீனாவின் ஆதிக்கம், சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்காங்கில் மனித உரிமைகள் மீறல், தென் சீனக்கடல் பகுதியில் சீன ராணுவ ஆதிக்கம், உக்ரைன் போரில் சீனாவின் ரஷிய ஆதரவு நிலை என பல்வேறு பிரச்சனைகளில் சீனாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே மோதல் போக்கு உள்ளது. இன்னொரு புறம் இரு தரப்பு வர்த்தக மோதலும் இருக்கிறது.

    இந்நிலையில், அமெரிக்காவின் வெளியுறவு மந்திரி ஆண்டனி பிளிங்கன் வரும் 24-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை சீனாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

    ஷாங்காய் மற்றும் பீஜிங் செல்லும் வெளியுறவு மந்திரி ஆன்டனி பிளிங்கன், அங்கு வெளியுறவு மந்திரி வாங் யீ உள்ளிட்ட சீன அதிகாரிகளைச் சந்திக்கிறார். மேலும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்திப்பார் எனவும் தகவல் வெளியானது.

    • இந்தியா, அமெரிக்கா இடையே இருதரப்பு பேச்சுவார்த்தை இன்று தொடங்கியது.
    • அமெரிக்க வெளியுறவு மந்திரி மற்றும் பாதுகாப்புத்துறை செயலாளர் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

    புதுடெல்லி:

    இருநாட்டு நல்லுறவு தொடர்பாக இந்தியா, அமெரிக்கா இடையே இருதரப்பு பேச்சுவார்த்தை இன்று தொடங்கியது.

    இந்தப் பேச்சுவார்த்தையில் இந்தியா சார்பில் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் ஆகியோர் பங்கேற்கின்றனர். அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆண்டனி பிளிங்கன், பாதுகாப்புத்துறை செயலாளர் லாயிட் ஆஸ்டின் ஆகியோரும் கலந்து கொள்கின்றனர்.

    இந்தப் பேச்சுவார்த்தையில் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துதல், உலகளாவிய கவலைகளை நிவர்த்தி செய்தல் மற்றும் இந்தோ-பசிபிக்கில் ஒத்துழைப்பை ஊக்குவித்தல் உள்பட பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளன.

    இந்நிலையில், அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஆண்டனி பிளிங்கன் இன்று டெல்லியில் வெளியுறவு மந்திரி ஜெய்சங்கரை சந்தித்தார். இருதரப்புக்கு இடையிலான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

    • அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆன்டனி பிளிங்கன் இன்று ஜோர்டான் சென்றடைந்தார்.
    • பாலஸ்தீன அதிபர் மகமது அப்பாசையும் சந்தித்துப் பேசவுள்ளார்.

    அம்மான்:

    இஸ்ரேல், ஹமாஸ் இடையே நடைபெற்று வரும் போரினால் இருதரப்பிலும் பலி எண்ணிக்கை 3 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

    அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆண்டனி பிளிங்கன் நேற்று இஸ்ரேல் சென்றார். தலைநகர் டெல் அவிவில் உள்ள ராணுவ அமைச்சகத்தில் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவை சந்தித்துப் பேசினார்.

    இந்நிலையில், அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆன்டனி பிளிங்கன் ஜோர்டான் சென்றடைந்தார்.

    அவர் ஜோர்டான் மன்னர் அப்துல்லா மற்றும் பாலஸ்தீன அதிபர் மகமது அப்பாஸ் ஆகியோரை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

    இஸ்ரேல், ஹமாஸ் இடையே போர் தீவிரம் அடைந்து வரும் நிலையில், போர் நிறுத்தம் குறித்து விரைவில் பேச்சுவார்த்தை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஏற்கனவே, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு மற்றும் அதிபரைச் சந்தித்து தனது ஆதரவை உறுதிப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இரு நாடுகளுக்கு இடையிலான பதற்றத்தை தணிக்க அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி சீனா சென்றுள்ளார்.
    • மந்திரி ஆன்டனி பிளிங்கன், சீன வெளியுறவுத்துறை மந்திரி குவின் காங்கை சந்தித்துப் பேசினார்.

    பீஜிங்:

    அமெரிக்கா, சீனா இடையே பல்வேறு விவகாரங்களில் நிலவி வரும் கருத்து வேறுபாடு காரணமாக இரு நாடுகளும் மோதல் போக்கைக் கடைப்பிடித்து வருகின்றன.

    இதற்கிடையே, இந்தோனேஷியாவின் பாலியில் கடந்த ஆண்டு அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் சந்தித்தனர். அப்போது அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரியின் சீன பயணம் குறித்து பேசினர்.

    அமெரிக்க வான்வெளியில் சீன உளவு பலூன் சுட்டு வீழ்த்தப்பட்ட விவகாரத்துக்கு பிறகு வெளியுறவு மந்திரியின் சீன பயணம் ஒத்திவைக்கப்பட்டது.

    இந்நிலையில், அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஆன்டனி பிளிங்கன் 2 நாள் பயணமாக பீஜிங் வந்துள்ளார். சீன வெளியுறவுத் துறை மந்திரி குவின் காங்கை சந்தித்துப் பேசினார்.

    • டெல்லியில் இன்று ஜி20 வெளியுறவு மந்திரிகள் கூட்டம் தொடங்கியது.
    • இதில் பங்கேற்க 40 நாடுகளின் பிரதிநிதிகள் அழைக்கப்பட்டுள்ளனர்.

    புதுடெல்லி:

    இந்தியாவின் தலைமையின் கீழ் ஜி 20 மாநாடு ஓராண்டுக்கு நடைபெறுகிறது. இதனையொட்டி, புதுடெல்லியில் மார்ச் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் ஜி 20 வெளியுறவு மந்திரிகளின் கூட்டம் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. கூட்டத்தில் பங்கேற்க ஜி 20 உறுப்பினர் அல்லாத நாடுகள் உள்பட 40 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்ள அழைக்கப்பட்டுள்ளனர். பலதரப்பு அமைப்புகளும் இந்த கூட்டத்தில் பங்கேற்க உள்ளன.

    இதில், சீன வெளியுறவு மந்திரி குவின் கேங், ரஷிய வெளியுறவு மந்திரி செர்கே லாவ்ரோவ், அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆன்டனி பிளிங்கன் மற்றும் இங்கிலாந்து வெளியுறவு மந்திரி ஜேம்ஸ் கிளெவர்லி உள்ளிட்டோரும் பங்கேற்கின்றனர். இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உறுப்பு நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் மத்தியில் உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச அளவில் இந்தியா செலுத்தி வரும் செல்வாக்கு பற்றியும் அவர் பேசக்கூடும் என கூறப்படுகிறது.

    இந்நிலையில், இந்தியாவில் நடைபெற உள்ள ஜி 20 வெளியுறவு மந்திரிகளின் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆன்டனி பிளிங்கன் தலைநகர் டெல்லி வந்தடைந்தார். அவருக்கு அதிகாரிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    • சீன வெளியுறவு மந்திரி வாங் யீ ஐரோப்பியப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
    • அவர் முதல் கட்டமாகப் பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் சென்றடைந்தார்.

    முனீச்:

    சீனாவின் வெளியுறவு துறை மந்திரி வாங் யீ ஐரோப்பியப் பயணத்தின் முதல் கட்டமாகப் பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் சென்றார். அங்கு அவர் பிரான்ஸ் அதிபர் இம்மானுவெல் மேக்ரனைச் சந்திக்கவுள்ளார். இந்தாண்டின் பிற்பாதியில் இடம்பெறவுள்ள மேக்ரனின் சீனப் பயணம் குறித்து விவாதிப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.

    சீனாவின் மூத்த வெளியுறவுக் கொள்கை ஆலோசகர் பொறுப்பை ஏற்றபிறகு வாங் யீ மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டுப் பயணம் இதுவாகும்.

    எட்டு நாள்கள் நீடிக்கும் அண்மைப் பயணத்தின்போது அவர், இத்தாலி, ஹங்கேரி, ரஷியா ஆகியவற்றுக்கும் செல்கிறார்.

    ரஷியாவுடனான நெருங்கிய உறவைக் கொண்டுள்ளது சீனா. ஐரோப்பாவிலும் பெய்ஜிங்கின் நற்பெயரை வலுப்படுத்துவது அவரது பயணத்தின் முக்கிய நோக்கமாகக் கருதப்படுகிறது.

    இந்நிலையில்,முனீச் நகரில் நடைபெற்ற பாதுகாப்பு தொடர்பான கருத்தரங்கில் அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆன்டனி பிளிங்கன் கலந்து கொண்டார். அப்போது அவர் சீன வெளியுறவு மந்திரியை சந்தித்துப் பேசினார்.

    உளவு பலூன் பறந்த விவகாரம் நிலுவையில் உள்ள நிலையில் இரு மந்திரிகளும் சந்தித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது.

    • ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சியில் பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
    • சமீபத்தில் பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி பயில பெண்களுக்கு தடை விதிக்கப்பட்டது.

    வாஷிங்டன்:

    தலிபான்கள் ஆட்சிப் பொறுப்பில் உள்ள ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

    சமீபத்தில் பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி பயில பெண்களுக்கு தடை விதிக்கப்பட்டது. மாணவ, மாணவிகள், கல்லூரி பேராசிரியர்கள் என பலரும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் குதித்தனர். சர்வதேச அளவிலும் இதற்கு எதிர்ப்புகள் கிளம்பியது.

    இதற்கிடையே, ஆப்கானிஸ்தானில் உள்ள அனைத்து வெளிநாட்டு, உள்நாட்டு அரசுசாரா நிறுவனங்களும் (என்ஜிஓ) பெண்களை வேலைக்கு அமர்த்துவதை நிறுத்தவேண்டும் என தலிபான் அரசாங்கம் இன்று அதிரடி உத்தரவை பிறப்பித்தது. எந்த ஒரு என்.ஜி.ஓ. நிறுவனமாக இருந்தாலும் இந்த உத்தரவை பின்பற்றவில்லை என்றால் ஆப்கானிஸ்தானில் அவர்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என பொருளாதாரத்துறை மந்திரி காரி தின் முகமது ஹனீப் கூறியிருக்கிறார்.

    இந்நிலையில், என்.ஜி.ஓ. நிறுவனங்களில் பெண்களை வேலைக்கு அமர்த்துவதற்கு தடை விதித்த தலிபான் உத்தரவை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக, வெளியுறவுத்துறை மந்திரி ஆன்டனி பிளிங்கன் வெளியிட்ட அறிக்கையில், உலகெங்கிலும் உள்ள மனிதாபிமான நடவடிக்கைகளில் பெண்கள் மையமாக உள்ளனர். இந்த முடிவு ஆப்கானிஸ்தான் மக்களுக்கு பேரழிவை ஏற்படுத்தும்.

    மேலும் இந்த தடையானது மில்லியன் கணக்கான மக்களின் உயிர்காக்கும் உதவியை சீர்குலைக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

    • ரஷியாவுடனான ராணுவ தளவாட கொள்முதலில் எந்தச் சிக்கலும் இல்லை.
    • இந்தியா, அமெரிக்காவிடமிருந்தும் நிறைய கொள்முதல் செய்துள்ளது.

    வாஷிங்டன்:

    மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் 4 நாள் அரசு முறைப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். வாஷிங்டனில் அமெரிக்க பாதுகாப்புத்துறை மந்திரி லாயிட் ஆஸ்டின் மற்றும் அந்நாட்டு வெளியுறவுத்துறை மந்திரி ஆண்டனி பிளிங்கன் ஆகியோரை தனித் தனியாக சந்தித்த அவர், இரு தரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை நடத்தினார். 


    இரு நாடுகள் இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பு, தகவல் பகிர்வு, தளவாட ஒத்துழைப்பு உள்ளிட்டவை குறித்து இந்த ஆலோசனையின் போது விவாதிக்கப்பட்டது. பின்னர் ஜெய்சங்கரும், ஆண்டனி பிளிங்கனும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது மத்திய மந்திரி ஜெய்சங்கர் கூறியதாவது:

    உக்ரைனில் நடைபெறும் போருக்குப் பிறகு ரஷியாவிடம் இருந்த ராணுவத் தளவாடங்கள் மற்றும் உதிரி பாகங்களை கொள்முதல் செய்வதில் இந்தியா எந்தச் சிக்கலையும் எதிர்கொண்டதாக நான் நினைக்கவில்லை. ராணுவ உபகரணங்கள் மற்றும் தளவாடங்களை நாங்கள் எங்கிருந்து பெறுகிறோம் என்பது ஒரு பிரச்சினை அல்ல, தற்போது போர் காரணமாக ஏற்பட்ட அரசியல் பதட்டத்தால் அது ஒரு பிரச்சினையாகி இருக்கிறது. 


    தொழில்நுட்ப தரம், திறன், குறிப்பிட்ட உபகரணங்கள் வழங்கப்படும் விதிமுறைகள் ஆகியவற்றை நாங்கள் பார்க்கிறோம், மேலும் எங்கள் தேசிய நலனுக்காக நாங்கள் நம்பும் ஒரு தேர்வை செய்கிறோம். கடந்த 15 ஆண்டுகளில், இந்தியா அமெரிக்காவிடமிருந்து நிறைய கொள்முதல் செய்துள்ளது.

    பிரான்சிடம் இருந்து நாங்கள் ரஃபேல் விமானத்தை வாங்கினோம், இஸ்ரேலிடம் இருந்தும் வாங்கி உள்ளோம். எங்களைப் பொறுத்தவரை, போட்டி நிறைந்த சூழ்நிலையில் சிறந்த ஒப்பந்தத்தை எப்படி பெறுவது என்பதுதான் உண்மை. இவ்வாறு அவர் தெரிவித்தார். 


    அப்போது பேசிய பிளிங்கன், பருவநிலை மாற்றத் துறையில் இரு நாடுகளும் இணைந்து பணியாற்றி வருவதாக கூறினார். குவாட் மற்றும் ஜி20 அமைப்புகளில் இணைந்து பணியாற்றுவதன் மூலம் இரு நாடுகள் இடையேயான உறவுகள் உண்மையான முன்னேற்றத்தை அடைந்துள்ளன என்றம் அவர் குறிப்பிட்டார்.

    ×