search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "young man attacked"

    • தாத்தாவை பார்க்க சென்ற வாலிபரை உறவினர் தகாத வார்த்தைகளால் திட்டி உருட்டு கட்டையால் தாக்கினார்.
    • வடமதுரை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வடமதுரை:

    வடமதுரை அருகே காணப்பாடி புதுபாளையத்தை சேர்ந்தவர் நவீன்(25). இவருக்கும் இவரது உறவினர் வாசுதேவன்(43) என்பவருக்கும் பூர்வீக ெசாத்து சம்பந்தமாக பிரச்சினை ஏற்பட்டு வந்தது.

    இந்த நிலையில் தனது தாத்தாவை பார்க்க சென்ற நவீனை வாசுதேவன் தகாத வார்த்தைகளால் திட்டி உருட்டு கட்டையால் தாக்கினார். இதுகுறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

    அய்யலூர் தங்கம்மாபட்டியை சேர்ந்தவர் சுரேஷ்(33). சம்பவத்தன்று தனது மனைவியுடன் வாக்குவாதம் செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அதேபகுதியை சேர்ந்த ஹரிகரன்,அருண்குமார் ஆகியோர் சுரேசை உருட்டுகட்டையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதில் அவரது பற்கள் உடைந்தது. படுகாயமடைந்த அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    அய்யலூர் அருகே மணியகாரன்பட்டியை சேர்ந்தவர் மாரிமுத்து(32). இவர் பொதுக்கழிப்பிடம் அருகே நின்றிருந்தபோது சிவக்கண்ணன், ரமேஷ், காளி, பரமன் ஆகியோர் மதுகுடித்து பாட்டிலை ரோட்டில் உடைத்தனர். இதை தட்டிகேட்ட மாரிமுத்துவை தாக்கி காயம் ஏற்படுத்தினர். இந்த 3 சம்பவங்கள் குறித்து வடமதுரை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தேனி அருகே மதுகுடிக்க பணம் தராதவரை கத்தியால் குத்தி கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் தேடி வருகின்றனர்.
    • போதை தகராறில் வாலிபருக்கு கத்திக்குத்து

    தேனி:

    தேனி அல்லிநகரம் அண்ணாநகரை சேர்ந்தவர் பாண்டியன்(40). இவரது உறவினர் முருகன். இவர்கள் கூலிவேலை பார்த்து வருகின்றனர்.

    தினமும் மதுகுடித்து வீட்டிற்கு செல்வது வழக்கம். கடந்த சில மாதங்களாக பாண்டியன் மதுகுடிக்கும் பழக்கத்தை கைவிட்டார். சம்பவத்தன்று முருகன் வலுக்கட்டாயமாக மது குடிக்கவருமாறு கேட்டுள்ளார்.

    அவர் வர மறுக்கவே தனக்காவது பணம் தருமாறு கேட்டுள்ளார். அதற்கு பணமும் தர முடியாது என கூறினார். இதனால் ஆத்திரமடைந்த முருகன் கத்தி மற்றும் கண்ணாடி டம்ளரால் பாண்டியனை தாக்கினார். படுகாமயடைந்த அவர் க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

    இதுகுறித்து அல்லிநகரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கொடைக்கானல் அருகே பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்சினையில் ஒருவருக்கு கத்திக்குத்து காயம் ஏற்பட்டது
    • கொடைக்கானல் அருகே பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்சினை

    பெரும்பாறை:

    கொடைக்கானல் கீழ்மலை பகுதியான பெரும்பாறை புதூைரச் சேர்ந்தவர் தனபாண்டி (வயது 28). கூலித் தொழிலாளி. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த குட்டி (எ) ராமச்சந்திரன் (35) என்பவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் தகராறு இருந்து வந்தது.

    இது தொடர்பாக ஏற்பட்ட மோதலில் ராமச்சந்திரன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் தனபாண்டியை குத்தினார். படுகாயத்துடன் அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து தாண்டிக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து ராமச்சந்திரனை கைது செய்தனர்.

    திருவட்டார் அருகே குடிபோதையில் தாயாரை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்து நாகர்கோவில் ஜெயிலில் அடைத்தனர்.

    திருவட்டார்:

    திருவட்டாரை அடுத்த பெரிஞ்சக்கோணம் பகுதியை சேர்ந்தவர் பால்ராஜ். பால்ராஜின் மனைவி மேரி ஹெலன் பாய் (வயது 56). இவர்களின் மகன் மெர்ஜின் ராஜ் (29). கூலி தொழிலாளி. இன்னும் திருமணம் ஆகவில்லை.

    மெர்ஜின் ராஜ், வேலைக்கு சென்று கிடைக்கும் பணத்தை வீட்டில் கொடுப்பதில்லை. அதனை மது குடித்து செலவு செய்து வந்தார். போதைக்கு அடிமையானதால் அடிக்கடி வீட்டில் பணம் கேட்டு தகராறும் செய்தார்.

    மெர்ஜின் ராஜ், வேலைக்கு செல்லாமல் ஊதாரியாக திரிந்ததை அவரது தாயார் மேரி ஹெலன் பாய் கண்டித்தார். இதனால் மேரி ஹெலன் பாயிக்கும், பால் ராஜிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

    நேற்றும் இதுபோல தாயாருக்கும் மகனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு மூண்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த மெர்ஜின் ராஜ், தாயார் மேரி ஹெலன் பாயை சரமாரியாக அடித்து உதைத்தார். இதில் அவர் படுகாயம் அடைந்தார்.

    மேலும் வீடு முன்பு நின்ற வாழை மரங்களையும் வெட்டி நாசம் செய்தார். இது பற்றி மேரி ஹெலன் பாய், திருவட்டார் போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். பின்னர் மெர்ஜின் ராஜின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் அவரை கைது செய்தனர். கைதான மெர்ஜின் ராஜை போலீசார் பத்மநாபபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர் நாகர்கோவில் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    மதுரையில் வாலிபரை தாக்கி 3 பவுன் நகை மற்றும் பணத்தை ஷேர்ஆட்டோ டிரைவர் உள்பட 3 பேர் பறித்து சென்றனர். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

    மதுரை:

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரையைச் சேர்ந்தவர் உதயகுமார் (வயது30). பிரசவத்திற்காக இவரது மனைவியை மதுரை நெல்பேட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்திருந்தார்.

    நேற்று இரவு ஊரில் இருந்து மதுரை எம்.ஜி.ஆர். பஸ் நிலையம் வந்து இறங்கிய உதயகுமார் ஆஸ்பத்திரி செல்வதற்காக ஷேர் ஆட்டோவில் ஏறினார். நள்ளிரவு என்பதால் அவர் மட்டுமே பயணம் செய்தார்.

    இந்த நிலையில் ஷேர் ஆட்டோ நெல்பேட்டைக்கு செல்லாமல் செல்லூர் பகுதியில் உள்ள மீனாட்சி புரம் விலக்கு சென்றது. அங்கு ஆட்டோ டிரைவர் தனது கூட்டாளிகள் 2 பேருடன் சேர்ந்து கொண்டு உதயகுமாரை தாக்கினர்.

    தொடர்ந்து அவரிடம் இருந்த செல்போன், 2½ பவுன் நகை, ரூ.30 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை பறித்துக்கொண்டு தப்பினர்.

    இதுகுறித்து செல்லூர் போலீசில் உதயகுமார் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை -பணத்தை பறித்த 3 பேரை தேடி வருகிறார்கள்.

    தக்கலை அருகே வகுப்பறைக்குள் புகுந்து ஆசிரியரை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் 7 பேரை தேடி வருகிறார்கள்.

    தக்கலை:

    தக்கலை அருகே திருவிதாங்கோடு அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருபவர் செல்வம் (வயது 55). கடந்த ஜூன் மாதம் பள்ளிக்குள் நுழைந்த மர்ம கும்பல் ஒன்று அலுவலக அறையை உடைத்து அங்கு வைக்கப்பட்டு இருந்த ஆவணங்களை தீவைத்தது. இதுகுறித்து தக்கலை போலீசில் புகார் செய்யப்பட்டது.

    இதற்கிடையே ஒரு கும்பல் ஜூலை மாதம் வகுப்பறைக்குள் புகுந்து ஆசிரியர் செல்வத்தை சரமாரிமாக தாக்கினர். படுகாயம் அடைந்த ஆசிரியரை ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இந்த நிலையில் அந்த கும்பலை சேர்ந்த ஒருவர் அழகியமண்டபம் பகுதியில் நிற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சப்- இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று அந்த வாலிபரை மடக்கி பிடித்து கைது செய்தனர்.

    பின்னர் போலீஸ் நிலையம் கொண்டு சென்று விசாரணை நடத்தியதில் திருவிதாங்கோடு பகுதியை சேர்ந்த முகமது கான் (வயது 35) என்பது தெரியவந்தது. தொடர்ந்து அந்த கும்பலில் உள்ள 7 பேரை தேடி வருகின்றனர்.

    ×