search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Union Budget 2024"

    • மத்திய அரசின் பட்ஜெட்டில் சமமான நிதிப்பகிர்வு இல்லை.
    • கர்நாடகாவில் முன்னேற்றத்திற்காக அரசியல் வேறுபாடுகளை ஒதுக்கிவைத்து அனைவரும் பங்கேற்க வேண்டும்.

    புதுடெல்லி:

    மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கடந்த 1-ந் தேதி இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்தார். இதற்கு கர்நாடகாவை சேர்ந்த காங்கிரஸ் எம்.பி., டி.கே.சுரேஷ், பட்ஜெட்டில் தென் இந்தியா புறக்கணிக்கப்பட்டு இருப்பதாகவும், தென் மாநிலங்கள் தனி நாடு தேட வேண்டியிருக்கும் என்று கருத்து தெரிவித்து இருந்தார்.

    அவரது இந்த கருத்துக்கு பா.ஜனதா சார்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. மேலும் கர்நாடகாவில் பல்வேறு இடங்களில் டி.கே. சுரேசுக்கு எதிராக பா.ஜனதாவினர் போராட்டமும் நடத்தினர். மேலும் மாண்டியா மாவட்டத்தில் டி.கே. சுரேஷ் மீது போலீசிலும் புகார் செய்தனர்.

    இதை தொடர்ந்து டி.கே.சுரேஷ் எம்.பி. பேசும்போது, கர்நாடக மக்களுக்காக சிறை செல்லவும் தயார் என்று அறிவித்தார். டி.கே. சுரேஷ் கருத்துக்கு அவரது மூத்த சகோதரரும், கர்நாடக துணை முதல்-மந்திரியுமான டி.கே. சிவக்குமார், தென்னந்திய மக்களின் வலியையும், வேதனையையும் தான் டி.கே.சுரேஷ் உள்ளிட்ட தலைவர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர்.

    இந்த நாடு ஒரே தேசம்தான். ஆனால் நீங்கள் இந்தி பெல்ட் மாநிலங்களைத் தாண்டி பார்ப்பதே இல்லை. மத்திய அரசின் பட்ஜெட்டில் சமமான நிதிப்பகிர்வு இல்லை. மத்திய அரசுக்கு கர்நாடகா பெருமளவு வரி வருவாய் வசூலித்து வருகிறது. ஆனால் தென்னிந்திய மாநிலங்களுக்கு என முக்கியமான அறிவிப்புகள் எதுவுமே இந்த பட்ஜெட்டில் இடம் பெறவே இல்லை. தென்னிந்திய மக்கள் புறக்கணிக்கப்படுவதாகவே கருதுகின்றனர். நாங்கள் இந்தியர்கள். இந்தியா ஒற்றுமையாக இருக்க வேண்டும். பிராந்திய அடிப்படையிலான தனிநாடு கோரிக்கை பேச்சுகளுக்கே இடமில்லை என தெரிவித்திருந்தார்.

    இந்த நிலையில் கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா கர்நாடகாவுக்கு மத்திய அரசு அநீதி இழைக்கிறது. கர்நாடகாவுக்கான உரிய நிதியை மத்திய அரசு வழங்கவில்லை என குற்றம் சாட்டினார்.

    மேலும் மத்திய அரசை கண்டித்து இன்று டெல்லி ஜந்தர் மந்தரில் கர்நாடகா மாநிலம் சார்பில் போராட்டம் நடத்தப்படும் என முதல்-மந்திரி சித்தராமையா அறிவித்தார். மேலும் இந்த போராட்டத்திற்கு அனைவரும் ஆதரவு தெரிவிக்கும்படி கடிதம் எழுதினார். அதில் சமச்சீரற்ற வரி விநியோகம் மற்றும் திட்ட அனுமதியில் தாமதம் ஆகியவை கர்நாடக மக்களின் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. வரி பகிர்வில் கடுமையான அநீதி, வறட்சி நிவாரணம் வழங்காதது, அலட்சியம் மற்றும் மாநிலத்தின் பல்வேறு திட்டங்களுக்கு அனுமதி மற்றும் மானியங்களை வழங்குவதில் தாமதம் போன்றவற்றால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்து இருந்தார்.

    தொடர்ந்து முதல் மந்திரி சித்தராமையா நிருபர்களிடம் கூறும்போது, இந்த போராட்டம் கட்சி சார்பற்றது. அநீதி மற்றும் வரி ஒதுக்கீட்டில் உள்ள பாகுபாடுகளுக்கு எதிரான போராட்டமாக இது வடிவமைக்கப்பட்டு உள்ளது. கர்நாடகாவில் முன்னேற்றத்திற்காக அரசியல் வேறுபாடுகளை ஒதுக்கிவைத்து அனைவரும் பங்கேற்க வேண்டும். இது எந்த கட்சிக்கும் எதிரான போராட்டம் அல்ல. அநீதிக்கு எதிரான போராட்டம் என்று தெரிவித்தார்.

    இவரது இந்த கருத்துக்கு முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா எதிர்ப்பு தெரிவித்தார். அப்போது இது ஒரு தேர்தல் ஸ்டண்ட். போராட்டத்திற்கு பதிலாக மத்திய நிதி அமைச்சருடன் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைகளை தீர்க்கலாம். இந்த போராட்டம் காங்கிரஸ் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தால் எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை. ஆனால் அரசின் பணத்தில் அதை செய்கிறார்கள். விமான கட்டணம், தங்கும் விடுதி, உணவு மற்றும் இதர செலவுகள் வரி செலுத்துவோரின் பணத்தால் ஏற்கப்படுகிறது என்று கூறினார்.

    இந்த நிலையில் முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் மற்றும் காங்கிரஸ் எம்.பி., எம்.எல்.ஏக்கள் அனைவரும் நேற்று தனி விமானத்தில் டெல்லிக்கு புறப்பட்டனர். அவர்கள் அனைவரும் இரவு டெல்லி போய் சேர்ந்தனர்.

    இதை தொடர்ந்து டெல்லி ஜந்தர் மந்திர் பகுதியில் சித்தராமையா தலைமையில் கர்நாடக காங்கிரஸ் எம்.பி., எம்.எல்.ஏக்கள் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து இன்று போராட்டம் நடத்தினர். மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். போராட்டத்தில் முதல்-மந்திரி சித்தராமையா பேசியதாவது:

    வரி வசூலில் கர்நாடகா 2-வது இடத்தில் உள்ளது. மகாராஷ்டிரா முதல் இடத்தில் உள்ளது. இந்த வருடம் கர்நாடகா 4.30 லட்சம் கோடியை விட அதிக வரிவசூல் பங்களிப்பை கொடுத்துள்ளது. நாங்கள் 100 ரூபாய் வரிவசூல் செய்து, அதை மத்திய அரசிடம் கொடுத்தால், அதன்பின் மத்திய அரசு எங்களுக்கு 12 ரூபாய் முதல் 13 ரூபாய் வரைதான் தருகிறது. இதுதான் எங்களுடைய பங்கீட்டு தொகை." என்று பேசினார்.

    இந்த போராட்டத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், 28 எம்.எல்.சி.க்கள், ஒரு எம்.பி., 5 மேல்சபை எம்.பி.க்கள் உள்பட மொத்தம் 135 பேர் கலந்து கொண்டனர்.

    கர்நாடகா சார்பில் டெல்லியில் நடந்த இந்த போராட்டத்தை பா.ஜ.க., மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் புறக்கணித்தன.

    • 2024-2025-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை பிப்ரவரி 1-ந்தேதி மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
    • வருடாந்திர நிதியுதவியை ரூ.6 ஆயிரத்தில் இருந்து ரூ.8 ஆயிரம் அல்லது ரூ.9 ஆயிரமாக உயர்த்தப்படலாம் என தகவல்கள் வெளியாகின.

    புதுடெல்லி:

    வருகிற 31-ந் தேதி பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்க வாய்ப்புள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    2024-2025-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை பிப்ரவரி 1-ந்தேதி மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கூட்டத்தொடரில் முதல் நாளில் இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றுவார்.

    வருகிற ஏப்ரல்-மே மாதங்களில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் பட்ஜெட்டில் புதிய வரிகள் அதிகம் விதிக்கப்பட வாய்ப்பில்லை எனவும், தேர்தலை கருத்தில் கொண்டு பல்வேறு அம்சங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

    முக்கியமாக பெண்கள், ஏழைகள், விவசாயிகள் மற்றும் பழங்குடியினருக்கு பலன்கள் கிடைக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

    அந்த வகையில் விவசாயிகளுக்கு வருமானத்தை பெருக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் பற்றிய அறிவிப்பு இடம் பெறலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

    பிரதம மந்திரியின் கிசான் திட்டத்தில் விவசாயிகளுக்கு தற்போது ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படுகிறது. இதன் மூலம் நாடு முழுவதும் நிலம் வைத்திருக்கும் 11 கோடி விவசாயிகள் பயன்பெறுகின்றனர்.

    அவர்களுக்கு வருடாந்திர நிதியுதவியை ரூ.6 ஆயிரத்தில் இருந்து ரூ.8 ஆயிரம் அல்லது ரூ.9 ஆயிரமாக உயர்த்தப்படலாம் என தகவல்கள் வெளியாகின. ரூ.8 ஆயிரமாக உயர்த்தப்பட்டால் தலா ரூ.2 ஆயிரம் வீதம் 4 தவணைகளாகவும், தலா ரூ.9 ஆயிரமாக உயர்த்தப்பட்டால் ரூ.3 ஆயிரம் 3 தவணைகளாக செலுத்தப்படலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

    இதுதவிர விவாசயிகள் தங்கள் வருமானத்தை இரட்டிப்பாக்கவும், அதிக உரம் மற்றும் இடுபொருள் விலைகளின் பாதிப்பில் இருந்து அவர்களை காப்பாற்றுவதாகவும், மானியத்தை உயர்த்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

    பிரதமரின் கிசான் திட்டத்தின் கீழ் கடந்த 5 ஆண்டுகளில் விவசாயிகளுக்கு 15 தவணைகளில் 2.8 லட்சம் ரூபாய்க்கு மேல் அரசு வழங்கியுள்ளது.

    இந்த சூழலில் நிதியுதவியை உயர்த்துவதோடு அதனை பெறுவதற்கான தகுதியை தளர்த்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் பயனாளிகள் எண்ணிக்கை அதிகரிக்கும். அரசுக்கும் ரூ.20 ஆயிரம் கோடி கூடுதல் செலவாகும். இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    ×