என் மலர்
நீங்கள் தேடியது "SSLC Exam result"
- சமீபத்தில் வெளியான 10-ம் வகுப்பு தேர்வு முடிவில் மாணவி ராகவி 193 மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றார்.
- குறைந்த மதிப்பெண் எடுத்ததால் மாணவி ராகவி மிகவும் மனவேதனை அடைந்தார்.
அம்பத்தூர்:
கொரட்டூர், கக்கன்ஜி தெருவை சேர்ந்தவர் பாஸ்கர். பெயிண்டர். இவரது மகள் ராகவி (வயது15). தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
சமீபத்தில் வெளியான 10-ம் வகுப்பு தேர்வு முடிவில் மாணவி ராகவி 193 மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றார். குறைந்த மதிப்பெண் எடுத்ததால் அவர் மிகவும் மனவேதனை அடைந்தார். அவருக்கு பெற்றோர் ஆறுதல் கூறி மேல்படிப்பு படிக்க அறிவுறுத்தி வந்தனர்.
எனினும் எதிர்பார்த்த மதிப்பெண் வராததால் மாணவி ராகவி தொடர்ந்து மனமுடைந்து காணப்பட்டார்.
இந்த நிலையில் நேற்று இரவு வீட்டில் இருந்த போது அறைக்குள் சென்ற ராகவி திடீரென மின் விசிறியில் தூக்குப்போட்டு தொங்கினார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு ராகவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இன்று காலை சிகிச்சை பலனின்றி ராகவி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கொரட்டூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பச்சமுத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 10ம் வகுப்பு தேர்வினை 80 மையங்களில் மாணவர்கள் 12 ஆயிரத்து 926பேரும், மாணவிகள் 12 ஆயிரத்து 234 பேரும் என மொத்தம் 25 ஆயிரத்து 160 பேர் எழுதினர். மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மகேஸ்வரி இன்று காலை எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் வெளியிட்டார்.
இதில் 11 ஆயிரத்து 958 மாணவர்களும், 11 ஆயிரத்து 737 மாணவிகள் உட்பட 23 ஆயிரத்து 695 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 92.51 சதவீதமும், மாணவிகள் 95.94 சதவீதம் என மொத்தம் 94.18 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு 93.12 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். கடந்த ஆண்டை விட 1.06 சதவீதம் பேர் இந்த ஆண்டு அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வழக்கம் போல் மாணவர்களை விட மாணவிகள் தேர்ச்சி சதவீதம் அதிகரித்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 260 அரசுப்பள்ளிகளில் 10ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவ, மாணவிகள் 91.75 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தமிழகம் முழுவதும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. தேனி மாவட்டத்தில் 8,111 மாணவர்களும், 7,874 மாணவிளும் என 15,985 பேர் தேர்வு எழுதினர்.
இதில் 7,847 மாணவர்களும், 7,774 மாணவிகளும் என மொத்தம் 15,621 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 96.75 சதவீதமும், மாணவிகள் 98.73 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாவட்ட அளவில் 97.72 சதவீதம் மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது மாநில அளவில் 6-வது இடமாகும்.
தேனி மாவட்டத்தில் கடந்த 2016-ம் ஆண்டு 96.57 சதவீதமும், கடந்த ஆண்டு 97.10 சதவீதம் மாணவ-மாணவிகளே தேர்ச்சி பெற்றிருந்தனர். கடந்த 2 ஆண்டுகளை விட இந்த ஆண்டு 97.72 சதவீதம் மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தேனி மாவட்டத்தில் 81 அரசு பள்ளிகளை சேர்ந்த 5,199 மாணவர்களும், 5,067 மாணவிகளும் தேர்வு எழுதினர். இதில் 97.46 சதவீதம் மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
வழக்கம்போல் இந்த ஆண்டும் மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மாவட்டத்தில் பார்வையற்ற 13 பேர், வாய்பேச இயலாத 17 பேர் உடல் ஊனமுற்ற 20 பேர், கண்பார்வையற்ற 13 பேர், காது கேளாத 17 பேர் என மாற்று திறனாளி மாணவர்கள் தேர்வு எழுதினர். இவர்களில் காதுகேளாத மாணவர்கள் 100 சதவீதமும், உடல் ஊனமுற்ற மாணவர்கள் 95 சதவீதமும், இதர மாணவர்கள் 100 சதவீதமும் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த ஆண்டுகளை போல் இல்லாமல் தேர்வு முடிவுகள் அந்தந்த மாணவர்களின் செல்போனுக்கே குறுந்தகவலாக அனுப்பப்பட்டது. தரவரிசை பட்டியல் இல்லாமல் கிரேடு முறை அறிவிக்கப்பட்டதால் பள்ளிகளில் எவ்வித ஆரவாரம், கொண்டாட்டம் காணப்படவில்லை.
பள்ளிகளிலும் குறைந்த அளவு மாணவர்களே வந்திருந்து தங்கள் தேர்வு முடிவுகளை பார்த்து சென்றனர். மாணவர்களின் உளவியல் பிரச்சனைக்கு இந்த மதிப்பெண் பட்டியல் வெளியீடு சிறந்த முறையில் இருப்பதாக பெற்றோர்களும் மகிழ்ச்சி அடைந்தனர். #SSLCResult #TNResult
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு கடந்த மார்ச் மாதம் 16-ந்தேதி முதல் ஏப்ரல் 20-ந்தேதி வரை நடந்தது. இந்த தேர்வை 9 லட்சத்து 64 ஆயிரத்து 491 மாணவ-மாணவிகளும், தனித்தேர்வர்கள் 36 ஆயிரத்து 649 பேரும் எழுதினார்கள். தேர்வு முடிவு இன்று (புதன்கிழமை) காலை 9.30 மணிக்கு இணையதளங்கள் மூலம் வெளியிடப்படுகிறது.
www.tnr-esults.nic.in , www.dge1.tn.nic.in , www.dge2.tn.nic.in ஆகிய இணையதளங்களில் தேர்வர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் அறிந்துகொள்ளலாம்.
மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும், அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். மாணவர்கள் தங்கள் பள்ளிகளில் சமர்ப்பித்த செல்போன் எண்ணுக்கும், தனித்தேர்வர்களுக்கு விண்ணப்பிக்கும்போது வழங்கிய செல்போன் எண்ணுக்கும் குறுஞ்செய்தி மூலமும் தேர்வு முடிவு அனுப்பப்படும்.
28-ந்தேதி முதல் பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளி தலைமையாசிரியர்கள் வழியாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வுமைய தலைமையாசிரியர்கள் வழியாகவும் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளலாம். 28-ந்தேதி முதல் www.dge.tn.nic.in என்ற இணையதளத்திலும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
விடைத்தாள்களின் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 24-ந்தேதி முதல் 26-ந்தேதி மாலை 5.45 மணி வரை பள்ளி மாணவர்கள் தங்கள் பள்ளி வழியாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வுமையம் வழியாகவும் விண்ணப்பிக்க வேண்டும்.
துணைப் பொதுத்தேர்வு ஜூன் 28-ந்தேதி முதல் நடைபெறவுள்ளது. இத்தேர்விற்கு விண்ணப்பிக்கும் முறை குறித்து விரைவில் தனியே அறிவிப்பு வெளியிடப்படும்.
இந்த தகவலை அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி தெரித்துள்ளார்.