என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொரட்டூரில் 10-ம் வகுப்பு தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் மாணவி தற்கொலை
    X

    கொரட்டூரில் 10-ம் வகுப்பு தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் மாணவி தற்கொலை

    • சமீபத்தில் வெளியான 10-ம் வகுப்பு தேர்வு முடிவில் மாணவி ராகவி 193 மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றார்.
    • குறைந்த மதிப்பெண் எடுத்ததால் மாணவி ராகவி மிகவும் மனவேதனை அடைந்தார்.

    அம்பத்தூர்:

    கொரட்டூர், கக்கன்ஜி தெருவை சேர்ந்தவர் பாஸ்கர். பெயிண்டர். இவரது மகள் ராகவி (வயது15). தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

    சமீபத்தில் வெளியான 10-ம் வகுப்பு தேர்வு முடிவில் மாணவி ராகவி 193 மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றார். குறைந்த மதிப்பெண் எடுத்ததால் அவர் மிகவும் மனவேதனை அடைந்தார். அவருக்கு பெற்றோர் ஆறுதல் கூறி மேல்படிப்பு படிக்க அறிவுறுத்தி வந்தனர்.

    எனினும் எதிர்பார்த்த மதிப்பெண் வராததால் மாணவி ராகவி தொடர்ந்து மனமுடைந்து காணப்பட்டார்.

    இந்த நிலையில் நேற்று இரவு வீட்டில் இருந்த போது அறைக்குள் சென்ற ராகவி திடீரென மின் விசிறியில் தூக்குப்போட்டு தொங்கினார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு ராகவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இன்று காலை சிகிச்சை பலனின்றி ராகவி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கொரட்டூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பச்சமுத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×