என் மலர்
நீங்கள் தேடியது "இளஞ்சிவப்பு ஆட்டோக்கள்"
- ரூ.1 லட்சம் மானியம் மற்றும் வங்கி கடனுதவியுடன் ஆட்டோ வழங்கப்பட்டது.
- இளஞ்சிவப்பு ஆட்டோக்களை, ஆண்கள் சிலர் மாநகர சாலைகளில் ஓட்டி வருவதாக புகார்கள் எழுந்தன.
சென்னை:
சென்னை மாநகரத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் தனியாக பாதுகாப்புடன் பயணம் செய்ய ஏதுவாக, பெண்களுக்கான உதவி எண் மற்றும் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்ட 'இளஞ்சிவப்பு' ஆட்டோ சேவை நடைமுறைப்படுத்தப்படும் என சமூகநலத்துறை சார்பில் கடந்த ஆண்டு மானியக்கோரிக்கையில் அறிவிக்கப்பட்டது.
இந்த திட்டத்தை, கடந்த மாதம் (மார்ச்) 8-ந்தேதி, மகளிர் தினத்தன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து முதல் கட்டமாக 165 பெண்களுக்கு இளஞ்சிவப்பு ஆட்டோக்களை வழங்கினார். ரூ.1 லட்சம் மானியம் மற்றும் வங்கி கடனுதவியுடன் ஆட்டோ வழங்கப்பட்டது. 2-ம் கட்டமாக பயனாளிகளை தேர்வு செய்யும் பணியில் சமூக நலத்துறை ஈடுபட்டு வருகிறது. இளஞ்சிவப்பு ஆட்டோ 2-ம் கட்ட பயனாளிகள் தேர்வுக்காக இதுவரை 141 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
இந்த சூழலில், இளஞ்சிவப்பு ஆட்டோக்களை, ஆண்கள் சிலர் மாநகர சாலைகளில் ஓட்டி வருவதாக புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக, சமூகநலத்துறை கள ஆய்வு குழு கடந்த சில நாட்களாக ஆய்வுகளை மேற்கொண்டனர். இதில், இளஞ்சிவப்பு ஆட்டோக்களை சில ஆண்கள் வணிக ரீதியிலான போக்குவரத்து சேவைக்கு பயன்படுத்தியது கண்டறியப்பட்டு உள்ளதாக சமூக நலத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் உடல் நல பிரச்சனைகள் காரணமாக பெண் பயனாளிகள் ஆட்டோக்களை ஓட்டாத நாட்களில், கணவர்கள் ஓட்டியது தெரியவந்திருக்கிறது. இருப்பினும், பெண்களுக்காக பிரத்யேகமாக ஒதுக்கீடு செய்யப்பட்ட ஆட்டோக்களை பெண்களே ஓட்ட வேண்டும் என்றும், விதிகளை மீறினால் ஆர்.டி.ஓ. மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் சமூக நலத்துறை எச்சரித்துள்ளது.
- குழந்தை திருமண தடைச் சட்டம் விழிப்புணர்வு பலகைகள் ரூ.62 லட்சம் செலவில் அமைக்கப்படும்.
- 5,590 குழந்தைகள் மையங்களை 55.90 கோடி ரூபாய் செலவில் சீர்மிகு குழந்தைகள் மையங்களாக தரம் உயர்த்தப்படும்.
சென்னை:
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு பிறகு, துறை சார்ந்த அறிவிப்புகளை அமைச்சர் கீதா ஜீவன் வெளியிட்டார். அப்போது கூறியதாவது:-
சென்னை மாநகரத்தில் பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் இளஞ்சிவப்பு ஆட்டோ திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
அதன்படி அரசு மானியமாக தலா ஒரு லட்சம் வீதம் 200 பெண் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு மானியம் வழங்கப்படும். 2 கோடி ரூபாய் செலவில் இளஞ்சிவப்பு ஆட்டோக்களை இயக்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.
பெண் குழந்தைகளுக்கான அரசு நலத்திட்டங்களில் பயன்பெறுவதற்காக வரையறுக்கப்பட்டுள்ள ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.72 ஆயிரத்திலிருந்து ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் ஆக உயர்த்தப்படும்.
கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியத்தின் மூலம் 200 பயனாளிகள் சுய தொழில் செய்ய ரூ.50 ஆயிரம் மானியம் வழங்கப்படும்.
6 மாவட்டங்களில் மகளிர் விடுதிகள் ஒரு கோடி ரூபாய் செலவில் மறு சீரமைக்கப்படும். காப்பகங்களில் உள்ள மாணவிகளுக்கு ஒரு கோடி ரூபாய் மதிப்பில் தற்காப்பு கலை மற்றும் விளையாட்டு பயிற்சி வழங்கப்படும்.
குழந்தை திருமண தடைச் சட்டம் விழிப்புணர்வு பலகைகள் ரூ.62 லட்சம் செலவில் அமைக்கப்படும்.
பள்ளி சத்துணவு மையங்களில் ரூ.9 கோடி செலவில் முட்டை உரிப்பான் எந்திரங்கள் வழங்கப்படும்.
முதியோர்கள் பயனடையும் வகையில் ரூ.40 லட்சம் செலவில் யோகா, தியான பயிற்சி வழங்கப்படும்.
அரசினர் குழந்தைகள் இல்லங்களில் கழிவறை வசதியுடன் கூடிய அறை ரூ.1.80 கோடி மதிப்பில் கட்டப்படும்.
தனியாரால் நடத்தப்படும் முதியோர் இல்லங்கள் மகளிர் விடுதிகள் பதிவு உரிமம் எளிமையாக்கப்படும்.
5,590 குழந்தைகள் மையங்களை 55.90 கோடி ரூபாய் செலவில் சீர்மிகு குழந்தைகள் மையங்களாக தரம் உயர்த்தப்படும்.
அங்கன்வாடி பணியாளர்களுக்கு புதிய திறன் கைபேசிகள் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஆட்டோ வாங்க 250 பெண்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் தமிழ் நாடு அரசு மானியமாக வழங்கும்.
- கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
சென்னையில் வசிக்கும் பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்திடும் வகையில் இளஞ்சிவப்பு ஆட்டோக்கள் திட்டத்திற்கு தகுதியான பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழ் நாடு அரசு. பெண்கள் நலன், பாதுகாப்பு மற்றும் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களைத் திறம்பட செயல்படுத்தி வருகின்றது. அவற்றோடு, பெண்களின் நலனை உறுதி செய்யும் விதமாக விடியல் பயணத்திட்டம். கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, தோழி விடுதிகள். கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கான ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்கியது. புதுமைப்பெண் திட்டம் போன்ற பல்வேறு புதிய மகளிர் நலத் திட்டங்களை செயல்படுத்தி, பெண்களின் வாழ்வாதாரம் மற்றும் முன்னேற்றத்திற்கு வழிவகை செய்துள்ளது.
பெண்களின் பாதுகாப்பில் தமிழ் நாடு சிறந்து விளங்குகின்றது. அதனை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்று தமிழ் நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின் பேரில், ஒரு புதிய முன்னெடுப்பாக 'இளஞ்சிவப்பு ஆட்டோக்களை தமிழ் நாடு அரசு அறிமுகப்படுத்த உள்ளது. இத்திட்டத்தின் மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பாக பயணிக்க, பெண் ஓட்டுநர்கள் மூலம் 250 ஆட்டோக்கள் சென்னை மாநகரில் இயக்கப்பட உள்ளன.
அவசரக் காலங்களில் புகார் பெறப்பட்டவுடன், காவல் துறையின் மூலம் விரைவான நடவடிக்கை எடுப்பதை உறுதி செய்யும் நோக்கத்தோடு ஒவ்வொரு இளஞ்சிவப்பு ஆட்டோவிலும், பெண்களின் பாதுகாப்பிற்காக காவல்துறை உதவி எண்களுடன் இணைக்கப்பட்ட GPS பொருத்தப்பட்டிருக்கும்.
பெண்கள் சுய தொழிலில் சிறந்து விளங்க ஊக்கப்படுத்தவும். ஓட்டுநர் உரிமம் பெற்ற பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும் இத்திட்டம் வழிவகை செய்யும்.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெறத் தேவையான தகுதிகள்:
1. பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.
2. கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
3. 25 வயது முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.
4. 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
5. ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.
6. சென்னையில் குடியிருக்க வேண்டும்
இதற்கென, சென்னையில் உள்ள 250 பெண்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் தமிழ் நாடு அரசு CNG/Hybrid ஆட்டோ வாங்க மானியமாக வழங்கும். ஆட்டோ வாங்க தேவைப்படும் மீதி பணத்திற்காக வங்கிகளுடன் இணைக்கப்படும்.
சென்னையில் உள்ள தகுதியான பெண் ஓட்டுநர்கள், இத்திட்டத்தின் கீழ் பயனடைய பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை சென்னை மாவட்ட சமூக நல அலுவலருக்கு. 8வது தளம். சிங்கார வேலர் மாளிகை, சென்னை 600 001 என்ற முகவரிக்கு 23.11.2024 தேதிக்குள் அனுப்ப வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பிங்க் ஆட்டோவில் ஜிபிஎஸ் மற்றும் VItd எனப்படும் வாகன கண்காணிப்பு சாதனம் பொறுத்தப்படவுள்ளது.
- மார்ச் இறுதிக்குள் பிங்க் ஆட்டோ சென்னையில் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் நாடு அரசு பெண்களின் நலனை உறுதி செய்யும் விதமாக விடியல் பயணத்திட்டம். கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, தோழி விடுதிகள் போன்ற பல திட்டங்களை செய்லபடுத்தி வருகிறது.
இந்நிலையில், பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் ஒரு புதிய முன்னெடுப்பாக 'பிங்க்' ஆட்டோக்களை தமிழ் நாடு அரசு அறிமுகப்படுத்த உள்ளது.
இத்திட்டத்தின் மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பாக பயணிக்க, பெண் ஓட்டுநர்கள் மூலம் பிங்க் ஆட்டோக்கள் சென்னை மாநகரில் இயக்கப்பட உள்ளன.
பெண்கள் சுய தொழிலில் சிறந்து விளங்க ஊக்கப்படுத்தவும். ஓட்டுநர் உரிமம் பெற்ற பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும் இத்திட்டம் வழிவகை செய்யும்.
இந்நிலையில், பெண்களுக்கான ஆட்டோ முழுவதும் பிங்க் நிறத்தில் இருக்கும்படி மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
அவசரக் காலங்களில் புகார் பெறப்பட்டவுடன், காவல் துறையின் மூலம் விரைவான நடவடிக்கை எடுப்பதை உறுதி செய்யும் நோக்கத்தோடு ஒவ்வொரு பிங்க் ஆட்டோவிலும், ஜிபிஎஸ் மற்றும் VItd எனப்படும் வாகன கண்காணிப்பு சாதனம் பொறுத்தப்படவுள்ளது.
மார்ச் இறுதிக்குள் பிங்க் ஆட்டோ சென்னையில் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.






