என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நடிகர் சங்கம் கட்டிடம்"

    • தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஷால்.
    • சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் விஷால் அவரது திருமணத்தை பற்றி மனம் திறந்துள்ளார்.

    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஷால். இவர் நடிப்பில் சில மாதங்களுக்கு முன் மத கஜ ராஜா திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இவரது உடல்நிலை குறித்து சமீபத்தில் பல செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. சமீபத்தில் இவர் கலந்து கொண்ட பொது நிகழ்ச்சியில் மயங்கி விழுந்தார். அதற்கு பின் கூட்ட நெரிசல் மற்றும் சாப்பிடாமல் இருந்ததே அதற்கு காரணம் என மருத்துவர்கள் கூறினர்.

    சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் விஷால் அவரது திருமணத்தை பற்றி மனம் திறந்துள்ளார். அதில் நடிகர் சங்க கட்டித்தை கட்டி முடித்த பின் என்னுடைய திருமணம் நடக்கும். ஆகஸ்ட் 15 ஆம் தேதி நடிகர் சங்க கட்டிடத்தை திறக்க திட்டமிட்டுள்ளோம். அதற்கு அடுத்து என்னுடைய திருமணம் நடக்கும். பெண் பார்த்தாச்சு, எல்லாம் பேசி முடிச்சாச்சு, இது ஒரு காதல் திருமணம் தான் " என தெரிவித்துள்ளார்.

    இதனால் விஷால் ரசிகர்கள் மிகவும் சந்தோஷத்தில் இருக்கின்றனர்.

    • நடிகர் நெப்போலியன் 1990-களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்தார்.
    • நடிகர் நெப்போலியன் நடிகராக மட்டுமின்றி அமெரிக்காவில் ஜீவன் டெக்னாலஜிஸ் என்ற சாப்ட்வேர் நிறுவனமும் நடத்தி வருகிறார்.

    நடிகர் நெப்போலியன் 1990-களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்தார். தமிழ் , தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழிகளிலும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். கடந்த சில வருடங்களில் சுல்தான், அன்பறிவு மற்றும் வல்லவனுக்கும் வல்லவன் திரைப்படங்களில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தார்.

    நடிகர் நெப்போலியன் நடிகராக மட்டுமின்றி அமெரிக்காவில் ஜீவன் டெக்னாலஜிஸ் என்ற சாப்ட்வேர் நிறுவனமும் நடத்தி வருகிறார். தற்போது தனது குடும்பத்துடன் மகனின் சிகிச்சைகாக அங்கே தங்கியிருக்கும் நெப்போலியன் அங்கு விவசாயமும் செய்து வருகிறார்.

    ஒரு படத்திற்கு கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகர் சங்கத்துக்கு நிதிப் பற்றாக்குறை என்பது சற்று யோசிக்கத்தான் வைக்கிறது.  ஏற்கனவே 40 கோடி செலவில் கட்டுமானப் பணிகள் முடிக்கப்பட்டிருந்தது. மேலும் 25 கோடிகள் தேவைப்பட்ட நிலையில் தற்போது நடிகர்கள் பலர் வாரிக் கொடுக்க ஆரம்பித்துள்ளனர்.

    நடிகர் சங்கத்தின் கட்டிட பணிகளுக்காக நடிகர்கள் கமல், விஜய், சூர்யா, கார்த்தி, சிவகார்த்திகேயன் உள்ளிட்டோர் நிதியுதவி வழங்கினர். மேலும், பல்வேறு நடிகர்களும் நிதியுதவி வழங்கி வருகின்றனர். இந்த நிலையில், நடிகர் நெப்போலியன், நடிகர் சங்க கட்டிட பணிக்காக ரூ.1 கோடியை வைப்பு நிதியாக வழங்கியுள்ளார். இது தொடர்பாக நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது;

    "தென்னிந்திய நடிகர் சங்கத்தின் மூத்த உறுப்பினரும் 2000 - 2006ம் காலகட்டத்தில் சங்கத்தின் உபதலைவராக பொறுப்பேற்று செயலாற்றியவருமான நெப்போலியன் சங்க கட்டிட வளர்ச்சிக்காக ரூ.1 கோடி வைப்புநிதியாய் வழங்கினார். அவருக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் மனமார்ந்த வாழ்த்து கூறி நன்றியை தெரிவித்துக்கொள்கிறது." என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இம்முறை நடிகர் சங்க கட்டிடம் எந்தவித தடங்களும் இல்லாமல் கட்டி முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×