என் மலர்
நீங்கள் தேடியது "கடல் உணவுகள்"
- மெடிட்டரேனியன் டயட் என்பது ஒமேகா கொழுப்பு அமிலங்கள், காய்கறிகள், பழங்கள், அதிக புரதம் நிறைந்தது.
- ஃபிரான்ஸ், ஸ்பெயின், கிரீஸ், இத்தாலி உள்ளிட்ட மத்தியத் தரைக்கடல் நாடுகளில் பின்பற்றப்படும் பாரம்பரிய உணவுமுறை!
இதய நோய்களை தடுக்க பெரும்பாலும் மெடிட்டரேனியன் டயட் முறையை பின்பற்ற மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். அதற்கு காரணம் மெடிட்டரேனியன் டயட் என்பது ஒமேகா கொழுப்பு அமிலங்கள், காய்கறிகள், பழங்கள், அதிக புரதம், கொழுப்பு குறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வலியுறுத்தும் உணவு முறையாகும். இது, ஃபிரான்ஸ், ஸ்பெயின், கிரீஸ், இத்தாலி உள்ளிட்ட மத்தியத் தரைக்கடல் பகுதியைச் சார்ந்த நாடுகளில் பல காலங்களுக்கு முன்பிருந்தே பின்பற்றப்பட்டுவரும் பாரம்பரிய உணவு முறையாகும். நாளடைவில் இந்த டயட் பிற நாடுகளுக்கும் பரவி, உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தும் பலராலும் பின்பற்றப்பட்டு வருகிறது. இவ்வகை உணவிலிருந்து கிடைக்கும் சில ஆரோக்கிய நன்மைகள் குறித்து பார்ப்போம்.
இதய ஆரோக்கியம்
மத்தியத் தரைக்கடல் உணவு முறையைப் பின்பற்றுபவர்களுக்கு இரத்த அழுத்தம், கொழுப்பு மற்றும் இரத்த குளுக்கோஸ் அளவுகள் குறைவாக இருப்பதற்கான சான்றுகள் பல ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளன.
தூக்கம்
மத்தியத் தரைக்கடல் உணவுமுறை ஆரோக்கியமான தூக்கமுறைக்கு வழிவகுக்கும் என கண்டறியப்பட்டுள்ளது. இந்த உணவுமுறை தூக்கத்தை மேம்படுத்தும் என்றும், தூங்குவதற்கு எடுக்கும் நேரத்தைக் குறைக்கிறதும் என்று கூறப்படுகிறது.
புற்றுநோய் எதிர்ப்பு
மத்தியத் தரைக்கடல் உணவில் நார்ச்சத்து, ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு உணவுகள் நிறைந்துள்ளன. இவை சில புற்றுநோய்களின் அபாயத்தையும் குறைக்கின்றன.
மன ஆரோக்கியம்
மத்தியத் தரைக்கடல் உணவுமுறை மன ஆரோக்கியத்தையும், வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்துவதாகக் காட்டப்பட்டுள்ளது. இந்த உணவுகள் மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்தி, அறிவாற்றல் குறையாமல் பாதுகாக்கின்றன. மனச்சோர்வை குறைக்கின்றன.
நீரிழிவு நோய்
மத்தியத் தரைக்கடல் உணவைப் பின்பற்றுபவர்களுக்கு வகை 2 நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்புகள் குறைவு என்று பல ஆய்வுகள் காட்டுகின்றன. மேலும் இந்த உணவுமுறையை பின்பற்றுபவர்களுக்கு இரத்த சர்க்கரை அளவு குறைவாக இருப்பதாகவும் ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
எடை மேலாண்மை
உடல் எடையை சமநிலையில் பராமரிக்கவும் உதவுகிறது.

சிவப்பு இறைச்சிக்கு பதில் உணவில் கடல் உணவுகளை அதிகம் சேர்த்துக்கொள்ளுங்கள்
கொஞ்சம் கொஞ்சமாக சேருங்கள்...
மத்தியத் தரைக்கடல் உணவுகளை கொஞ்சம் கொஞ்சமாக உங்கள் உணவுமுறையில் சேர்த்துக்கொள்ளுங்கள். முதலில் உணவுமுறையில் பழங்களை சேர்க்க தொடங்குங்கள். பின்னர் ப்ரோக்கோலி அல்லது கேரட் போன்ற காய்கறிகளை வேகவைத்து எடுத்துக்கொள்ளலாம். தொடர்ந்து தானிய வகைகளை உணவில் சேர்க்க தொடங்குங்கள். சமையலுக்கு ஆலிவ் எண்ணெய்யை பயன்படுத்தலாம். சிவப்பு இறைச்சி (ஆடு, மாடு, பன்றி இறைச்சி) சாப்பிடுவதைக் குறைக்க முயற்சி செய்யுங்கள். அதற்கு பதிலாக மீன் மற்றும் மற்ற கடல் உணவுகளை சாப்பிடுங்கள். இந்த சிறிய மாற்றங்கள் காலப்போக்கில் உங்கள் ஆரோக்கியத்திலும், நல்வாழ்விலும் பெரிய மாற்றங்களுக்கு வழிவகுக்கும்.
மெடிட்டரேனியன் டயட்டை ஃபாலோ செய்தால் தவிர்க்கவேண்டிய உணவுகள்
- அதிக பதப்படுத்தப்பட்ட உணவுகள்.
- வெள்ளை ரொட்டி, வெள்ளை பாஸ்தா மற்றும் பிட்ஸா போன்ற உணவுகளை தவிர்க்கவும்.
- கொழுப்பு நிறைந்த அல்லது பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள்.
- அதிகம் சோடியம் உள்ள உணவுகள்.
- நிறைவுற்ற கொழுப்புகள் அதிகம் உள்ள உணவுகள் (மாட்டிறைச்சி, தேங்காய் எண்ணெய், வெண்ணெய் மற்றும் பதப்படுத்தப்பட்ட சீஸ் போன்றவை).
- பேஸ்ட்ரிகள், சோடாக்கள், மிட்டாய்கள் போன்ற சர்க்கரை சேர்க்கப்பட்ட உணவுகள்.
- 'டேஸ்ட் அட்லஸ்' என்பது உலகின் பிரபல உணவு மற்றும் பயண நிறுவனம் ஆகும்.
- உலகின் சிறந்த 100 கடல் உணவுகளின் பட்டியலை டேஸ்ட் அட்லஸ் வெளியிட்டது.
'டேஸ்ட் அட்லஸ்' என்ற உலகின் பிரபல உணவு மற்றும் பயண நிறுவனம் உலகின் சிறந்த 100 கடல் உணவுகளின் பட்டியலை வெளியிட்டது.
இந்த பட்டியலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த நெத்திலி 65 உணவு 81வது இடத்தை பிடித்து அசத்தியுள்ளன.
மேலும், கேரளாவின் கறிமீன் பொளிச்சது 11வது இடத்தையும், மேற்கு வங்கத்தின் சிங்கிரி மலாய் கறி 30வது இடத்தையும் பிடித்து அசத்தியுள்ளன.
- சியா விதை செரிமானத்தை மெதுவாக்குகிறது.
- கடல் உணவுகளில் அதிகளவு புரதச்சத்து உள்ளது.

உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் சியா விதை சேர்க்கப்பட்ட உணவுகளை காலை உணவாக எடுத்துக்கொள்வது மிகவும் நல்லது. ஏனென்றால் இந்த சியா விதை செரிமானத்தை மெதுவாக்குகிறது. இதனால் நாம் அடிக்கடி சாப்பிட்டுக்கொண்டே இருப்பது தவிர்க்கப்படுகிறது.

பொதுவாகவே கடல் உணவுகளில் அதிகளவு புரதச்சத்து உள்ளது. மேலும் அவை பசியை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது. உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் கடல் உணவுகளை தேர்வு செய்யலாம். ஏனென்றால் அதில் நம் உணவின் மூலம் மட்டுமே பெறக்கூடிய அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் உள்ளன.
இவை இதயம் மற்றும் மூளையின் ஆரோக்கியத்தை ஆதரிப்பதுடன் சாலமீன், மத்தி மற்றும் டுனா போன்ற மீன்களில் காணப்படும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உடல் எடையை குறைக்க உதவும் என்று 2019-ம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிலுவை காய்கறிகளான ப்ரோக்கோலி, காளிஃபிளவர், பிரஸ்ஸல்ஸ் முளைகள் மற்றும் முட்டைகோள், அருகுலா போன்ற கருமையான இலை காய்கறிகள் போன்றவை அடங்கும். இந்த காய்கறிகள் அனைத்தையும் வாரம் ஒருமுறை மட்டும் உங்கள் உணவுப்பட்டியலில் சேர்த்துவர உங்களது உடல் எடை எளிதில் குறைவதை நீங்களே பார்க்கலாம்.

உடல் எடையை குறைக்க முயற்சிக்கும் யாராக இருந்தாலும் சரி உங்களது உணவு முறையில் முழு தானியங்களை சேர்த்துக்கொள்ள வேண்டும். இந்த முழு தானியத்தில் விட்டமின்கள், தாதுக்கள் மற்றும் பைட்டோ நியூட்ரியன்கள் நிறைந்துள்ளன.
இதுதவிர முழு தானியங்களான முழுகோதுமை பாஸ்தா, பிரவுன் ரைஸ் போன்றவற்றில் நார்ச்சத்துக்கள் உள்ளன. இவை அனைத்தும் உங்கள் உடல் எடையை குறைக்க உதவிசெய்கிறது.

டார்க் சாக்லேட் உங்களது உடல் எடையை குறைக்க உதவி செய்கிறது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம் உண்மையில் டார்க் சாக்லேட் உடலெடை குறைக்க உதவி செய்கிறது. தினமும் டார்க் சாக்லேட் சாப்பிட்டு வர உடல் எடை குறையும்.
எப்படி என்றால் டார்க் சாக்லேட் உங்கள் நீண்டநேர பசியை குறைக்கிறது. இதனால் நீங்கள் அடிக்கடி ஏதாவது சாப்பிட வேண்டிய அவசியம் இருக்காது. இதன்மூலம் உங்களது உடல் எடையை குறைக்கலாம்.






