என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டயட் உணவுமுறை"

    • மெடிட்டரேனியன் டயட் என்பது ஒமேகா கொழுப்பு அமிலங்கள், காய்கறிகள், பழங்கள், அதிக புரதம் நிறைந்தது.
    • ஃபிரான்ஸ், ஸ்பெயின், கிரீஸ், இத்தாலி உள்ளிட்ட மத்தியத் தரைக்கடல் நாடுகளில் பின்பற்றப்படும் பாரம்பரிய உணவுமுறை!

    இதய நோய்களை தடுக்க பெரும்பாலும் மெடிட்டரேனியன் டயட் முறையை பின்பற்ற மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். அதற்கு காரணம் மெடிட்டரேனியன் டயட் என்பது ஒமேகா கொழுப்பு அமிலங்கள், காய்கறிகள், பழங்கள், அதிக புரதம், கொழுப்பு குறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வலியுறுத்தும் உணவு முறையாகும். இது, ஃபிரான்ஸ், ஸ்பெயின், கிரீஸ், இத்தாலி உள்ளிட்ட மத்தியத் தரைக்கடல் பகுதியைச் சார்ந்த நாடுகளில் பல காலங்களுக்கு முன்பிருந்தே பின்பற்றப்பட்டுவரும் பாரம்பரிய உணவு முறையாகும். நாளடைவில் இந்த டயட் பிற நாடுகளுக்கும் பரவி, உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தும் பலராலும் பின்பற்றப்பட்டு வருகிறது. இவ்வகை உணவிலிருந்து கிடைக்கும் சில ஆரோக்கிய நன்மைகள் குறித்து பார்ப்போம். 

    இதய ஆரோக்கியம் 

    மத்தியத் தரைக்கடல் உணவு முறையைப் பின்பற்றுபவர்களுக்கு இரத்த அழுத்தம், கொழுப்பு மற்றும் இரத்த குளுக்கோஸ் அளவுகள் குறைவாக இருப்பதற்கான சான்றுகள் பல ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளன. 

    தூக்கம்

    மத்தியத் தரைக்கடல் உணவுமுறை ஆரோக்கியமான தூக்கமுறைக்கு வழிவகுக்கும் என கண்டறியப்பட்டுள்ளது. இந்த உணவுமுறை தூக்கத்தை மேம்படுத்தும் என்றும், தூங்குவதற்கு எடுக்கும் நேரத்தைக் குறைக்கிறதும் என்று கூறப்படுகிறது.

    புற்றுநோய் எதிர்ப்பு

    மத்தியத் தரைக்கடல் உணவில் நார்ச்சத்து, ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு உணவுகள் நிறைந்துள்ளன. இவை சில புற்றுநோய்களின் அபாயத்தையும் குறைக்கின்றன. 

    மன ஆரோக்கியம்

    மத்தியத் தரைக்கடல் உணவுமுறை மன ஆரோக்கியத்தையும், வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்துவதாகக் காட்டப்பட்டுள்ளது. இந்த உணவுகள் மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்தி, அறிவாற்றல் குறையாமல் பாதுகாக்கின்றன. மனச்சோர்வை குறைக்கின்றன.

    நீரிழிவு நோய்

    மத்தியத் தரைக்கடல் உணவைப் பின்பற்றுபவர்களுக்கு வகை 2 நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்புகள் குறைவு என்று பல ஆய்வுகள் காட்டுகின்றன. மேலும் இந்த உணவுமுறையை பின்பற்றுபவர்களுக்கு இரத்த சர்க்கரை அளவு குறைவாக இருப்பதாகவும் ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. 

    எடை மேலாண்மை

    உடல் எடையை சமநிலையில் பராமரிக்கவும் உதவுகிறது. 


    சிவப்பு இறைச்சிக்கு பதில் உணவில் கடல் உணவுகளை அதிகம் சேர்த்துக்கொள்ளுங்கள்

    கொஞ்சம் கொஞ்சமாக சேருங்கள்...

    மத்தியத் தரைக்கடல் உணவுகளை கொஞ்சம் கொஞ்சமாக உங்கள் உணவுமுறையில் சேர்த்துக்கொள்ளுங்கள். முதலில் உணவுமுறையில் பழங்களை சேர்க்க தொடங்குங்கள். பின்னர் ப்ரோக்கோலி அல்லது கேரட் போன்ற காய்கறிகளை வேகவைத்து எடுத்துக்கொள்ளலாம். தொடர்ந்து தானிய வகைகளை உணவில் சேர்க்க தொடங்குங்கள். சமையலுக்கு ஆலிவ் எண்ணெய்யை பயன்படுத்தலாம். சிவப்பு இறைச்சி (ஆடு, மாடு, பன்றி இறைச்சி) சாப்பிடுவதைக் குறைக்க முயற்சி செய்யுங்கள். அதற்கு பதிலாக மீன் மற்றும் மற்ற கடல் உணவுகளை சாப்பிடுங்கள். இந்த சிறிய மாற்றங்கள் காலப்போக்கில் உங்கள் ஆரோக்கியத்திலும், நல்வாழ்விலும் பெரிய மாற்றங்களுக்கு வழிவகுக்கும்.

    மெடிட்டரேனியன் டயட்டை ஃபாலோ செய்தால் தவிர்க்கவேண்டிய உணவுகள்

    • அதிக பதப்படுத்தப்பட்ட உணவுகள்.
    • வெள்ளை ரொட்டி, வெள்ளை பாஸ்தா மற்றும் பிட்ஸா போன்ற உணவுகளை தவிர்க்கவும்.
    • கொழுப்பு நிறைந்த அல்லது பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள்.
    • அதிகம் சோடியம் உள்ள உணவுகள்.
    • நிறைவுற்ற கொழுப்புகள் அதிகம் உள்ள உணவுகள் (மாட்டிறைச்சி, தேங்காய் எண்ணெய், வெண்ணெய் மற்றும் பதப்படுத்தப்பட்ட சீஸ் போன்றவை).
    • பேஸ்ட்ரிகள், சோடாக்கள், மிட்டாய்கள் போன்ற சர்க்கரை சேர்க்கப்பட்ட உணவுகள்.
    • உடல் எடையை குறைக்க காலை உணவை தவிர்ப்பது சரியான வழி அல்ல.
    • எடையைக் குறைக்க தேன் ஒரு சிறந்த மருத்துவப் பொருள்.

    உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் முதலில் குறைக்க நினைப்பது தொப்பை பகுதியைத்தான். உடலின் புறப்பகுதியில், நம்முடைய கண்ணுக்குத் தெரியும் தொப்பையை மட்டும் கொலஸ்ட்ரால் என பலர் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

    ஆனால் நம்முடைய கண்ணுக்குத் தெரியாமல் சிறுநீரகம், கல்லீரல், இதயம் போன்ற உடலின் உள்ளுறுப்புகளிலும் கொழுப்பு படிந்திருக்கக்கூடும். இது தொப்பை பகுதியைக் காட்டிலும் மிகவும் ஆபத்தானது. உடல் எடை அதிகமாக இருப்பவர்களுக்கு மட்டும்தான் இத்தகைய கொழுப்பானது இருக்கும் என நினைக்கக்கூடாது. ஒல்லியாக மற்றும் சரியான உடல் அமைப்பைக் கொண்ட மக்களிடமும், இது காணப்படுகிறது.

    உடல் எடையை குறைக்க சரியான வழி காலை உணவை தவிர்ப்பது அல்ல. ஏனெனில் காலை உணவு தான் அன்றைய தினத்திற்கு ஏற்ற எனர்ஜியை தருகிறது. அவற்றை தவிர்த்தால், உடல் நலம் தான் பாதிக்கப்படும். பின் எப்போது பார்த்தாலும் சாப்பிட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றும். ஆகவே மறக்காமல் காலை வேளையில் மறவாமல் ஏதேனும் ஆரோக்கியமானவற்றை சாப்பிட வேண்டும்.

     * பானை போன்ற வயிறை குறைக்க, மற்ற வழிகளை வி...ட சிறந்தது உடற்பயிற்சி தான். அதிலும் நடைப்பயிற்சி தான் சிறந்தது. ஆகவே காலையில் எழுந்ததும் தினமும் குறைந்தது 30 நிமிடமாவது நடந்தால் நல்லது. இதனால் உடல் மற்றும் தொடையில் இருக்கும், தேவையற்ற கலோரிகள் கரைந்துவிடும்.

    * எடையை குறைக்க தேன் ஒரு சிறந்த மருத்துவப் பொருள். ஆகவே காலையில் எழுந்ததும், ஒரு டம்ளர் நீரில் 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு, 1 டீஸ்பூன் தேன் மற்றும் சிறிது மிளகு தூள் சேர்த்து, தினமும் குடிக்க வேண்டும்.

    * காரமான உணவுப் பொருட்களான இஞ்சி, மிளகு, இலவங்கப்பட்டை போன்றவையும் மிகவும் சிறந்தது. அதிலும் தினமும் இஞ்சி டீயை 2-3 முறை குடிக்க வேண்டும். இது உடல் பருமனைக் குறைக்கும் சிறந்த பொருள்.

    * இரண்டு டீஸ்பூன் எலுமிச்சை சாற்றை சாதாரண நீரில் குடித்து வந்தால், உடல் எடை குறையும். மேலும் சாப்பிட்டப் பிறகு ஒரு டம்ளர் சூடான நீரை குடித்து வந்தால், இயற்கையாகவே உடல் எடை குறைந்துவிடும்.

    * உடல் எடையை குறைக்க டயட்டில் இருக்கும் போது பச்சை காய்கறிகள், தக்காளி மற்றும் கேரட் போன்ற கலோரி குறைவான, ஆனால் அதிக வைட்டமின் மற்றும் கனிமச்சத்துக்கள் உள்ள உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். இதனை அதிகம் சாப்பிட்டு வந்தால், உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு, உடல் எடையும் விரைவில் குறையும், அதிக பசியும் எடுக்காமல் இருக்கும்.

    * தொடர்ந்து 3-4 மாதங்கள், காலையில் எழுந்ததும் 10 கறிவேப்பிலையை சாப்பிட வேண்டும். இதனால் பெல்லி குறைந்து, அழகான இடுப்பைப் பெறலாம்.

    * எப்போதும் உணவு உண்ணும் முன் ஒரு துண்டு இஞ்சியை, எலுமிச்சை சாறு மற்றும் உப்பில் தொட்டு சாப்கிட வேண்டும். இதனால் அதிகமான அளவு உணவை உண்ணாமல், கட்டுப்பாட்டுடன் உணவை உண்ணலாம்.

    இதனை தொடர்ந்து செய்து வந்தால், பானை போன்ற வயிற்றை குறைத்து, அழகான உடல் வடிவத்தைப் பெற்று ஆரோக்கியமாக வாழலாம்.

    ×