என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உம்மன்சாண்டி"

    • மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை ஆர்.எஸ்.எஸ் உடன் ஒப்பிட்டு ராகுல் காந்தி பேசினார்.
    • மதசார்பற்ற கட்சிகளை ஒருங்கிணைக்க வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு காங்கிரஸ் கட்சிக்கு உள்ளது.

    கேரள மாநில முன்னாள் முதல்-மந்திரி உம்மன்சாண்டி 2023-ம் ஆண்டு ஜூலை 18-ந்தேதி இயற்கை எய்தினார். அவரது நினைவஞ்சலி நிகழ்ச்சி புதுப்பள்ளியில் இன்று நடைபெற்றது. இதில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி எம்.பி. கலந்துகொண்டார்.

    அவர் உம்மன்சாண்டியின் நினைவிடத்தில் மலர்த்தூவி அஞ்சலி செலுத்தினார். பின்பு நினைவஞ்சலி கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய ராகுல்காந்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை ஆர்.எஸ்.எஸ் உடன் ஒப்பிட்டு, இரண்டும் ஒரே கருத்தியலில் செயல்படுவது போல் உள்ளது என்று கூறினார்.

    ராகுல் காந்தியின் இக்கருத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைவர் சண்முகம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் தனது எக்ஸ் பதிவில், "மதவெறி பி.ஜே.பி - ஆர்.எஸ்.எஸ்க்கு எதிராக மதசார்பற்ற கட்சிகளை ஒருங்கிணைக்க வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு காங்கிரஸ் கட்சிக்கு உள்ளது. காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி அவர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியையும், ஆர்.எஸ்.எஸ்யும் சித்தாந்த ரீதியாக சம அளவில் எதிர்த்து போராடுகிறேன் என்று பேசியிருப்பது. அவரது முதிர்ச்சியற்ற தன்மையை வெளிப்படுத்துகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இல்லாமல் மதசார்பின்மையை பாதுகாக்க முடியுமா?" என்று பதிவிட்டுள்ளார்.

    • அரசியலில் நான் கண்ட மிகப்பெரிய மனிதாபிமானி உம்மன்சாண்டி.
    • உம்மன்சாண்டி எனது குரு. குரு என்றால் செயலின் மூலம் வழி காட்டுபவர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநில முன்னாள் முதல்-மந்திரி உம்மன்சாண்டி 2023-ம் ஆண்டு ஜூலை 18-ந்தேதி இயற்கை எய்தினார். அவரது நினைவஞ்சலி நிகழ்ச்சி புதுப்பள்ளியில் இன்று நடைபெற்றது. இதில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி எம்.பி. கலந்துகொண்டார்.

    அவர் உம்மன்சாண்டியின் நினைவிடத்தில் மலர்த்தூவி அஞ்சலி செலுத்தினார். பின்பு நினைவஞ்சலி கூட்டத்தில் கலந்துகொண்டார். அதில் ராகுல்காந்தி பேசியதாவது:-

    அரசியலில் நான் கண்ட மிகப்பெரிய மனிதாபிமானி உம்மன்சாண்டி. ஜோடா யாத்திரையின் போது மருத்துவர்கள் உம்மன் சாண்டியிடம் நடக்க வேண்டாம் என்று கூறியிருந்தனர். ஆனால் அதை கேட்காமல் அவர் பயணத்தை தொடர்ந்தார்.

    உம்மன்சாண்டி வெறும் ஒரு நபர் மட்டுமல்ல. அவர் கேரள அரசியலின் உருவகம். கேரளாவில் இது போன்ற தனி நபர்களின் பாரம்பரியம் உள்ளது. உம்மன்சாண்டி போன்ற பலரை வளர்ப்பதே என்னுடைய முயற்சி. உம்மன்சாண்டி மீது ஒரு குற்றவியல் தாக்குதல் நடத்தப்பட்டது. அந்த நேரத்திலும் அவர் யாரையும் குறை கூறவில்லை.

    உம்மன்சாண்டி எனது குரு. குரு என்றால் செயலின் மூலம் வழி காட்டுபவர். எனக்கு மட்டுமல்ல, கேரளாவில் பலருக்கும் அவர் தான் குரு. அவர் தனது செயலின் மூலம் வழிகாட்டினார். உம்மன்சாண்டியின் பாதையை பின்பற்று பவர்களை உன்னிப்பாக கவனித்து வருகிறேன்.

    இவ்வாறு ராகுல்காந்தி பேசினார்.

    • கேரள முதல்-மந்திரியாக காங்கிரசை சேர்ந்த உம்மன்சாண்டி இருந்தபோது சோலார் பேனல் முறைகேடு விவகாரம் கேரளாவை உலுக்கியது.
    • மந்திரிசபையில் இருந்த அனைத்து மந்திரிகளும் முறைகேட்டில் ஈடுபட்டதாக மோசடியில் மூளையாக செயல்பட்ட பெண் கூறி இருந்தார்.

    திருவனந்தபுரம்:

    கேரள முதல்-மந்திரியாக காங்கிரசை சேர்ந்த உம்மன்சாண்டி இருந்தபோது சோலார் பேனல் முறைகேடு விவகாரம் கேரளாவை உலுக்கியது.

    அப்போது மந்திரிசபையில் இருந்த அனைத்து மந்திரிகளும் இந்த முறைகேட்டில் ஈடுபட்டதாகவும், இந்த மோசடியில் மூளையாக செயல்பட்ட பெண் கூறி இருந்தார். மேலும் உம்மன் சாண்டி தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் புகார் கூறினார். அதைத் தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது.

    அதைத்தொடர்ந்து நடத்திய விசாரணையில், உம்மன்சாண்டிக்கு எதிரான பாலியல் புகாரில் போதிய ஆதாரங்கள் இல்லை எனக்கூறி நேற்று சி.பி.ஐ. திருவனந்தபுரம் தலைமை ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்து உள்ளது.

    ×