என் மலர்
நீங்கள் தேடியது "புதிய கல்வி கொள்கை"
- வரும் காலங்களில் மாணவர்களுக்கு செயல்படுத்தப்பட்டு வரும் வாசிக்கலாம் வாங்க உள்ளிட்ட திட்டங்கள் மூலம் தமிழ்நாடு அரசு சார்பிலேயே வெளிநாடுகளுக்கு அழைத்து செல்வோம்.
- புதிய கல்வி கொள்கையை தமிழ்நாடு அரசு பின்பற்றுவதாக அண்ணாமலை மட்டுமல்ல, ஒன்றிய கல்வி அமைச்சரே கூறி வருகிறார்.
திருச்சி:
திருச்சி விமான நிலையத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களிடம் கூறியதாவது:-
மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் நாங்கள் அவர்களை வெளிநாடுகளுக்கு அழைத்து செல்கிறோம். கடந்த டிசம்பர் மாதமே அவர்களை அழைத்து செல்ல வேண்டியது, ஆனால் ஒமைக்ரான் பரவல் காரணமாக அப்போது அவர்களை அழைத்து செல்ல முடியவில்லை. தற்போது அவர்களை அழைத்து செல்கிறோம்.
சார்ஜாவில் நடைபெறும் சர்வதேச புத்தக கண்காட்சி, துபாய், அபுதாபியில் முக்கிய இடங்களை அவர்களுக்கு சுற்றி காட்ட உள்ளோம். நான்கு நாட்களும் அவர்களுக்கு தாயாகவும், தந்தையாகவும் நான் இருப்பேன்.
தற்போது மாணவர்களை சி.எஸ்.ஆர். நிதியிலிருந்து அழைத்து செல்கிறோம். வரும் காலங்களில் மாணவர்களுக்கு செயல்படுத்தப்பட்டு வரும் வாசிக்கலாம் வாங்க உள்ளிட்ட திட்டங்கள் மூலம் தமிழ்நாடு அரசு சார்பிலேயே வெளிநாடுகளுக்கு அழைத்து செல்வோம்.
புதிய கல்வி கொள்கையை தமிழ்நாடு அரசு பின்பற்றுவதாக அண்ணாமலை மட்டுமல்ல, ஒன்றிய கல்வி அமைச்சரே கூறி வருகிறார். ஆனால் புதிய கல்வி கொள்கையை ஆரம்ப நிலையிலிருந்தே முதலமைச்சர் எதிர்த்து வருகிறார். அதற்காக தான் மாநில கல்வி கொள்கை வகுக்க குழு அமைத்துள்ளார்.
அதை அண்ணாமலை உள்ளிட்டோர் தெரிந்து கொண்டு பேச வேண்டும். மாநில கல்வி கொள்கை தயாரிப்பு குழுவின் வரைவு அறிக்கை டிசம்பர் முதல் வாரத்தில் தாக்கல் செய்த பின்பு நாங்கள் எதை பின்பற்றுகிறோம் என்பது அவர்களுக்கு தெரியும்.
பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கான இடஒதுக்கீடு காரணமாக பள்ளிக்கல்வித்துறை மட்டுமல்லாது, பல துறையிலும் கடுமையான பாதிப்புகள் ஏற்படும். எனவே இதை தடுப்பதற்காக தமிழக முதல்வர் தனியாக ஒரு குழு அமைத்துள்ளார். இ.வி.எஸ். இட ஒதுக்கீட்டில் இருந்து நம்மை காக்கின்ற முதல்வராக தமிழக முதலமைச்சர் இருப்பார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- குற்றச்சாட்டு சொல்லியதால் அது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
- புதிய கல்வி கொள்கை முறையில் சிறப்புகள் ஏதும் இல்லை.
சிவகிரி:
மாவீரன் பூலித்தேவன் பிறந்தநாளை முன்னிட்டு சிவகிரி அருகே நெல்கட்டும்செவல் கிராமத்தில் உள்ள அவரது சிலைக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
வெள்ளையர்களை எதிர்த்து வீரவாள் சுழற்றி போரிட்ட மாமன்னர் பூலித்தேவரின் வீரமும், திமிரும் தமிழர்களாக எங்களுக்கும் உண்டு. பீரங்கியும், துப்பாக்கியையும் எதிர்த்து வெறும் வாளையும், வேலையும் கொண்டு யுத்தம் செய்த பெரும் பாட்டனார் பூலித்தேவர்.
திரை உலகத்தில் மட்டுமல்லாது, பாலியல் துன்புறுத்தல்கள் அனைத்து துறைகளிலும் இருக்கிறது. சினிமா துறையை பொறுத்தவரையில் குற்றச்சாட்டு சொல்லியதால் அது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. எந்த துறையிலும் இதுபோன்று நிலை ஏற்படக்கூடாது.
தற்போது கேரவன் போன்ற வாகனங்களில் கூட காமிராக்கள் அமைத்து நடிகைகள் உடை மாற்றுவதை படம் பிடிப்பது அநாகரிகமான செயல். இது வருத்தம் அளிக்கிறது. இதுபோன்ற செயல்கள் இனி நடக்காது என்பதற்கு நாம் தான் பொறுப்பேற்க வேண்டும்.
உலகிற்கே அறிவை கடன் கொடுத்த மக்கள் நாங்கள். புதிய கல்வி கொள்கை முறையில் சிறப்புகள் ஏதும் இல்லை. குல கல்வி முறையை மறுபடியும் ஊக்குவித்து வருகின்றனர். புதிய கல்வி கொள்கை ஏற்புடையது அல்ல.
இவ்வாறு அவர் கூறினார்.
- பீகாரில் புதிய கல்வி கொள்கையை அமல்படுத்தியதால் பள்ளிக்கு மாணவர்கள் வருகை 20 சதவீதம் குறைந்துள்ளது.
- சாமானிய ஏழை பிள்ளைகளை படிக்க விடாமல் கூலி தொழிலுக்கு அனுப்பும் திட்டம் தான் புதிய கல்வி கொள்கை.
தமிழக சபாநாயகர் அப்பாவு இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, அவர் புதிய கல்வி கொள்கை குறித்து விமர்சித்தார்.
இதுகுறித்து அப்பாடு கூறியதாவது:-
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் புதிய கல்வி கொள்கையை அரசியலாக்கவில்லை.
அனைவருக்கும் கல்வி வழங்க வேண்டும் என கொண்டு வந்த திட்டத்திற்கான நிதியை நிறுத்தி மத்திய அரசு அரசியல் செய்கிறது.
2022ம் ஆண்டு புதிய கல்வி கொள்கையை ஏற்ற பீகாரில் தற்போதைய கணக்கெடுப்பு படி பள்ளி வருகை 51 சதவீதத்தில் இருந்து 31 சதவீதமாக குறைந்துள்ளது.
பீகாரில் புதிய கல்வி கொள்கையை அமல்படுத்தியதால் பள்ளிக்கு மாணவர்கள் வருகை 20 சதவீதம் குறைந்துள்ளது.
சாமானிய ஏழை பிள்ளைகளை படிக்க விடாமல் கூலி தொழிலுக்கு அனுப்பும் திட்டம் தான் புதிய கல்வி கொள்கை.
இந்தியை மட்டும் படித்து தமிழை அழிக்க வேண்டும் என்பதற்காக வே மூன்றாவது மொழி படிக்க கூறுகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பக்கத்து மாநிலங்களின் தமிழக எல்லை மாவட்டங்களில் ஆசிரியர் வேலைவாய்ப்பு கிடைப்பதையும் உறுதி செய்யலாம்.
- தமிழக பள்ளி மாணவர்கள், இளைஞர்கள் எதிர்காலம் சிறப்பாக அமைய, தமிழக அரசு உதவ வேண்டும்.
மாணவர்களின் கல்வியில் வீணாக அரசியல் செய்யாமல் PM SHRI திட்டத்தில் தமிழகம் இணைய வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அண்ணாமலை தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பாதவது:-
மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், தமிழக மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்யாதீர்கள் என்று, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்குக் கடிதம் எழுதியிருந்தார்.
அதற்கு, தமிழக அரசு, வழக்கமான மழுப்பல் காரணங்களோடு, இந்தி தவிர்த்து பிற மொழிகள் கற்பிக்கப் போதிய ஆசிரியர்கள் இல்லை என்று கூறியிருக்கிறது.
மத்திய அரசு இந்தி மொழியை மட்டுமே மூன்றாவது மொழியாகக் கொண்டு வரவில்லை என்பதை ஒப்புக்கொண்ட தமிழக அரசுக்கு முதலில் நன்றி.
ஏற்கனவே பல ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருக்கும்போது, உடனடியாக நீங்கள் வேறு இந்திய மொழிகளுக்கான ஆசிரியர்களை நியமித்து விடுவீர்கள் என்று, திமுக அரசை அறிந்த யாரும் எதிர்பார்க்கமாட்டார்கள். ஆனால் அதற்கான பணிகளைத் தமிழக அரசு தொடங்கலாம்.
தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளி மாணவர்களிடம் கருத்துக்கணிப்பு மேற்கொண்டு, எந்தெந்த மொழிகளைக் கற்க மாணவர்கள் விரும்புகிறார்கள் என்பதை முடிவு செய்து, அதன் அடிப்படையில் அந்தந்த மொழிகளைப் பயிற்றுவிக்க ஆசிரியர்களை நியமிக்கும் பணிகளைத் தொடங்க வேண்டும்.
மேலும், திமுக அரசு நினைத்தால் தமிழ் மொழியில் பட்டம் பெற்று, ஆசிரியர் பணி கனவுடன் இருக்கும் தமிழக இளைஞர்களுக்கு, பக்கத்து மாநிலங்களின் தமிழக எல்லை மாவட்டங்களில் ஆசிரியர் வேலைவாய்ப்பு கிடைப்பதையும் உறுதி செய்யலாம்.
எனவே, கல்வியில் வீணாக அரசியல் செய்யாமல், PMSHRI திட்டத்தில் இணைந்து, தமிழக பள்ளி மாணவர்கள், இளைஞர்கள் எதிர்காலம் சிறப்பாக அமைய, தமிழக அரசு உதவ வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.






