என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆட்டோ டிரைவர் தற்கொலை"

    • வீடியோவில் அம்பத்தூர் போலீசார் ஒரு தலைபட்சமாக விசாரித்து தன்னை கைது செய்து விடுவதாக மிரட்டுகின்றனர் என்று கூறுகிறார்.
    • போலீசார் மிரட்டியதால் ஆட்டோ டிரைவர் வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பூந்தமல்லி:

    மாங்காடு அடுத்த பரணிபுத்தூரை சேர்ந்தவர் ரூபன் (வயது40). ஆட்டோ டிரைவர். இவருக்கு 2 மனைவிகளும் 4 குழந்தைகளும் உள்ளனர்.

    ரூபன் பைனான்சில் ஆட்டோ வாங்கி இருந்தார். இதற்கான பணம் ரூ. 3 லட்சம் வரை திருப்பி கட்ட முடியவில்லை என்று தெரிகிறது.

    இதுதொடர்பாக அம்பத்தூர் போலீசில் ரூபன் மீது புகார் செய்யப்பட்டது. போலீசார் அவரை அழைத்து விசாரித்து வந்தனர். நேற்று முன்தினம் மீண்டும் விசாரணைக்கு வருமாறு போலீசார் அழைத்து இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் ரூபன் செல்லவில்லை.

    இந்த நிலையில் அப்பகுதியில் உள்ள 2-வது மனைவியான லீலாவதி வீட்டுக்கு சென்ற ரூபன் அங்கு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். முன்னதாக ரூபன் தனது செல்போனில் வீடியோ ஒன்று பேசி பதிவு செய்து உள்ளார். அதில், அம்பத்தூர் போலீசார் ஒரு தலைபட்சமாக விசாரித்து தன்னை கைது செய்து விடுவதாக மிரட்டுகின்றனர் என்று கூறுகிறார். மேலும் தனது தற்கொலைக்கு காரணம் என்று கூறி சப்-இன்ஸ்பெக்டர் ஒருவரது பெயரையும் குறிப்பிட்டு பதிவிட்டு உள்ளார்.

    இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. ரூபன் மீது வேறு சில வழக்குகளும் உள்ளதாக தெரிகிறது. அந்த வழக்குகளையும் சேர்த்து கைது செய்யப்போவதாக போலீசார் மிரட்டி உள்ளனர். இதனால் பயந்து போன ரூபன் தற்கொலை செய்து இருப்பது தெரியவந்து உள்ளது.

    இது தொடர்பாக போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள். போலீசார் மிரட்டியதால் ஆட்டோ டிரைவர் வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • இதையடுத்து மாணவியை கண்டுபிடிக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ள கோர்ட்டு உத்தரவிட்டது.
    • ட்ரோன்கள் மூலமாகவும் தேடுதல் பணி மேற்கொள்ளப்பட்டது.

    திருவனந்தபுரம்:

    கர்நாடகா மாநிலம் பைவளிகே பகுதியை சேர்ந்தவர் பிரதீப் (வயது42). ஆட்டோ டிரைவரான இவருக்கு திருமணமாகவில்லை. இவரது பக்கத்து வீட்டில் 10-ம் வகுப்பு மாணவி ஒருவர் இருந்திருக்கிறார்.

    பக்கத்து வீட்டுக்காரர் என்ற முறையில் மாணவியின் வீட்டுக்கு பிரதீப் அடிக்கடி சென்றிருக்கிறார். மேலும் மாணவியிடம் சகஜமாக பேசி பழகி வந்திருக்கிறார். சகோதர பாசம் என்ற அடிப்படையில் அவர் பழகியதால், அவர்களின் பழக்கத்தை யாரும் சந்தேகப்படவில்லை.

    இந்தநிலையில் கடந்த மாதம்(பிப்ரவரி) 12-ந்தேதி வீட்டில் இருந்த மாணவி திடீரென மாயமானார். இதையடுத்து அவரது பெற்றோர் அவளது செல்போனை தொடர்பு கொண்டனர். முதலில் அழைப்பு சென்ற நிலையில், சிறிது நேரத்திற்கு பிறகு செல்போன் சுவிட்ச் ஆப் என்று வந்துவிட்டது.

    மாணவி மாயமாகியிருந்த அதே வேளையில், பக்கத்து வீட்டில் வசித்து வந்த ஆட்டோ டிரைவரான பிரதீப்பையும் காணவில்லை. இந்தநிலையில் மாணவி, தனது உறவினர் ஒருவரின் செல்போனுக்கு ஆட்டோ டிரைவர் நெருக்கமாக இருக்கும் 50-க்கும் மேற்பட்ட புகைப்படங்களை அனுப்பினார்.

    இதனால் மாணவி ஆட்டோ டிரைவருடன் சென்றிருப்பதை மாணவியின் குடும்பத்தினர், அறிந்தனர். அவர்கள் வீடு இருக்கக்கூடிய பகுதி கேரள மாநிலத்தை ஒட்டிய பகுதி என்பதால், மாணவி மாயமானது குறித்து கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள கும்பலே போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து மாணவி மற்றும் பிரதீப்பை தேடினர். ஆனால் அவர்கள் மாயமாகி பல நாட்கள் ஆகியும் போலீசார் கண்டுபிடிக்காததால், மாணவியின் குடும்பத்தினர் கோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தனர்.

    இதையடுத்து மாணவியை கண்டுபிடிக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ள கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்பேரில் மாணவியை கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டனர். மாணவி இருக்கும் இடத்தை கண்டறிய இருவரின் செல்போனை கண்காணித்தபடி இருந்தனர்.

    அதில் அவர்களின் வீட்டிற்கு சற்று தொலைவில் உள்ள வனப்பகுதியை காண்பித்தது. இதையடுத்து வனப்பகுதிக்குள் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. ட்ரோன்கள் மூலமாகவும் தேடுதல் பணி மேற்கொள்ளப்பட்டது. அப்போது வனப்பகுதியில் உள்ள ஒரு மரத்தில் மாணவி மற்றும் ஆட்டோ டிரைவர் ஆகிய இருவரும் தூக்கில் பிணமாக தொங்கியது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து கேரள போலீசார் அந்த இடத்துக்கு சென்று இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்கள் இருவரும் தற்கொலை செய்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஆனால் சம்பவ இடத்தில் தற்கொலை செய்துகொண்டதற்கான கடிதம் எதுவும் சிக்கவில்லை.

    இருவரின் செல்போன்கள், கத்தி, சாக்லேட் ஆகியவையே கிடந்தன. மேலும் உடல் அழுகிய நிலையிலும் இல்லை. போலீசார் தீவிரமாக தேடுவதை அறிந்து இருவரும் தூக்குப்போட்டு உயிரை மாய்த்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. அது தொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மாயமான 25 நாட்களுக்கு பிறகு 10-ம் வகுப்பு மாணவி, ஆட்டோ டிரைவருடன் காட்டுப்பகுதியில் தூக்கில் பிணமாக தொங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • அசோக்கின் மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட பிரச்சினை காரணமாக பிரிந்து வாழ்ந்து வருவதாக தெரிவித்தார்.
    • இதனால் ஏற்பட்ட மன வருத்தத்தில் அசோக் தற்கொலை செய்திருக்கலாம் என்று தெரிகிறது

    நாகர்கோவில்:

    பணகுடி ரெயில்வே தண்டவாளத்தில் வாலிபர் ஒருவர் பிணமாக கிடப்பதாக நாகர்கோவில் ரெயில்வே போலீசுக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார், குமார் ராஜ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். இதில் தண்டவாளத்தின் அருகே ஆட்டோ ஒன்றும் நின்று கொண்டிருந்தது.

    இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பிணமாக கிடந்தவர் பணகுடி பாம்பன்குளம் நாராயணசாமி கோவில் தெருவை சேர்ந்த ஆட்டோ டிரைவர் அசோக் (வயது 39) என்பது தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்களிடம் விசாரணை நடத்திய போது அசோக்கின் மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட பிரச்சினை காரணமாக பிரிந்து வாழ்ந்து வருவதாக தெரிவித்தார்.

    இதனால் ஏற்பட்ட மன வருத்தத்தில் அசோக் தற்கொலை செய்திருக்கலாம் என்று தெரிகிறது. இவர் ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்பு தற்கொலைக்கும் முயன்றதும் தெரிய வந்துள்ளது.

    இதையடுத்து போலீசார் அசோக்கின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து நாகர்கோவில் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கணவன்-மனைவி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக நேற்று தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ஜோதி கணவருடன் கோபித்துக் கொண்டு தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.
    • இதனால் மனமுடைந்த சிவா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    போரூர்:

    கோயம்பேடு குமரன் நகர் பகுதியை சேர்ந்தவர் சிவா (வயது 42) ஆட்டோ டிரைவர். இவரது மனைவி ஜோதி. தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.

    கணவன்-மனைவி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக நேற்று தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ஜோதி கணவருடன் கோபித்துக் கொண்டு தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இதனால் மனமுடைந்த சிவா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து கோயம்பேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×