search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாங்காடு அருகே போலீசார் கைது செய்வதாக மிரட்டியதால் ஆட்டோ டிரைவர் தற்கொலை
    X

    மாங்காடு அருகே போலீசார் கைது செய்வதாக மிரட்டியதால் ஆட்டோ டிரைவர் தற்கொலை

    • வீடியோவில் அம்பத்தூர் போலீசார் ஒரு தலைபட்சமாக விசாரித்து தன்னை கைது செய்து விடுவதாக மிரட்டுகின்றனர் என்று கூறுகிறார்.
    • போலீசார் மிரட்டியதால் ஆட்டோ டிரைவர் வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பூந்தமல்லி:

    மாங்காடு அடுத்த பரணிபுத்தூரை சேர்ந்தவர் ரூபன் (வயது40). ஆட்டோ டிரைவர். இவருக்கு 2 மனைவிகளும் 4 குழந்தைகளும் உள்ளனர்.

    ரூபன் பைனான்சில் ஆட்டோ வாங்கி இருந்தார். இதற்கான பணம் ரூ. 3 லட்சம் வரை திருப்பி கட்ட முடியவில்லை என்று தெரிகிறது.

    இதுதொடர்பாக அம்பத்தூர் போலீசில் ரூபன் மீது புகார் செய்யப்பட்டது. போலீசார் அவரை அழைத்து விசாரித்து வந்தனர். நேற்று முன்தினம் மீண்டும் விசாரணைக்கு வருமாறு போலீசார் அழைத்து இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் ரூபன் செல்லவில்லை.

    இந்த நிலையில் அப்பகுதியில் உள்ள 2-வது மனைவியான லீலாவதி வீட்டுக்கு சென்ற ரூபன் அங்கு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். முன்னதாக ரூபன் தனது செல்போனில் வீடியோ ஒன்று பேசி பதிவு செய்து உள்ளார். அதில், அம்பத்தூர் போலீசார் ஒரு தலைபட்சமாக விசாரித்து தன்னை கைது செய்து விடுவதாக மிரட்டுகின்றனர் என்று கூறுகிறார். மேலும் தனது தற்கொலைக்கு காரணம் என்று கூறி சப்-இன்ஸ்பெக்டர் ஒருவரது பெயரையும் குறிப்பிட்டு பதிவிட்டு உள்ளார்.

    இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. ரூபன் மீது வேறு சில வழக்குகளும் உள்ளதாக தெரிகிறது. அந்த வழக்குகளையும் சேர்த்து கைது செய்யப்போவதாக போலீசார் மிரட்டி உள்ளனர். இதனால் பயந்து போன ரூபன் தற்கொலை செய்து இருப்பது தெரியவந்து உள்ளது.

    இது தொடர்பாக போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள். போலீசார் மிரட்டியதால் ஆட்டோ டிரைவர் வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×