என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வேளாண் வளர்ச்சி"

    • உணவு தானிய உற்பத்தி 457.08 லட்சம் மெட்ரிக் டன், சராசரியாக 5.66 சதவீத வேளாண் வளர்ச்சியை தமிழ்நாடு எட்டி உள்ளது.
    • வேளாண் வளர்ச்சி திட்டங்களால் கேழ்வரகு, கொய்யா உற்பத்தி திறனில் நாட்டிலேயே தமிழ்நாடு முதலிடம்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு பால், மீன்வள செயல்பாடுகளில் முன்னணி மாநிலமாக திகழ்கிறது. ஒட்டுமொத்த வளர்ச்சியில் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு பாராட்டு, புகழை பெற்று வருகிறது என்று அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.

    தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    * தமிழ்நாடு பால், மீன்வள செயல்பாடுகளில் முன்னணி மாநிலமாக திகழ்கிறது.

    * உணவு தானிய உற்பத்தி 457.08 லட்சம் மெட்ரிக் டன், சராசரியாக 5.66 சதவீத வேளாண் வளர்ச்சியை தமிழ்நாடு எட்டி உள்ளது.

    * தமிழகம் முழுவதும் 5,427 கி.மீ. நீள நீர்நிலைகள் தூர்வாரப்பட்டு 2.10 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.

    * தமிழ்நாடு முழுவதும் 449 கோடி ரூபாய் மதிப்பிலான வேளாண் இயந்திரங்கள் 62,820 விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.

    * வேளாண் வளர்ச்சி திட்டங்களால் கேழ்வரகு, கொய்யா உற்பத்தி திறனில் நாட்டிலேயே தமிழ்நாடு முதலிடம்.

    * மக்காச்சோளம், கரும்பு, புளி, மரவள்ளி, மல்லிகை, எண்ணெய் வித்துகள் உற்பத்தியில் தமிழ்நாட்டுக்கு 2-வது இடம்.

    * வேர்க்கடலை, தென்னை, உற்பத்தி திறனில் 3-வது இடம் பிடித்து தமிழ்நாடு சாதனை படைத்துள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    50 ஊராட்சிகளில் வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் 50 ஊராட்சிகளில் வேளாண் வளர்ச்சி சிறப்பு முகாம் வரும் 7ந்தேதி நடைபெற உள்ளது. இதுகுறித்து திருப்பூர் வேளாண் இணை இயக்குனர் மகாதேவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    திருப்பூர் மாவட்டத்தில், 2021 - 22ம் நிதியாண்டில், 50 ஊராட்சிகளில் வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தன்னிறைவு பெற்ற ஊராட்சிகளாக மாற்றும் நோக்கில் வேளாண் சார்ந்த அனைத்து துறைகள் இணைந்து, வருகிற 7-ந் தேதி, 50 ஊராட்சிகளில் தொடர் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.

    அவிநாசியில் ஆலத்தூர், சேவூர், நம்பியாம்பாளையம், பழங்கரை, பாப்பான்குளம், புதுப்பாளையம், செம்பியநல்லுார். தாராபுரத்தில் பொன்னாபுரம், முண்டுவேலம்பட்டி, தொப்பம்பட்டி. குடிமங்கலத்தில், அணிக்கடவு, குடிமங்கலம், வாகைத்தொழுவு.

    காங்கயத்தில், நத்தக்காடையூர், பழையகோட்டை, பாப்பினி, பரஞ்சேர் வழி, பொதியம்பாளையம் ஊராட்சி.குண்டடத்தில், எல்லம்பாளையம் புதூர், நந்தவனம்பாளையம், பெருமாள்பாளையம், சடையபாளையம், சங்கரன்டாம்பாளையம், சூரியநல்லுார், வட சின்னேரி பாளையம்.

    மடத்துக்குளத்தில், துங்காவி. மூலனூரில் கிழான்குண்டல், கொமாரபாளையம், பொன்னிவாடி. பல்லடத்தில், கணபதிபாளையம், கரைப்புதூர், வடுகபாளையம்புதூர். பொங்கலூரில் கண்டியன்கோவில், தெ.அவிநாசி பாளையம், தொங்குட்டிபாளையம், உகாயனூர்.திருப்பூரில், முதலிபாளையம், வள்ளிபுரம்.

    உடுமலையில் ஆண்டிய கவுண்டனூர்,ஜல்லிப்பட்டி, கல்லாபுரம், ஊத்துக்குளியில் செங்கப்பள்ளி, சின்னேகவுண்டன் வலசு, கமலக்குட்டை, கவுண்டம்பாளையம், நடுப்பட்டி, சுண்டக்காம்பாளையம், விருமாண்டம்பாளையம். வெள்ளகோவிலில் பச்சாபாளையம், வேலம்பாளையம் ஊராட்சிகளில் முகாம் நடைபெற உள்ளது.

    முகாமில், பட்டா மாறுதல், வண்டல் மண் எடுக்க விண்ணப்பம் பெறப்படும். பயிர்க்கடன் வழங்கல், பயிர் காப்பீடு திட்ட விழிப்புணர்வு, விவசாய கடன் பெற விண்ணப்பம் பெறப்படும். விவசாயிகள், முகாமில் பங்கேற்று பயன்பெற வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    • கிராமங்களில் அரசுத்துறைகள் ஒருங்கிணைந்து வேளாண் வளர்ச்சித் திட்டத்தை செயல்படுத்துகின்றன.
    • முகாம் நடப்பது குறித்து தெரியப்படுத்தும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

    திருப்பூர்:

    தமிழக அரசின் சார்பில், ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதில், வேளாண்மை, தோட்டக்கலை, கால்நடை, மீன்வளம் உட்பட 35க்கும் மேற்பட்ட அரசுத் துறைகள் உள்ளன.இத்திட்டத்தை செயல்படுத்த போதிய ஒருங்கிணைப்பு இல்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.

    இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-

    கிராமங்களில் அரசுத்துறைகள் ஒருங்கிணைந்து வேளாண் வளர்ச்சித் திட்டத்தை செயல்படுத்துகின்றன.இத்திட்டம் வரவேற்கத்தக்கது என்றாலும், போதிய ஒருங்கிணைப்பு இல்லை. இது தொடர்பான முகாம்கள் குறித்து கடைக்கோடி விவசாயிகள் வரை தெரியப்படுத்த அதிகாரிகள் முயற்சிக்கவேண்டும்.அதேபோல்அனைத்து துறைகள் மூலமும் விவசாயிகள் பயன்பெறும் வகையில் முகாம் ஏற்பாடு செய்யப்பட வேண்டும். இதனால் விவசாயிகளுக்கு ஏற்படும் சந்தேகங்கள் மற்றும் பிரச்னைகளுக்கு ஒரு தீர்வு கிடைக்கும்.ஆனால் அரசுத்துறைகள் இடையே போதிய ஒருங்கிணைப்பு இல்லாததால் ஒரு சில துறைகளை தவிர்த்து பெரும்பாலான துறைகள் முகாமில் இடம் பெறுவதில்லை. எனவே அனைத்து விவசாயிகளுக்கும் முகாம் நடப்பது குறித்து தெரியப்படுத்தும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றனர்.

    • கடையம் வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் விரிவான திட்ட அறிக்கைகள் ஆய்வு நடைபெற்றது.
    • ஆய்வின் போது வேளாண்மை உதவி இயக்குனர் ஏஞ்சலின் பொன்ராணி, வேளாண்மை அலுவலர் அபிராமி உள்பட பலர் இருந்தனர்.

    கடையம்:

    கடையம் வட்டாரத்தில் வேளாண்மை-உழவர் நலத்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட பணிகளை சென்னை வேளாண்மை இயக்குனர், தென்காசி மாவட்ட மண்டல அலுவலரும், வேளாண்மை உதவி இயக்குனருமான அருள்நங்கை மற்றும் தென்காசி மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர் (மத்திய, மாநில திட்டங்கள்) நல்லமுத்துராஜா ஆகியோர் கடையம் வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் விரிவான திட்ட அறிக்கைகள் ஆய்வு செய்தனர்.

    பின்னர் திட்டத்தில் 2022-2023-ம் ஆண்டு ஊரக வளர்ச்சி துறை மூலம், சேர்வைகாரன்பட்டி, ரவணசமுத்திரம், வீராசமுத்திரம் ஊராட்சிகளில் செயல்படுத்தப்படும் திட்ட பணிகள் கள ஆய்வு செய்தனர். 2021-2022-ம் ஆண்டு பொட்டல்புதூர் ஊராட்சியில் வேளாண்மை-உழவர் நலத்துறை சார்பில் செயல்படுத்தப்பட்ட தென்னங்கன்றுகள், மின்கல விசை தெளிப்பான், நெல் பயிரில் வரப்பு பயிராக உளுந்து பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளதை கள ஆய்வு செய்தனர்.

    ஆய்வின் போது வேளாண்மை உதவி இயக்குனர் ஏஞ்சலின் பொன்ராணி, வேளாண்மை அலுவலர் அபிராமி, தோட்டக்கலை அலுவலர் சபா பாத்திமா, துணை வேளாண்மை அலுவலர் சுப்ராம், உதவி அலுவலர்கள் கமல்ராஜன், ஜெகதீஸ்வரன், கிருஷ்ணமூர்த்தி, பேச்சியப்பன், பால்துரை, தீபா, தோட்டக்கலை உதவி அலுவலர்கள் திருமலைக்குமார், பானுமதி, இசக்கியம்மாள், அட்மா திட்ட தொழில்நுட்ப மேலாளர் பொன்ஆசீர், உதவி தொழில்நுட்ப மேலாளர் நாகராஜன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

    தெலுங்கானாவில் வேளாண் வளர்ச்சிக்காகவும், விவசாயம் மேம்படவும் முதல்-மந்திரி சந்திரசேகரராவ் பல்வேறு சிறப்பு திட்டங்கள் மற்றும் சலுகைகளை அறிமுகம் செய்துள்ளார்.
    ஐதராபாத்:

    தெலுங்கானா முதல்-மந்திரியாக கே.சந்திரசேகரராவ் பொறுப்பேற்ற 4 ஆண்டுகளில் விவசாயம் மேம்பட பல்வேறு சிறப்பு திட்டங்கள் மற்றும் சலுகைகளை வழங்கி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். இதன்படி அவர் 50-க்கும் மேற்பட்ட சலுகைகள், திட்டங்களை வழங்கியுள்ளார்.குறிப்பாக 2018-19-ம் ஆண்டுக்கான மாநில பட்ஜெட்டில் விவசாயத்துறைக்கு அவரது அரசு 26 சதவீதம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அதில் ரூ.3,728 கோடி இலவச மின்சாரத்துக்காகவும் ரூ.20,820 கோடி விவசாயம் மற்றும் அதை சார்ந்த பிரிவுகள், கிராம மேம்பாடு ஆகியவற்றுக்காகவும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

    நிதி ஆயோக் அமைப்பின் விவசாய விற்பனை மற்றும் விவசாய சீர்திருத்த குறியீட்டின்படி விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கும் 10 மாநிலங்களின் வரிசையில் தெலுங்கானாவும் இடம்பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.

    விவசாயிகளின் நலனுக்காக தெலுங்கானாவில் 24 மணி நேர இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை 2,58,195 விவசாய மின் இணைப்புகள் வழங்கப்பட்டு உள்ளன. குறைந்தபட்ச ஆதரவு விலை கிடைப்பதற்காக ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டு உள்ளது. விவசாயிகளுக்கு தலா ரூ.1 லட்சம் வரை கடன் தள்ளுபடி செய்யப்படுகிறது.



    இதன்படி 35.3 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.17 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி செய்யப்படுகிறது. குறைந்த வட்டி விகிதத்தில் விவசாய கடன் வழங்கப்படுகிறது. இவை தவிர 50 சதவீத மானியம், போக்குவரத்து வரி தள்ளுபடியுடன் விவசாயிகளுக்கு டிராக்டர்கள் வழங்கப்படுகிறது.

    விதைகள், உரங்கள், பூச்சிக்கொல்லிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலம் தடையின்றி வழங்கப்படுகிறது. கிராமங்களில் 25 விவசாயிகள் அடங்கிய குழு ஏற்படுத்தப்பட்டு தரமான விதைகள் உற்பத்தி செய்யப்பட்டு நேரடியாக விவசாயிகளுக்கு அவை வினியோகம் செய்யப்படுகின்றன. தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் குடும்பங்களுக்கு ரூ.6 லட்சம் நிதியுதவி வழங்கப்படுகிறது.

    தெலுங்கானா அரசின் ‘ரைது பந்து’ என்ற புதிய திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் சாகுபடி தொடங்கும்முன்பு ஏக்கருக்கு ரூ.8 ஆயிரம் வீதம் நிதி வழங்கப்படுகிறது. விவசாயிகளின் வங்கிக்கணக்குக்கு இந்த தொகை நேரடியாக அனுப்பப்படுகிறது. மேலும் இந்த திட்டத்தின் மூலம் அரசு கிடங்குகளில் இருப்பு வைத்துள்ள விவசாய பொருட்களின் மொத்த மதிப்பில் 75 சதவீதம் அளவுக்கு (அதிகபட்சம் ரூ.2 லட்சம்) விவசாயிகள் வட்டியில்லா கடன் பெற முடியும்.

    வன அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் முலுகு பகுதியில் ரூ.50 கோடியில் வன கல்லூரி தொடங்க திட்டமிடப்பட்டு உள்ளது. 22.47 லட்சம் டன் விளைபொருட்களை சேமித்து வைக்கும் வகையில் 364 கிடங்குகளை கட்டி வருகிறது. சொட்டு நீர் பாசனம், பசுமைக்குடில் விவசாயம் ஆகியவற்றை ஊக்குவிக்க மானியங்கள் வழங்கப்படுகின்றன.

    இன்டர்நெட், ‘வாட்ஸ்-அப்’ உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி விவசாயிகளுக்கு விளைபொருட்களின் இருப்பு, விலை உள்ளிட்ட விவரங்கள் தெரிவிக்கப்படுகின்றன. மேலும் குறைகளை தீர்க்க 1800 599 4199 என்ற தொலைபேசி எண்ணும் தொடங்கப்பட்டு உள்ளது.

    விவசாய அபிவிருத்தி, தற்கொலை தடுப்பு, குழந்தைகள் கல்வி, கடனுதவி, காப்பீடு, பெண்கள் மேம்பாடு, சுகாதாரம் என பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதன் மூலம் தெலுங்கானா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

    ×