search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் - விவசாயிகள் குற்றச்சாட்டு
    X

    காேப்புபடம்

    ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் - விவசாயிகள் குற்றச்சாட்டு

    • கிராமங்களில் அரசுத்துறைகள் ஒருங்கிணைந்து வேளாண் வளர்ச்சித் திட்டத்தை செயல்படுத்துகின்றன.
    • முகாம் நடப்பது குறித்து தெரியப்படுத்தும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

    திருப்பூர்:

    தமிழக அரசின் சார்பில், ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதில், வேளாண்மை, தோட்டக்கலை, கால்நடை, மீன்வளம் உட்பட 35க்கும் மேற்பட்ட அரசுத் துறைகள் உள்ளன.இத்திட்டத்தை செயல்படுத்த போதிய ஒருங்கிணைப்பு இல்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.

    இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-

    கிராமங்களில் அரசுத்துறைகள் ஒருங்கிணைந்து வேளாண் வளர்ச்சித் திட்டத்தை செயல்படுத்துகின்றன.இத்திட்டம் வரவேற்கத்தக்கது என்றாலும், போதிய ஒருங்கிணைப்பு இல்லை. இது தொடர்பான முகாம்கள் குறித்து கடைக்கோடி விவசாயிகள் வரை தெரியப்படுத்த அதிகாரிகள் முயற்சிக்கவேண்டும்.அதேபோல்அனைத்து துறைகள் மூலமும் விவசாயிகள் பயன்பெறும் வகையில் முகாம் ஏற்பாடு செய்யப்பட வேண்டும். இதனால் விவசாயிகளுக்கு ஏற்படும் சந்தேகங்கள் மற்றும் பிரச்னைகளுக்கு ஒரு தீர்வு கிடைக்கும்.ஆனால் அரசுத்துறைகள் இடையே போதிய ஒருங்கிணைப்பு இல்லாததால் ஒரு சில துறைகளை தவிர்த்து பெரும்பாலான துறைகள் முகாமில் இடம் பெறுவதில்லை. எனவே அனைத்து விவசாயிகளுக்கும் முகாம் நடப்பது குறித்து தெரியப்படுத்தும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றனர்.

    Next Story
    ×