என் மலர்
நீங்கள் தேடியது "முப்படை"
- பாகிஸ்தானின் ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியது.
- எல்லையில் நடந்த பீரங்கி தாக்குதலில் 35 முதல் 40 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.
பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் முகாம்கள் தாக்கப்படுவதற்கு முன்பு, பின்பு வீடியோ, படங்களை வெளியிட்டு அதிகாரிகள் விளக்கம் அளித்து வருகின்றனர்.
பாகிஸ்தான் தீவிரவாத முகாம்களை அழித்தது குறித்து படங்களை காட்டி விமானப்படை அதிகாரி ஏ.கே.பாரதி விளக்கினார்.
இந்திய ராணுவத்தின் திட்டமிட்ட துல்லிய தாக்குதலால் பாகிஸ்தானில் ஏற்பட்ட சேதங்கள் குறித்த புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து இந்திய ஏர் மார்ஷல் ஏ.கே.பார்தி கூறியதாவது:-
பாகிஸ்தானில் ஏராளமான பயங்கரவாத முகாம்கள் இருந்தன. இந்தியாவின் தாக்குதலுக்கு பயந்து முன்கூட்டியே சில முகாம்கள் காலி செய்யப்பட்டன.
இந்தியா பதில் தாக்குதல் நடத்தியபோது பயணிகள் விமானத்தை பாகிஸ்தான் தவறாக பயன்படுத்தியது.
மே 10ம் தேதி பாகிஸ்தானின் தாக்குதல் முயற்சிகள் முறியடிக்கப்பட்டன. பாகிஸ்தான் நடத்திய அனைத்து தாக்குதல்களையும் முறியடித்துள்ளோம்.
பாகிஸ்தானின் ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியது.
எல்லையில் நடந்த பீரங்கி தாக்குதலில் 35 முதல் 40 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.
பாகிஸ்தானில் உள்ள பஸ்ரூர் வான் பாதுகாப்பு ரேடார் இந்தியாவால் அழிக்கப்பட்டது. பாகிஸ்தானில் உள்ள பல விமானப்படை தளங்களை இந்தியா தாக்கி அழித்துள்ளது.
பாகிஸ்தானின் முக்கிய விமானப்படை தளமான ரஹீம் யார் கான் இந்தியாவால் தாக்கி அழிக்கப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
- பயங்கரவாதிகள் மீதான தாக்குதலின்போது மிகச்சரியாக இலக்கை நோக்கி குறிவைத்தோம்.
- இந்திய விமானப்படை தங்கள் செல்வாக்கை வானில் உயர்த்தியுள்ளது.
ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக டெல்லியில் ராணுவம் உள்ளிட்ட முப்பபை அதிகாரிகள் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்று வருகிறது.
இதில், இந்திய ராணுவத்தின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அதிகாரிகள் செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்து வருகின்றனர்.
ஏர் மார்ஷல் ஏ.கே.பார்தி, லெஃப்டினன்ட் ஜெனரல் ராஜீவ், வைஸ் அட்மிரல் பிரமோத், மேஜர் ஜெரனல் ஷர்தா ஆகியோர் உள்ளனர்.
அப்போது அவர் கூறியதாவது:-
பஹல்காம் தாக்குதலில் 26 பொதுமக்களின் உயிர் பறிபோனது.
இறந்தவர்களின் குடும்பத்தினர் அனுபவித்த வலி ஒட்டுமொத்த தேசமும் சாட்சியாக நின்றது.
பயங்கரவாதிகள், பயங்கரவாதிகளின் ஆதரவாளர்களை தாக்கும் நோக்கத்தோடு ஆபரேஷன் சிந்தூர் வடிவமைக்கப்பட்டது.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் 9 முகாம்கள் மற்றும் பயங்கரவாதிகள் மீத மட்டுமே தாக்குதல் நடத்தப்பட்டது. பயங்கரவாதிகளை அழிப்பஆது மட்டுமே ஆபரேஷன் சிந்தூரின் நோக்கம்.
பயங்கரவாத முகாம்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் சுமார் 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
ஆனால், குருதுவாரா உள்ளிட்ட மத தளங்களின் மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது.
பயங்கரவாதிகள் மீதான தாக்குதலின்போது மிகச்சரியாக இலக்கை நோக்கி குறிவைத்தோம்.
குறி வைக்கப்டட் வானவ் தாக்குதல்கள் மூலம் நமது இலக்குளை அடைந்துள்ளோம்.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் கீழ் தீவிர கண்காணிப்புக்கு பிறகு 9 பயங்கரவாத இலக்குகள் அடையாளம் காணப்பட்டன.
லஷ்கர் இ தொய்பாவின் முக்கிய மையமான முரிட்கே போன்ற இடங்கள் அஜ்மல் கசாப், டேவிட் ஹெட்லியை உருவாக்கிது.
லஷ்கர்-இ- தொய்பாவின் முக்கிய மையமான முரிட்கே தாக்கி அழிக்கப்பட்டுள்ளது.
தெளிவான ராணுவ நோக்கத்துடன் ஆபரேஷன் சிந்தூர் உருவாக்கப்பட்டது.
பயங்கரவாதிகள், பயங்கரவாத உட்கட்டமைப்புகளை தாக்குவது தான் நமது குறியாக இருந்தது.
ஆனால், கடந்த 7ம் தேதி ஆளில்லா விமானங்கள், ட்ரோன்கள் மூலம் நமது ராணுவ இலக்குகள், பொதுமக்களை குறிவைத்து பாகிஸ்தான் தாக்க தொடங்கியது.
பாகிஸ்தானின் லாகூரில் இருந்த ரேடார் அமைப்புகளை அழித்தோம். ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் இந்திய விமானப்படைக்கு முக்கிய பங்கு உள்ளது. இந்திய விமானப்படை தங்கள் செல்வாக்கை வானில் உயர்த்தியுள்ளது.
இவ்வாறு கூறினர்.
- பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது.
- ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து பாதுகாப்பு அமைச்சகம் இன்று விளக்கம அளிக்கவுள்ளது.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. கோட்லி, பஹவல்பூர், முசாபராபாத் ஆகிய இடங்களில் இந்தியா ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது.
இந்த தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவ தளங்கள் மீது நடத்தப்படவில்லை என இந்திய ராணுவம் உறுதிப்படுத்தியது.
இன்று காலை 10 மணிக்கு ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து செய்தியாளர் சந்திப்பை நடத்தி விளக்கம் அளிக்கவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், 'ஆப்ரேஷன் சிந்தூர்' நடவடிக்கை தொடர்பாக முப்படை தளபதிகளுடன் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவின் ராணுவம் மற்றும் விமானப்படை ஆகிய இரண்டும் அணு ஆயுதங்களைக் கையாளும் திறன் பெற்ற, அதனைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தும் திறனுடைய படைக்கலன்களை தன்னகத்தே கொண்டிருக்கின்றன. கடற்படையில் அணு ஆயுதங்களைச் சேர்க்கும் பணி நடைபெற்று வந்தது.

இந்தியாவின் முப்படைகளும் அணு ஆயுதப் பயன்பாட்டில் முழுமை பெற்றுள்ள இந்த நாளானது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஓன்றாகும். உலகளாவிய சமாதானம் மற்றும் நிலைத்தன்மைக்கு இந்தியாவின் அணு ஆயுத பயன்பாட்டுத் திறனானது தூணாக விளங்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். #IndianNavy #NuclearSubmarine #IndianSubmarine #Modi






