என் மலர்tooltip icon

    இந்தியா

    ஆபரேஷன் சிந்தூர்: இந்திய ராணுவத்தின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? முப்படை அதிகாரிகள் விளக்கம்
    X

    ஆபரேஷன் சிந்தூர்: இந்திய ராணுவத்தின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? முப்படை அதிகாரிகள் விளக்கம்

    • பயங்கரவாதிகள் மீதான தாக்குதலின்போது மிகச்சரியாக இலக்கை நோக்கி குறிவைத்தோம்.
    • இந்திய விமானப்படை தங்கள் செல்வாக்கை வானில் உயர்த்தியுள்ளது.

    ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக டெல்லியில் ராணுவம் உள்ளிட்ட முப்பபை அதிகாரிகள் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்று வருகிறது.

    இதில், இந்திய ராணுவத்தின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அதிகாரிகள் செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்து வருகின்றனர்.

    ஏர் மார்ஷல் ஏ.கே.பார்தி, லெஃப்டினன்ட் ஜெனரல் ராஜீவ், வைஸ் அட்மிரல் பிரமோத், மேஜர் ஜெரனல் ஷர்தா ஆகியோர் உள்ளனர்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    பஹல்காம் தாக்குதலில் 26 பொதுமக்களின் உயிர் பறிபோனது.

    இறந்தவர்களின் குடும்பத்தினர் அனுபவித்த வலி ஒட்டுமொத்த தேசமும் சாட்சியாக நின்றது.

    பயங்கரவாதிகள், பயங்கரவாதிகளின் ஆதரவாளர்களை தாக்கும் நோக்கத்தோடு ஆபரேஷன் சிந்தூர் வடிவமைக்கப்பட்டது.

    ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் 9 முகாம்கள் மற்றும் பயங்கரவாதிகள் மீத மட்டுமே தாக்குதல் நடத்தப்பட்டது. பயங்கரவாதிகளை அழிப்பஆது மட்டுமே ஆபரேஷன் சிந்தூரின் நோக்கம்.

    பயங்கரவாத முகாம்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் சுமார் 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

    ஆனால், குருதுவாரா உள்ளிட்ட மத தளங்களின் மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது.

    பயங்கரவாதிகள் மீதான தாக்குதலின்போது மிகச்சரியாக இலக்கை நோக்கி குறிவைத்தோம்.

    குறி வைக்கப்டட் வானவ் தாக்குதல்கள் மூலம் நமது இலக்குளை அடைந்துள்ளோம்.

    ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் கீழ் தீவிர கண்காணிப்புக்கு பிறகு 9 பயங்கரவாத இலக்குகள் அடையாளம் காணப்பட்டன.

    லஷ்கர் இ தொய்பாவின் முக்கிய மையமான முரிட்கே போன்ற இடங்கள் அஜ்மல் கசாப், டேவிட் ஹெட்லியை உருவாக்கிது.

    லஷ்கர்-இ- தொய்பாவின் முக்கிய மையமான முரிட்கே தாக்கி அழிக்கப்பட்டுள்ளது.

    தெளிவான ராணுவ நோக்கத்துடன் ஆபரேஷன் சிந்தூர் உருவாக்கப்பட்டது.

    பயங்கரவாதிகள், பயங்கரவாத உட்கட்டமைப்புகளை தாக்குவது தான் நமது குறியாக இருந்தது.

    ஆனால், கடந்த 7ம் தேதி ஆளில்லா விமானங்கள், ட்ரோன்கள் மூலம் நமது ராணுவ இலக்குகள், பொதுமக்களை குறிவைத்து பாகிஸ்தான் தாக்க தொடங்கியது.

    பாகிஸ்தானின் லாகூரில் இருந்த ரேடார் அமைப்புகளை அழித்தோம். ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் இந்திய விமானப்படைக்கு முக்கிய பங்கு உள்ளது. இந்திய விமானப்படை தங்கள் செல்வாக்கை வானில் உயர்த்தியுள்ளது.

    இவ்வாறு கூறினர்.

    Next Story
    ×