என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Minister Geetha Jevan"

    • 2026 சட்டமன்ற தேர்தலில் இரண்டே கட்சிகள் இடையே மட்டும் தான் போட்டி.
    • சினிமாவில் இருந்து இப்போதுதான் விஜய் அரசியலுக்கு வந்திருக்கிறார்.

    தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் தலைவர் விஜய் உரையாற்றினார். அப்போது அவர்," அடுத்தாண்டு மக்கள் இதுவரை சந்திக்காத தேர்தலை சந்திப்பார்கள்.

    2026 சட்டமன்ற தேர்தலில் இரண்டே கட்சிகள் இடையே மட்டும் தான் போட்டி. ஒன்று தவெக மற்றொன்று திமுக. நம்பிக்கையாக இருங்கள் நல்லதே நடக்கும் மீண்டும் சந்திக்கிறேன்" என்றார்.

    இந்நிலையில், தவெக தலைவர் விஜய் குறித்து அமைச்சர் கீதா ஜீவன் விமர்சனம் செய்துள்ளார்.

    அப்போது அவர்," சினிமாவில் இருந்து இப்போதுதான் அரசியலுக்கு வந்திருக்கிறார்.

    வீதிக்கு வந்து மக்கள் பிரச்னையை பார்க்கட்டும், அதன் பிறகு அவர் குறித்து பதில் அளிக்கிறேன்" என்றார்.

    • சங்கர ராமேஸ்வரர் கோவிலுக்கு கோட்டு ராஜா உள்ளிட்டோர் அறங்காவலராக நியமிக்கப்பட்டுள்ளனர்.
    • ஸ்ரீவைகுண்டபதி பெருமாள் கோவிலுக்கு செந்தில்குமார் உள்ளிட்டோர் அறங்காவலர் குழு உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் பழமை வாய்ந்த சிவன் கோவிலான சங்கர ராமேஸ்வரர் கோவிலுக்கு புதிதாக அறங்காவலர்களை நியமனம் செய்து இந்து சமய அறநிலையத்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி சங்கர ராமேஸ்வரர் கோவிலுக்கு முன்னாள் கவுன்சிலர்கள் கோட்டு ராஜா, கந்தசாமி மற்றும் ஆறுமுகம், சாந்தி, ஜெயலட்சுமி ஆகியோர் அறங்காவலராக நியமிக்கப்பட்டுள்ளனர்.

    ஸ்ரீவைகுண்டபதி பெருமாள் கோவிலுக்கு முன்னாள் கவுன்சிலர் செந்தில்குமார் மற்றும் மந்திரமூர்த்தி, ஜெயபால், முருகேஸ்வரி, பாலசங்கர் ஆகியோர் அறங்காவலர் குழு உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதனையடுத்து வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சமூக நலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவனை சந்தித்து வாழ்த்து பெற்றுக் கொண்டனர்.

    நிகழ்ச்சியில் மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்தசேகரன், சிவன்கோவில் தலைமை அர்ச்சகர் செல்வம் பட்டர், பெருமாள் கோவில் தலைமை அர்ச்சகர் வைகுண்டராமன் மற்றும் அர்ச்சகர்கள் சண்முகசுந்தரம், சங்கர், தி.மு.க. வட்டப்பிரதிநிதி பாஸ்கர் மற்றும் மாரிமுத்து உள்பட பலர் உடனிருந்தனர்.

    ×