என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Madras IIT"

    • தொற்றா நோய்கள், நகர்ப்புற நிர்வாகம், வேளாண்மை, உள்ளிட்ட துறைகளில் விரிவான ஆய்வு நடத்தப்படும்
    • மெட்ஜெம்மா (MedGemma) மாதிரிகளைப் அடிப்படையாக கொண்டு இந்தியாவிற்கான Health Foundation Models

    சென்னை ஐஐடி உட்பட இந்தியாவின் நான்கு முக்கிய கல்வி நிறுவனங்களில் ஏஐ மையங்களை மேம்படுத்த கூகிள் நிறுவனம் ரூ.72 கோடி நிதி அளிப்பதாக அறிவித்துள்ளது. தொற்றா நோய்கள், நகர்ப்புற நிர்வாகம், வேளாண்மை, உள்ளிட்ட துறைகளில் விரிவான ஆய்வு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி பெங்களூரு IISc-யில் உள்ள TANUH-க்கும், கான்பூரில் உள்ள Airawat Research Foundation-க்கும், IIT Madras-ல் உள்ள AI Centre of Excellence for Education-க்கும், IIT Ropar-ல் உள்ள ANNAM.AI-க்கும் இந்த நிதி பகிரப்படும். நேற்று (டிச.16) நடைபெற்ற கூகுளின் 'Lab to Impact' உரையாடலில் இந்த செய்தி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானும் கலந்துகொண்டார்.


    டெல்லியில் நேற்று நடைபெற்ற இந்திய ஏஐ தாக்க உச்சி மாநாடு2026-ல் இந்த அறிவிப்பு வெளியானது

    மேலும் கூகுள் தனது மெட்ஜெம்மா (MedGemma) மாதிரிகளைப் அடிப்படையாக கொண்டு இந்தியாவிற்கான Health Foundation Models- ஐ உருவாக்குவதற்கு $400,000 (தோராயமாக இந்திய மதிப்பில் ரூ.3 கோடியே 30 லட்சம்) வழங்குவதாகவும் கூறியுள்ளது. இதன் ஒரு பகுதியாக தோல் மருத்துவம் மற்றும் OPD வகைப்பாட்டிற்கான AI கருவிகளை உருவாக்க , அஜ்னா லென்ஸ் (ஸ்டார்அப் நிறுவனம்) எய்ம்ஸ் நிபுணர்களுடன் இணைந்து செயல்படும். IISc ஆராய்ச்சியாளர்கள் இதன் மருத்துவ பயன்பாடுகளை ஆராய்வர்.   

    • அண்மையில் நடைபெற்ற கலந்தாய்வில் ராஜேஸ்வரி சென்னை ஐ.ஐ.டியில் சேர இடம் கிடைத்தது.
    • பள்ளி ஆசிரியர்கள், கல்வியாளர்கள், ஊர்பொதுமக்கள் என பலரும் பாராட்டு தெரிவித்து உள்ளனர்.

    வாழப்பாடி:

    சேலத்தில் இருந்து சுமார் 65 கி.மீ. தூரத்தில் கல்வராயன் மலை அமைந்துள்ளது. இங்குள்ள கருமந்துறை பழங்குடி இனத்தை சேர்ந்தவர் ஆண்டி. டெய்லர். இவரது மனைவி கவிதா. இவர்களுக்கு ஜெகதீஸ்வரி, ராஜேஸ்வரி, பரமேஸ்வரி ஆகிய 3 மகள்களும், ஸ்ரீகணேஷ் என்ற மகனும் உள்ளனர். மூத்த மகள் ஜெகதீஸ்வரி சங்ககிரியில் உள்ள ஒரு கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பு முடித்து சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைப்பார்த்து வருகிறார்.

    இந்த நிலையில் கடந்த ஆண்டு ஆண்டி திடீரென இறந்து விட்டார். இதையடுத்து இளங்கலை பட்டப்படிப்பு முடித்த அவரது மகன் ஸ்ரீ கணேஷ் தந்தையின் தொழிலான டெய்லரிங் வேலை செய்து வருகிறார். 2-வது மகள் ராஜேஸ்வரி கருமந்துறையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு வரை படித்து விட்டு பின்னர் கருமந்துறையில் உள்ள அரசு உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்து முடித்தார். மாணவி ராஜேஸ்வரி 10-ம்வகுப்பு தேர்வில் 438 மதிப்பெண்களும், 12-ம் வகுப்பு தேர்வில் 521 மதிப்பெண்களும் பெற்றார்.



    கருமந்துறையில் வசித்து வரும் மாணவியின் வீடு. 

    ராஜேஸ்வரி பொறியில் பட்டப்படிப்பு படிக்க விரும்பினார். இதையடுத்து அவர் பெருந்துறையில் அரசு பயிற்சி மையத்தில் சேர்ந்து ஜே.இ.இ. நுழைவு தேர்வுக்கு பயிற்சி பெற்றார். இதில் மாணவி ராஜேஸ்வரி அகில இந்திய அளவில் 417-வது இடத்தை பிடித்தார். இதையடுத்து அண்மையில் நடைபெற்ற கலந்தாய்வில் ராஜேஸ்வரி சென்னை ஐ.ஐ.டியில் சேர இடம் கிடைத்தது. கல்வராயன் மலை பகுதியில் இருந்து ஐ.ஐ.டியில் படிக்கும் முதல் பழங்குடியின மாணவி என்ற பெருமையை ராஜேஸ்வரி பெற்றுள்ளார். இவருக்கு பள்ளி ஆசிரியர்கள், கல்வியாளர்கள், ஊர்பொதுமக்கள் என பலரும் பாராட்டு தெரிவித்து உள்ளனர்.

    • கடல் அரிப்பு ஏற்பட்டுள்ள இடங்களில் பாறைகள் மற்றும் பெரிய அளவிலான கற்கள் வெளியே தெரிகின்றன.
    • கடல் அரிப்பை உடனடியாக தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர்.

    திருச்செந்தூர்:

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்கி வரும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருவார்கள்.

    திருவிழா நாட்கள் மற்றும் விடுமுறை தினங்களில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.

    கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் கோவில் முன்புள்ள கடற்கரையில் புனித நீராடி கோவிலில் சுவாமி தரிசனம் செய்வார்கள். மேலும் பவுர்ணமி நாட்களில் கோவில் கடற்கரையில் இரவில் குடும்பத்தோடு தங்கி வழிபாடு செய்வார்கள். இந்த நிலையில் தொடர்ந்து கோவில் கடற்கரையில் கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக கடலின் சீற்றம் அதிகமாக காணப்படுகிறது.

    கடல் சீற்றத்தின் காரணமாக கோவில் முன்புள்ள கடற்கரையில் அதிக அளவில் கடல் அரிப்பு ஏற்பட்டு சுமார் 50 அடி நீளத்திற்கு 9அடி ஆழத்திற்கு இந்த கடலில் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் கடற்கரையில் கோவில் முன்புள்ள படிக்கட்டு பகுதியில் இருந்து கடலுக்குள் இறங்க முடியாத நிலை இருந்து வருகிறது.

    இதனால் படிக்கட்டுகள் பகுதியில் தகரம் மற்றும் தடுப்புவேலிகள் கொண்டு பக்தர்கள் இறங்காதவாறு அடைக்கப்பட்டுள்ளது. கடல் அரிப்பு ஏற்பட்டுள்ள இடங்களில் பாறைகள் மற்றும் பெரிய அளவிலான கற்கள் வெளியே தெரிகின்றன. இதனால் கடலில் நீராடும் பக்தர்களுக்கு உடலில் காயங்கள் ஏற்பட்டு வருகிறது. எனவே கடல் அரிப்பை உடனடியாக தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர்.

    இதற்கிடையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கனிமொழி எம்.பி., அமைச்சர்கள் சேகர் பாபு மற்றும் அனிதா ராதாகிருஷ்ணன், மாவட்ட கலெக்டர் இளம் பகவத் மற்றும் அதிகாரிகள் கடற்கரையில் நேரில் ஆய்வு செய்தனர்.

    தொடர்ந்து சென்னை ஐ.ஐ.டி. குழுவினர் கடற்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு அறிக்கையை அரசுக்கு சமர்ப்பிப்பார்கள் என்றும், அதன் பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கனிமொழி தெரிவித்திருந்தார்.

    இந்த நிலையில் நேற்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் முன்புள்ள கடற்கரையில் சென்னை ஐ.ஐ.டி. குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

    இந்த ஆய்வானது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் இருந்து அமலிநகர் வரை கடல் அரிப்பு குறித்து ஆய்வு செய்தனர்.

    டி.ஜி.பி.எஸ். என்ற நவீன கருவி மூலம் திருச்செந்தூர் கடற்கரையில் கடலின் ஆழம் எவ்வளவு என்பது பற்றி ஆய்வு செய்தனர். மேலும் கடல் நீரால் ஏற்பட்டுள்ள மணல் அரிப்பு எவ்வளவு தூரம் என்பதையும், தரை மட்டத்தை எவ்வளவு தொலைவுக்கு கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது. கடல் மணல்சரிவு எவ்வளவு என்பது பற்றியும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த ஆய்வானது சென்னை இந்திய தொழிற் நுட்ப வல்லுநர்களால் ஆய்வு முழுமையாக மேற்கொள்ளப்பட்டு அதன் அறிக்கை விரைவில் தாக்கல் செய்யப்படும் என்று தெரிகிறது. அதைத் தொடர்ந்து இன்று வல்லுநர்கள் திருச்செந்தூர் கடற்கரையில் 2-வது நாளாக ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

    சென்னை அடையாறு ஐஐடி வளாகத்தில் உள்ள ஏரியில் குளித்த இரண்டு பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். அவர்களது உடலை மீட்கும் பணியில் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். #MadrasIIT
    சென்னை:

    சென்னை அடையாறு ஐஐடி வளாகத்தில் ஏரி ஒன்று உள்ளது. இன்று மாலை கானகம் பகுதியை சேர்ந்த 7 பேர் ஏரியில் குளிக்கச் சென்றுள்ளனர். அதில், மூர்த்தி, ஜேரால்டு ஆகிய இருவர் நீரில் மூழ்கி பலியாகியுள்ளனர். அவர்களது உடலை மீட்கும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

    உள்ளே நுழைய அனுமதி இல்லாத நிலையில், பின்பக்க சுவர் வழியாக அவர்கள் உள்ளே வந்து ஏரியில் குளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #MadrasIIT
    ×