search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cooker"

    • தொகுதியில் தேர்தல் விதிமுறைகள் அதிக அளவில் மீறப்படுவதாகவும் புகார் தெரிவித்தார்.
    • புகாரை தொடர்ந்து தேர்தல் அதிகாரிகள் மற்றும் வருமானவரித்துறை அதிகாரிகள் தீவிர விசாரணையில் இறங்கினர்.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் பெங்களூரு ஊரக தொகுதியில் காங்கிரஸ் சார்பில் துணை முதல்-மந்திரி டி.கே. சிவக்குமாரின் சகோதரரும் தற்போதைய எம்.பி.யுமான டி.கே. சுரேஷ் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து பா.ஜனதா சார்பில் டாக்டர் சி.என்.மஞ்சுநாத் போட்டியிடுகிறார். இந்நிலையில் தேர்தல் விதிமுறைகளை மீறி டி.கே.சிவக்குமார், டி.கே.சுரேஷ் ஆகியோர் வாக்காளர்களுக்கு அதிகளவில் குக்கர் விநியோகம் செய்யப்படுவதாக ஜனதாதளம் (எஸ்) மாநில தலைவர் குமாரசாமி குற்றம் சாட்டினார். இந்த தொகுதியில் தேர்தல் விதிமுறைகள் அதிக அளவில் மீறப்படுவதாகவும் புகார் தெரிவித்தார்.

    மேலும் பெங்களூரு ஊரக தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் டி.கே.சுரேஷ் வாக்காளர்களுக்கு கொடுக்க அவரது புகைப்படத்துடன் கூடிய சுமார் 10 லட்சம் பிரஷர் குக்கர் விநயோகம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும், அதில் இதுவரை 4 லட்சம் குக்கர் வாக்காளர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக பரபரப்பு புகார் தெரிவித்து இருந்தார். இந்த புகாரை தொடர்ந்து தேர்தல் அதிகாரிகள் மற்றும் வருமானவரித்துறை அதிகாரிகள் தீவிர விசாரணையில் இறங்கினர்.

    இதற்கிடையே குமாரசாமி புகாரை தொடர்ந்து பெங்களூருவில் உள்ள பிரபல வீட்டு உபயோக பொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்திற்கு வருமான வரித்துறையினர் நோட்டீஸ் அனுப்பியுள்ள னர். இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, வாக்காளர்களுக்கு குக்கர் விநியோகம் செய்யப்பட்டது குறித்து கிடைத்த தகவலின் அடிப்படையில் குக்கர் உற்பத்தி நிறுவனத்திடம் விசாரணை நடத்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர். கடந்த ஆண்டு கர்நாடகாவில் நடந்த சட்டமன்ற தேர்தலின் போதும் இதே போன்ற புகாரின் பேரில் தற்போது நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ள வீட்டு உபயோக பொருட்கள் உற்பத்தி நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியது குறிப்பிடதக்கது.

    குக்கர் சின்னம் எங்களுக்கு வழங்க வேண்டும் என்று தேர்தல் கமி‌ஷனிடம் முறையிட்டுள்ளோம். அந்த சின்னம் எங்களுக்கு கண்டிப்பாக கிடைக்கும் என்று தினகரன் தெரிவித்துள்ளார். #dinakaran #parliamentelection #admk #cooker

    கள்ளக்குறிச்சி:

    விழுப்புரம் மாவட்டம் தியாகதுருகத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    குக்கர் சின்னம் தொடர்பாக உச்சநீதிமன்ற தீர்ப்பால் எந்த பின்னடைவும் இல்லை. குக்கர் சின்னம் எங்களுக்கு கிடைக்கும். சின்னம் பெரிய வி‌ஷய மல்ல. வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்.

    மக்கள் தேர்தல் சின்னத்தை வைத்து மட்டும் வாக்களிக்கவில்லை. மக்களுக்கு யார் சேவை செய்கிறார்களோ அவர்களுக்குதான் வாக்களிக்கிறார்கள்.

    சென்னை ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலின்போது 29 அமைச்சர்களும், அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் என எல்லோருமே தேர்தல் பணி செய்தனர். ஆனால், மக்கள் யாரும் இரட்டை இலைக்கு வாக்களிக்கவில்லை. குக்கர் சின்னத்தில் சுயேட்சையாக போட்டியிட்ட எனக்கு வாக்களித்து வெற்றி பெற செய்தனர்.

    ஒருபானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதுபோல வருகிற பாராளு மன்ற தேர்தலிலும் தமிழக மக்கள் சேவை செய்பவர்களுக்கே வாக்களிப்பார்கள். சின்னம் என்பது பெரியவி‌ஷயம் கிடையாது. மக்களுக்கு சேவை செய்யும் எங்களை போன்ற வேட்பாளர்களுக்குத்தான் வாக்களித்து வெற்றி பெற வைப்பார்கள்.

    குக்கர் சின்னம் எங்களுக்கு வழங்க வேண்டும் என்று தேர்தல் கமி‌ஷனிடம் முறையிட்டுள்ளோம். அந்த சின்னம் எங்களுக்கு கண்டிப்பாக கிடைக்கும்.

    வருகிற பாராளுமன்ற தேர்தலுக்கு கூட்டணி குறித்து எங்களுடன் சில கட்சிகள் பேசி வருகிறார்கள். இரட்டை இலை சின்னம் தொடர்பாகவும், 11 எம்.எல்.ஏ.க்கள் பதவி நீக்கம் தொடர்பாகவும் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளோம். அந்த வழக்கில் 11 எம்.எல். ஏ.க்களின் பதவி நீக்கம் செல்லும் என்று தீர்ப்பு வரும் என நம்புகிறோம்.

    அப்படி வந்தால் தமிழக சட்டசபை தேர்தலும், பாராளுமன்ற தேர்தலும் ஒரே நேரத்தில் நடைபெறும். இதனால் அரசுக்கு செலவு மிச்சம். நேற்று இரவு நான் உளுந்தூர்பேட்டையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்தேன். அப்போது அங்கு மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

    நான் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரோ அல்லது அம்மாவோ அல்ல. நடிகர் விஜயோ, அஜீத்தோ அல்ல. ஆனால், நான் செல்லும் பகுதிகளில் மக்கள் எனக்கு ஆதரவு அளிக்கிறார்கள். மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள்.

    மக்கள் என் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர். தேர்தலில் எங்களுக்கு எந்த சின்னம் ஒதுக்கினாலும் நாங்கள் வெற்றி பெறுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #dinakaran #parliamentelection #admk #cooker

    ×