என் மலர்
நீங்கள் தேடியது "Columbia University"
- கொலம்பியா பல்கலைக்கழகத்துக்கு வழங்கப்படும் ரூ.3,400 கோடியை நிறுத்த டிரம்ப் உத்தரவிட்டார்
- பல்கலைக்கழக வளாக போலீசாருக்கு மாணவர்களை கைது செய்ய அதிகாரம் வழங்கப் பட்டது.
பாலஸ்தீனத்தின் காசா முனை மீதான இஸ்ரேலின் போர் தாக்குதலை கண்டித்து அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் போராட் டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக கொலம்பியா பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் போராட்டம் தீவிரமாக நடந்தது.
பல்கலைக்கழக வளாகத்தில் கூடாரங்கள் அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போராட்டங்களை கட்டுப்படுத்தி நடவடிக்கை எடுக்க கொலம்பியா பல்கலைக் கழக நிர்வாகத்துக்கு அதிபர் டிரம்ப் நிர்வாகம் உத்தரவிட்டது. மேலும் யூத மாணவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க தவறியது, மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளில் கொலம்பிய பல்கலைக்கழகம் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
இதனால் அந்தப் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சிக்காக அரசு நிர்வாகத்தால் வழங்கப்படும் ரூ.3,400 கோடியை நிறுத்த டிரம்ப் உத்தரவிட்டார். இதனால் கொலம்பியா பல்கலைக்கழகம், டிரம்ப் நிர்வாகத்தின் சில உத்தரவுகளை ஏற்றது. அதன்படி பல்கலைக்கழக வளாக போலீசாருக்கு மாணவர்களை கைது செய்ய அதிகாரம் வழங்கப் பட்டது.
இந்த நிலையில் ஆராய்ச்சி நிதியை திரும்ப பெற டிரம்ப்புடன் பேச்சு வார்த்தை நடத்த கொலம்பியா பல்கலைக்கழக நிர்வாகம் முடிவு செய்துள்ளது. மேலும், மனித உரிமை மீறல்களுக்கு இழப்பீடாக டிரம்ப் அரசுக்கு ரூ.1,700 கோடியை செலுத்த பல்கலைக் கழகம் தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக டிரம்ப் நிர்வாகத்திற்கும் கொலம்பியா பல்கலைக்கழகத்திற்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்துள்ளது. அடுத்த வாரம் அதிபர் டிரம்ப்பை சந்தித்து இந்த ஒப்பந்தத்தை இறுதி செய்ய முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன்மூலம் டிரம்பின் மிரட்டலுக்கு கொலம்பியா பல்கலைக்கழகம் அடிபணிந்து உள்ளது.
- கொலம்பியா பல்கலைக்கழகத்தில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு ராகுல் டிராவிட், அஜித் அகர்கர் இருவரும் மரியாதை செலுத்தினர்.
- சிலைகள் தற்போது அந்த இடத்திலிருந்து அகற்றப்பட்டு பழைய கட்டிடத்தின் புல்வெளி பகுதிக்கு மாற்றம் செய்யப்பட்டு வருகிறது.
டி20 உலகக் கோப்பைக்கு இடையே நியூயார்க்கில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்திற்கு இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் சென்றுள்ளனர்.
இந்நிலையில் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு ராகுல் டிராவிட், அஜித் அகர்கர் இருவரும் மரியாதை செலுத்தினர்.
ராகுல் டிராவிட், அஜித் அகர்கர் டாக்டர் அம்பேத்கருக்கு அஞ்சலி செலுத்திய புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
பாராளுமன்ற வளாகத்தில் மகாத்மா காந்தி, டாக்டர் அம்பேத்கர் மற்றும் சத்ரபதி சிவாஜி உள்ளிட்டவர்களின் சிலைகள் பிரதான தளத்தில் இடம்பெற்றுள்ளன. அந்த சிலைகள் தற்போது அந்த இடத்திலிருந்து அகற்றப்பட்டு பழைய கட்டிடத்தின் புல்வெளி பகுதிக்கு மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. இதற்கு அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் நியூயார்க்கில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு ராகுல் டிராவிட், அஜித் அகர்கர் அஞ்சலி செலுத்தி இருப்பது பேசு பொருளாக மாறி இருக்கிறது.






