டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு ராகுல் டிராவிட், அஜித் அகர்கர் மரியாதை

கொலம்பியா பல்கலைக்கழகத்தில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு ராகுல் டிராவிட், அஜித் அகர்கர் இருவரும் மரியாதை செலுத்தினர்.சிலைகள் தற்போது அந்த இடத்திலிருந்து அகற்றப்பட்டு பழைய கட்டிடத்தின் புல்வெளி பகுதிக்கு மாற்றம் செய்யப்பட்டு வருகிறது.
டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு ராகுல் டிராவிட், அஜித் அகர்கர் மரியாதை
Published on

டி20 உலகக் கோப்பைக்கு இடையே நியூயார்க்கில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்திற்கு இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் சென்றுள்ளனர்.

இந்நிலையில் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு ராகுல் டிராவிட், அஜித் அகர்கர் இருவரும் மரியாதை செலுத்தினர்.

ராகுல் டிராவிட், அஜித் அகர்கர் டாக்டர் அம்பேத்கருக்கு அஞ்சலி செலுத்திய புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

பாராளுமன்ற வளாகத்தில் மகாத்மா காந்தி, டாக்டர் அம்பேத்கர் மற்றும் சத்ரபதி சிவாஜி உள்ளிட்டவர்களின் சிலைகள் பிரதான தளத்தில் இடம்பெற்றுள்ளன. அந்த சிலைகள் தற்போது அந்த இடத்திலிருந்து அகற்றப்பட்டு பழைய கட்டிடத்தின் புல்வெளி பகுதிக்கு மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. இதற்கு அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் நியூயார்க்கில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு ராகுல் டிராவிட், அஜித் அகர்கர் அஞ்சலி செலுத்தி இருப்பது பேசு பொருளாக மாறி இருக்கிறது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com