search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chinmoy Krishna Das"

    • டாக்கா சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கடந்த நவம்பர் 25ம் தேதி சின்மோய் தாஸ் கைது செய்யப்பட்டார்.
    • மத கடமைகளை வீட்டுக்குள்ளேயே அல்லது கோயிலுக்குள்ளேயே வைத்துக்கொள்ளும்படி அறிவுறுத்தினோம்

    கடந்த ஆகஸ்ட் மாதம் சஷேக் ஹசீனாவின் அவாமி லீக் அரசு கவிழ்ந்ததிலிருந்து வங்கதேசத்தில் மக்கள் தொகையில் 22 சதவீதம் இருக்கும் சிறுபான்மை இந்துக்களுக்கு எதிரான தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. இதற்கு எதிராக இந்துக்களை ஒருங்கிணைத்து போராட்டம் நடத்தப்பட்டன.

    வங்கதேச சனாதானி விழிப்புணர்வு இயக்கம் சார்பிலும் போராட்டங்கள் நடத்தப்பட்டன. இந்த இயக்கத்தில் செய்தி தொடர்பாளராக இருந்த இஸ்கான் அமைப்பைச் சேர்ந்த இந்து சாமியார் சின்மோய் கிருஷ்ண தாஸ் மீது வங்கதேச கொடியை அவமதித்து இந்துக்களைப் போராட்டத்துக்குத் தூண்டியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் பேரில் தேசத்துரோக வழக்கு பதியப்பட்டது.

     

    டாக்கா சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கடந்த நவம்பர் 25ம் தேதி சின்மோய் தாஸ் கைது செய்யப்பட்டார்.நவம்பர் 26ஆம் தேதி சட்டோகிராம் நீதிமன்றம் அவரது ஜாமீன் மனுவை நிராகரித்தது. இதனை எதிர்த்து மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.

     இதற்கிடையில் சின்மோய் கிருஷ்ண தாஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது நடந்த வன்முறையில் வழக்கறிஞர் ஒருவர் கொல்லப்பட்டார். இதனைத்தொடர்ந்து சின்மோய் கிருஷ்ண தாஸுக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் ஆஜராக வழக்கறிஞர்கள் சங்கம் தடை விதித்தது.

     

     

    இந்நிலையில் இன்று சின்மோய் தாஸ் ஜாமீன் மனு விசாரணைக்கு வந்த நிலையில் சின்மோய் தாஸ்காக எந்த வழக்கறிஞரும் ஆஜராகாத நிலையில் ஜாமீன் மனு மீதான விசாரணை ஜனவரி 2 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

    இதற்கு மத்தியில் சின்மோய் தாஸ்க்கு உணவு கொண்டுசென்ற ருத்ரப்ரோட்டி கேசப் தாஸ் மற்றும் ரங்கநாத் சியாமா சுந்தர் தாஸ் ஆகிய இரு இஸ்கான் இளம் சாமியார்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் மக்கள் மத்தியில் கொந்தளிப்பான சூழல் நிலவுவதால் இஸ்கான் அமைப்பை சேர்ந்தவர்கள் தங்கள் மத அடையாளங்களை வெளிப்படையாகக் காட்டிக்கொள்ள வேண்டாம் என்று அவ்வமைப்பு அறிவுறுத்தியுள்ளது.

     இதுகுறித்து பேசிய கொல்கத்தா இஸ்கான் செய்தி தொடர்பாளர் ராதாராமன் தாஸ், எங்களின் பக்தர்கள் தாக்கப்படுவது கவலையளிக்கிறது.

    வெளிப்படையாகத் தெரியும் நெற்றித் திலகங்கள் இட்டுக்கொள்ள வேண்டாம், மாலைகள் அணிய வேண்டாம், காவி உடை அணிய வேண்டாம், மத கடமைகளை வீட்டுக்குள்ளேயே அல்லது கோயிலுக்குள்ளேயே வைத்துக்கொள்ளும்படியும் தேவையில்லாத கவனத்தை ஈர்க்க வேண்டாம் எனவும் அவர்களிடம் அறிவுறுத்தியுள்ளோம் என்று அவர் தெரிவித்துள்ளார். 

    இதற்கிடையில் இந்திய தொலைக்காட்சி சேனல்களை தடை செய்ய வங்கதேச உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

    • இந்து மத தலைவர் மீதான கைது நடவடிக்கை கவலை அளிக்கிறது.
    • இந்த நிகழ்வுகளை ஊடகங்களின் மிகைப்படுத்தல் என ஒதுக்கிவிட முடியாது.

    புதுடெல்லி:

    வங்கதேசத்தில் இடைக்கால பிரதமராக முகமது யூனுஸ் பதவியேற்ற நிலையில், அங்குள்ள சிறுபான்மை மக்கள்மீது தொடர் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

    வங்கதேசத்தில் உள்ள இந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மை மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும் என முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசுக்கு இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

    இதற்கிடையே, வங்கதேசத்தின் தேசிய கொடியை அவமதித்ததாகக் கூறி அந்நாட்டில் உள்ள இந்து மத அமைப்பின் தலைவர் சின்மய் கிருஷ்ண தாஸ் கைது செய்யப்பட்டார். இதற்கு கண்டனம் தெரிவித்து வங்கதேசத்தில் உள்ள இந்து அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    இதுகுறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், வங்கதேசத்தில் இந்து மத தலைவர் மீதான கைது நடவடிக்கை கவலை அளிக்கிறது. அந்நாட்டில் உள்ள இந்துக்கள் மற்றும் அனைத்து சிறுபான்மையினரின் பாதுகாப்பை உறுதி செய்யும்படி வங்கதேச இடைக்கால அரசாங்கத்தை கேட்டுக் கொள்கிறோம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    இந்த விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு தெளிவாக உள்ளது. வங்கதேச இடைக்கால அரசாங்கம் அங்குள்ள அனைத்து சிறுபான்மையினரையும் பாதுகாக்கும் பொறுப்பை நிறைவேற்ற வேண்டும்.

    வங்கதேசத்தில் பயங்கரவாத சொற்பொழிவுகள், வன்முறை சம்பவங்கள் மற்றும் மோதல்கள் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது.

    இந்த நிகழ்வுகளை ஊடகங்களின் மிகைப்படுத்தல் என ஒதுக்கிவிட முடியாது. சிறுபான்மையினரின் பாதுகாப்பிற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு வங்கதேசத்தை மீண்டும் ஒருமுறை கேட்டுக்கொள்கிறோம்.

    இந்து மத தலைவர் சின்மய் கிருஷ்ண தாஸ் கைது செய்யப்பட்ட வழக்கில் சட்டப்பூர்வ நடவடிக்கைகள் அனைத்தும் பின்பற்றப்படுவதை இந்தியா கவனித்து வருகிறது.

    இந்த வழக்கு நியாயமான மற்றும் வெளிப்படையான முறையில் கையாளப்படும். சம்பந்தப்பட்ட அனைவரின் சட்ட உரிமைகளுக்கும் மதிப்பு அளிக்கப்படும் என நம்புவதாக தெரிவித்தார்.

    • இந்து மத துறவி சின்மோய் கிருஷ்ண தாஸ் டாக்கா விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டார்.
    • இஸ்கான் அமைப்பு தலைவரான அவர் நாட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டது.

    டாக்கா:

    வங்கதேச நாட்டில் இந்துக்கள் சிறுபான்மையினராக உள்ளனர்.

    இந்நிலையில், வங்கதேசத்தின் இந்து மதத் தலைவர் சின்மோய் கிருஷ்ண தாசை அதிகாரிகள் டாக்கா விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தி கைதுசெய்தனர். இஸ்கான் அமைப்பு தலைவரான அவர் நாட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது.

    வங்கதேசத்தில் இந்துக்கள் மற்றும் பிற சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களுக்கு கிருஷ்ண தாஸ் கண்டனம் தெரிவித்து இருந்தார்.

    அவர்மீது இந்துக்களின் போராட்டங்களைத் தூண்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர் மீது தேச துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளதாக தெரிகிறது.

    இதற்கிடையே, சின்மோய் கிருஷ்ண தாசை விடுவிக்கக் கோரி இந்துக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். டாக்கா, சிட்டகாங் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் போராட்டங்கள் நடந்தன.

    இந்து மதத் தலைவர் கைது செய்யப்பட்டுள்ளது துரதிஷ்டவசமானது என இந்திய வெளியுறவுத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

    இந்நிலையில், வங்கதேச நீதிமன்றத்திற்கு வெளியே நடந்த போராட்டங்களுக்கு மத்தியில் இந்து தலைவரும், இஸ்கான் துறவியுமான சின்மோய் கிருஷ்ண தாஸ் சார்பாக வாதாடும் ஒரு முஸ்லிம் வழக்கறிஞர் கொல்லப்பட்டார். விசாரணையில், உயிரிழந்தவர் பயிற்சி வழக்கறிஞர் சைபுல் இஸ்லாம் அலிப் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

    காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என டாக்டர்கள் தெரிவித்தனர்.

    ×