என் மலர்

  நீங்கள் தேடியது "birth day"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

  சென்னை:

  முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு இன்று 65-வது பிறந்தநாள்.

  தேர்தல் பிரசாரத்துக்காக திருப்பரங்குன்றம் சென்றிருந்த அவர் இன்று காலையில் மதுரையில் தங்கி இருந்தார். அப்போது தனது பிறந்த நாளை கொண்டாடாமல் எளிமை காட்டி வழக்கம் போல் பிரசார பணிகளில் கவனம் செலுத்தி வந்தார்.

  அவரது பிறந்த நாளை தெரிந்து வைத்திருந்த பிரதமர் நரேந்திர மோடி முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி னார். அப்போது பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.

  தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், கூட்டணி கட்சி தலைவர்களும் எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

   


  தமிழக பாரதிய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் அனுப்பி உள்ள வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:-

  சாமானிய மக்களின் தொண்டராக தன் அரசியல் வாழ்க்கையை தொடங்கி மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அம்மா வழியில் சாமானிய மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்றி ஏழை, எளிய மக்களின் கனவுகளை நன வாக்கி வரும் தமிழக முதல்வர் அண்ணன் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

  தாங்கள் நீண்ட ஆயுளுடன், உடல் நலத்துடன் மக்கள் சேவையாற்ற இறைவனை பிரார்த்திக்கின்றேன். இந்த தேர்தல் வெற்றியோடு இன்னும் பல வெற்றிகளை பெற்று மக்கள் தொண்டாற்ற வாழ்த்துகிறேன்.

  இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ம.பொ.சி., காலிங்கராயன், அழகுமுத்துக்கோன், பென்னி குயிக், தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் ஆகியோரின் பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று சட்டசபையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார். #EdappadiPalaniswami #SPAdithanar
  சென்னை:

  முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் இன்று 110-வது விதியின் கீழ் சில அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:-

  தமிழ்நாட்டில் இதழியல் முன்னோடியும், இன்றைய முன்னணி நாளிதழ்களில் ஒன்றான “தினத்தந்தி” தமிழ் நாளிதழைத் தொடங்கி, பாமரரும், பாட்டாளியும் எளிய தமிழ் மூலம் படிக்க வழிவகை செய்தவர் சி.பா.ஆதித்தனார்.

  தமிழ்நாட்டில் சட்டமன்ற உறுப்பினராகவும், சட்டப்பேரவையின் அவைத்தலைவராகவும், கூட்டுறவுத்துறை அமைச்சராகவும் பணியாற்றியவர் சி.பா.ஆதித்தனார்.

  தமிழ் ஆர்வலர்கள் அன்னாரது பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டுமென்று விடுத்த கோரிக்கையினை ஏற்று, சென்னை எழும்பூரில் அமைந்துள்ள சி.பா.ஆதித்தனாரின் திருவுருவச் சிலைக்கு அவர் பிறந்த நாளான செப்டம்பர் 27 அன்று அரசின் சார்பில் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தி சிறப்பிக்கப்படும்.

  இந்திய விடுதலைப் போராட்ட வீரரும், சிறந்த தமிழ் அறிஞரும், சிலப்பதிகாரத்தின் மீது ஆளுமை கொண்டிருந்த சிலம்புச் செல்வர் என அனைவராலும் அறியப்பட்டவர், முன்னாள் மேலவைத் தலைவர் ம.பொ.சிவஞானம். மொழிவாரி மாநிலங்கள் பிரிவினையின்போது, சென்னையை தமிழ்நாட்டின் தலைநகராக தொடரச் செய்யவும், திருத்தணி, செங்கோட்டை பகுதிகளையும், கன்னியாகுமரி மாவட்டத்தையும் தமிழ்நாட்டுடன் இணைக்க பாடுபட்டவர்; எழுத்து சீர்திருத்தத்தின்போது ‘ஐ’யும், ‘ஒள’வும் தமிழ் மொழியில் தொடரச் செய்தவர் ம.பொ.சிவஞானம்.

  அவரது தமிழ் தொண்டினை போற்றிடும் வகையில், சென்னை, தியாகராய நகரில் அமைக்கப்பட்டுள்ள ம.பொ.சிவஞானத்தின் திருவுருவச் சிலைக்கு அன்னாரின் பிறந்த நாளான ஜூன் 26 அன்று அரசின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி சிறப்பிக்கப்படும்.  துணிச்சல், மன உறுதி, தன்னம்பிக்கையுடன் விவசாயிகளின் உயிர்நாடியாக விளங்கும் முல்லைப்பெரியாறு அணையை தனது சொந்த செலவில் கட்டி தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்கள் பாசன வசதி பெற வழிவகுத்த கர்னல் ஜான் பென்னிகுயிக் பிறந்த நாளினை ஆண்டுதோறும் அரசு விழாவாக கொண்டாட அப்பகுதி விவசாய பெருமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

  அவர்களது கோரிக்கையினை ஏற்று கர்னல் ஜான் பென்னிகுயிக் பிறந்த நாளான ஜனவரி மாதம் 15-ம் நாள் அரசு விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடப்படும்.

  பவானி ஆறு காவேரி ஆற்றுடன் கூடும் இடத்திற்கு சற்று முன்பே அணை கட்டி பவானி ஆற்றின் நீரை வாய்க்கால் மூலம் நேராகக் கொண்டு சென்றால் தண்ணீர் விரைந்து ஓடிவிடும் என்பதாலும், வாய்க்கால்களை வளைத்து வளைத்து வெட்டுவதனால் அதிக பரப்பளவு பாசனம் பெறும் என்ற தொலைநோக்கு சிந்தனையுடனும், விவசாயிகளின் நலன்களுக்காக வாய்க்கால்களை திறம்பட வெட்டி பல நூற்றாண்டுகளுக்கு முன்பே தை மாதம் 5-ந்தேதி நாட்டுக்கு அர்ப்பணித்தவர் காலிங்கராயன்.

  அன்னாரை சிறப்பு செய்யும் வகையில் தை மாதம் 5-ந்தேதியன்று பொதுமக்கள் சார்பாக காலிங்கராயன் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அவருக்கு மேலும் சிறப்பு செய்யும் விதமாக 13.5.2018 அன்று அவரது முழு உருவ வெண்கல சிலையுடன் கூடிய மணி மண்டபம் என்னால் திறந்து வைக்கப்பட்டது. காலிங்கராயனின் நினைவைப் போற்றுகின்ற வகையில் ஆண்டுதோறும் தை மாதம் 5-ந்தேதி அரசு விழாவாகக் கொண்டாடப்படும்.

  சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் அழகு முத்துக்கோனின் வீரத்தையும் வரலாற்றையும் உலகிற்கு எடுத்துரைக்கும் வகையில், சென்னை எழும்பூரில் அமைக்கப்பட்ட சிலையை 15.3.1996 அன்றும், தூத்துக்குடி மாவட்டம், கட்டாளங்குளத்தில் நினைவு மண்டபத்தை 8.12.2014 அன்றும், அம்மா திறந்து வைத்து அன்னாருக்கு பெருமை சேர்த்தார்.

  தூத்துக்குடி மாவட்டம், கட்டாளங்குளத்தில் உள்ள அன்னாரது நினைவு மண்டபத்தில் ஆண்டுதோறும், அவரது பிறந்த நாள் விழா அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அன்னாருக்கு மேலும் பெருமை சேர்க்கும் விதமாக, சென்னை, எழும்பூரில் அரசின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள வீரன் அழகுமுத்துக்கோனின் திருவுருவச் சிலைக்கு ஆண்டுதோறும் ஜூலை 11-ம் நாள் அரசின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி சிறப்பிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்

  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #EdappadiPalaniswami #SPAdithanar

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  புதுவை மக்களின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கு தன்னை அர்ப்பணிப்பதாக கவர்னர் கிரண்பேடி தனது பிறந்த நாள் செய்தியில் தெரிவித்துள்ளார். #governorkiranbedi
  புதுச்சேரி:

  புதுவை கவர்னர் கிரண்பேடிக்கு இன்று 69-வது பிறந்த நாளாகும். இதனையொட்டி ராஜ் நிவாஸ் வளாகத்தில் உள்ள பெருமாள் கோயிலில் நடந்த சிறப்பு பூஜையில் கவர்னர் கிரண்பேடி பங்கேற்று வழிபட்டார்.

  தொடர்ந்து ராஜ்நிவாஸ் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுடன் கிரண்பேடி தனது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடினார்.

  முன்னாள் எம்.எல்.ஏ. ஓம்சக்தி சேகர் மற்றும் பலரும் கவர்னருக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.

  தனக்கு வாழ்த்து சொல்ல வந்த சிறுவனை கவர்னர் கிரண்பேடி தனது இருக்கையில் அமர வைத்து உற்சாகப்படுத்தினார்.

  பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

  பிறந்த நாள் என்பது நம்மை ஈன்றெடுத்த அன்னையை நினைவு கூரும் தினமாகும். நமக்கு பிறந்த நாள் என்பதை விட அன்னைக்கு மறுபிறவி என்பதே சரி. புதுவை மக்களின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கு தன்னை அர்ப்பணிக்கிறேன்.

  இவ்வாறு அவர் கூறினார். #governorkiranbedi

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமிக்கு இன்று 71-வது பிறந்தநாளையொட்டி கொள்ளூர் மூகாம்பிகை கோவிலில் நாராயணசாமி சாமி தரிசனம் செய்தார்.
  புதுச்சேரி:

  புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமிக்கு இன்று 71-வது பிறந்த நாள் ஆகும்.

  நாராயணசாமி தனது பிறந்த நாளில் கொள்ளூர் மூகாம்பிகை கோவிலிலுக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.

  அதுபோல் பிறந்த நாளையொட்டி நேற்று மாலை கொள்ளூர் புறப்பட்டார். கொள்ளூரில் நேற்று இரவு தங்கினார்.

  இன்று அதிகாலை மூகாம்பிகையை தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.

  இந்த நிலையில் வெளிநாடு சென்றுள்ள ராகுல் காந்தி செல்போன் மூலம் நாராயணசாமியை தொடர்பு கொண்டார். அப்போது அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பிறந்த நாளையொட்டி முதல்-அமைச்சர் நாராயணசாமிக்கு கவர்னர் கிரண்பேடி சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். #governorkiranbedi #CMNarayanasamy
  புதுச்சேரி:

  புதுவை கவர்னராக கிரண்பேடி பொறுப்பேற்றது முதல் முதல்-அமைச்சர் நாராயணசாமிக்கும், கவர்னர் கிரண்பேடிக்கும் தொடர்ந்து மோதல் போக்கு இருந்து வருகிறது.

  அரசு மீது கவர்னர் கிரண்பேடி குற்றம் சாட்டுவதும், புதுவை மாநில வளர்ச்சிக்கு கவர்னர் கிரண்பேடி தடையாக உள்ளார் என்றும் நாராயணசாமியும், ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டி வந்தனர்.

  ஒரு சில சமயங்களில் இந்த மோதல் உச்சக்கட்டத்தை அடைவதும் அதன் பிறகு சமாதானமாகி இருவரும் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்பது என வழக்கமாக இருந்து வருகிறது.  கவர்னர் கிரண்பேடி பதவி ஏற்ற சில நாட்களில் 2 ஆண்டுகள் மட்டுமே புதுவையில் பணிபுரிவேன் என்றும் அதற்கு மேல் ஒரு நிமிடம் கூட புதுவையில் இருக்க மாட்டேன் என்று கூறி இருந்தார். ஆனால், தற்போது புதுவையில் தொடர்ந்து கவர்னராக பணியாற்றுவேன் என்று கிரண்பேடி தெரிவித்தார்.

  இந்த நிலையில் கவர்னர் கிரண்பேடி பதவி ஏற்று இன்றுடன் 2 ஆண்டு நிறைவடைந்ததையொட்டி கவர்னர் கிரண்பேடி புதுவையில் இருந்து பெட்டி படுக்கையுடன் வெளியேற வேண்டும் என்றும், கவர்னர் கிரண்பேடியால் புதுவை மாநிலம் ஒரு சதவீதம் கூட வளர்ச்சி அடையவில்லை என்றும் நாராயணசாமி கடந்த 2 நாட்களுக்கு முன்பு கடுமையாக தாக்கி பேசினார்.

  மேலும் கவர்னர் கிரண்பேடியின் அழைப்பு விடுத்த விழாவில் தன்மானமுள்ளவர்கள் யாரும் பங்கேற்க மாட்டார்கள் என்றும் நாராயணசாமி அறிவித்தார்.

  அதன்படி நேற்று மாலை கவர்னர் கிரண்பேடி அழைத்த விழாவில் அமைச்சர்கள் மற்றும் காங்கிரஸ், தி.மு.க., அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் யாரும் பங்கேற்கவில்லை.

  இந்த நிலையில் கவர்னர் கிரண்பேடி வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தூய்மை பணியை சைக்கிளில் சென்று பார்வையிடுவது வழக்கம்.

  ஆனால், இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 7 மணிக்கு கவர்னர் கிரண்பேடி ராஜ்நிவாசில் இருந்து திடீரென சைக்கிளில் புறப்பட்டார். துப்புரவு பணிகளை பார்வையிட்டபடி வந்த அவர் வழியில் துப்புரவு பணியாளர்களுக்கு சால்வை அணிவித்து பாராட்டினார்.

  அதன் பின்னர் எல்லையம்மன் கோவில் தெருவில் உள்ள முதல்-அமைச்சர் நாராயணசாமி வீட்டுக்கு கவர்னர் கிரண்பேடி வந்தார். கவர்னரை பார்த்ததும் அங்கிருந்தவர்கள் திகைத்து போனார்கள்.

  இது பற்றி வீட்டு மாடியில் இருந்த நாராயணசாமிக்கு தகவல் தெரிவித்தனர். அப்போது நாராயணசாமி குளித்து கொண்டு இருந்தார்.

  அதுவரை கவர்னர் கிரண்பேடி வீட்டு வராண்டாவில் காத்து இருந்தார். சுமார் 10 நிமிடத்துக்கு பிறகு நாராயணசாமி வீட்டின் மாடியில் இருந்து கீழே இறங்கி வந்தார்.

  இதையடுத்து நாளை பிறந்த நாளையொட்டி முதல்-அமைச்சர் நாராயணசாமிக்கு கவர்னர் கிரண்பேடி சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

  பதிலுக்கு முதல்-அமைச்சர் நாராயணசாமியும் கவர்னர் கிரண்பேடிக்கு சால்வை அணிவித்து 2 ஆண்டு பணி நிறைவடைந்ததையொடடி வாழ்த்து தெரிவித்தார்.

  இதையடுத்து கவர்னர் கிரண்பேடியை முதல்-அமைச்சர் நாராயணசாமி வீட்டு வாசல் வரை வந்து வழியனுப்பி வைத்தார்.

  இதன் பின்னர் கவர்னர் கிரண்பேடி சைக்கிளில் கந்தப்ப முதலியார் வீதியில் உள்ள சபாநாயகர் வைத்திலிங்கம் வீட்டுக்கு சென்றார். அங்கு சபாநாயகர் வைத்திலிங்கத்தை சந்தித்து அவருக்கு சால்வை அணிவித்தார்.

  அதே போல் சபாநாயகர் வைத்திலிங்கமும் பதிலுக்கு கவர்னர் கிரண்பேடிக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.  #governorkiranbedi #CMNarayanasamy

  ×