என் மலர்
நீங்கள் தேடியது "Ayyappa Darshan"
- உடல், பொருள், ஆவி அனைத்தும் ஐயனுக்கே என்று அர்ப்பணிக்க வேண்டும்.
- மாலை போட்டதும், எல்லாவற்றையும் தியாகம் செய்ய வேண்டும்.
சாதாரண மனிதன் ஒருவன் அவன் செய்த கர்ம வினையில் இருந்து மீள வேண்டுமானால், அவன் முதலில் அலைபாயும் நிலையில் இருந்து விடுபட வேண்டும். அதற்கு விரதம், அனுஷ்டானம், ஆச்சாரம், தர்ம சிந்தனை, செயல்பாடுகள் வேண்டும். இவை இருந்தால் முக்தி கிடைக்கும். அது கிடைக்க ஒரே இறை வழிபாடு ஐயப்பனே!
ஒருவர் சபரிமலைக்கு மாலைபோடும் போது இல்லறத் துறவை மேற்கொள்கிறார். உடல், பொருள், ஆவி அனைத்தும் ஐயனுக்கே என்று அர்ப்பணிக்க வேண்டும். மாலை போட்ட பிறகு எல்லா ஐயப்பமார்களும் ஒன்றே. அங்கே ஆத்மா ஒன்றே. வேறுபாடு கிடையாது. விருப்பு, வெறுப்பு கிடையாது.
ஐயப்பனுக்காக மாலை போட்டதும், எல்லாவற்றையும் தியாகம் செய்ய வேண்டும். நான், எனது என்ற பற்று இங்கே அறுபடுகிறது. ஐயப்பனுக்கு விரதம் முக்கியம் 48 நாட்கள் விரதம் இருந்து மலைக்குப்போக முடியாதவர்கள், 14 நாட்கள் விரதம் எடுத்து பக்கத்தில் உள்ள ஐயப்பன் கோவிலுக்கு இருமுடி ஏற்று சென்று வணங்கி வரலாம்.
ஒருவன் பிரம்மச்சரிய வாழ்க்கை நடத்தும்போது பற்று போகிறது. கொடுக்கும்போது பற்று போகிறது. வாங்கும்தபோது பற்று போகிறது. பற்றற்ற வாழ்க்கையே பரமனடி சேர்கின்ற வழியாகும். அனைத்து தோஷங்களுக்கும், ராகு தோஷத்திற்கும் அய்யப்பன் தரிசனம் தான் பரிகாரமாகும்.
இந்து மதத்தில் சைவம், வைணவம் என்று பிரிந்து தனித்து வழிபாடு செய்து வருகிறார்கள். மகாவிஷ்ணு மாதாவாகவும், சிவன் பிதாவாகவும் இருந்து பிறந்தவன் தான் ஐயப்பன். பிறப்பில் எப்படி வேறுபாடு இல்லையோ இறப்பில் எப்படி வேறுபாடு இல்லையோ அப்படியே ஐயப்ப பக்தர்களிடம் உடையில் வேறுபாடு இல்லை. பாவத்தில், ரூபத்தில் வேறுபாடு இல்லாமல் வணங்கக்கூடிய ஒரே கடவுள் ஐயப்பன் தான்.
கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் தரிசனம் செய்யலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை அமல்படுத்த கேரள அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. சபரிமலைக்கு செல்ல விரும்பும் இளம்பெண்களை பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்படுவார்கள் என்றும் கூறியது.

கேரள பெண்கள் ஐயப்பனை தரிசனம் செய்ததை தொடர்ந்து சென்னையைச் சேர்ந்த மனிதி அமைப்பின் பெண்களும் சபரிமலைக்குச் செல்ல விருப்பம் தெரிவித்து கேரள அரசுக்கு மனு அனுப்பினர். இதற்காக கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனை சந்திக்க நேரம் ஒதுக்கும்படியும் கேட்டுள்ளனர்.
இதற்கிடையே ஆந்திராவைச் சேர்ந்த இளம்பெண்கள் 4 பேர் ஐயப்பனை தரிசிக்க சபரிமலை வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆந்திர பெண்கள் கோட்டயம் வந்துள்ளதாகவும், அங்கிருந்து எரிமேலி வழியாக பம்பை சென்று சன்னிதானம் செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஆந்திராவில் இருந்து ஏற்கனவே பல பெண்கள் சபரிமலை வந்து பக்தர்களின் எதிர்ப்பு காரணமாக திரும்பி சென்றுள்ளனர். இப்போது மேலும் 4 பெண்கள் சபரிமலை வந்திருப்பதாக வெளியான தகவல் சபரிமலையில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #SabarimalaTemple
மராட்டிய மாநிலம் புனேவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் திருப்திதேசாய், 6 இளம்பெண்களுடன் சபரிமலை சென்று ஐயப்பனை தரிசிக்கப்போவதாக அறிவித்தார்.
அதன்படி, திருப்திதேசாயும், 6 இளம்பெண்களும் புனேவில் இருந்து கொச்சிக்கு விமானம் மூலம் வந்தனர். இன்று அதிகாலை 4.50 மணிக்கு அவர்கள் விமான நிலையம் வந்திறங்கினர். இந்த தகவல் ஐயப்ப பக்தர்களுக்கு தெரிய வந்தது. உடனே அவர்கள் விமான நிலையம் முன்பு திரண்டனர். அவர்கள் விமான நிலையத்தின் அனைத்து வாசல்கள் முன்பும் திரண்டு நின்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்திதேசாயையும், அவருடன் வந்த பெண்களையும் ஊருக்குள் அனுமதிக்க மாட்டோம். அவர்கள் விமானநிலையத்தில் இருந்து அப்படியே திரும்பிச் செல்ல வேண்டும் என்று கோஷமிட்டனர்.
கொச்சி போலீசார் விரைந்து சென்று போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். திருப்திதேசாயை அருகில் உள்ள ஓட்டலுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.
சிறை பிடிக்கப்பட்ட திருப்திதேசாய் புனேவிற்கு திரும்பிச் செல்லும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று போராட்டக்காரர்கள் கோஷமிட்டனர்.
விமான நிலையத்தில் சிறை வைக்கப்பட்ட திருப்தி தேசாய் நிருபர்களிடம் கூறியதாவது:-
சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு தெளிவான உத்தரவை பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவுப்படியே சபரிமலை ஐயப்பனை தரிசிக்க நான், மராட்டிய மாநிலத்தில் இருந்து இங்கு வந்துள்ளேன்.
என்ன எதிர்ப்புகள் வந்தாலும் ஐயப்பனை தரிசிக்காமல் மராட்டியம் திரும்ப மாட்டேன்.
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி, எனக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டியது மாநில அரசின் பொறுப்பு. அவர்கள் எனக்கும், என்னுடன் வந்த பெண்களுக்கும் போதிய பாதுகாப்பு அளிப்பார்கள் என்று நம்புகிறேன்.
போலீஸ் பாதுகாப்புடன் சபரிமலை சென்று ஐயப்பனை தரிசிப்பேன். இதில் எந்த மாற்றமும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
திருப்திதேசாய் பேட்டி பற்றி அறிந்த பக்தர்கள், திருப்திதேசாய் ஐயப்பனை தரிசிக்க வரவில்லை. ஐயப்ப பக்தர்களின் அமைதியை குலைக்க வந்துள்ளார். மண்டல பூஜை, மகரவிளக்கு விழாக்களில் ஐயப்பனை தரிசிக்க வரும் பக்தர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த வந்துள்ளார்.

விமான நிலையத்தில் இருந்து ஓட்டலுக்கு திருப்தி தேசாயை அழைத்து செல்ல மாட்டோம் என்று விமான நிலைய டாக்சி டிரைவர்களும் கூறினர். இதனால் திருப்தி தேசாய் விமான நிலையத்திற்குள்ளேயே முடங்கும் நிலை ஏற்பட்டது.
இந்நிலையில் தன்னுடன் வந்த பெண்களுடன் திருப்திதேசாய் காலை சிற்றுண்டி உட்கொண்டார். #TruptiDesai #Sabarimala






