search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "AIADMK demonstration"

    இலங்கை இறுதிக்கட்ட போரில் தமிழ் பெண்கள் மீது நடத்தப்பட்ட கோர தாக்குதலுக்கு, தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி அரசு தான் காரணம் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குற்றம்சாட்டி உள்ளார்.
    கோவை:

    இலங்கையில் ராஜபக்சேவுக்கு உதவிய தி.மு.க-காங்கிரஸ் கட்சியினரை போர் குற்ற விசாரணைக்கு உட்படுத்தி தண்டிக்க வலியுறுத்தி கோவை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கண்டன பொதுக்கூட்டம் கோவை சிவானந்தா காலனியில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநகர் மாவட்ட செயலாளர் பி.ஆர்.ஜி. அருண்குமார் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

    கூட்டத்தில் கோவை புறநகர் மாவட்ட செயலாளரும், அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:-

    கடந்த வாரம் இந்தியா வந்த இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே இலங்கையில் நடைபெற்ற போருக்கு காங்கிரஸ் தலைமையிலான அரசு செய்த உதவிகளை கூறியிருந்தார். மேலும் காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி அரசின் பொருளாதார உதவிகளால் தான் சிங்கள ராணுவம் தமிழர் பகுதிகளை சூறையாடியது என்பதும், பல லட்சம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள் என்பதும், தமிழ் பெண்கள் பல்லாயிரக்கணக்கானோர் கற்பழித்து படுகொலை செய்யப்பட்டார்கள் என்பதும் ராஜபக்சே வாயிலாக வெளிவந்து விட்டது. இந்த கொடூர தாக்குதலை மனிதாபிமானமற்ற செயல் என ஐ.நா. சபை மற்றும் பல நாடுகள் கண்டித்தது.

    ஈழத்தமிழர்கள் மீது சிங்கள ராணுவம் நடத்திய கொடூர படுகொலைகளுக்கும், தமிழ் பெண்கள் மீது நடத்தப்பட்ட கோரத்தாக்குதலுக்கும், தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி அரசு தான் காரணம். அதற்கு உதவியிருப்பதால் தி.மு.க.-காங்கிரசை போர் குற்ற விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். இலங்கையில் அப்பாவி தமிழர்களை கொன்று குவித்த குற்றத்திற்காக காங்கிரஸ் மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோரை போர் குற்றவாளிகளாக அறிவிக்க வேண்டும்.

    மத்தியில் மந்திரி பதவிக்காகவும், 2006-ல் அமைந்த மைனாரிட்டி தி.மு.க. அரசை காப்பாற்றி கொள்ளவும், ஈழத்தமிழர்களுக்கு காங்கிரஸ் தலைமையிலான அரசின் துரோக நடவடிக்கைக்கு தி.மு.க. துணை நின்றதை மறக்க முடியுமா?. அன்று தி.மு.க. தலைவர் கருணாநிதி இலங்கை தமிழர்களுக்காக உண்ணாவிரதம் என்று அறிவித்து ஒரு மணி நேரம் நாடகம் நடத்தினார். அந்த நாடகத்தை முடித்து இலங்கை தமிழர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை, போர் நின்று போனது என்று அறிவித்த பின்னர் பதுங்கு குழியில் இருந்த நம்முடைய அப்பாவி தமிழர்கள், தமிழ் சொந்தங்கள் 50 ஆயிரம் பேர் வெளியே வந்தனர். அவர்களை குண்டு போட்டு அழித்தனர். இதற்கெல்லாம் கருணாநிதியும் அப்போதைய துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும், காங்கிரசும் தான் காரணம்.

    இன்று ஒரு பேப்பரை லஞ்ச ஒழிப்பு போலீஸ் துறையில் கொடுத்து முதல்-அமைச்சர், துணை முதல்- அமைச்சர் மீது கொடுத்தீர்கள். மூன்றாவதாக தான் என் மீது புகார் கொடுத்தீர்கள். அந்த அளவிற்கு என் மீது பயம். என்னையும், அமைச்சர் தங்கமணி மீதும் ஏன் புகார் சொல்கிறீர்கள் என்று அனைவருக்கும் தெரியும். இன்றைக்கு இந்த கட்சி ஏதோ சூழ்நிலையில் இரண்டாக பிரிந்தது.

    நானும், தங்கமணியும் இரு சகோதரர்கள் போன்று செயல்பட்டு இந்த கட்சி சிறப்பாக செயல்பட உதவியாக இருக்கிறோம். இந்த ஆட்சியை எப்படியாவது கலைத்து விட வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் செயல்படுகிறார். இந்த ஆட்சி 10 நாளில் போய் விடும். ஒரு மாதத்தில், 2 மாதத்தில் போய்விடும் என்று சொன்னார்கள். ஆனால் எடப்பாடி பழனிசாமி ஒரு ஆண்டை தாண்டி ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார்.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொங்கு மண்டல விவசாய குடும்பத்தை சேர்ந்தவர். அவர் ஒன்றும் வாரிசு அடிப்படையில் முதல்-அமைச்சர் ஆகிவிடவில்லை. சாதாரண அ.தி.மு.க. கிளை செயலாளராக இருந்து மேலே வந்தவர். டி.டி.வி. தினகரன் போன்று புறவாசல் வழியாக வரவில்லை.

    மத்தியில் தி.மு.க. ஆட்சியில் இருந்த போது தமிழகத்துக்காக என்ன செய்தீர்கள். கோவை மாவட்டம் 50 ஆண்டு கால வளர்ச்சியை கண்டுள்ளது. கோவை மாவட்டத்திற்காக என்ன திட்டங்கள் கேட்டாலும் முதல்- அமைச்சர் செய்து கொடுக்கிறார். நான் அமைச்சர், அமைப்பு செயலாளர், மாவட்ட செயலாளர் பதவியை ராஜினாமா செய்து விடுகிறேன். மு.க.ஸ்டாலின் உங்கள் எதிர்க்கட்சி தலைவர் பதவி, தலைவர் பதவியை ராஜினாமா செய்து விடுங்கள். நீங்கள் சொன்ன குற்றச்சாட்டை நிரூபித்தால் நான் அரசியலை விட்டே விலகி விடுகிறேன் என்று சொன்னேன். ஆனால் அதற்கு மு.க.ஸ்டாலின் பதில் சொல்லவில்லை.

    தி.மு.க. ஆட்சியில் தினமும் 12 மணி நேரம் மின்வெட்டு. அப்போது தமிழகத்தில் தொழில்கள் முடங்கின. தமிழகத்தில் உள்ள தொழில் அதிபர்களுக்கு தி.மு.க. கொடுத்தது மின்வெட்டு மட்டும் தான். ஆனால் மின்வெட்டை சரி செய்தது ஜெயலலிதா அரசு.

    கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர் நெத்தியடி நாகையன், எம்.பி.க்கள் ஏ.கே.செல்வராஜ், மகேந்திரன், எம்.எல்.ஏ.க்கள் அம்மன் அர்ச்சுணன், ஆறுக்குட்டி, எட்டிமடை சண்முகம் உள்பட கட்சி நிர்வாகிள் பலர் கலந்து கொண்டனர்.
    இலங்கை தமிழர்களின் படுகொலைக்கு காரணமான தி.மு.க-காங்கிரஸ் சர்வதேச குற்றவாளி கூண்டில் நிற்க வேண்டும் என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். #ADMK #Jayakumar
    சென்னை:

    இலங்கை தமிழர்கள் படுகொலைக்கு காரணமாக இருந்த திமுக, காங்கிரசை கண்டித்து நடந்த சென்னை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கொளத்தூரில் ஆர்ப்பாட்டம் மற்றும் பொதுக்கூட்டம் நடந்தது.

    கூட்டத்துக்கு வட சென்னை வடக்கு (மேற்கு) மாவட்ட செயலாளர் வெங்கடேஷ் பாபு தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர்கள் பாலகங்கா, விருகை வி.என்.ரவி, தி.நகர் சத்யா, ராஜேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விஜயகுமார் எம்.பி. ஜெய வர்த்தன் எம்.பி., நட்ராஜ் எம்.எல்.ஏ. ஆகியோர் வரவேற்புரையாற்றினர்.

    அமைச்சர் ஜெயக்குமார், கோகுல இந்திரா, மருது அழகு ராம், நடிகர் அஜய் ரத்தினம் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

    வங்ககடலில் இருந்து ஒரு சொம்பு நீர் எடுத்தால் வற்றிவிடுமா? அ.தி.மு.க. என்றுமே பிளவுபடாது.

    இலங்கையில் இனப் படுகொலை நடைபெற்ற போது ஆட்சியில் இருந்தது தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி தான், தி.மு.க. தலைவர் கருணாநிதி குடும்பம் வளம் பெறும் துறைகளை பெற்று ஆசியாவிலேயே மிகப்பெரிய பணக்காரக் குடும்பமாக உள்ளது.

    ஒவ்வொரு தமிழர்களும் அழுது, வேதனையை சொல்ல முடியாமல் தவித்தது. அப்போது ஸ்டண்ட் அடித்தது தி.மு.க. வித்தைகள் காட்டுவதிலும் சிறந்தது உலகிலேயே தி.மு.க. தான், பச்சோந்தி போல அவ்வப்போது நிறத்தை மாற்றிக்கொள்ளும் கட்சி தி.மு.க.


    கருணாநிதி அன்றைக்கு முதல்வராக இருந்த போது தமிழர்கள் கொல்லப்படுவது பற்றி ஏன் என்று கேட்கவில்லை. குடும்பத்திற்காக இலாகாக்களை பேசினார்கள் தமிழினத்தினை காக்கவில்லை.

    டெல்லியில் ராஜபக்சே பேட்டியில் தெளிவாக சொல்லிவிட்டார். இனப் படுகொலையை இந்திய அரசின் துணையோடு நடத்தியதாக கூறிவிட்டார். இதற்கு அன்று ஆட்சியில் இருந்த தி.மு.க-காங்கிரஸ் பதில் சொல்ல வேண்டும்.

    தி.மு.க.-காங்கிரஸ் சர்வதேச குற்றவாளி கூண்டில் நிற்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார். #ADMK #Jayakumar #DMK #Congress #Karunanidhi
    ×