search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Adi"

    • ஆடி மாத்தில் வரும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சிறப்பு தான்.
    • அம்மன் கோவில்களில், இன்று சிறப்பு பூஜைகளும், சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தது.

    திருப்பூர்:

    ஆடி மாத்தில் வரும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சிறப்பு தான். ஒவ்வொரு வெள்ளியன்றும் வித்தியாசமாக கொண்டாடுகின்றனர்.முதல் வெள்ளியான இன்று, வீடுகளில் திருக்கலசம் எழுந்தருளச்செய்து, அதில் அம்மன் முகத்தை போன்ற உருவ அமைப்பை ரவிக்கை துணியில் ஏற்படுத்தி, அதற்கு அணிகலன்கள் மலர் மாலைகள் சூட்டி அலங்கரித்து வழிபட்டனர்.

    வீட்டு முற்றத்திலும், பூஜை அறையிலும் மாக்கோலமிட்டு, மாவிலை, தென்னை தோரணங்கள் சூட்டினர். சர்க்கரை பொங்கல், எலுமிச்சை, தேங்காய், புளி, தயிர் சாதங்களை தயாரித்து, அம்பாளுக்கு படைத்தனர்.

    அம்பாளை துதித்து போற்றி, மாலைகளை பாராயணம் செய்தனர். தொடர்ந்து, முப்பெரும் தேவியரை துதித்து, வீடுகளுக்கு சுமங்கலிப்பெண்களை அழைத்து விருந்து பரிமாறி, வளையல், ரவிக்கை, மஞ்சள், குங்குமம், பூ உள்ளிட்ட மங்கல பொருட்களை கொடுத்து மகிழ்ந்தனர். இப்படி ஆடிப்பண்டிகையை சுமங்கலிப்பெண்கள் பல்வேறு நடைமுறைகளை பின்பற்றி சிறப்பாக கொண்டாடினர்.

    திருப்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களில் ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடந்தது. திருப்பூர் தாராபுரம் ரோடு கோட்டை மாரியம்மன் கோவில், கருவம்பாளையம் மாகாளியம்மன் கோவில், ஏ.பி.டி., ரோடு பட்டத்தரசிம்மன் கோவி்ல், தில்லை நகர் ராஜ மாகாளியம்மன் கோவில், வாலிபாளையம் போலீஸ்லைன் மாரியம்மன் கோவில், செல்லாண்டியம்மன் கோவில், மேட்டுப்பாளையம் ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில், ெபருமாநல்லுார் கொண்டத்து காளியம்மன் கோவில், அவிநாசியை அடுத்துள்ள கருவலூர் மாரியம்மன் கோவில் உள்பட உடுமலை, தாராபுரம், பல்லடம், காங்கயம், வெள்ளகோவில் உள்பட பல்வேறு அம்மன் கோவில்களில், இன்று சிறப்பு பூஜைகளும், வழிபாடுகளும் நடந்தது. அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தது.

    அம்மன் கோவில்களில் இன்று அதிகாலையில் இருந்தே பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள், அம்மனை பக்தி பரவசத்துடன் வழிபட்டனர். பெண்கள் சிவப்பு மற்றும் மஞ்சள் நிற ஆடைகளில் வந்து, அம்மனை வழிபட்டனர். கோவில்களில், பக்தர்களுக்கு சர்க்கரை பொங்கல், வெண்பொங்கல், தக்காளி சாதம், தயிர்சாதம் போன்றவை பிரசாதமாக வழங்கப்பட்டது.மேலும் கூழ் வார்த்து பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.

    இன்று முதல் ஆடி வெள்ளி என்பதால் குறைந்திருந்த பூக்கள் விலை மெல்ல உயர துவங்கியுள்ளது.

    திருப்பூர் பூ மார்க்கெட்டில் கடந்த வாரம் கிலோ, 300 ரூபாய்க்கு விற்ற மல்லிகைப்பூ நேற்று கிலோவுக்கு, 150 ரூபாய் உயர்ந்து 450 ரூபாய்க்கு விற்றது. முல்லை கிலோ 250 ரூபாயில் இருந்து 320 ரூபாய்க்கு விற்பனையானது. ஆடி வெள்ளி என்றாலே அம்மன் கோவில்கள் தான் பிரசித்தம். கோவிலுக்கு அதிகளவில் பயன்படுத்தப்படும் அரளி பூ விலையும் உயர்ந்துள்ளது.

    ஒரு வாரமாக கிலோ 80 முதல் 120 ரூபாய் இருந்த ஒரு கிலோ அரளி நேற்று 200 முதல் 240 ரூபாய்க்கு விற்றது. துளசி ஒரு கட்டு 20 ரூபாய், செவ்வந்தி 300 ரூபாயாக விலை உயர்ந்தது. ஒரு சில வியாபாரிகளிடம் மட்டும் அரளி பூ இருந்ததால், அதனை வாங்க சில்லறை வியாபாரிகள் பலர் போட்டி போட்டனர். வரத்து குறைவால், மக்களுக்கு அரளி கிடைக்கவில்லை; வியாபாரிகள் மொத்தமாக விற்பனைக்கு அள்ளிச்சென்றனர்.

    பூ வியாபாரிகள் கூறுகையில், காற்றின் வேகத்துக்கு தாக்குப் பிடிக்க முடியாமல், பூக்கள் உதிர்ந்து வருகிறது. வரத்து குறைந்து வரும் இவ்வேளையில் ஆடி வெள்ளி விற்பனை சற்று அதிகரித்ததால் விலை உயர்ந்துள்ளது.

    இருப்பினும் ஓரிரு நாளில் விலை குறைந்து விடும். ஆவணி முகூர்த்தம் வரை மல்லிகை பூ விலையில் பெரிய ஏற்றம் இருக்காது என்றனர்.

    • உடல் நிலை பாதிப்புகளில் இருந்து விரைவில் நலம் பெரும் அமைப்பு
    • புதிய சொத்து, வண்டி வாகனம் வாங்கும் யோகம்

    இந்த ஆடி, புரட்டாசி, தை அமாவாசை திருநாளில் , தமது இரண்டாவது தாயான குல தெய்வத்தை ஒருவர் முறையாக அன்ன தானம் செய்து வழிபடும் பொழுது ஜாதகருக்கு, அறிவில் தெளிவு, நல்லவர் சேர்க்கை, செய்யும் தொழில் முன்னேற்றம், வருவாய் உயர்வு, பதவி உயர்வு, மக்கள் செல்வாக்கு , பூர்விகத்தில் ஜீவிக்கும் தன்மை அதனால் ஜாதகர் அடையும் நன்மை, தமது குளம் விளங்க நல்ல வாரிசு, பெரிய மனிதர்களின் நட்பு, ஜாதக ரீதியான பாதிப்புகளில் இருந்து நன்மை பெறும் யோகம், வண்டி வாகனங்களில் இருந்து எவ்வித பாதிப்பும் விபத்தும் ஏற்படாத அமைப்பு , தனது சொந்த பந்தங்களுடன் நல்ல முறையில் உறவை வளர்த்துகொண்டு நன்மை பெரும் தன்மை .

    கணவன் -மனைவி அன்பு ஒற்றுமை , பிரிந்த கணவன் -மனைவி சேர்ந்து தாம்பத்திய வாழ்க்கையில் சந்தோசம் பெரும் யோகம், உடல் நிலை பாதிப்புகளில் இருந்து விரைவில் நலம் பெரும் அமைப்பு, செய்யும் தொழில் அபரிவிதமான முன்னேற்றம், புதிய சொத்து, வண்டி வாகனம் வாங்கும் யோகம், வருடம் முழுவதும் எவ்வித சிக்கல்களும் இல்லாத மகிழ்ச்சியான வாழ்க்கை, குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்கும் யோக அமைப்பு, மன கவலைகளில் இருந்து ஜாதகரை மீட்டு எடுத்து நலம் பெற செய்யும் யோகம் , மண் மனை வண்டி வாகன யோகம், புதிதாக தொழில் துவங்கும் யோகம், புதிய வீடு கட்டும் யோகம் என அனைத்து நன்மைகளையும் ஒருவருக்கு இந்த ஆடி, புரட்டாசி, தை அமாவாசை குலதெய்வ வழிபாடு செய்வதால் கிடைக்க பெறுவார் .

    இதற்கு ஜாதகர் தனது குல தெய்வம் எதுவோ அங்கு சென்று , அவர்களது முறைப்படி வழிபாடு செய்து, அங்கு உள்ள முன் பின் அறியாத நபர்களுக்கு ஒரு 20 பேருக்காவது அன்னதானம் செய்து வழிபடுவது மிக பெரிய நன்மைகளை நிச்சயம் தரும் . குலதெய்வத்தை அறியாதவர்கள் தனது இஷ்ட தெய்வத்தை வழிபாடு செய்து நலம் பெறலாம் .

    பித்ரு தர்ப்பணம்

    ஒருவருடைய ஜாதக அமைப்பில் பித்ரு தோஷங்களால் , வறுமை , நோய் , கடன் , விபத்து , ஏமாற்றம் , திருமண தாமதம், கணவன் மனைவி பிரிவு , விவாகரத்து ,குழந்தை இன்மை , விஷ ஜந்துக்களால் பாதிப்பு , மன நிம்மதி இழப்பு , விரக்தி, வேலை இன்மை , தொழில் முன்னேற்றம் இன்மை , மற்றவர்களால் ஏமாற்ற படுதல் , திடீர் இழப்பு ,எதிரிகள் தொந்தரவு , யோகம் அற்ற நிலை , யோக பங்கம் ஏற்படுதல் , அவ பெயர் , தீய பெண்களின் சகவாசம் இதனால் பொருள் இழப்பு , கெட்ட நண்பர்களால் துன்பம் , மற்றவருக்காக தான் பாதிக்க படுதல் என ஜாதகரை படுத்தி எடுத்து விடும் இந்த பித்ரு தோஷம்.

    இதுமாதிரியான பாதிப்புகளால் அதிகம் துன்புறுவோர் அனைவரும், முறை படி நதிக்கரை , மீன் உள்ள நீர் நிலைகளுக்கு ஆடி, புரட்டாசி, தை அமாவாசை திருநாளில் சென்று தமது சக்திக்கு ஏற்றார் போல் தாமாகவோ , அல்லது வேதம் அறிந்த பிராமணர் வழிகாட்டுதலின் பேரிலோ சுவேதா தேவியின் மூலம் தர்ப்பணம் செய்வோருக்கு மேற்கண்ட பாதிப்புகளில் இருந்து 100 சதவிகிதம் நன்மை நடைபெற ஆரம்பிக்கும் சில நாட்களிலேயே இது கண்கூடாக கண்ட உண்மை .

    மேலும் இந்த ஆடி அமாவாசை தினத்தில் தர்ப்பணம் செய்வோருக்கு கடந்த 54 வருடமாக பித்ரு கடமையை செய்யாதவருக்கு பித்ருக்கள் ஏற்றுக்கொண்டு நன்மைகளையும் , யோகங்களையும் வழங்குவார்கள்.

    • நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர், பழைய பை-பாஸ் கரூர் சாலையில் உள்ள செல்லாண்டி அம்மனுக்கு ஆடி தவசு விழா நடைபெற்றது.
    • 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர், பழைய பை-பாஸ் கரூர் சாலையில் உள்ள செல்லாண்டி அம்மனுக்கு ஆடி தவசு விழா நடைபெற்றது.

    விழாவை முன்னிட்டு அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர்,சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் போன்ற 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் செல்லாண்டி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    இதில் பரமத்தி வேலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள், மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

    ஆடித்தவசுக்கான ஏற்பாடுகளை பரமத்திவேலூர் செல்லாண்டியம்மன் கோவில் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

    ×