என் மலர்

  நீங்கள் தேடியது "Volvo"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இந்திய சந்தையில் வால்வோ நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் விலை சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
  • இந்த காருக்கான முன்பதிவு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

  வால்வோ கார் இந்தியா நிறுவனம் XC40 ரிசார்ஜ் மாடல் 2022 ஆண்டுக்கு முழுமையாக விற்றுத் தீர்ந்தது என அறிவித்து இருக்கிறது. முதற்கட்டமாக 150 யூனிட்கள் விற்பனைக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், விற்பனை துவங்கிய இரண்டு மணி நேரத்தில் அனைத்து யூனிட்களும் விற்றுத் தீர்ந்ததாக வால்வோ நிறுவனம் அறிவித்து உள்ளது. யூனிட்கள் விற்றுத் தீர்ந்த போதும், இந்த காருக்கான முன்பதிவுகள் தொடரும் என வால்வோ நிறுவனம் தெரிவித்துள்ளது.


  டிசம்பர் 2022 இறுதிக்குள் 150 யூனிட்களையும் வினியோகம் செய்ய வால்வோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது. வால்வோ XC40 ரிசார்ஜ் முதல் யூனிட் அக்டோபர் மாத வாக்கில் துவங்க இருக்கிறது. இந்தியாவில் அசெம்பில் செய்யப்பட்ட முதல் ஆடம்பர எஸ்யுவி மாடலாக வால்வோ XC40 ரிசார்ஜ் இருக்கிறது. இந்த மாடல் கர்நாடக மாநிலத்தின் பெங்களூரு அருகே உள்ள ஆலையில் உற்பத்தி செய்யப்பட இருக்கிறது.

  வால்வோ XC40 ரிசார்ஜ் மாடல் 78 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் கொண்டிருக்கிறது. இந்த கார் 408 ஹெச்.பி. பவர், 660 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த கார் முழு சார்ஜ் செய்தால் 418 கிமீ ரேன்ஜ் வழங்குகிறது. இந்த காரை 150 கிலோவாட் பாஸ்ட் சார்ஜர் மூலம் 10 முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 28 நிமிடங்களே ஆகும்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • வால்வோ நிறுவனம் சில தினங்களுக்கு முன்பு தான் இந்திய சந்தையில் XC40 ரிசார்ஜ் மாடலை அறிமுகம் செய்தது.
  • தற்போது இந்த நிறுவனத்தின் மற்றொரு எலெக்ட்ரிக் கார் வெளியீடு பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.

  வால்வோ கார்ஸ் இந்தியா நிறுவனம் இந்திய சந்தையில் தனது அடுத்த எலெக்ட்ரிக் கார் எப்போது வெளியாகும் என்பதை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தி இருக்கிறது. அதன் படி வால்வோ நிறுவனம் C40 மாடலை அடுத்த ஆண்டு வாக்கில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்வதாக அறிவித்து உள்ளது. வால்வோ C40 மாடல் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட XC40 ரிசார்ஜ் மாடலின் கூப் வெர்ஷன் ஆகும்.

  மேலும் வால்வோ நிறுவனத்தின் முழுமையான எலெக்ட்ரிக் வாகனமாக உருவாக்கப்பட்ட முதல் கார் இது ஆகும். வால்வோ C40 ரிசார்ஜ் மாடலில் லோ மற்றும் ஸ்லோபிங் ரூஃப்லைன் உள்ளது. இந்த எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடலில் ரிடிசைன் செய்யப்பட்ட போஸ்டீரியர், பூட் லிட் ஸ்பாயிலர் மற்றும் செங்குத்தாக பொருத்தப்பட்ட டெயில் லேம்ப்கள் உள்ளன. இத்துடன் எல்இடி ஹெட்லைட்கள், டி வடிவ டிஆர்எல்கள், ஸ்போர்ட்ஸ் பம்ப்பர், டூயல் டோன் பெயிண்ட் மற்றும் 5 ஸ்போக் அலாய் வீல்கள் உள்ளன.


  உள்புறம் புளூ நிற கார்பெட் மற்றும் டோர் பேட் ட்ரிம்கள் உள்ளன. இத்துடன் செங்குத்தாக பொருத்தப்பட்ட தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், பில்ட் இன் கூகுள் மேப்ஸ், கூகுள் வாய்ஸ் அசிஸ்டண்ட், ஓவர் தி ஏர் அப்டேட் பெறும் வசதி என ஏராளமான அம்சங்கள் உள்ளன. இத்துடன் பவர்டு இருக்கைகள், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், ஹார்மன் கார்டன் சவுண்ட் சிஸ்டம், ADAS அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.

  வால்வோ நிறுவனத்தின் XC40 ரிசார்ஜ் மாடலை போன்றே புதிய வால்வோ C40 ரிசார்ஜ் மாடலிலும் 78 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த பேட்டரி ஒவ்வொரு ஆக்சில்களில் உள்ள டூயல் எலெக்ட்ரிக் மோட்டார்களுக்கு சக்தியூட்டுகிறது. இவை 400 ஹெச்.பி. பவர், 660 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளன. இந்த மாடலை 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 40 நிமிடங்களே ஆகும். மேலும் முழு சார்ஜ் செய்தால் 420 கி.மீ. ரேன்ஜ் வழங்குகிறது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இந்திய சந்தையில் வால்வோ நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் விற்பனகை்கு அறிமுகம் செய்யப்பட்டது.
  • இந்த மாடலின் வினியோகம் அக்டோபர் மாத வாக்கில் துவங்க இருக்கிறது.

  வால்வோ நிறுவனம் இந்திய சந்தையில் முற்றிலும் புதிய 2022 வால்வோ XC40 ரிசார்ஜ் மாடலை அறிமுகம் செய்தது. புதிய வால்வோ XC40 ரிசார்ஜ் மாடலின் விலை ரூ. 55 லட்சத்து 90 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் ஆகும். இந்த மாடல் ஒற்றை வேரியண்டில் கிடைக்கிறது. இதன் வினியோகம் அக்டோபர் மாத வாக்கில் துவங்க இருக்கிறது.

  வெளிப்புறம் புதிய வால்வோ XC40 ரிசார்ஜ் மாடலில் பிளான்க்டு-அவுட் கிரில், பூட்லிட் மீது ரிசார்ஜ் பேடஜ் கொண்டு இருக்கிறது. இத்துடன் எல்இடி ஹெட்லேம்ப்கள், 19 இன்ச் அளவில் டூயல் டோன் அலாய் வீல்கள், முன்புறம் மற்றும் பின்புற பம்ப்பரில் பிளாக் நிற கிளாடிங், செங்குத்தாக பொருத்தப்பட்ட எல்இடி டெயில் லைட்கள் உள்ளன.


  காரின் உள்புறத்தில் 12 இன்ச் அளவில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், 360 டிகிரி கேமரா, எலெக்ட்ரிக் அட்ஜஸ்ட் வசதி கொண்ட முன்புற இருக்கைகள், மெமரி ஃபன்ஷன், அடாப்டிவ் குரூயிஸ் கண்ட்ரோல், லேன் கீப் அசிஸ்ட், டூயல் ஜோன் கிளைமேட் கண்ட்ரோல், 13 ஸ்பீக்கர்கள் கொண்ட ஹார்மன் கார்டன் மியூசிக் சிஸ்டம், செங்குத்தாக பொருத்தப்பட்ட இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் வழங்கப்பட்டு உள்ளது.

  புதிய வால்வோ XC40 ரிசார்ஜ் மாடலில் 78 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 402 ஹெச்.பி. பவர், 660 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த கார் முழு சார்ஜ் செய்தால் 418 கி.மீ. வரையிலான ரேன்ஜ் வழங்குகிறது.


  இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கி.மீ. வேகத்தை 4.9 நொடிகளில் எட்டி விடும். இந்த கார் மணிக்கு அதிகபட்சம் 180 கி.மீ. வேகத்தில் செல்லும். இதில் வழங்கப்பட்டு இருக்கும் பேட்டரியை 150 கிலோவாட் டிசி பாஸ்ட் சார்ஜர் கொண்டு 10 முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 28 நிமிடங்களே ஆகும். 

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • வால்வோ நிறுவனம் இந்திய சந்தையில் தனது முதல் எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்ய இருக்கிறது.
  • இந்த மாடலின் வெளியீடு மெட்டாவெர்ஸ் வெர்ஷனாக நடைபெற இருக்கிறது.

  இந்திய சந்தையில் வால்வோ நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் XC40 ரிசார்ஜ் ஒரு ஆண்டுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விற்பனை கடந்த ஆண்டு அக்டோபர் மாதமே துவங்க இருந்தது. எனினும், வால்வோ நிறுவனம் தனது காரை இறக்குமதி செய்ய முடிவு எடுத்த காரணத்தால் இதன் விற்பனை தாமதமாகி போனது.

  தற்போது வால்வோ நிறுவனம் தனது XC40 ரிசார்ஜ் மாடலை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வர முடிவு செய்து இருக்கிறது. மேலும் இந்த மாடலின் வெளியீடு ஜூலை 26 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. மேலும் இந்த மாடலின் வெளியீடு மெட்டாவெர்ஸ் வெர்ஷனாக நடைபெற இருக்கிறது. இதனை வால்வோ நிறுவனம் வால்வோவெர்ஸ் என அழைக்கிறது.


  வால்வோ XC40 ரிசார்ஜ் மாடலில் உள்ள எலெக்ட்ரிக் மோட்டார் டிரைவ் டிரெயின் 405 ஹெச்.பி. பவர், 660 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த கார் மணிக்கு 100 கி.மீ. வேகத்தை 4.9 நொடிகளில் எட்டி விடும். இந்த எலெக்ட்ரிக் காரில் 79 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் முழு சார்ஜ் செய்தால் 400 கிமீ ரேன்ஜ் வழங்குகிறது.

  கடந்த ஆண்டு வால்வோ நிறுவனம் வால்வோ XC60, வால்வோ S90 மற்றும் வால்வோ XC90 பெட்ரோல் மற்றும் 48 வோல்ட் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டத்துடன் அறிமுகம் செய்தது. அனைத்து பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களுக்கு மாற்றாக முழு எலெக்ட்ரிக் மற்றும் ஹைப்ரிட் மாடல்களை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வால்வோ நிறுவனம் தனது கார் மாடல்களுக்கு ஓ.டி.ஏ. முறையில் அப்டேட் வழங்க இருப்பதாக அறிவித்து இருக்கிறது.


  வால்வோ நிறுவனம் தனது எலெக்ட்ரிக் வாகனங்களை ஓவர் தி ஏர் அப்டேட் (ஓ.டி.ஏ.) மூலம் மேம்படுத்துகிறது. இந்த அம்சம் முதற்கட்டமாக அமெரிக்காவில் விற்பனை செய்யப்படும் எக்ஸ்.சி.40 ரிசார்ஜ், 2022 எக்ஸ்.சி.60, 2022 எக்ஸ்.சி.60 ரிசார்ஜ் மற்றும் 2022 எக்ஸ்.சி.60 போல்-ஸ்டார் போன்ற மாடல்களுக்கு வழங்கப்பட இருக்கிறது.

  இந்த அப்டேட்- புது அம்சங்களை வழங்குவது, ஏற்கனவே உள்ள சிறு குறைகளை போக்குவது, இன்போடெயின்மென்ட் மற்றும் ப்ரோபல்ஷன் சிஸ்டத்தை மேம்படுத்துவது உள்ளிட்டவைகளை வழங்குகிறது. இதன் மூலம் எக்ஸ்.சி.40 மாடலை பயன்படுத்துவோர் 'ரேன்ஜ் செயலி' ஒன்றை எதிர்பார்க்கலாம். இதை கொண்டு வாகனத்தின் ரேன்ஜ்-ஐ நீட்டிக்கவும் முடியும். 

   வால்வோ எலெக்ட்ரிக் கார்

  ஓ.டி.ஏ. அப்டேட் மூலம் காரின் ரேன்ஜ் எத்தனை கிலோமீட்டர்கள் அதிகரிக்கும் என்பது பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. முன்னதாக டெஸ்லா நிறுவனம் தனது எலெக்ட்ரிக் கார்களுக்கு ஓ.டி.ஏ. அப்டேட் வழங்குவதில் வாடிக்கையாளர்களிடம் நற்பெயரை பெற்று இருக்கிறது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வால்வோ நிறுவனத்தின் ஃபிளாக்‌ஷிப் எஸ்.யு.வி. மாடலான 2020 XC90 எஸ்.யு.வி. கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. #VolvoXC90  வால்வோ கார்ஸ் நிறுவனம் தனது டாப் எண்ட் ஃபிளாக்‌ஷிப் எஸ்.யு.வி. மாடலான, 2020 XC90 காரை அறிமுகம் செய்துள்ளது. புதிய கார் XC90 சீரிஸ் மாடலின் மிட்-லைஃப் அப்டேட் ஆகும். 2020 வால்வோ XC90 எஸ்.யு.வி. சில மாற்றங்களுடன், புதிய உபகரணங்களுடன் கிடைக்கிறது.

  இவற்றில் குறிப்பிடத்தக்க அம்சமாக கைனெடிக் எனர்ஜி ரிக்கவரி சிஸ்டம் (KERS) இருக்கிறது. இந்த சிஸ்டம் பிரேக்கிங் செய்யும் போது ஏற்படும் செயல்திறன் இழப்பை டார்க் அசிஸ்டண்ட்டின் போது பயன்படுத்தக்கூடிய மின்சக்தியாக மாற்றுகிறது. இது காரின் எமிஷனை குறைப்பதோடு மட்டுமின்றி வாகனத்தின் செயல்திறனை 15 சதவிகிதம் வரை அதிகப்படுத்தும்.

  வால்வோவின் புதிய XC90 மாடலின் KERS காரின் வழக்கமான ஐ.சி. என்ஜினுடன் இணைக்கப்பட்டிருக்கிறது. இதனால் புதிய பி பேட்ஜில் மின்சக்தி செயல்திறனை வழங்கும். இந்த காரில் ஐ.சி. என்ஜின் தற்போதைய மாடலில் வழங்கப்பட்டிருக்கும் 2.0 லிட்டர் டீசல் யூனிட் வழங்கப்பட்டுள்ளது.   2020 XC90 ஃபேஸ்லிஃப்ட் மாடலில் டி8 ட்வின் என்ஜின் பிளக்-இன் ஹைப்ரிட் மோட்டார் வழங்கப்படுகிறது. வடிவமைப்பில் புதிய கார் அதிகப்படியான மாற்றங்கள் மேற்கொள்ளப்படவில்லை. எனினும், புதிய வடிவமைப்பு கொண்ட அலாய் வீல்கள், புதிய வெளிப்புற நிறங்கள், முன்பக்க கிரில் உள்ளிட்டவை வித்தியாசமாக தெரிகிறது.

  வால்வோ XC90 உள்புறம் பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. நான்கு மற்றும் ஏழு பேர் அமரக்கூடிய வடிவமைப்பு தவிர, 2020 வால்வோ XC90 மாடலில் ஆறு பேர் அமரக்கூடியதாகவும் கிடைக்கிறது. மற்றபடி மேம்பட்ட சென்சஸ் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஸ்பாட்டிஃபை, ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

  புதிய XC90 மாடலில் மேம்பட்ட ஓட்டுனர் உதவி சிஸ்டம்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் டிராஃபிக் அலெர்ட் சிஸ்டம், ஆட்டோ-பிரேக் அசிஸ்டண்ஸ் மற்றும் லேண் மைக்ரேஷன் சிஸ்டம் உள்ளிட்டவை வழங்கப்பட்டிருக்கின்றன.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வால்வோ நிறுவனத்தின் XC40 எஸ்.யு.வி. மாடல் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவில் வால்வோவின் விலை குறைந்த மாடலாக இந்த எஸ்.யு.வி. இருக்கிறது.  வால்வோ நிறுவனத்தின் புதிய எஸ்.யு.வி. இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. இது இந்தியாவில் வால்வோ நிறுவனத்தின் விலை குறைந்த மாடலாக வால்வோ XC40 அமைந்திருக்கிறது. 

  மே 2016-இல் அறிமுகம் செய்யப்பட்ட 40 சீரிஸ் கான்செப்ட்டை தழுவி உருவாக்கப்பட்டுள்ள புதிய எஸ்.யு.வி. முன்பக்க கிரில் பார்க்க வால்வோ சமீபத்தில் அறிமுகம் செய்த XC60 போன்றே காட்சியளிக்கிறது. இத்துடன் எல்இடி ஹெட்லைட் மற்றும் பகலில் எரியும் தார் வடிவிலான மின்விளக்குகள் இடம்பெற்றிருக்கிறது. 

  பின்புறம் ரேக்டு ரியர் விண்ட்ஷீல்டு, இன்டகிரேடெட் ரூஃப் ஸ்பாயிலர், டூயல் டோன் ரியர் பம்ப்பர் மற்றும் ட்வின் க்ரோம் எக்சாஸ்ட், L-வடிவிலான டெயில் லேம்ப்கள் வழங்கப்படுகிறது. உள்புறம் 3-ஸ்போக் ஸ்டீரிங் வீல், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் பேனல் வழங்கப்படுகிறது. சென்டர் கன்சோலில் க்ரோம் ட்ரிம் மற்றும் செங்குத்தான ஏ.சி. வென்ட் மற்றும் செங்குத்தான டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்படுகிறது.   இந்தியாவில் வால்வோ XC40 மாடலில் 2.0 லிட்டர், 4-சிலிண்டர் டீசல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 190 பி.எச்.பி. பவர், 400 என்.எம். டார்கியூ செயல்திறன், 8-ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ், மற்றும் ஆல்-வீல் டிரைவ் சிஸ்டம் கொண்டிருக்கிறது. வால்வோ நிறுவனத்தின் காம்பேக்ட் மாட்யூலர் ஆர்கிடெக்ச்சர் தளம் சார்ந்து வெளியாகும் முதல் மாடலாக XC40 இருக்கிறது. 

  வால்வோவின் சிறிய எஸ்.யு.வி. மாடல் என்ற வகையில் இந்த மாடல் அதிகளவு விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் வால்வோ XC40 விலை ரூ.39.90 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே புதிய காரின் முன்பதிவுகள் இந்தியாவில் துவங்கப்பட்டது. வால்வோ XC40 காரை முன்பதிவு செய்வோர் ரூ.5 லட்சம் முன்பணமாக செலுத்த வேண்டும். 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வால்வோ நிறுவனத்தின் லிமிட்டெட் எடிஷன் போல்ஸ்டார் இன்ஜினீர்டு வெர்ஷன் மாடல் விற்பனை துவங்கிய 39 நிமிடங்களில் விற்று தீர்ந்தது.
  வால்வோ நிறுவனத்தின் புதிய எஸ்60 செடான் மாடலை தழுவி உருவாக்கப்பட்ட லிமிட்டெட் எடிஷன் போல்ஸ்டார் இன்ஜினீர்டு வெர்ஷன் மொத்தம் 20 யூனிட்கள் தயாரிக்கப்பட்டது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில், அமெரிக்காவில் முன்பதிவு துவங்கிய 39 நிமிடங்களில் லிமிட்டெட் எடிஷன் கார் முழுமையாக விற்று தீர்ந்து விட்டதாக வால்வோ அறிவித்துள்ளது.

  புதிய வால்வோ எஸ்60 போல்ஸ்டார் இன்ஜினீர்டு லிமிட்டெட் எடிஷன் மாடலின் முன்பதிவுகள் கேர் பை வால்வோ செயலியில் மட்டுமே நடைபெற்றது. 415 பி.ஹெச்பி. பவர், 669 என்.எம். டார்கியூ, ஓலின்ஸ் சஸ்பென்ஷன், பிரெம்போ பிரேக்கள் மற்றும் இதர அம்சங்கள் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது.

  2019 எஸ்60 டி8 போல்ஸ்டார் இன்ஜினீர்டு வெர்ஷன் வால்வோ மற்றும் போல்ஸ்டார் இணைந்து உருவாக்கிய தலைசிறந்த வடிவமைப்பு, செயல்திறன் மற்றும் எலெக்ட்ரிஃபிகேஷன் செய்யப்பட்டிருக்கிறது.  விற்பனை குறித்த அறிவிப்பை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கும் வால்வோ, அதன் வாடிக்கையாளர்களுக்கு போல்ஸ்டார் இன்ஜின் மென்பொருள் ஆப்டிமைசேஷன் அப்கிரேடு செய்வதாக அறிவித்துள்ளது. இந்த திட்டத்தில் திராட்டிள் ரெஸ்பான்ஸ், ஷிஃப்ட் ஸ்பீடு, கியர் ஹோல்டு மற்றும் மிட்ரேஞ்ச் இன்ஜின் செயல்திறன் மேம்படுத்தப்படுகிறது. 

  புதிய எஸ்60 டி6 AWD மொமன்டம் சேவையில் கேர் பை வால்வோ செயலி மற்றும் ஆன்லைனில் சந்தாதாரர் ஆக முடியும். கேர் பை வால்வோ திட்டம் வால்வோ கார்கள் சந்தாதாரர் திட்டம் ஆகும். இதில் கார் கட்டணம், இன்சூரன்ஸ், பராமரிப்பு மற்றும் இதர சேவைகளை இரண்டு ஆண்டுகளுக்கு பெற முடியும்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வால்வோ நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் குறித்த முழு விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இது குறித்த முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.
  வால்வோ நிறுவனத்தின் புதிய தலைமுறை எஸ்60 செடான் மாடல் அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்டது. இவ்விழாவில் வால்வோ நிறுவன தலைவை வடிவமைப்பாளர் தாமஸ் இன்கென்லத் வால்வோவின் முதல் எலெக்ட்ரிக் கார் XC40 என தெரிவித்தார்.
  மேலும் அடுத்த தலைமுறை XC90 மாடல் முழுமையான எலெக்ட்ரிக் வாகனமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

  போல்ஸ்டாரின் முதல் எலெக்ட்ரிக் கார் வெளியான பின் வால்வோ XC40 EV (எலெக்ட்ரிக் மாடல்) அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. வால்வோ XC40 EV மற்றும் XC90 என இரண்டு எஸ்.யு.வி. மாடல்களும் அமெரிக்காவில் உள்ள தெற்கு கரோலினாவில் உள்ள தயாரிப்பு ஆலையில் உருவாக்கப்படுகிறது.

  வால்வோ XC40 EV தயாரிப்பு பணிகள் 2021-ம் ஆண்டு துவங்கும் என்றும் இதனை ஒரு முறை சார்ஜ் செய்தால் 500 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. 2025-ம் ஆண்டுவாக்கில் 50% விற்பனை எலெக்ட்ரிக் வாகனங்களில் இருந்து கிடைக்கும் என அந்நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.  2019-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு வால்வோ கார் மாடலிலும் எலெக்ட்ரிக் வேரியன்ட் மைல்டு ஹைப்ரிட், பிளக்-இன் ஹைப்ரிட் அல்லது பேட்டரி-எலெக்ட்ரிக் பவர்டிரெயின் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. எதிர்கால வால்வோ மாடல்களில் டீசல் ஆப்ஷன் வழங்கப்படாது என்றும் கூறப்படுகிறது.

  முற்றிலும் புதிய மாடல்களை உருவாக்குவதற்கு பதில் வால்வோ ஏற்கனவே விற்பனை செய்யும் மாடல்களின் எலெக்ட்ரிக் வெர்ஷனை தொடர்ந்து அறிமுகம் செய்யும் என தாமஸ் தெரிவித்திருக்கிறார். 2025-ம் ஆண்டு முதல் வால்வோ தயாரிக்கும் கார்களில் குறைந்தபட்சம் 25% மறுசுழற்சி செய்யப்பட்ட நெகிழி (பிளாஸ்டிக்) பயன்படுத்தப்படும் என தெரிவித்துள்ளது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வால்வோ நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் 2019 எஸ்60 டீசர் அதிகாரப்பூர்வ வெளியீட்டுக்கு முன் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.
  வால்வோ கார்ஸ் நிறுவனத்தின் 2019 எஸ்60 செடான் கார் ஜூன் 20-ம் தேதி வெளியிடப்பட இருக்கிறது. அமெரிக்காவில் நடைபெற இருக்கும் விழாவில் இந்த கார் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த கார் புதிதாய் துவங்கப்பட்டு இருக்கும் வால்வோ தயாரிப்பு ஆலையில் தயாரிக்கப்பட இருக்கிறது.

  இந்த தயாரிப்பு ஆலை 2019 வால்வோ எஸ்60 செடான் மாடலை உருவாக்கவே பிரத்யேகமாக துவங்கப்பட்டு இருக்கிறது. டீசல் இன்ஜின் இல்லாத முதல் வால்வோ கார் என்ற பெருமையுடன் வால்வோ 2019 எஸ்60 அறிமுகமாக இருக்கிறது. 2025-ம் ஆண்டு வாக்கில் அனைத்து கார்களையும் எலெக்ட்ரிக் மயமாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறது.


  புதிய போல்ஸ்டார் இன்ஜினியர் செயய்ப்பட்ட எஸ்60 மாடல் ஆர்-டிசைன் வெர்ஷனின் T8 ட்வின் இன்ஜினை விட மேம்பட்டிருக்கிறது. ஆர்-டிசைன் மாடலில் வழங்கப்பட்டு இருப்பதை போன்று 2019 எஸ்60 செடான் மாடலில் முன்பக்க கிரில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. சிவப்பு நிறத்தில் மட்டும் கிடைக்கும் எஸ்60 செடான் முதற்கட்டமாக அமெரிக்காவிலும், அதன் பின் ஐரோப்பிய சந்தைகளில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.

  2019 வால்வோ எஸ்60 போல்ஸ்டார்-க்கு இணையான செயல்திறன் வழங்குகிறது. இது புதிய மாடலில் போல்ஸ்டார் 1 கூப் மாடலுக்கு இணையான செயல்திறன் வழங்குகிறது. வால்வோ 2019 எஸ்60 மாடலில் T8 ட்வின் இன்ஜின் அதிகபட்சம் 415 பிஹெச்பி பவர், 670 என்எம் டார்கியூ செயல்திறன் வழங்குகிறது.

  ×