search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோ டிப்ஸ்

    600 கிமீ ரேன்ஜ் வழங்கும் வால்வோ எலெக்ட்ரிக் ஆடம்பர எஸ்யுவி அறிமுகம்
    X

    600 கிமீ ரேன்ஜ் வழங்கும் வால்வோ எலெக்ட்ரிக் ஆடம்பர எஸ்யுவி அறிமுகம்

    • வால்வோ நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட புதிய எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடல் அறிமுகமானது.
    • புதிய வால்வோ EX90 மாடல் ஏராளமான பாதுகாப்பு மற்றும் அதிநவீன தொழில்நுட்ப வசதிகளை கொண்டிருக்கிறது.

    வால்வோ நிறுவனம் ஏராளமான டீசர்களை தொடர்ந்து புதிய EX90 மாடலை அறிமுகம் செய்தது. வால்வோ ஏற்கனவே விற்பனை செய்து வரும் XC90 காருக்கு இணையான எலெக்ட்ரிக் வடிவம் தான் புதிய EX90. இந்த கார் முற்றிலும் புதிய எலெக்ட்ரிக் பிளாட்பார்மில் உருவாகி இருக்கிறது. மேலும் இதில் பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு தொழில்நுட்பங்கள் வழங்கப்பட்டுள்ளன.

    தோற்றத்தில் புதிய EX90 மாடல் வால்வோ பாரம்பரியத்திலேயே காட்சியளிக்கிறது. இதில் உள்ள லைட்டிங் மற்றும் டிசைன் அம்சங்கள் வால்வோ வழக்கப்படி மிக கச்சிதமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. புதிய எலெக்ட்ரிக் பிளாட்பார்மில் உருவாகி இருப்பதால், வால்வோ EX90 மாடல் முழுக்க முழுக்க எலெக்ட்ரிக் வாகனத்திற்கான டிசைன் பெற்று இருக்கிறது. இதே பிளாட்பார்மில் எதிர்கால வால்வோ கார்களும் உருவாக்கப்படும்.

    கேபினில் பெரிய 14.5 இன்ச் கூகுள் சார்ந்த செங்குத்தான டச் ஸ்கிரீன் செண்டர் கன்சோல் உள்ளது. இது என்விடியா டிரைவ் ஏஐ பிளாட்பார்ம்களான சேவியர் மற்றும் ஒரின் மூலம் இயங்குகிறது. இதில் உள்ள குவால்காம் ஸ்னாப்டிராகன் காக்பிட் பிளாட்பார்ம் முன்பை விட அதிகளவு மேம்பட்டு இருக்கின்றன. இதன் டிரைவர் டிஸ்ப்ளே மெல்லியதாகவும், அளவில் சிறியதாகவும் இருக்கிறது. இதன் விண்ட்ஸ்கிரீன் மீது ஏராளமான ரேடார்கள், லிடார்கள், கேமரா மற்றும் பாதுகாப்பு சென்சார்கள் உள்ளன.

    இவை EX90 மாடலை இதுவரை உருவாக்கப்பட்டதில் மிகவும் பாதுகாப்பான வால்வோ கார் என்ற பெருமையை பெற்று இருக்கிறது. இதில் பைலட் அசிஸ்ட், தானியங்கி வசதி மற்றும் மேம்பட்ட பாதுகாப்பு வசதிகள் உள்ளன. இந்த காரில் 111 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கிறது. இதனுடன் வழங்கப்பட்டு இருக்கும் எலெக்ட்ரிக் மோட்டார் 370 கிலோவாட் திறன் கொண்டுள்ளது.

    இதில் உள்ள பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 600 கிலோமீட்டர் வரை செல்லும். இதில் உள்ள பேட்டரியை 10 முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 30 நிமிடங்களே ஆகும். புதிய வால்வோ EX90 மாடலில் பை-டைரெக்‌ஷனல் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது. சர்வதேச சந்தையில் விற்பனைக்கு வந்ததும், இந்த கார் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும்.

    Next Story
    ×