என் மலர்
நீங்கள் தேடியது "Prasidh Krishna"
- இந்திய அணி அடுத்த மாதம் அயர்லாந்து சென்று 3 டி20 போட்டி கொண்ட தொடரில் விளையாடுகிறது.
- இந்த தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக பும்ரா நியமிக்கப்பட்டுள்ளார்
வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி இந்த தொடர் முடிந்ததும் அடுத்த மாதம் அயர்லாந்து சென்று 3 டி20 போட்டி கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்த தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக பும்ரா நியமிக்கப்பட்டுள்ளார். முக்கிய வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்ட நிலையில் புதுமுக வீரர்களை கொண்டே இந்த தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது.
இந்நிலையில் இந்த தொடரில் 2 இந்திய வீரர்களுடன் டி20-யில் ரிங்கு சிங் அறிமுக போட்டியில் விளையாடுவார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
இந்த பட்டியலில் முதல் வீரராக ரிங்கு சிங் உள்ளார். இடது கை பேட்ஸ்மேனான இவர், இதுவரை எந்த சர்வதேச ஆட்டத்திலும் விளையாடவில்லை. ஐபிஎல் 2023-ல் தனது அசாத்திய பேட்டிங் மூலம் இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார்.
2-வது வீரராக பேக்அப் விக்கெட் கீப்பராக ஜிதேஷ் சர்மா தேர்வு செய்யப்பட்டுள்ளார். சஞ்சு சாம்சன் முதன்மை கீப்பராக இருப்பார். இருப்பினும், தொடரில் மூன்று ஆட்டங்கள் உள்ளதால், ஜிதேஷ் ஷர்மா ஒரு ஆட்டத்தில் விளையாட வாய்ப்புள்ளது.
தொடை காயத்தில் இருந்து மீண்ட பிரசித் கிருஷ்ணா மீண்டும் களம் இறங்கியுள்ளார். வலது கை வேகப்பந்து வீச்சாளரான இவர் மார்ச் 2021-ல் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியுடன் சர்வதேச அரங்கில் அறிமுகமானார்.
இவர்கள் மூவரும் அயர்லாந்து அணிக்கு எதிரான தொடரில் களமிறங்க உள்ளனர்.
அணியின் விவரம்: ஜஸ்பிரித் பும்ரா (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட் (துணை கேப்டன்) யஷஸ்வி ஜெய்ஸ்வால், திலக் வர்மா, ரிங்கு சிங், சஞ்சு சாம்சன் (வி.கீப்பர்), ஜிதேஷ் சர்மா, ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், ஷபாஸ் அகமது, ரவி பிஷ்னோய், பிரசித் கிருஷ்ணா, அர்ஷ்தீப் சிங், முகேஷ் குமார், ஆவேஷ்கான்.
- காயம் காரணமாக நடப்பு சீசனில் பிரசித் கிருஷ்ணா பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
- முதுகில் ஏற்பட்ட காயத்திற்காக பிரசித் கிருஷ்ணா அறுவை சிகிச்சை மேற்கொள்ளவுள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் அணியில் பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணாவுக்கு மாற்று வீரராக சந்தீப் சர்மா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். காயம் காரணமாக நடப்பு சீசனில் பிரசித் கிருஷ்ணா பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதைடுத்து அவருக்கு மாற்று வீரராக சந்தீப் சர்மாவை ராஜஸ்தான் அணி நிர்வாகம் ஒப்பந்தம் செய்திருக்கிறது.
முதுகில் ஏற்பட்ட காயத்திற்காக பிரசித் கிருஷ்ணா அறுவை சிகிச்சை மேற்கொள்ளவுள்ளார். அதிலிருந்து அவர் குணம் அடைய சில வாரங்கள் ஆகும் என்பதால் நடப்பு சீசனில் பிரசித் கிருஷ்ணா பங்கேற்க மாட்டார் என்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.
அனுபவம் மிக்க வீரரான சந்தீப் சர்மா ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 100-க்கும் அதிகமான விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். கடந்த சீசனில் அவர் பஞ்சாப் அணிக்காக விளையாடியுள்ளார். ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 10 சீசன்களில் விளையாடிய அனுபவம் அவருக்கு உள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் நவ்தீப் சைனி மற்றும் ட்ரெண்ட் போல்ட் உள்ளிட்ட வேகப்பந்து வீச்சாளர்கள் வரிசையில் சந்தீப் சர்மா இணையவுள்ளார்.
பஞ்சாப் அணியில் இடம்பெற்றிருந்த ஜானி பேர்ஸ்டோ தவிர்க்க முடியாத காரணங்களால் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக ஆஸ்திரேலிய அணியின் ஆல் ரவுண்டர் மேத்யூ ஷார்ட்டை ஒப்பந்தம் செய்வதற்கு பஞ்சாப் கிங்ஸ் அணி முடிவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.