என் மலர்

  கிரிக்கெட்

  பிரசித் கிருஷ்ணாவுக்கு பதிலாக சந்தீப் சர்மாவை ஒப்பந்தம் செய்தது ராஜஸ்தான் ராயல்ஸ்
  X

  பிரசித் கிருஷ்ணாவுக்கு பதிலாக சந்தீப் சர்மாவை ஒப்பந்தம் செய்தது ராஜஸ்தான் ராயல்ஸ்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • காயம் காரணமாக நடப்பு சீசனில் பிரசித் கிருஷ்ணா பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
  • முதுகில் ஏற்பட்ட காயத்திற்காக பிரசித் கிருஷ்ணா அறுவை சிகிச்சை மேற்கொள்ளவுள்ளார்.

  ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் அணியில் பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணாவுக்கு மாற்று வீரராக சந்தீப் சர்மா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். காயம் காரணமாக நடப்பு சீசனில் பிரசித் கிருஷ்ணா பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதைடுத்து அவருக்கு மாற்று வீரராக சந்தீப் சர்மாவை ராஜஸ்தான் அணி நிர்வாகம் ஒப்பந்தம் செய்திருக்கிறது.

  முதுகில் ஏற்பட்ட காயத்திற்காக பிரசித் கிருஷ்ணா அறுவை சிகிச்சை மேற்கொள்ளவுள்ளார். அதிலிருந்து அவர் குணம் அடைய சில வாரங்கள் ஆகும் என்பதால் நடப்பு சீசனில் பிரசித் கிருஷ்ணா பங்கேற்க மாட்டார் என்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.

  அனுபவம் மிக்க வீரரான சந்தீப் சர்மா ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 100-க்கும் அதிகமான விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். கடந்த சீசனில் அவர் பஞ்சாப் அணிக்காக விளையாடியுள்ளார். ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 10 சீசன்களில் விளையாடிய அனுபவம் அவருக்கு உள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் நவ்தீப் சைனி மற்றும் ட்ரெண்ட் போல்ட் உள்ளிட்ட வேகப்பந்து வீச்சாளர்கள் வரிசையில் சந்தீப் சர்மா இணையவுள்ளார்.

  பஞ்சாப் அணியில் இடம்பெற்றிருந்த ஜானி பேர்ஸ்டோ தவிர்க்க முடியாத காரணங்களால் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக ஆஸ்திரேலிய அணியின் ஆல் ரவுண்டர் மேத்யூ ஷார்ட்டை ஒப்பந்தம் செய்வதற்கு பஞ்சாப் கிங்ஸ் அணி முடிவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

  Next Story
  ×