search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "70 பேர் பலி"

    ஈரானில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 70 ஆக உயர்ந்துள்ளது என மீட்புக் குழுவினர் தெரிவித்தனர். #IranFlood
    டெஹ்ரான்:

    ஈரான் நாட்டில் வெப்பமயமாதல். பருவநிலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தற்போது கனமழை பெய்து வருகிறது.

    கடந்த மாதம் தொடங்கிய கனமழையால் அங்குள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் மற்றும் நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கி தத்தளித்து வருகின்றன. 

    அங்குள்ள பல்வேறு மாகாணங்களில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி சாலைகள், பாலங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. அனைத்து ஆறுகளிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

    தகவலறிந்து மீட்புக் குழுவினர் விரைந்து சென்றனர். வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்டு வருகின்றனர். சுமார் 86 ஆயிரம் பேர் மீட்கப்பட்டு அரசு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணிகளில் தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினரும் ஈடுபட்டுள்ளனர். 

    கடந்த சில நாட்களாக பெய்துவரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 70 ஆக அதிகரித்துள்ளது. மேலும் காயமடைந்த பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என மீட்புக்குழு அதிகாரிகள் தெரிவித்தனர். #IranFlood
    வட கொரியாவின் 70-வது ஆண்டு விழாவையொட்டி, பிரமாண்ட ராணுவ அணிவகுப்பு நடந்தது. இதில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் இடம்பெறவில்லை. #NorthKorea #70YearsCelebrate
    பியாங்யாங்:

    வடகொரியாவில் கம்யூனிஸ்டு ஆட்சி மலர்ந்ததின் ஆண்டு விழா ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 9-ந் தேதி பிரமாண்டமாக நடைபெறும். அதையொட்டி நடக்கிற ராணுவ அணிவகுப்பு, உலக நாடுகளுக்கு சவால் விடும் வகையில் அமையும். ராணுவ அணிவகுப்பில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் முக்கிய இடம் பிடிக்கும்.



    இந்த ஆண்டு, 70-வது ஆண்டு விழா, வடகொரியாவில் எப்படி அமையப்போகிறது என்ற கேள்வி எழுந்தது.

    இதற்கு காரணம், கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதி சிங்கப்பூரில் நடந்த உச்சி மாநாட்டில், இரு துருவங்களாக கருதப்பட்டு வந்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் சந்தித்துப் பேசியபோது, கொரிய தீபகற்ப பகுதியை அணு ஆயுதமற்ற பிரதேசமாக மாற்ற வடகொரியா ஒப்புக்கொண்டது. இதையொட்டி இரு தரப்பினரும் ஒரு ஒப்பந்தம் ஏற்படுத்தினர்.



    அந்த ஒப்பந்தத்தில் அணு ஆயுதங்களை வடகொரியா கைவிடுவது தொடர்பாக கூடுதலான தகவல்கள் இல்லை. இருப்பினும், அதன் பின்னர் வடகொரியா இதுவரையில் அணுகுண்டு வெடிக்கவும் இல்லை, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனைகளை நடத்தவும் இல்லை.



    அதே நேரத்தில் அணு ஆயுதங்களை கைவிடுவது தொடர்பான அந்த நாட்டின் நடவடிக்கையில் முன்னேற்றமும் ஏற்படவில்லை. அதன் எதிரொலியாகத்தான் சமீபத்தில் அந்த நாட்டுக்கு அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ மேற்கொள்ளவிருந்த பயணத்தை ஜனாதிபதி டிரம்ப் ரத்து செய்தார்.



    இந்த நிலையில்தான், வடகொரியாவில் நேற்று நடந்த 70-வது ஆண்டு விழா பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்த விழாவையொட்டிய பிரமாண்ட ராணுவ அணிவகுப்பு எப்படி நடைபெறப்போகிறது, வடகொரியா தனது ஆயுத பலத்தை காட்டுமா, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை இடம் பெறச்செய்யுமா என்றெல்லாம் கேள்விகள் எழுந்தன.



    இந்த நிலையில் நேற்று காலை உள்ளூர் நேரப்படி 10 மணிக்கு விழா தொடங்கியது. ராணுவ வீரர்கள், வீராங்கனைகள் அணிவகுப்பில் கலந்து கொண்டு வீர நடை போட்டனர்.

    அதே நேரத்தில் அணிவகுப்பில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் இடம்பெறவில்லை. பிற பாரம்பரிய ஆயுதங்கள், தளவாடங்கள் மட்டுமே இடம் பெற்று இருந்தன.



    அணிவகுப்பை வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன், சீன அதிபர் ஜின்பிங்கின் சிறப்புத்தூதர், லி ஜான்சுவுடன் பார்வையிட்டார்.

    இந்த விழாவில் கிம் ஜாங் அன் உரை ஆற்றவில்லை. அவரது வலதுகரமாக கருதப்படுகிற கிம் யோங் நாம் உரை ஆற்றினார். அவரது பேச்சில் வடகொரியாவின் அணு ஆயுத திட்டங்கள் பற்றி எதுவும் இடம் பெறவில்லை. நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றவதுதான் முக்கிய அம்சமாக இடம் பெற்று இருந்தது.



    இந்த அணிவகுப்பை சீனா, ரஷியா, கியூபா நாடுகளின் உயர் அதிகாரிகள், பத்திரிகையாளர்களும் பார்வையிட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

    ராணுவ அணுவகுப்பில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் இடம்பெறாதது அமெரிக்காவுக்கு நிம்மதியை அளிப்பதாக அமைந்தது.



    அது மட்டுமின்றி, அமெரிக்காவுக்கு அளித்த வாக்குறுதிப்படி கொரிய தீபகற்ப பகுதியில் அணு ஆயுத ஒழிப்பு தொடர்பாக வடகொரியா ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கையும் உலக அரங்கில் உருவாகி உள்ளது.   #NorthKorea #70YearsCelebrate
    மீஞ்சூரில் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 70 மூட்டை குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.5 லட்சம் ஆகும்.
    பொன்னேரி:

    தமிழகத்தில் புகையிலை, குட்கா உள்ளிட்ட போதை பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த தடை மேலும் ஒரு ஆண்டுக்கு நீட்டிக்கப்பட்டு இருக்கிறது.

    அதிகாரிகளின் கண்காணிப்பையும் மீறி கடைகளில் குட்கா, புகையிலை தாராளமாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. வட மாநிலங்களில் இருந்து லாரி, ரெயில்கள் மூலம் அவை தமிழகத்துக்கு கடத்தி வரப்படுவதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் மீஞ்சூரில் உள்ள குடோனில் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபி சக்கரவர்த்திக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து பொன்னேரி டி.எஸ்.பி. ராஜா, மீஞ்சூர் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் மற்றும் போலீசார் மளிகை கடை அருகே இருந்த குடோனில் இன்று காலை அதிரடி சோதனை நடத்தினர்.

    அப்போது மூட்டை மூட்டையாக குட்கா, புகையிலை பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது கைப்பற்றப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்தனர். மொத்தம் 70 மூட்டைகளில் புகையிலை இருந்தது. இதன் மதிப்பு ரூ.5 லட்சம் ஆகும்.

    குடோன் உரிமையாளர் பாலாஜி தலைமறைவாகி விட்டார். அவரை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அவர் சிக்கினால்தான் குட்கா எங்கிருந்து கொண்டு வரப்பட்டது? எப்படி சப்ளை செய்யப்படுகிறது? இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார்? என்ற விபரம் தெரியவரும்.

    மீஞ்சூர் பகுதிக்கு வட மாநிலங்களில் இருந்து ரெயில், கார் மூலம் புகையிலை கொண்டு வரப்படுவதாக கூறப்படுகிறது. இதையடுத்து ரெயில்களை கண்காணிக்க போலீசார் முடிவு செய்து உள்ளனர்.

    எவரெஸ்ட் சிகரத்தில் ஏறும் முயற்சியில் தனது 2 கால்களையும் இழந்த சீனாவைச் சேர்ந்த சியா போயு என்ற 70 வயது முதியவர் தற்போது அதே எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்துள்ளார்.
    காத்மாண்டு:

    சீனாவைச் சேர்ந்த சியா போயு மலையேறும் வீரராவார். இவர் கடந்த 40 வருடங்களுக்கு முன்பு எவரெஸ்ட் சிகரத்தில் ஏறும் முயற்சியில் தனது 2 கால்களையும் இழந்தார்.

    இந்நிலையில், 70 வயதான சியா போயு தற்போது எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்துள்ளார். இதன் மூலம் 2 கால்கள் இல்லாமல் உலகின் மிக உயரமான சிகரத்தை அடைந்தவர் என்ற பெருமையை சியா போயு பெற்றுள்ளதாக நேபாளத்தின் சுற்றுலாத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.


    உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் சியா போயுவுக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. #mounteverest #Xiaboyu
    ×