என் மலர்
நீங்கள் தேடியது "ரியல்மி வாட்ச் 2"
- ஷங்கர் இயக்கத்தில் வெளியான ஜென்டில்மேன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளது.
- இப்படத்தை 'ஆஹா கல்யாணம்' படத்தை இயக்கிய கோகுல் கிருஷ்ணா இயக்குகிறார்.
1993-ஆம் ஆண்டு இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான முதல் திரைப்படம் 'ஜென்டில்மேன்'. இப்படத்தில் அர்ஜூன், மதுபாலா, கவுண்டமணி, செந்தில், மனோரம்மா உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் சமீபத்தில் அறிவிப்பை வெளியிட்டு ஆச்சரியப்படுத்தி இருந்தார்.
அதன்படி 'ஜென்டில்மேன்-2' படத்தை அடுத்ததாக தயாரிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. நீண்ட இடைவேளைக்கு பிறகு கே.டி.குஞ்சுமோன் தயாரிக்கும் ஜென்டில்மேன்-2 படத்திற்கு கீரவாணி இசையமைக்கவுள்ளார். இப்படத்தின் மூலம் நயன்தாரா சக்ரவர்த்தி தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாக உள்ளார். 'ஜென்டில்மேன்-2' படத்தை 2014-ஆம் ஆண்டு நாணி நடிப்பில் வெளியான 'ஆஹா கல்யாணம்' படத்தை இயக்கிய கோகுல் கிருஷ்ணா இயக்குகிறார்.

ஜென்டில்மேன்-2
இந்நிலையில் 'ஜென்டில்மேன் 2' படத்தின் புதிய அறிவிப்பைப் படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படத்தில் மௌனராகம், நாயகன், சத்யா, அபூர்வ சகோதரர்கள், தளபதி, இந்தியன் உள்ளிட்ட பல படங்களுக்கு கலை இயக்குனராக பணியாற்றிய தோட்டா தரணி இணைந்துள்ளார். மேலும் தோட்டா தரணியோடு இணைந்து அவரது மகள் ரோகிணி தரணியும் இப்படத்தில் பணியாற்றவுள்ளதாக தயாரிப்பாளர் கே.டி. குஞ்சுமோன் தனது சமூக வலைதளப்பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.
- எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 தேர்வுகளில் சி.இ.ஒ.ஏ. மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் அதிக மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
- சாதனை படைத்த மாணவ, மாணவிகளை பள்ளி ஆசிரியர்கள், ஆசிரியைகள் பாராட்டினர்.
மதுரை
மதுரை கோசாக்குளம் மீனாம்பாள் புரம் மேலூர், விருதுநகர், காரியாபட்டி, சாத்தூர், தேனி ஆகிய இடங்களில் சி.இ.ஒ.ஏ. மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிகளில் படித்த மாணவ, மாணவிகள் எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
பிளஸ்-2 தேர்வில் மாணவர் நித்திஷ்வர் 600-க்கு 596 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். மாணவர் விஸ்வேஸ்வரர் 595 மதிப்பெண்கள் பெற்று 2-ம் இடம் பிடித்துள்ளார். மாணவி கவின்மலர் 594 மதிப்பெண்கள் பெற்று 3-ம் இடம் பிடித்துள்ளார்.
கணித பாடத்தில் 30 பேரும், கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தில் 20 பேரும், உயிரியல் பாடத்தில் 12 பேரும், இயற்பியல் பாடத்தில் 10 பேரும், வேதியியல் பாடத்தில் 9 பேரும், கணக்கு பதிவியல் பாடத்தில் 30 பேரும், வணிகவியல் பாடத்தில் 15 பேரும், வணிக கணிதம் பாடத்தில் 12 பேரும் என மொத்தம் 132 மாணவ, மாணவிகள் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர்.
தமிழ் பாடத்தில் 26 பேர், 100-க்கு 99 மதிப்பெண் பெற்றுள்ளனர். ஆங்கிலத்தில் ஒருவர் மட்டும் 99 மதிப்பெண் பெற்றுள்ளார். 590-க்கு மேல் 12 பேரும், 585-க்கு மேல் 26 பேரும், 575-க்கு மேல் 60 பேரும், 550-க்கு மேல் 149 பேரும் மதிப்பெண் பெற்றுள்ளனர்.
இதே போல் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் மாணவர் ஸ்ரீநாத், திவ்யா ஸ்ரீ ஆகியோர் 500-க்கு 497 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்துள்ளனர். ஸ்ரீ நிரஞ்சனா, விக்னேஷ் ஆகியோர் 496 மதிப்பெண் பெற்று 2-ம் இடம் பிடித்துள்ளனர். ஹரிணி மீனாட்சி, அஸ்மிதா, கவுசல்யா, திவ்யபாலா ஆகியோர் 495 மதிப்பெண்கள் பெற்று 3-ம் இடம் பிடித்துள்ளனர்.
அதிக மதிப்பெண் பெற்று சாதனை படைத்த மாணவ, மாணவிகளை பள்ளி ஆசிரியர்கள், ஆசிரியைகள் பாராட்டினர்.
- ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் இந்தியன்-2.
- இந்தியன்-2 படத்தின் வேலைகள் ஆரம்பிக்க இருப்பதாக உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த மே 13-ந்தேதி வெளியான திரைப்படம் 'டான்'. அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கியுள்ள இந்த படத்தை லைகா நிறுவனமும், சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்திருந்தது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற டான் திரைப்படம் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது.

உதயநிதி ஸ்டாலின்
இந்த நிலையில், படம் வெற்றி பெற்றதை கொண்டாடும் விதமாக சென்னையில் டான் வெற்றிக்கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய உதயநிதி ஸ்டாலின் எம்.எல்,.ஏ., டான் படம் வெற்றியடைந்ததற்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார். அப்போது கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 திரைப்படம் குறித்து முக்கிய தகவலை அவர் வெளியிட்டார். அதாவது இந்தியன் 2 படத்தின் வேலைகள் ஆரம்பிக்க இருக்கிறாம் என்று கூறினார். அப்போது அங்கிருந்த ரசிகர்கள் ஆரவாரமிட்டனர். இந்தியன் 2 படத்தின் அப்டேட் வெளியானதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
- ஷங்கர் இயக்கத்தில் வெளியான ஜென்டில்மேன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளது.
- இப்படத்தை இயக்கவுள்ள இயக்குனர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
1993-ஆம் ஆண்டு இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான முதல் திரைப்படம் 'ஜென்டில்மேன்'. இப்படத்தில் அர்ஜூன், மதுபாலா, கவுண்டமணி, செந்தில், மனோரம்மா உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் சமீபத்தில் அறிவிப்பை வெளியிட்டு ஆச்சரியப்படுத்தி இருந்தார். அதன்படி 'ஜென்டில்மேன்-2' படத்தை அடுத்ததாக தயாரிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. நீண்ட இடைவேளைக்கு பிறகு கே.டி.குஞ்சுமோன் தயாரிக்கும் ஜென்டில்மேன்-2 படத்திற்கு கீரவாணி இசையமைக்கவுள்ளார். இப்படத்தின் மூலம் நயன்தாரா சக்ரவர்த்தி தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாக உள்ளார்.

ஜென்டில்மேன்-2
இந்நிலையில் 'ஜென்டில்மேன்-2' படத்தின் இயக்குனர் குறித்த புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி 'ஜென்டில்மேன்-2' படத்தை 2014-ஆம் ஆண்டு நாணி நடிப்பில் வெளியான 'ஆஹா கல்யாணம்' படத்தை இயக்கிய கோகுல் கிருஷ்ணா இயக்குவார் எனப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.









