என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பத்மஸ்ரீ"

    • உடல் பாதிப்புகளை ஏற்படுத்தும் பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளை எதிர்க்கும் சக்தி கோமியத்தில் இருப்பதால், அவ்வப்போது கோமியத்தை எடுத்துக்கொள்ள வேண்டும்
    • ஐஐடி மெட்ராஸை சிறந்த முறையில் வழிநடத்தி வருவதால் அவர் இந்த விருதுக்கு முழு தகுதியானவர்

    இந்தியாவின் 77வது குடியரசுத் தினத்தை முன்னிட்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை 2026ஆம் ஆண்டிற்கான பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்தது. பல்வேறு துறைகளைச் சேர்ந்த 131 பேருக்கு, ஐந்து பத்ம விபூஷன், 13 பத்ம பூஷன் மற்றும் 113 பத்மஸ்ரீ விருதுகளை அரசு அறிவித்துளது.

    இதில் ஐஐடி மெட்ராஸ் இயக்குனர் வி. காமகோடிக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதனை கேரள காங்கிரஸ் விமர்சித்துள்ளது. எக்ஸ் சமூக வலைதளத்தில் இதுதொடர்பாக பதிவிட்ட காங்கிரஸ், "பத்மஸ்ரீ விருது பெற்ற வி. காமகோடிக்கு வாழ்த்துகள். ஐஐடி மெட்ராஸில் கோமியம் குறித்த உங்கள் அதிநவீன ஆராய்ச்சியை அங்கீகரித்து, கோமியத்தை உலக அரங்கிற்கு கொண்டு சென்றதற்காக நாடு உங்களுக்கு இந்த கௌரவத்தை அளித்துள்ளது" என்று அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளது.

    கேரள காங்கிரஸின் இந்த விமர்சனத்திற்கு சோகோ நிறுவனத்தின் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு பதிலடி கொடுத்துள்ளார். காமகோடி மைக்ரோ-புராசஸர் வடிவமைப்பில் நிபுணர் என்றும், ஐஐடி மெட்ராஸை சிறந்த முறையில் வழிநடத்தி வருவதால் அவர் இந்த விருதுக்கு முழு தகுதியானவர் என்றும் கூறி காங்கிரஸின் கருத்தை "காலனித்துவ மனநிலை" என்று விமர்சித்துள்ளார்.

    கோமியம் குறித்து காமகோடி கூறியது என்ன?

    கோமியம் மிகப்பெரிய மருந்து, பிணிகளை நீக்கும். உடல் பாதிப்புகளை ஏற்படுத்தும் பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளை எதிர்க்கும் சக்தி கோமியத்தில் இருப்பதால், அவ்வப்போது கோமியத்தை எடுத்துக்கொள்ள வேண்டும் என கடந்தாண்டு பொது நிகழ்ச்சி ஒன்றில் காமகோடி பேசியிருந்தார்.

    ஒரு முதன்மையான தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைவர் இதுபோன்ற அறிவியல் ஆதாரமற்ற கருத்துகளை முன்வைப்பது பகுத்தறிவுக்கு அப்பாற்பட்டது என்ற விமர்சனங்கள் பல்வேறு தரப்பிலிருந்தும் எழுந்தது. இந்நிலையில் இதனை காங்கிரஸ் குறிப்பிட்டு விமர்சித்துள்ளது.  

    • பெரியாரை போற்றும் டி.எம். கிருஷ்ணா போன்றவர்களை ஊக்குவிப்பது ஆபத்தானது.
    • பெரியார் பிராமணர்களை இனப்படுகொலை செய்ய வேண்டுமென பொது வெளியில் உறக்க பேசியவர்

    பிரபல கர்நாடக இசைக் கலைஞர்களான ரஞ்சனி, காயத்ரி சகோதரிகளுக்கு பதம் ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    இசைக்கலைஞர் டி.எம் கிருஷ்ணா சமூக கருத்துக்களையும், மதநல்லிணக்கத்தையும் வலியுறுத்தி கர்நாடக இசை நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறார்.

    சென்னை மியூசிக் அகாடமி சார்பில் இசைக் கலைஞர்களுக்கு வழங்கப்படும் சங்கீத கலாநிதி விருதுக்கு டி.எம்.கிருஷ்ணா தேர்வு செய்யப்பட்டதற்கு ரஞ்சனி, காயத்ரி சகோதரிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர்.

    இதுகுறித்து அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், "ஈ.வெ.ரா எனப்படும் பெரியாரை போற்றும் கருத்துக்களை டி.எம். கிருஷ்ணா முன்வைத்துள்ளார். பெரியாரை போற்றும் டி.எம். கிருஷ்ணா போன்றவர்களை ஊக்குவிப்பது ஆபத்தானது.

    பெரியார் பிராமணர்களை கூட்டாக இனப்படுகொலை செய்ய வேண்டுமென பொது வெளியில் உறக்க பேசியவர். சமூகத்தில் இருக்கும் ஒவ்வொரு பெண்ணையும் இழிவுபடுத்தும் வகையில் ஆபாச வார்த்தைகளை கொண்டு பேசியவர். ஆபாசமாக பேசுவதை சமூகத்தில் இயல்பான ஒரு விஷயம்தான் என்ற கருத்தைத் திணிக்க நினைத்தவர் பெரியார்" என்று உண்மைக்கு புறம்பான அவதூறு கருத்துக்களை தெரிவித்தனர்.

    பெரியார் குறித்த ரஞ்சனி, காயத்ரியின் இந்த கருத்தை சமூக வலைத்தளங்களில் பலரும் விமர்சித்தனர்.இது தொடர்பாக எழுத்தாளரும் திமுகவின் செய்தித் தொடர்பாளருமான சல்மா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "கர்நாடக இசைப் பாடகர்கள் ரஞ்சனி, காயத்திரிக்கு எத்தனை ஆணவம். இது பெரியார் மண்" என தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பத்ம விருதுகள் ஆண்டுதோறும் குடியரசு தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்படுவது வழக்கம்.
    • 2026ம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது

    பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களை கவுரவிக்கும் வகையில் இந்திய அரசின் சார்பில் பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதுகள் பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்ம ஸ்ரீ ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழங்கப்படுகின்றன.

    கலை, இலக்கியம், அறிவியல், மருத்துவம், விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை புரிவோருக்கு ஒவ்வொரு ஆண்டும் இந்த விருதுகள் வழங்கப்படுகிறது.

    பத்ம விருதுகள் ஆண்டுதோறும் குடியரசு தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், 2026ம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், கிரிக்கெட் விளையாட்டில் சிறந்து விளங்கிய ரோகித் சர்மா மற்றும் ஹர்மன்பிரீத் கவுருக்கு பதம் ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்தியாவின் டென்னிஸ் ஜாம்பவான் விஜய் அமிர்தராஜுக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் பிரவீன் குமார் மற்றும் இந்திய மகளிர் ஹாக்கி அணியின் கோல்கீப்பர் சவிதா புனியா ஆகியோரும் பத்மஸ்ரீ விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

    விளையாட்டுத் துறையில் தங்கள் சாதனைகளுக்காக பல்தேவ் சிங், பகவான் தாஸ் ரைக்வார் மற்றும் கே. பஜனிவேல் ஆகியோருக்கும் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 

    • "சேட்டு (மரம்) ராமையா" , "வனஜீவி" என்று பிரபலமாக அழைக்கப்பட்டார்.
    • ஒரு கோடிக்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டதற்காக, 2017 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதைப் பெற்றார்.

    தெலுங்கானாவை சேர்ந்த பத்மஸ்ரீ விருது பெற்ற 'வனஜீவி' ராமையா இன்று (சனிக்கிழமை) மாரடைப்பால் காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். அவருக்கு வயது 87.

    தெலுங்கானாவின் கம்மம் மாவட்டத்தை சேர்ந்த பசுமைப் போராளி, "சேட்டு (மரம்) ராமையா" ,"வனஜீவி" என்று பிரபலமாக அழைக்கப்படும் தாரிபள்ளி ராமையா கடந்த பல தசாப்தங்களாக ஒரு கோடிக்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டதற்காக, 2017 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதைப் பெற்றார்.

    இந்நிலையில் கம்மம் மாவட்டத்தில் ரெட்டிபள்ளி கிராமத்தில் உள்ள அவரது வீட்டில் இன்று அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.

    அவரின் மறைவுக்கு தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, பிரதமர் மோடி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். அவரின் மறைவு சுற்றுசூழல் ஆர்வலர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

    • கே.ஜே.யேசுதாஸ் 40 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ளார்.
    • இவர் 8 தேசிய விருதுகள் மட்டுமின்றி ஏராளமான விருதுகளை பெற்றுள்ளார்.

    கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்தவர் பாடகர் கே.ஜே.யேசுதாஸ். இவர் தமிழ், மலையாளம், இந்தி, கன்னடம், தெலுங்கு, ஆங்கிலம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 40 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ளார்.

    8 தேசிய விருதுகள் மட்டுமின்றி ஏராளமான விருதுகளை பெற்றுள்ளார். அது மட்மின்றி மத்திய அரசால் வழங்கப்படும் பத்மஸ்ரீ, பத்மபூஷண், பத்ம விபூஷன் உள்ளிட்ட விருதுகளையும் பெற்றிருக்கிறார். இப்படி பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரரான பாடகர் ஜேசுதாசுக்கு இன்று 84-வது பிறந்தநாள் ஆகும்.


    இந்த ஆண்டு தனது பிறந்த நாளில் கேரளாவில் இருக்க ஜேசுதாஸ் விரும்பினார். ஆனால் அமெரிக்காவில் நடைபெறும் இசை நிகழ்ச்சிக்காக அவர் அங்கு சென்றிருக்கிறார். இதன் காரணமாக அவர் நினைத்தபடி தனது பிறந்தநாளில் கேரளாவில் இருக்க முடியாமல் போனது.

    இருந்தபோதிலும் அவர் தனது பிறந்தநாளை ஆன்லைன் மூலமாக ரசிகர்களுடன் கொண்டாடினார். அவர் ஆன்லைனில் ரசிகர்கள் முன்னிலையில் தோன்றி, கேக் வெட்டினார். இன்று பிறந்தநாள் கொண்டாடும் ஜேசுதாசுக்கு ஏராளமான நடிகர்கள், நடிகைகள், பாடகர்கள் மற்றும் பிரபலங்கள் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

    ×