என் மலர்
நீங்கள் தேடியது "ஜியோஹாட்ஸ்டார்"
- உள்ளடக்கம் நன்றாக இருந்தால் மொழி, இனத்தை தாண்டி அதற்கான வரவேற்பு அனைத்து இடங்களிலும் கிடைக்கும்
- தமிழ்நாட்டில் முதன்முறையாக ஒரு பெரிய திரைப்படத்தை நேரடியாக டிஜிட்டல் தளத்தில் வெளியிடும் முன்னோடி முயற்சியை கமல்ஹாசன் 2012 ஆம் ஆண்டே மேற்கொண்டார்.
சென்னையில் JioHotstar South Unbound நிகழ்வு நடைபெற்றது. தமிழ்நாட்டின் திரைப்பட மற்றும் ஊடகக் கல்வி நிறுவனங்களுடன் இணைந்து திறமைகளை உருவாக்குவது, பயிற்சி வாய்ப்புகளை அதிகரிப்பது, படைப்புத் துறையை வலுப்படுத்துவது போன்ற நோக்கங்களுக்காக இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டார். நடிகர் கமல்ஹாசனும் கலந்துகொண்டார். இந்நிகழ்வின்போது தமிழ்நாடு அரசு மற்றும் ஜியோ ஹாட்ஸ்டார் நிறுவனம் இடையே ரூ.4 ஆயிரம் கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. தமிழ்நாடு அரசுடன் இணைந்து திரைப்படங்கள், இணையத்தொடர், உள்ளடக்கம் போன்றவற்றை உருவாக்க ஜியோ ஹாட்ஸ்டார் ஒப்பந்தம் செய்துள்ளது.

தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,
"எப்போதும் சொல்வதுதான். உள்ளடக்கம்தான் இப்போது ராஜா. உள்ளடக்கம் நன்றாக இருந்தால் அது எப்போதும் மக்களால் கொண்டாடப்படும். உள்ளடக்கம் நன்றாக இருந்தால் மொழி, இனத்தை தாண்டி அதற்கான வரவேற்பு அனைத்து இடங்களிலும் கிடைக்கும். அதற்கு நிறைய உதாரணங்கள் இருக்கின்றன.
இன்றைய சூழலில் புதிய தொழில்நுட்பங்களை கலைஞர்கள் கற்றுக்கொள்ள வேண்டியது மிகமிக முக்கியம், அவசியம். எதை கற்றுக்கொள்ள வேண்டும், எப்படி கற்றுக்கொள்ள வேண்டும், அதை எப்படி கலையாக கொண்டுவர வேண்டும் என்பதற்கு கமல் சார் ஒரு சிறந்த உதாரணம், நம் எல்லோருக்கும் அவர் ஒரு இன்ஸ்பிரேஷன். இப்போதும் கமல் சார் கற்றுக்கொள்கிறார்.
தற்போதும் திரைத்துரையில் வரும் புதிய அம்சங்களை பரிசோதித்து பார்ப்பதில், கற்றுக்கொள்வதில் முதல் ஆளாக இருக்கிறார். தமிழ்நாட்டில் முதன்முறையாக ஒரு பெரிய திரைப்படத்தை நேரடியாக டிஜிட்டல் தளத்தில் வெளியிடும் முன்னோடி முயற்சியை கமல்ஹாசன் 2012 ஆம் ஆண்டே மேற்கொண்டார். ஓடிடி சினிமாவுக்கு மாற்றாகாது." என தெரிவித்தார்.
- ஐ.சி.சி இப்போது சுமார் 2.4 பில்லியன் டாலர் மதிப்புள்ள புதிய ஒளிபரப்பாளரைத் தேடி வருகிறது.
- இது தொடர்பாக சோனி, நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் போன்ற நிறுவனங்களை அணுகியுள்ளது.
ஜியோ ஹாட்ஸ்டார் என்பது இந்தியாவின் மிகப்பெரிய பிரீமியம் ஸ்ட்ரீமிங் தளமாகும். இந்த தளம் 17 மொழிகளில் நாடகங்கள், திரைப்படங்கள், சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் உலகளாவிய விளையாட்டு நிகழ்வுகளை வழங்குகிறது. குறிப்பாக கிரிக்கெட் போட்டிகளுக்கு பிரபலமானது.
ஜியோ ஹாட்ஸ்டார் 2024 முதல் 2027 வரையிலான ஐசிசி நிகழ்வுகளுக்கான இந்திய ஒளிபரப்பு உரிமைகளை 3 பில்லியன் மதிப்பில் பெற்றிருந்தது. இதில் டி20 உலகக் கோப்பை 2024 (ஏற்கனவே நடந்தது), சாம்பியன்ஸ் டிராபி 2025, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் 2025, பெண்கள் உலகக் கோப்பை 2025, டி20 உலகக் கோப்பை 2026 போன்ற முக்கிய போட்டிகள் அடங்கும். இந்த போட்டிகளை ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் நேரலை ஸ்ட்ரீமிங் செய்யலாம், மேலும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களில் தொலைக்காட்சியில் பார்க்கலாம்.
இந்நிலையில், நிதி இழப்புகள் காரணமாக (குறிப்பாக 2024 டி20 உலகக் கோப்பை மற்றும் 2025 சாம்பியன்ஸ் டிராபியில் ஏற்பட்ட இழப்புகள்), ஜியோஸ்டார் 2026 டி20 உலகக் கோப்பைக்கு முன்பே இந்த ஒப்பந்தத்திலிருந்து வெளியேற விரும்புவதாக ஐசிசிக்கு தெரிவித்துள்ளது.
இதனால், ஐ.சி.சி இப்போது சுமார் 2.4 பில்லியன் டாலர் மதிப்புள்ள புதிய ஒளிபரப்பாளரைத் தேடி வருகிறது. இது தொடர்பாக சோனி, நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் போன்ற நிறுவனங்களை அணுகியுள்ளது. புதிய ஒளிபரப்பாளர் கிடைக்காவிட்டால், அவர்கள் உரிமைக் கட்டணத்தைக் குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்படலாம்.
கன்னடத்தில் வெளியான ஹாரர் காமெடி "Su From So", பாக்ஸ் ஆபிஸில் எதிர்பாராத வெற்றியை பெற்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. புதுமுகங்களை மட்டுமே கொண்ட இப்படம் ₹100 கோடிக்கும் மேல் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.
இந்த வெற்றிக்குப் பிறகு, Jio Hotstar படத்தின் ஸ்ட்ரீமிங் உரிமையை கைப்பற்றியது. ஆரம்பத்தில், செப்டம்பர் 5 அன்று OTT-யில் வெளியாகும் என அறிவித்து இருந்தாலும் நேற்று திரைப்படம் வெளியாகாததால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர் . ஆனால் தற்போது அதிகாரப்பூர்வமாக செப்டம்பர் 9, 2025 முதல் Hotstar டிஜிட்டல் தளத்தில் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
படத்தை ராஜ் பி. ஷெட்டி (Light Buddha Films) தயாரிக்க ஜே.பி துமிநாட் இயக்கினார். ஷனீல் கவுதம், ஜே. பி. துமிநாட், சந்தியா அரகேரே, பிரகாஷ் துமிநாட், தீபக் ராய் பனாஜே, மைம் ரம்தாஸ் போன்ற நடிகர்கள் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
- இலவச சலுகை இன்றுடன் (மார்ச் 31) முடியவுள்ளது.
- புதிய ரீசாஜ் திட்டங்களை ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது.
ஐபிஎல் தொடரின் 19-வது சீசன் கடந்த 22-ந் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது. கிரிக்கெட் ரசிகர்களைக் கவரும் வகையில் ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் இலவசமாக ஐபிஎல் பார்க்கும் வசதியை பயனர்களுக்காக ஜியோ வழங்கியிருந்தது. இந்தச் சலுகை இன்றுடன் (மார்ச் 31) முடியவுள்ளது.
இதனிடையே இந்தச் சலுகையை நீட்டிப்பது குறித்த எந்தவித அறிவிப்பையும் ஜியோ வெளியிடாததால், இன்றுடன் இச்சலுகை முடிகிறது.
ஜியோ சலுகை முடிந்த நிலையில், பயனர்களுக்கு ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் உள்ள வீடியோக்கள் மற்றும் ஐபிஎல் நேரலையைக் காண வேண்டுமென்றால், புதிய ரீசாஜ் திட்டங்களை அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
அதில், ரூ. 949, ரூ. 195, மற்றும் ரூ. 100 ஆகிய திட்டங்களை ரீசார்ஜ் செய்பவர்களுக்கு ஜியோ ஹாட்ஸ்டார் இலவசமாக வழங்கப்படும்.
ரூ,949 திட்டத்தில் ஐபிஎல் பார்ப்பது மட்டுமில்லாமல் இதில் அன்லிமிடெட் காலிங், தினமும் 2 ஜிபி டேட்டா உடன் இதில் ஹை ஸ்பீட் 4 G டேட்டா வழங்குகிறது. ஆகமொத்தம் இதில் 168 ஜிபி டேட்டா கிடைக்கும். மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்களுக்கு இருக்கும் மற்றும் இதில் ஜியோ டிவி, JioCloud போன்ற நன்மைகள் வழங்குகிறது.
ரூ. 195 திட்டத்தின் வேலிடிட்டி 90 நாட்களுக்கு இருக்கிறது. இந்த திட்டத்தில் 15 ஜிபி யின் மொத்தம் டேட்டா வழங்குகிறது. இதனுடன் இந்த திட்டத்தில் ஜியோ ஹாட்ஸ்டார் மொபைல் சப்ஸ்க்ரிப்சன் வழங்குகிறது. இதேபோல ரூ. 100 திட்டத்தில் 5ஜிபி டேட்டாவும் வழங்கப்படுகிறது. இந்த இரு திட்டங்களிலும் 90 நாள்களுக்கு இலவசமாக ஜியோ ஹாட்ஸ்டாரை காணலாம்.
அதாவது, ஜியோ சிம்கார்டு வைத்திருப்பவர்கள் ரீசார்ஜ் செய்தாலே அதனுடன் இலவசமாக ஐபிஎல் பார்க்கும் வசதியை ஜியோ வழங்கியுள்ளது.
- பசங்க படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார் நடிகர் விமல்.
- விமல் அடுத்ததாக ஜியோ ஹாட்ஸ்டார் வழங்கும் ஒரு புதிய வெப் தொடரில் நடித்துள்ளார்.
பசங்க படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார் நடிகர் விமல். அதைத்தொடர்ந்து பல வெற்றி திரைப்படங்களில் நடித்தார். கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியான சார் மற்றும் போகுமிடம் வெகுதூரமில்லை திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் விமல் அடுத்ததாக ஜியோ ஹாட்ஸ்டார் வழங்கும் ஒரு புதிய வெப் தொடரில் நடித்துள்ளார். இத்தொடருக்கு ஓம் காளி ஜெய் காளி என தலைப்பிட்டுள்ளனர். ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியான விலங்கு வெப் தொடருக்கு பின் விமல் நடிக்கும் வெப் தொடராகும். படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மற்றும் டீசரை ஜியோ ஹாட்ஸ்டாஅர் வெளியிட்டுள்ளது. இத்தொடரில் குவீன்ஸி, புகஸ், கஞ்சா கறுப்பு, பாவ்னி ரெட்டி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
டீசரில் விமல் கடவுள் வேஷம் கட்டி ஆடுவது போன்ற காட்சிகளில் மிரட்டியுள்ளார். இத்தொடரின் மீதுள்ள எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது. இத்தொடர் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.






