என் மலர்tooltip icon

    வழிபாடு

    • திருத்தணி முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம்.
    • திருவரங்கம் நம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி அலங்கார திருமஞ்சனம்

    10-ந்தேதி (செவ்வாய்)

    • விருதுநகர் சுவாமி குதிரை வாகனத்திலும், அம்பாள் சிம்ம வாகனத்திலும் பவனி.

    • சுவாமிமலை முருகப் பெருமான் ஆயிரம் நாமாவளி கொண்ட பூமாலை சூடியருளல்.

    • திருத்தணி முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம்.

    • சமநோக்கு நாள்.

    11-ந்தேதி (புதன்)

    • மதுரை சோமசுந்தரர் வளையல் விற்றருளிய காட்சி, இரவு சுவாமி பட்டாபிஷேகம்.

    • அகோபிலமடம் திருமத் 2-வது பட்டம் அழகிய சிங்கர் திருநட்சத்திர வைபவம்.

    • திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் நரசிம்ம ருக்கு திருமஞ்சனம்.

    • சமநோக்கு நாள்.

    12-ந்தேதி (வியாழன்)

    • திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் ஆவணி மூல தீர்த்தம்.

    • சுவாமிமலை முருகப்பெருமான் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.

    • திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை.

    • திருபெரும்புதூர் மணவாள மாமுனிகள் புறப்பாடு.

    • கீழ்நோக்கு நாள்.

    13-ந்தேதி (வெள்ளி)

    • சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்க பாவாடை தரிசனம்.

    • ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி தங்க பல்லக்கில் புறப்பாடு.

    • திருவில்லிப்புத்தூர் ஆண்டாள் புறப்பாடு.

    • திருத்தணி முருகப்பெருமான் கிளி வாகன சேவை.

    • கீழ்நோக்கு நாள்.

    14-ந்தேதி (சனி)

    • சர்வ ஏகாதசி.

    • திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் மாடவீதி புறப்பாடு.

    • திருவரங்கம் நம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி அலங்கார திருமஞ்சனம்

    • திருமாலிருஞ்சோலை கள்ளழகர், மதுரை கூடலழகர் தலங்களில் சுவாமி புறப்பாடு.

    • மேல்நோக்கு நாள்.

    15-ந்தேதி (ஞாயிறு)

    • முகூர்த்த நாள்.

    • ஓணம் பண்டிகை.

    • மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் சட்ட தேரில் பவனி, இரவு சப்தாவர்ணம்.

    • சாத்தூர் வேங்கடேச பெருமாள் தோளுக்கினியானில் பவனி.

    • மேல்நோக்கு நாள்.

    16-ந்தேதி (திங்கள்)

    • முகூர்த்த நாள்.

    • சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.

    • திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஆண்டாளுக்கு திருமஞ்சனம்.

    • திருத்தணி முருகனுக்கு பால் அபிஷேகம்.

    • மேல்நோக்கு நாள்.

    • விருதுநகர் ஸ்ரீசுவாமி குதிரை வாகனத்திலும், ஸ்ரீஅம்பாள் சிம்ம வாகனத்திலும் பவனி.
    • சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் வெள்ளிப்பாவாடை தரிசனம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு ஆவணி - 25 (செவ்வாய்க்கிழமை)

    பிறை : வளர்பிறை.

    திதி : சப்தமி இரவு 7.10 மணி வரை. பிறகு அஷ்டமி.

    நட்சத்திரம் : அனுஷம் மாலை 5.13 மணி வரை. பிறகு கேட்டை.

    யோகம் : சித்தயோகம்

    ராகுகாலம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    எமகண்டம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    சூலம் : வடக்கு

    நல்ல நேரம் : காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    திருத்தணி, வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகன் கோவில்களில் காலை சிறப்பு அபிஷேகம்

    சுவாமி மலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். திருத்தணி ஸ்ரீமுருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம், ஆராதனை வழிபாடு. விருதுநகர் ஸ்ரீசுவாமி குதிரை வாகனத்திலும், ஸ்ரீஅம்பாள் சிம்ம வாகனத்திலும் பவனி.

    குரங்கணி ஸ்ரீமுத்துமாலையம்மன் பவனி. குலைச் சிறைநாயனார் குருபூஜை. சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் வெள்ளிப்பாவாடை தரிசனம். திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகன் கோவில்களில் காலை சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம் - லாபம்

    ரிஷபம் - ஆர்வம்

    மிதுனம் - செலவு

    கடகம் - உதவி

    சிம்மம் - வரவு

    கன்னி - இன்பம்

    துலாம் - முயற்சி

    விருச்சிகம் - உற்சாகம்

    தனுசு - தனம்

    மகரம் - சிந்தனை

    கும்பம் - பாராட்டு

    மீனம் - நம்பிக்கை

    • இன்று சஷ்டி விரதம்.
    • சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு ஆவணி - 24 (திங்கட்கிழமை)

    பிறை : வளர்பிறை

    திதி : சஷ்டி இரவு 6.26 மணி வரை பிறகு சப்தமி

    நட்சத்திரம் : விசாகம் பிற்பகல் 3.49 மணி வரை பிறகு அனுஷம்

    யோகம் : மரண, சித்தயோகம்

    ராகுகாலம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    எமகண்டம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    சூலம் : கிழக்கு

    நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை

    திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட் நகர் சிவன் கோவில்களில் சிறப்பு சோமவார அபிஷேகம்

    இன்று சஷ்டி விரதம். மதுரை ஸ்ரீ நவநீத கிருஷ்ண சுவாமி வெள்ளி தோளுக்கினியானில் பவனி. சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.

    மதுரை ஸ்ரீ சோமசுந்தரப் பெருமான் உலவாய்க் கோட்டையருளிய திருவிளையாடல் நந்தீஸ்வரர்யாளளி வாகனத்தில் புறப்பாடு. ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் புறப்பாடு. திருப்பரங்குன்றம் ஸ்ரீ ஆண்டவர் புறப்பாடு.

    கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்குத் திருமஞ்சனம். திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட் நகர், திருவிடைமருதூர் கோவில்களில் காலை சிறப்பு சோமவார அபிஷேகம், அலங்காரம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம் - உழைப்பு

    ரிஷபம் - மகிழ்ச்சி

    மிதுனம் - சாந்தம்

    கடகம் - சிந்தனை

    சிம்மம் - மேன்மை

    கன்னி - லாபம்

    துலாம் - இன்பம்

    விருச்சிகம் - பயிற்சி

    தனுசு - லாபம்

    மகரம் - உவகை

    கும்பம் - சிறப்பு

    மீனம் - ஓய்வு

    • திருவண்ணாமலை விநாயகரை வழிபட துன்பங்கள் தீரும்.
    • பிள்ளையார்பட்டி கற்பக விநாயகரை வணங்கினால் தீட்சையும் ஞானமும் கிடைக்கும்.

    தம்பியாகிய முருகப் பெருமானுக்கு இருப்பதுபோல, அவரது அண்ணன் விநாயகருக்கும் அறுபடை வீடுகள் உள்ளது. அந்த அறுபடை வீடுகளில் வழிபட்டால் கிடைக்கும் பலன்கள் என்ன தெரியுமா?

    திருவண்ணாமலை, விருத்தாசலம், திருக்கடவூர், மதுரை, பிள்ளையார்பட்டி மற்றும் திருநாரையூர் ஆகியவையே விநாயகருக்கான அறுபடை வீடுகள் ஆகும்.

    விநாயகரின் அறுபடை வீடுகளை வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள்

    முதல் படைவீடு-திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையில் எழுந்தருளியுள்ள விநாயகரின் பெயர் 'அல்லல் போம் விநாயகர்'. இந்த விநாயகரைக் குறித்து போற்றப்படும் பாடலே 'அல்லல் போம் வல்வினை போம், அன்னை வயிற்றில் பிறந்த தொல்லை போம்' என்பது. இவரை வழிபட அல்லல்கள் தீரும்.

    இரண்டாம் படைவீடு-விருத்தாசலம்:

    இங்குள்ள ஆலயத்தில் எழுந்தருளியுள்ள கணபதிக்கு ஆழத்துப் பிள்ளையார் என பெயர். பெயருக்கேற்ப ஆழத்தில் சன்னதி கொண்டுள்ளார். இந்த விநாயகரைத் துதித்தால் செல்வமும், கல்வியும் மற்றும் சீரான வாழ்வும் நம்மை வந்து சேரும்.

    மூன்றாம் படைவீடு-திருக்கடவூர்:

    எந்தவிதமான வாழ்க்கை வசதிகள் நமக்கு அமையப் பெற்றிருந்தாலும் அதை அடைய நமக்கு மிக முக்கியத் தேவை நீண்ட ஆயுள். இந்த ஆயுளை அள்ளி வழங்குகிறவராக திருக்கடவூர் கள்ளவாரணப் பிள்ளையார் விளங்குகிறார்.

    நான்காம் படைவீடு-மதுரை:

    மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் மீனாட்சி அம்மன் சன்னதிக்குள் நுழையும் முன் சித்தி விநாயகரின் தரிசனத்தைப் பெறலாம். நாம் விரும்புகிற காரியங்களை நிறைவேற்றித் தருபவராக உள்ளார். மாணிக்கவாசகர் பாண்டிய மன்னருக்காக குதிரை வாங்கப் புறப்படுகையில் இந்த சித்தி விநாயகரையே தரிசித்துச் சென்றதாக திருவிளையாடல் புராணம் தெரிவிக்கிறது.

    ஐந்தாம் படைவீடு-பிள்ளையார்பட்டி:

    அனைத்துப் பேறுகளும் நம்மை வந்தடைந்தாலும் ஞானம் இல்லையேல் அந்தப் பேறுகளால் ஒரு பலனும் இல்லை. அந்த ஞானத்தை வழங்குபவராக இவர் அருள்பாலிக்கிறார். இவர் சிவலிங்கத்தைக் கையில் தாங்கி அருள்புரிகிறார். சிவலிங்கத்தை கையில் ஏந்தி சிவபூஜை செய்பவராகத் திகழும் இந்த கற்பக விநாயகரை வணங்கினால் தீட்சையும் ஞானமும் கிடைக்கும்.

    ஆறாம் படைவீடு-திருநாரையூர்:

    திருநாரையூரில் பொள்ளாப் பிள்ளையாராக அருள்பாலிக்கிறார். அப்பரும் சம்பந்தரும் பாடிய இத்தலத்தில் இவரை வழிபட புதிய முயற்சிகளில் கை மேல் வெற்றி பலன் கிடைக்கும்.

    • விநாயகருக்கு பல்வேறு வடிவங்கள் இருந்தாலும், அவர் 12 அவதாரங்களை எடுத்ததாக விநாயக புராணம் தெரிவிக்கிறது.
    • முந்திய மயூரேச விநாயகர், பிந்திய மயூரேச விநாயகர்

    விநாயகருக்கு பல்வேறு வடிவங்கள் இருந்தாலும், அவர் 12 அவதாரங்களை எடுத்ததாக விநாயக புராணம் தெரிவிக்கிறது.

    அந்த அவதாரங்கள் இங்கே...

    1. வக்ரதுண்ட விநாயகர்

    2. சிந்தாமணி விநாயகர்

    3. கஜானனர்

    4. விக்நராஜர்

    5. முந்திய மயூரேச விநாயகர்

    6. பிந்திய மயூரேச விநாயகர்

    7. தூமகேது

    8. கணேசர்

    9. கணபதி

    10. மஹோத்கடர்

    11. டுண்டி விநாயகர்

    12. வல்லப விநாயகர்

    • வாஞ்சா கல்ப கணபதி ஹோமம் என்பது விரும்பியதை கொடுப்பதில் முன்னணியில் இருக்கக்கூடிய ஹோமம் ஆகும்.
    • பசு நெய் கொண்டு இந்த ஹோமம் செய்தால், வீட்டில் லட்சுமி தேவி நிரந்தர வாசம் செய்வாள்

    முழு முதல் கடவுளாக கொண்டாடப்படக்கூடியவர் விநாயகப்பெருமான். எந்த ஒரு பூஜையாக இருந்தாலும், விரதமாக இருந்தாலும், யாகமாக இருந்தாலும், விநாயகரை வணங்கிய பிறகே தொடங்க வேண்டும் என்பது ஐதீகம். விஷ்ணு பகவானை வழிபடுவதை வைணவம்' என்றும், சிவபெருமானை வழிபடுவதை 'சைவம்' என்றும் சொல்வது போல, விநாயகரை பிரதான தெய்வமாக வழிபாடு செய்வதை 'காணாபத்யம்' என்று அழைப்பார்கள். ஒரு சமயம் சிவபெருமானும், பார்வதியும் திருக்கயிலாயத்தில் வீற்றிருந்தனர். அப்போது அங்கு பிரணவ வடிவிலான ஒரு உருவத்தை பார்வதியும், பரமேஸ்வரனும் நோக்க, அதில் இருந்து தோன்றியவர் விநாயகர் என்று சொல்லப்படுகிறது.

    ஒரு முறை பார்வதி நீராடச் செல்லும் பொழுது, தன் உடலில் இருந்து பரிமளங்களை (வாசனை துகள்கள்) உருட்டி வைத்ததாகவும், அதில் இருந்து தோன்றியவரே விநாயகர் என்றும் சொல்கிறார்கள். அப்படி உருவான விநாயகரை பார்வதி தனக்கு காவலாக வைத்து விட்டு நீராடச் சென்றார். அந்த நேரம் பார்த்து கயிலாயத்திற்குள் நுழைந்த சிவபெருமானை, விநாயகர் தடுத்து நிறுத்தினார். இதனால் சிவனுக்கும் விநாயகருக்கும் சண்டை உருவானது. இதில் தன் சூலாயுதத்தால் விநாயகரின் தலையை கொய்தார், சிவபெருமான். அப்போது நீராடிவிட்டு வந்த பார்வதி, நடந்ததை புரிந்து கொண்டு, விநாயகரைப் பற்றி சிவபெருமானிடம் கூறினாள். இதையடுத்து வடதிசையில் தலைவைத்து படுத்திருந்த வெள்ளை யானையின் தலையை எடுத்து வந்து விநாயகரின் உடலில் பொருத்தி அவருக்கு ஈசன் உயிர் கொடுத்தார் என்றும் கூறுவாார்கள்.

    விநாயகப் பெருமான் வழிபாடுகளில் மிக முக்கியமானதாகக் கருதப்படுவது, விநாயகர் சதுரவர்த்தி தர்ப்பணம், அஷ்ட திரவிய ஹோமம், வாஞ்சா கல்ப கணபதி ஹோமம் ஆகியவை. விநாயகர் விரதங்களில், சங்கடகர சதுர்த்தி பிரதானமாகத் திகழ்கிறது. அஷ்ட திரவியங்கள் என்பது கரும்பு, அவல், கொழுக்கட்டை, தேங்காய், எள், நெல்பொரி, சத்து மாவு, வாழைப்பழம் ஆகியவையாகும். அஷ்ட திரவிய ஹோமத்தில் கொழுக்கட்டையை முழுவதாகவும், அவல், பொரி, மாவு ஆகியவற்றை கைப்பிடி அளவிலும், கரும்பை கணு அளவிலும், தேங்காயை பிறை வடிவாகவும், எள்ளை உள்ளங்கை சுருங்கிய அளவும் எடுத்துக்கொண்டு, வாழைப்பழத்தை சிறியதாக இருந்தால் முழு அளவிலும், பெரியதாக இருந்தால் துண்டாக நறுக்கியும் சேர்க்கலாம். இந்த பொருட்களை எல்லாம் தேன், பால், நெய் ஆகியவற்றுடன் கலந்து, தனித்தனியாக ஹோமம் செய்வது விசேஷமானதாகும்.

    வாஞ்சா கல்ப கணபதி ஹோமம் என்பது விரும்பியதை கொடுப்பதில் முன்னணியில் இருக்கக்கூடிய ஹோமம் ஆகும். இந்த ஹோமமானது, நினைத்த காரியங்களை நிறைவேற்றிக் கொடுப்பதாக கூறுவார்கள். ஆனால் ஸ்ரீவித்யா மந்திர உபதேசம், கணபதி மந்திர ஜப சித்தி இல்லாமல் செய்வது பிரயோஜனம் இல்லை. குரு முகமாக கட்டாயம் இந்த மந்திரங்களை உபதேசமாக பெற வேண்டும். புரட்டாசி, ஐப்பசி மாத சுக்லபட்ச நவமி அன்று, ஜபத் துடன் கூடிய ஹோமத்தை செய்வது மிக விசேஷமானதாகும். இதை பாராயணம் செய்வது லட்சுமி குபேர அருளைக் கொடுக்கும். ஐந்து முறை பாராய ணம் செய்தால் உலகம் வசமாகும். 10 முறை பாராயணம் செய்தால் சர்வலோக வசீகரம் உண்டாகும். ஆனால் மந்திர சித்தி என்பது இதில் முக்கியமானதாக கூறப்படுகிறது.

    பசு நெய் கொண்டு இந்த ஹோமம் செய்தால், வீட்டில் லட்சுமி தேவி நிரந்தர வாசம் செய்வாள். அன்னத்தால் ஆகுதி கொடுக்க அன்ன விருத்தியும், தேனால் ஆகுதி கொடுக்க தங்கமும் சேரும். பசும்பாலால் ஆகுதி கொடுக்க பசுக்கள் விருத்தி அடையும். பசுந்தயிரால் ஆகுதி கொடுக்க எல்லா பாக்கியங்களும் தேடி வரும். எள் கலந்த அரிசியால் ஹோமம் செய்ய வறுமை நீங்கும், கடன் தொல்லை விலகும். தாமரை பூவும், பசு நெய்யும் கொண்டு ஹோமம் செய்ய அசையாச் சொத்துக்கள் தேடி வரும். அரசு சமித்து கொண்டு ஹோமம் செய்ய ஜன வசீகரம் உண்டாகும். நொச்சி சமித்தால் ஹோமம் செய்ய வறட்சி விலகும். அருகம்புல்லால் ஹோமம் செய்ய எல்லாவித வியாதிகளும் விலகிச் செல்லும். நாயுருவியால் ஹோமம் செய்ய நவக்கிரகங்களும் வசமாகும். வெல்லம், வாழைப்பழம் மற்றும் பாயசத்தால் ஹோமம் செய்ய நியாயமாக நமக்கு கிடைக்க வேண்டிய செல்வங்கள் தேடி வரும்.

    முக்கனியில் தேன் சேர்த்து ஹோமம் செய்ய சகலமும் வசீகரமாகும். தடைபட்ட திருமணங்கள் நடக்கும். தேவ தர்ப்பணம், ரிஷி தர்ப்பணம் போல் மகா கணபதியின் சதுரவர்த்தி தர்ப்பணம் மிக விசேஷமானதாகும். கணபதி மூல மந்திரத்தை கொண்டும் விசேஷ மந்திரங்களாலும் 444 முறை நீர் விடுதல் விசேஷமானதாகும்.

    வாசனை கலந்த சுத்தமான தண்ணீரும், பஞ்சபாத்திரம் மற்றும் அரைத்த சந்தனம், நல்ல குங்குமம், ஒரு பித்தளை தாம்பாளம் போன்றவற்றை கொண்டு விநாயகப் பெருமானுக்கு இந்த தர்ப்பணத்தை செய்வார்கள். சிலர் கணபதி எந்திரத்தையும் சிலர், கணபதி விக்கிரகத்தையும் வைத்து செய்வதும் உண்டு. மாசி மாதத்தில் வரும் கிருஷ்ண பட்சம் அன்று, சங்கடஹர சதுர்த்தி விரதத்தை ஆரம்பிப்பார்கள்.

    ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தியில் இந்த விரதத்தை தொடர்ந்து கடைப்பிடித்து வருவார்கள். இதில் ஆவணி மாதம் வளர்பிறையில் வரக்கூடிய சதுர்த்தி அன்று தான் விநாயகர் அவதரித்ததாக கூறப்படுகிறது. இந்த நாளில் கடைப்பிடிக்கும் விநாயகர் விரதத்தால் (விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாடுவதால்), வருடம் முழுக்க விரதம் இருந்த பலனும், ஆயிரம் கணபதி ஹோமம் செய்த பலனும் கிடைக்கும். அன்றைய தினம் காலை எழுந்து களிமண்ணால் செய்த விநாயகரை பெரும்பாலும் பூஜிப்பார்கள். ஆனால் களிமண்ணால் செய்த விநாயகரை பூஜித்த மறுநாள், புனர் பூஜை செய்து விட்டு நீரில் கரைக்க வேண்டும்.

    -'ஜோதிட சிம்மம்'

    சுவாமி கண்ணன் பட்டாச்சாரியா.

    • ஓம் ருத்ரகணபதயே நம: த்ரோண புஷ்பம் ஸமர்ப்பயாமி (தும்பைப்பூ)
    • ஓம் காமிதார்த்தப்ரத கணபதயே நம: கேதகீ புஷ்பம் ஸமர்ப்பயாமி (தாழம்பூ)

    விநாயகர் சதுர்த்தி அன்று, 21 வகையான புஷ்பத்தினால் அல்லது அட்சதையால் விநாயகருக்கு அர்ச்சனை செய்து வழிபட்டால், நன்மைகள் பலவாக நமக்கும் கிடைக்கப்பெறும்.

    * ஓம் பஞ்சாஸ்ய கணபதயே நம: புந்நாக புஷ்பம் ஸமர்ப்ப யாமி (புன்னை மலர்)

    * ஓம் மஹாகணபதயே நம: மந்தார புஷ்பம் ஸமர்ப்பயாமி (மந்தாரை மலர்)

    * ஓம் தீரகணபதயே நம: தாடிமீ புஷ்பம் ஸமர்ப்பயாமி (மாதுளம் பூ)

    * ஓம் விஷ்வக் ஸேன கணபதயே நம: வகுளபுஷ்பம் ஸமர்ப்பயாமி (மகிழம் பூ)

    * ஓம் ஆமோத கணபதயே நம: அம்ருணாள புஷ் பம் ஸமர்ப்பயாமி (வெட்டிவேர்)

    * ஓம் ப்ரமத கணபதயே நம: பாடலீ புஷ்பம் ஸமர்ப்பயாமி (பாதிரி பூ)

    * ஓம் ருத்ரகணபதயே நம: த்ரோண புஷ்பம் ஸமர்ப்பயாமி (தும்பைப்பூ)

    * ஓம் வித்யா கணபதயே நம: துர்த்தூர புஷ்பம் ஸமர்ப்பயாமி (ஊமத்தம் பூ)

    * ஓம் விக்ன கணபதயே நம: சம்பக புஷ்பம் ஸமர்ப்பயாமி (செண்பகப்பூ)

    * ஓம் துரித கணபதயே நம: ரஸால புஷ்பம் ஸமர்ப்பயாமி (மாம்பூ)

    * ஓம் காமிதார்த்தப்ரத கணபதயே நம: கேதகீ புஷ்பம் ஸமர்ப்பயாமி (தாழம்பூ)

    * ஓம் ஸம்மோஹ கணபதயே நம: மாதவீ புஷ்பம் ஸமர்ப்ப யாமி (முல்லைப்பூ)

    * ஓம் விஷ்ணு கணபதயே நம: சம்யாக புஷ்பம் ஸமர்ப்பயாமி (கொன்றைப்பூ)

    * ஓம் ஈச'கணபதயே நம: அர்க்க புஷ்பம் ஸமர்ப்பயாமி (எருக்கம் பூ)

    * ஓம் கஜாஸ்ய கணபதயே நம: கல்ஹார புஷ்பம் ஸமர்ப் பயாமி (செங்கழுநீர் பூ)

    * ஓம் ஸர்வஸித்தி கணபதயே நம: ஸேவந்திகா புஷ்பம் ஸமர்ப்பயாமி (செவ்வந்திப்பூ)

    * ஓம் வீர கணபதயே நம: பில்வ புஷ்பம் ஸமர்ப்பயாமி (வில்வம்)

    * ஓம் கந்தர்ப்ப கணபதயே நம: கரவீர புஷ்பம் ஸமர்ப்பயாமி (அரளிப்பூ)

    * ஓம் உச்சிஷ்ட கணபதயே நம: குந்த புஷ்பம் ஸமர்ப்பயாமி (முல்லைப்பூ)

    * ஓம் ப்ரஹ்ம கணபதயே நம: பாரிஜாத புஷ்பம் ஸமர்ப்பயாமி (பவழமல்லிப்பூ)

    * ஓம் ஜ்ஞான கணபதயே நம: ஜாதீ புஷ்பம் ஸமர்ப்பயாமி (ஜாதிமல்லிப்பூ)

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சிவபெருமான் தேர் அச்சு முறிந்து தடை ஏற்பட்டது.
    • ஈசன் தன்னைப் போல் மூன்று கண்களும், சடையும் உடைய தேங்காயை கணபதிக்கு படைத்து அருளினார்.

    வித்யுன்மாலி, தாருகாட்சன், கமலாட்சன் ஆகிய அசுரர்களையும், அவர்களின் கோட்டைகளையும் சிவபெருமான் அழிக்கப் புறப்பட்டார். அப்போது, அவருடைய தேர் அச்சு முறிந்து தடை ஏற்பட்டது.

    விநாயகரை வணங்காமல் சென்றதால் தான் இந்தத் தடை என்பதை உணர்ந்த சிவபெருமான், உடனே பிள்ளையாரை நினைத்து வணங்கினார். மறுகணம் அங்கு தோன்றிய கணபதிக்கு, உகந்த காணிக்கையைத் தருவதாகச் சொன்னார் சிவனார். அப்போது, 'முக்கண்ணனையே தனக்கு காணிக்கையாகத் தர வேண்டும்' என்றார் கணபதி.

    எனவே ஈசன், தன்னைப் போல் மூன்று கண்களும், சடையும் உடைய தேங்காயை கணபதிக்கு படைத்து அருளினார். அன்று முதல், தடைகள் நீங்கிட விநாயகருக்குத் தேங்காய் உடைக்கும் வழக்கம் ஏற்பட்டது.

    • மண்ணில் பிடித்து வைத்த விநாயகரை வழிபட நற்பதவி கிட்டும்.
    • உப்பு விநாயகரை வழிபட்டால் எதிரிகள் விலகுவர்.

    விக்கிரகங்களாக மட்டும்தான் விநாயகரை வழிபட வேண்டும் என்பதில்லை.

    * மண்ணில் பிடித்து வைத்த விநாயகரை வழிபட நற்பதவி கிட்டும்.

    * புற்று மண்ணில் செய்த விநாயகரை வழிபட்டால் லாபம் பெருகும்.

    * வெல்லத்தால் செய்த விநாயகரை வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.

    * உப்பு விநாயகரை வழிபட்டால் எதிரிகள் விலகுவர்.

    * வெள்ளெருக்கு விநாயகரை வழிபட செல்வத்தை அள்ளிக்கொடுப்பார்.

    * கல் விநாயகரை வழிபட்டால் சகல நலன்களும் கிடைக்கும்.

    * மாவினால் செய்த விநாயகரை வழிபட்டால் அனைத்து காரியங்களிலும் வெற்றி வந்துசேரும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • விநாயகரை பிரம்மச்சாரி என்று சொல்வார்கள்.
    • மணக்குள விநாயகர் ஆலயத்தில் சித்தி, புத்தி தேவியருடன் திருமண கோலத்தில் விநாயகர் அருள்புரிகிறார்.

    பொதுவாக விநாயகரை பிரம்மச்சாரி என்று சொல்வார்கள்.அதே நேரம் சித்தி, புத்தி மற்றும் வல்லபை ஆகியோரை விநாயகரின் தேவியராகக் குறிப்பிடுகிறது, விநாயக புராணம்.

    புதுவையில் உள்ள மணக்குள விநாயகர் ஆலயத்தில் சித்தி, புத்தி தேவியருடன் திருமண கோலத்தில் விநாயகர் அருள்புரிகிறார்.இவர்கள் மட்டுமல்லாமல் மோதை, பிரபோதை, கமலை, சுந்தரி, மனோரமை, மல்கலை, கேசினி, காந்தை, சாருகாசை, சுமந்தினை, நந்தினி, காமதை ஆகியோரும் விநாயக ரின் தேவிகளாகத் திகழ்வதாக ஞானநூல்கள் தெரிவிக்கின்றன.

    • சர்வ ரட்சகரான விநாயகர் அண்டத்தின் உள்ளே எங்கும் பூரணமாய் நிறைந்துள்ளார்.
    • ஒவ்வொரு படைப்பும் பூரணத்தை போல இனிமையானதாக கருதி, நாம் இனிய செயல்களை செய்ய வேண்டும்.

    பிள்ளையாருக்கு முதன்முதலில் மோதகம் படைத்தது, வசிஷ்ட முனிவரின் மனைவி அருந்ததி என்று கூறப்படுகிறது.

    சர்வ ரட்சகரான விநாயகர் அண்டத்தின் உள்ளே எங்கும் பூரணமாய் நிறைந்துள்ளார். அருந்ததி அண்டத்தை உணர்த்த, மாவினால் 'செப்பு' என்ற மேல் பகுதியைச் செய்தாள். அண்டத்தின் உள்ளே பூரணமாய் நிறைந்திருக்கும் பிள்ளையாரைக் குறிக்கும் வகையில் இனிப்பான பூரணத்தை, மாவுக்குள் வைத்தாள். அதுவே, மோதகம் என்னும் கொழுக்கட்டை.

    இது தவிர உலகமே மோதகமாகவும், இங்குள்ள ஒவ்வொரு படைப்பும் பூரணத்தைப் போல இனிமையானதாகவும் கருதி, நாம் இனிய செயல்களை செய்ய வேண்டும் என்பதை இறைவன் நமக்கு உணர்த்துகிறார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • விநாயகரே முழு முதல் கடவுள் என்பதாலும், அவரே கணங்களின் அதிபதி கொண்டாடப்படுகிறது.
    • விக்கினங்களை அகற்றுவதால் 'விக்னேஸ்வரர்' என்று பெயர்.

    விநாயகரே முழு முதல் கடவுள் என்பதாலும், அவரே கணங்களின் அதிபதி கொண்டாடப்படுகிறது.

    'கணபதி' என்ற சொல்லுக்கு 'தேவகணங்களின் தலைவன்' என்று பொருள். 'க' என்பது ஞானநெறியில் ஆன்மா எழுவதையும், 'ண' என்பது மோட்சம் பெறுவதையும், 'பதி' என்பது ஞான நெறியில் திளைத்து பரம்பொருளை அடைதலையும் குறிக்கும்.

    மேலும் 'மனோவாக்கினை கடந்த தலைவன்' என்றும் இதற்கு பொருள் கொள்ளலாம். 'தனக்கு மேல் தலைவன் இல்லாதவர்' என்பதே விநாயகர் என்ற பெயருக்கு பொருள். விக்கினங்களை அகற்றுவதால் 'விக்னேஸ்வரர்' என்று பெயர். இப்படி விநாயகருக்கு எண்ணற்ற பெயர்கள் உள்ளன.

    ×