என் மலர்
வழிபாடு
- சப்த ரிஷிகளில் முக்கியமானவர் பிருகு முனிவர்.
- மகாலட்சுமியை பூஜிப்பவர்களுக்கு தரித்திரம் விலகும்.
சப்த ரிஷிகளில் முக்கியமானவர், பிருகு முனிவர். ஒரு முறை 'மும்மூர்த்திகளில் யார் மிகச் சிறந்தவர்?' என்ற விவாதம் தேவர்களுக்கு இடையே ஏற்பட்டது. அப்போது தேவர்கள் அனைவரும் இதுபற்றி பிருகு முனிவரிடம் கேட்டனர். அவரோ நேராக பிரம்மலோகம் சென்றார்.

அங்கிருந்து பிரம்மனை நோக்கி, "நீர் ஒரு பொய்யர். ஈசனின் திருமுடியை கண்டதாக பொய் கூறினீரே" என்று பலவிதமாக கேலி பேசினார். அதைக் கேட்டு பிரம்மன் வெகுண்டு எழ, அவரது கோபத்தை தாங்க முடியாமல் அங்கிருந்து கயிலாயம் சென்றார், பிருகு முனிவர்.
கயிலாயத்தில் சிவபெருமானை சந்தித்த அவர், "உன்னை எல்லோரும் உலகிற்கெல்லாம் படியளக்கும் ஈசன் என்கிறார்கள். ஆனால் நீயோ பார்வதி தேவியின் சக்திக்கு உட்பட்டவர்" என்றார். இதனால் கோபம் கொண்ட சிவபெருமான், தன்னுடைய நெற்றிக் கண்ணை திறக்க, அங்கிருந்தும் தப்பித்து வைகுண்டம் வந்தடைந்தார், பிருகு முனிவர். அங்கு விஷ்ணு யோக நித்திரையில் இருந்தார்.

அதைக் கண்ட பிருகு முனிவர், "உன் இல்லத்திற்கு வந்த (வைகுண்டத்திற்கு) விருந்தினரை கவனிக்காமல் இப்படி தூங்குவது சரியா? நீ இப்படி தூங்கிக் கொண்டிருந்தால் உலகத்தை எப்படி பரிபாலனம் செய்ய முடியும்?" எனக் கூறி மகாவிஷ்ணுவின் மார்பில் உதைத்தார்.
இதைக் கண்டு எழுந்த மகாவிஷ்ணு, "நீங்கள் பெரிய முனிவர். நான் உங்களுக்கு தகுந்த மரியாதை அளிக்க தவறிவிட்டேன். என் மார்பில் உதைத்ததால், உங்கள் கால் வலிக்குமே" என்று கூறி, பிருகு முனிவரின் காலை பிடித்துவிட்டார்.
இந்த சம்பவத்திற்கு பின்னர் தேவலோகம் சென்ற பிருகு முனிவர், அங்கிருந்த தேவர்களிடம், "மும்மூர்த்திகளில் மகாவிஷ்ணுவே உயர்ந்தவர். நான் காலால் உதைத்த போதிலும், மிகப் பொறுமையாக அந்த பிரச்சினையை கையாண்டதால் அவரே உயர்ந்தவர்" எனக் கூறினார். (இதில் பிருகு முனிவரின் காலில் ஒரு கண் இருந்ததாகவும், அந்தக் காலை பிடித்து விடுவதுபோல், அந்தக் கண்ணை மகாவிஷ்ணு பிடுங்கி விட்டதாகவும் ஒரு சிலர் சொல்வர்).
அதே நேரத்தில் மகாவிஷ்ணுவின் மார்பில் மகாலட்சுமி வசிப்பதால், மகாலட்சுமி உதைத்த தோஷம் பிருகு முனிவருக்கு ஏற்பட்டது.
இதையடுத்து பிருகு முனிவர், மகாலட்சுமி தாயாரிடம் "நான் செய்த இந்த பெரும் பாவத்தை பொறுத்து, என்னை மன்னித்து அருள் செய்ய வேண்டும்" என்று வேண்டினார். அதற்கு மகாலட்சுமி, "நான் உனக்கு குழந்தையாகப் பிறந்து, என் கால்களால் உன்னை உதைப்பேன். அப்போது உன் பாவம் நீங்கும், கவலைப்படாதே" என்று கூறினார்.
அதன்படியே மகாலட்சுமி தாயார், பிருகு முனிவருக்கு மகளாக பிறந்ததாகவும் புராணங்கள் சொல்கின்றன.

மகாலட்சுமி அவதாரம்
மகாலட்சுமி, பாற்கடலில் இருந்து தோன்றியவர். அமிர்தம் பெறுவதற்காக தேவர்களும், அசுரர்களும் திருப்பாற்கடலை கடைவது என்று முடிவெடுத்தனர். கிடைக்கும் அமிர்தத்தை இருவரும் சமமாக பங்கிட்டுக் கொள்வது என்றும் தீர்மானித்தனர்.
பாற்கடலை கடைவதற்கு மந்தார மலையை மத்தாகவும், வாசுகி பாம்பை கயிறாகவும் பயன்படுத்தினர். வாசுகி பாம்பின் தலை பக்கத்தை அசுரர்களும், வால் பக்கத்தை தேவர்களும் பிடித்துக் கொண்டனர்.
ஆனால் மந்தார மலை, பாற்கடலில் நிற்காமல் சரியத் தொடங்கியது. அப்போது மகாவிஷ்ணு கூர்ம அவதாரம் எடுத்து மலையை தன்னுடைய முதுகில் தாங்கினார்.
அப்படி மந்தார மலையை கடையும் போது முதலில் வெளிவந்தது, ஆலகாலம் என்னும் விஷம். இந்த விஷத்தின் உஷ்ணத்தை தாங்க முடியாமல் அனைத்து ஜீவராசிகளும் தவித்தன. அந்த விஷத்தை, சிவபெருமான் உண்டார். அந்த விஷம் அவரது கழுத்தில் நின்றதால், அவர் 'நீலகண்டர்' ஆனார்.
இதற்கு பின் ஐராவதம் என்ற வெள்ளை யானை வெளிவந்தது. அதை இந்திரன் எடுத்துக் கொண்டான். ஐராவதத்திற்கு பின்னர் சந்திரன், காமதேனு, கற்பகத் தரு, மகாலட்சுமி, அமிர்த கலசத்துடன் தன்வந்திரி இப்படி ஒவ்வொன்றாக வெளிவர ஆரம்பித்தது.
அப்படி வெளிவந்த மகாலட்சுமி, மகாவிஷ்ணுவின் இதயத்தில் சரணடைந்தாள். இந்த மகாலட்சுமி சகலவிதமான செல்வத்திற்கும் அதிதேவதையாக விளங்கினாள்.
இந்த மகாலட்சுமியை யார் பூஜிக்கிறார்களோ, அவர்களுக்கு தரித்திரங்கள் விலகும். ஆதிசங்கரர், ஒரு ஏழையின் வறுமையைப் போக்குவதற்காக மகாலட்சுமியின் மீது கனகதாரா துதியை பாடியதன் காரணமாக, அந்த வீட்டின் மீது நெல்லிக்கனி வடிவில் தங்க மழை பொழிந்தது.

மகாலட்சுமியை வழிபட பொதுவாக செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகள் உகந்தது. இந்த நாட்களில் திருவிளக்கு பூஜை செய்வதால், மகாலட்சுமியின் அருளைப் பெறலாம். வாரம் தோறும் வெள்ளிக்கிழமை வந்தாலும், ஆடி வெள்ளிக்கிழமைகளும், தை வெள்ளிக்கிழமைகளும் சிறப்புக்குரியவையாக பார்க்கப்படுகிறது.
இந்த நாட்களில் திருவிளக்குப் பூஜை செய்து மகாலட்சுமியை வணங்கினால், நிறைந்த செல்வமும், மாங்கல்ய பாக்கியமும் கிடைக்கும். மேலும் கடன் பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும். மகாலட்சுமியை, 'ஷோடச லட்சுமி' என்று 16 வகையான லட்சுமிகளாக வழிபடும் வழக்கமும் உள்ளது.
தீபம், பூரண கும்பம், மஞ்சள், குங்குமம், ஸ்ரீ சூரணம், சந்தனம், வாழை, மாவிலை தோரணம், வெற்றிலை, கோலம், ஸ்வஸ்திகா சின்னம், யானை, கண்ணாடி ஆகியவற்றில் மகாலட்சுமி வாசம் செய்வதாக சொல்லப்படுகிறது.
திருவிளக்குப் பூஜை செய்வதற்கு வாழை இலை, வெற்றிலை, பாக்கு, பழம், அவல், பொரி, கற்கண்டு, திருநீறு, குங்குமம், சந்தனம், உதிரிப்பூ, ஊதுபத்தி, துளசி, கற்பூரம், கலச நீர், அரிசி, மஞ்சள், எண்ணெய், திரி, விளக்கு போன்ற பொருட்கள் தேவைப்படும்.
மகாலட்சுமியை வழிபாடு செய்வதால், ராஜ பதவி, மக்கட்செல்வம், சுற்றம், பொன், நவரத்தினங்கள், நெல் முதலான தானியங்கள், பல்லக்கு, பணியாட்கள் ஆகிய அஷ்ட ஐஸ்வரியங்கள் கிடைக்கப்பெறும் என்பது ஐதீகம்.
- 24-ந்தேதி சங்கடஹர சதுர்த்தி
- 28-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) தேய்பிறை அஷ்டமி
23-ந்தேதி (செவ்வாய்)
* குரங்கணி முத்துமாலை அம்மன் கோவிலில் நாராயண தீர்த்தம்.
* வடமதுரை சவுந்திரராஜர் வசந்த உற்சவம்.
* சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.
* மேல்நோக்கு நாள்.
24-ந்தேதி (புதன்)
* சங்கடகர சதுர்த்தி.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்மருக்கு திருமஞ்சனம்.
* திருத்தணி முருகப்பெருமா னுக்கு பால் அபிஷேகம்.
25-ந் தேதி (வியாழன்)
* வடமதுரை சவுந்திரராஜர் குதிரை வாகனத்தில் விடை யாற்று உற்சவம்.
* சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
* திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை.
* கீழ்நோக்கு நாள்.
26-ந்தேதி (வெள்ளி)
* சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்.
* திருத்தணி முருகன் கிளி வாகன சேவை.
* திருப்பதி ஏழுமலையான் மைசூர் மண்டபம் எழுந்தருளல்.
* மேல்நோக்கு நாள்.
27-ந்தேதி (சனி)
* திருவள்ளூர் வீரராகவப்பெருமாள், காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள், மன்னார்குடி ராஜகோபால சுவாமி ஆகிய திருத்தலங்களில் அலங்கார திருமஞ்சனம்.
* திருவரங்கம் நம்பெருமாள். தேவகோட்டை ரங்கநாதர் புறப் பாடு கண்டருளல்.
* சமநோக்கு நாள்.
28-ந்தேதி (ஞாயிறு)
* தேய்பிறை அஷ்டமி.
* திருநெல்வேலி காந்திமதி அம்மன் கோவிலில் ஆடிப்பூர உற்சவம் ஆரம்பம்.
* ஆலயங்களில் பைரவருக்கு சிறப்பு அபிஷேகம்.
* சமநோக்கு நாள்.
29-ந்தேதி (திங்கள்)
* திருப்போரூர் முருகப்பெருமான் கோவிலில் பால் அபிஷேகம்.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.
* கீழ்நோக்கு நாள்.
- சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் வெள்ளிப்பாவாடை தரிசனம்.
- வடமதுரை சவுந்திரராஜப் பெருமாள் வசந்த உற்சவம்.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு, ஆடி 7 (செவ்வாய்க்கிழமை)
பிறை: தேய்பிறை.
திதி: துவிதியை நண்பகல் 1.13 மணி வரை. பிறகு திருதியை.
நட்சத்திரம்: அவிட்டம் இரவு 11.47 மணி வரை. பிறகு சதயம்.
யோகம்: சித்த, மரணயோகம்
ராகுகாலம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
எமகண்டம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
சூலம்: வடக்கு
நல்ல நேரம்: காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
சுவாமி மலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். வடமதுரை சவுந்திரராஜப் பெருமாள் வசந்த உற்சவம். முத்துப் பல்லக்கில் அருளிய லீலை. சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் வெள்ளிப்பாவாடை தரிசனம். வடபழனி, திருப்போரூர், கந்தகோட்டம், குன்றத்தூர், திருத்தணி, வல்லக்கோட்டை தலங்களில் காலை சிறப்பு அபிஷேகம். சிவகாசி ஸ்ரீவிஸ்வநாதர் சிறப்பு அபிஷேகம். குரங்கனி ஸ்ரீமுத்துமாலையம்மன் பவனி.
இன்றைய ராசிபலன்
மேஷம்-சுகம்
ரிஷபம்-நிறைவு
மிதுனம்-வரவு
கடகம்- செலவு
சிம்மம்-நட்பு
கன்னி-நலம்
துலாம்- நன்மை
விருச்சிகம்-மாற்றம்
தனுசு- ஆர்வம்
மகரம்-சுபம்
கும்பம்-முயற்சி
மீனம்-கவனம்
- 3 கருட சேவை உற்சவங்கள் விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
- பக்தர்கள் பக்தி கோஷமிட்டு தரிசனம் செய்தனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் வைகாசி மாத பிரம்மோற்சவம், ஆனி மாதம், ஆடி மாதம் என ஆண்டுக்கு 3 கருட சேவை உற்சவங்கள் விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
பெருமாளை வணங்கு வதற்காக குளத்தில் இருந்து தாமரைப் பூவை பறித்த யானையான கஜேந்திரனின் காலை, முதலை பற்றிக் கொண்ட நிலையில், கஜேந்திரன் அலறியபடி பெருமாளை அழைத்தார். பெருமாள் கருட வாகனத்தில் காட்சியளித்து முதலையை அழித்து கஜேந்திரனுக்கு மோட்சம் அளித்ததாக கூறப்படுகிறது.
இதனை குறிக்கும் வகையில் கஜேந்திர மோட்சம் அருளும் ஆடி மாத கருட சேவை உற்சவம் வரதராஜ பெருமாள் கோவிலில் நடைபெற்றது.
இதையொட்டி வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு மஞ்சள் நிற பட்டு உடுத்தி, செண்பகப்பூ, மனோரஞ்சித பூ, மல்லிகைப்பூ, பஞ்சவர்ண பூ மலர் மாலைகள், திருவா பரணங்கள் அணிவித்து, மஞ்சள் பட்டு உத்திய தங்க கருட வாகனத்தில் வரதராஜ பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
பின்னர் தங்க கருட வாகனத்தில் வரதராஜ பெருமாள் அனந்த சரஸ் திருக்குளத்தின் அருகே எழுந்தருளி கஜேந்திர மோட்சம் அருளும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தொடர்ந்து மேள, தாள வாத்தியங்கள் முழங்க கோவிலில் ஆழ்வார் பிரகாரத்தில் உலா வந்து கோபுர தரிசனம் தந்தார்.
இதையடுத்து பெருமாள், நான்கு மாட வீதிகளிலும் தங்க கருட வாகனத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தங்க கருட வாகனத்தில் வலம் வந்த வரதராஜ பெருமாளை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா... கோவிந்தா... என்று பக்தி கோஷமிட்டு தரிசனம் செய்தனர்.
- சோழ மன்னர் தனது தங்கைக்கு சீதனமாக கொடுத்த நகரம் தான் சமயபுரம்.
- சமயபுரம் மாரியம்மனின் சகோதரிகளில் கடைசி தங்கை வீரசிங்கம்பேட்டை மாரியம்மன்.
1. சமயபுரம் முத்து மாரியம்மன்
திருச்சி மாவட்டம் சமயபுரத்திலேயே இந்த முத்து மாரியம்மன் கோவில் அமைந்து உள்ளது. சோழ மன்னர் ஒருவர் தனது தங்கைக்கு சீதனமாக கொடுத்த நகரம் தான் இந்த சமயபுரம் என சொல்லப்படுகிறது.

2. புன்னை நல்லூர் மாரியம்மன்
தஞ்சை மாவட்டத்தின் கிழக்கு பகுதியில் புற்று வடிவில் சுயம்பு மூர்த்தியாக அம்மன் காட்சி தரும் தலமாகும். மூலவர் சிலை புற்று மண்ணால் ஆனதால் இந்த அம்மனுக்கு அபிஷேகங்கள் ஏதும் செய்யப்படுவதில்லை. 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தைலக்காப்பு மட்டுமே நடைபெறும்.

3. அன்பில் மாரியம்மன்
திருச்சி மாவட்டம் லால்குடி அருகில் உள்ள அன்பில் கிராமத்தில் அமைந்துள்ளது இக்கோவில். சுமார் 700 ஆண்டுகள் பழமையான இக்கோவிலில் வீற்றிருக்கும் அம்மனின் திருமேனி, கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட போது வேப்ப மரத்தடியில் கரை ஒதுங்கியதாக சொல்லப்படுகிறது.

4. தென்னலூர் மாரியம்மன்
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் வட்டத்தில் இந்த கோவில் அமைந்துள்ளது. தென்னலூர் கிராமத்தின் அதிதேவதையாக இந்த மாரியம்மன் விளங்குகிறாள். ஆரம்பத்தில் எளிமையாக கூரையில் இருந்த அம்மனுக்கு பிறகு கோவில் கட்டப்பட்டதாக சொல்லப்படு கிறது

5.நார்த்தமலை முத்துமாரியம்மன்
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நார்த்தமலை என்ற ஊரில் இந்த மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. மலைகளால் சூழப்பட்டதாக இந்த கோவில் அமைந்துள்ளது.

6. கொன்னையூர் மாரியம்மன்
புதுக்கோட்டை மாவட்டம் பொன்ன மராவதி அருகே உள்ளது கொன்னையூர் கிராமம். இந்த கோவில் ஊர் மத்தியில் அமைந்து உள்ளதால் நான்கு திசைகளிலும் உள்ள மக்களை இந்த மாரி யம்மன் காத்து வருவ தாக ஐதீகம்.

7. வீரசிங்கம்பேட்டை மாரியம்மன்
திருவையாறு அருகே உள்ள குடமுருட்டி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ளது வீரசிங்கம்பேட்டை என்ற ஊர். இங்கு தான் இந்த மாரியம்மன் கோவில் அமைந்து உள்ளது. சமயபுரம் மாரியம்மனின் சகோதரிகளில் கடைசி தங்கை இவர் தான் என சொல்லப்படுகிறது.
- பழங்காலத்தில் ஸ்ரீரங்கத்தில் வைஷ்ணவி என்கிற பெயரில் வீற்றிருந்தார்.
- கண்ணனூர் மாரியம்மன் என்றும் அழைக்கப்பட்டாள்.
கிருஷ்ண அவதாரத்தில் தேவகியின் குழந்தையாக கிருஷ்ணனும், யசோதையின் குழந்தையாக மாயா தேவியும் அவதரித்தனர். பிறகு அவ்விரு குழந்தைகளும் இறைவன் விருப்பத்தினால் இடம் மாறின.
தேவகியின் பிள்ளையால் தனக்கு அழிவு உண்டாகும் என்பதை அறிந்த கம்சன், பிள்ளைகள் இடம் மாறியதை அறியாமல் சிறையில் தேவகியிடம் இருந்த பெண் குழந்தையை கொல்ல மேலே தூக்கினான்.
அக்குழந்தை அவன் கைகளில் இருந்து மேலே எழும்பி, வில், அம்பு, சூலம், பாசம், சங்கு, சக்கரம், வாள் முதலிய ஆயுதங்களைத் தரித்துத் தோன்றினாள். அத்தேவியே மகா மாரியம்மன் என்ற கண்கண்ட தெய்வமாக அழைக்கப்பட்டாள்.
மக்களின் தீமைகளையும், தீராத நோய்களையும் தீர்த்து வைக்கும் தெய்வமாக சமயபுரத்தில் மாரியம்மன் அருள்பாலிக்கிறாள்.
சமயபுரம் மாரியம்மன் பழங்காலத்தில் ஸ்ரீரங்கத்தில் வைஷ்ணவி என்கிற பெயரில் வீற்றிருந்தார்.

கோரைப்பற்கள் மற்றும் சிவந்த கண்களுடன் விளங்கியதால், அங்கு அப்போதிருந்த ஜீயர் சுவாமிகள் அம்மனை வேறு இடத்தில் பிரதிஷ்டை செய்ய ஏற்பாடு செய்தார். அதன்படி அம்மனை சுமந்து சென்றவர்கள் தற்போது இனாம் சமயபுரம் என்ற இடத்தில் விக்ரகத்தை இறக்கி வைத்தனர்.
கண்ணனூர் அரண்மனை மேட்டில் ஓலைப்பந்தலில் வைத்துவிட்டுச் சென்றதால் அம்மன் கண்ணனூர் அம்மன் என்றும், கண்ணனூர் மாரியம்மன் என்றும் அழைக்கப்பட்டாள்.
இந்த நிலையில் தென்னாட்டின் மீது படை எடுத்துவந்த விஜயநகர மன்னன் தன் படைகளோடு கண்ணனூர் காட்டில் முகாமிட்டபோது கண்ணில் பட்ட அம்மனை வேண்டினார். போரில் வெற்றி பெற்றால் அம்மனுக்கு கோவில் கட்டுவதாக நினைத்துக் கொண்டார்.
அதன்படியே அம்மனுக்கு கோவில் கட்டிய விஜய நகர மன்னர் பரிவாரத் தெய்வங்களாக விநாயகரையும், கருப்பண்ணசாமியையும் பிரதிஷ்டை செய்து குடமுழுக்கு விழா நடத்தி நித்திய பூஜைக்கான ஏற்பாடுகளும் செய்தார்

அதிசய மகாமக தீர்த்தம்
இத்தீர்த்தம் கோவிலின் வடமேற்கே உள்ள வாயுமூலையில் அமையப்பெற்றுள்ளது. கோவில் பணியாளர்கள் குடியிருப்பு வளாகத்தில் இத்திருக்குளம் அமையப் பெற்றுள்ளது.
புராண காலத்தில் சப்த கன்னியர்கள் ஒவ்வொரு மகாமகத்திற்கு முன்பும், கங்காதேவியை இப்புனித தீர்த்தத்தில் ஆவாகனம் செய்து அங்கிருந்து பெருக்கெடுத்து ஓடும் புனித நீரை கும்பகோணம் மகாமகத்தில் சேர்ப்பதாக ஐதீகம் உள்ளது.
வரலாற்று சிறப்புப் பெற்ற இத்தீர்த்தத்தின் வடமேற்குப்பகுதியில் அதிசய மகாமக தீர்த்த ஊற்று உள்ளது. இங்ஙனம் சக்தி தீர்த்தம் தன்னகத்தே அதிசய மகாமகதீர்த்தம் என்றதொரு புனித ஊற்று தீர்த்தத்தை உள்ளடக்கியதாக காணப்படுகிறது.
இன்றும் இந்த அதிசய மகாமக தீர்த்தம் முன்பாகவும் வெள்ளம் பெருக்கெடுத்து, சக்தி தீர்த்தம் நிரம்பும். ஒவ்வொரு மகாமக காலத்தின் போதும் ஏற்படும் இவ்வாறான அதிசய நிகழ்வின் போது ஏராளமான பக்தர்கள் வந்து இத்தீர்த்த நீரை எடுத்துச் செல்வது வழக்கம்.
- இன்று திருவோண விரதம்.
- சாத்தூர் ஸ்ரீ வெங்கடேசப் பெருமாள் தோளுக்கினியானின் பவனி.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு ஆடி-6 (திங்கட்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: பிரதமை பிற்பகல் 3.11 மணி வரை பிறகு துவிதியை
நட்சத்திரம்: திருவோணம் நள்ளிரவு 1.05 மணி வரை பிறகு அவிட்டம்
யோகம்: அமிர்த, சித்தயோகம்
ராகுகாலம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
எமகண்டம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
சூலம்: கிழக்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை
இன்று திருவோண விரதம். சங்கரன் கோவில் ஸ்ரீ கோமதி அம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். திருத்தணி ஸ்ரீ முருகப்பெருமான் பாலாபிஷேகம். சாத்தூர் ஸ்ரீ வெங்கடேசப் பெருமாள் தோளுக்கினியானின் பவனி. வடமதுரை சவுந்திரராஜப் பெருமாள் குதிரை வாகனத்தில் சப்தா வரணம். திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட் நகர், திருவிடைமருதூர் கோவிங்களில் காலை சிறப்பு சோமவார அபிஷேகம், அலங்காரம் வழிபாடு.
இன்றைய ராசிபலன்
மேஷம்-ஆதரவு
ரிஷபம்-ஆக்கம்
மிதுனம்-பரிசு
கடகம்-கடமை
சிம்மம்-இன்பம்
கன்னி-வெற்றி
துலாம்- லாபம்
விருச்சிகம்-வரவு
தனுசு- செலவு
மகரம்-தெளிவு
கும்பம்-பயணம்
மீனம்-போட்டி
- ஆடி மாத பவுர்ணமியான இன்று ஆடித்தபசு விழா வெகு விமரிசையாக நடைபெறுகிறது.
- சங்கரன்கோவிலில் அரியும் சிவனும் ஒருங்கே இணைந்து ஓர் உருவில் காட்சி கொடுத்தனர்.
சங்கரன்கோவில்:
சைவமும், வைணவமும் பிளவுபடக்கூடாது என்பதற்காக அரியும் சிவனும் ஒண்ணு என்பதை உலகுக்கு உணர்த்தும் விதமாக இறைவன், சங்கரநாராயணராக தோன்றிய அற்புதமான திருத்தலம், சங்கரன்கோவில் சங்கரநாராயணர் ஆலயம்.
இக்கோவிலில் ஆடி மாத பவுர்ணமியான இன்று உத்திராட நட்சத்திரத்தில் ஆடித்தபசு விழா வெகு விமரிசையாக நடைபெறுகிறது.
இங்குள்ள கோமதி அம்மன் சன்னிதி முன், நடு மண்டபத்தில் நாகச்சுனை ஒன்று இருக்கிறது. இந்த நாகச்சுனை இருக்கும் இடத்தில் அந்த காலத்தில் சங்கன், பதுமன் என்ற இரு நாகர்கள் வசித்து வந்தனர்.
சங்கன் சிவபெருமான் மீதும், பதுமன் மகாவிஷ்ணு மீதும் அதீத பக்தி கொண்டிருந்தனர். இருவரும் சிவன் பெரியவரா, விஷ்ணு பெரியவரா என தங்களுக்குள் வாதம் செய்தனர். இது பற்றி தெரிந்து கொள்ள பார்வதி தேவியிடம் சென்று முறையிட்டனர்.
அம்பாள் ஈசனை வேண்ட, அவர் அம்பாளை பொதிகை மலைப்பகுதியில் புன்னை வனத்தில் தவம் செய்யும்படி கூறினார். அதன்படி அம்பாள் தற்போது சங்கரநாராயணர் கோவில் அமைந்திருக்கும் இடத்திற்கு வந்து தவம் செய்தார். அப்போது ஈசன் சங்கர நாராயணராக வந்து அம்பாளுக்கு காட்சி கொடுத்தார்.
அரியும் சிவனும் ஒருங்கே இணைந்து ஓர் உருவில் காட்சி கொடுத்தனர். இந்தக் காட்சியை அம்பாளின் அருளால் சங்கனும், பதுமனும் தரிசித்து நற்பேறு பெற்றனர்.
சங்கரநாராயணரின் சிவனுக்குரிய வலது பாகத்தில் தலையில் கங்கை, பிறை நிலா, அக்னி, ஜடாமுடியுடன் கையில் மழு, மார்பில் ருத்ராட்சம், இடுப்பில் புலித்தோல் போன்றவற்றுடன் திருவாசியில் நாக வடிவில் சங்கன் குடைபிடிக்கிறான்.
அதேபோல் மகாவிஷ்ணுவுக்குரிய இடது பாகத்தில் நவமணி கிரீடம், கையில் சங்கு, மார்பில் துளசி மற்றும் லட்சுமி மாலைகள் இவற்றுடன் திருவாசியில் நாக வடிவில் பதுமன் குடை பிடிக்கிறான்.
இவ்வாறு தவம்செய்த அம்பாளுக்கு சிவபெருமான் சங்கரநாராயணராக திருக்காட்சி கொடுத்த மாதம் ஆடி மாதம் என்கிறது புராணம். இதைத்தான் இன்று ஆடித்தபசு என கொண்டாடுகிறோம்.
- காலை 6 மணி அளவில் வனத்துறை கேட் திறந்து விடப்பட்டது.
- விடுமுறை தினம் என்பதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை.
வத்திராயிருப்பு:
வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில் உள்ளது அமாவாசை பவுர்ணமிக்கு தலா 3 நாட்கள் பிரதோஷத்திற்கு 2 நாட்கள் என மாதத்திற்கு 8 நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.
கடந்த 19-ந்தேதி முதல் நாளை வரை 4 நாட்களுக்கு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
கடந்த 19-ந்தேதி ஆடி மாத பிரதோஷம், இன்று ஆடி பவுர்ணமியை முன்னிட்டு நள்ளிரவு முதல் சென்னை, கோவை, திருச்சி, சேலம், சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு தொலைதூர ஊர்களில் இருந்தும் பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான வாகனங்களில் தாணிப்பாறைக்கு வருகை தந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வனத்துறை கேட்பகுதியில் குவிந்தனர்.
இதனையடுத்து காலை 6 மணி அளவில் வனத்துறை கேட் திறந்து விடப்பட்டது. வனத்துறையினர் பக்தர்களின் உடைமைகளை சோதனை செய்து பாலித்தீன் கேரிப்பை போன்றவற்றை பறிமுதல் செய்து மது மற்றும் போதை வஸ்து பொருட்கள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா? என்பதையும் சோதனை செய்தனர்.
அதன் பின்பு பக்தர்கள் தங்கள் உடமைகளை கொண்டு சென்றனர் தற்போது விடுமுறை தினமாக இருப்பதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர்.
இன்று இரவு ஆடி பவுர்ணமியை முன்னிட்டு சுந்தர மகாலிங்கம் சாமிக்கு பால், பழம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 21 வகையான அபிஷேகங்கள் நடைபெறு கிறது.
அபிஷேகம் முடிந்ததும் சாமி அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற உள்ளது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சுந்தர மகாலிங்கம் சாமி பரம்பரை அறங்காவலர் ராஜா என்ற பெரியசாமி செயல் அலுவலர் ராமகிருஷ்ணன் ஆகியோர் செய்திருந்தனர்.
- அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது.
- கோபுர நுழைவு வாயில் வழியாக பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் இக்கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலை என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையை சுற்றி பவுர்ணமி நாட்களில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.
ஆடி மாதத்திற்கான பவுர்ணமி நேற்று மாலை 6.05 மணி அளவில் தொடங்கியது. பவுர்ணமியை முன்னிட்டு நேற்று அதிகாலை முதலே பல்வேறு பகுதியில் இருந்து திருவண்ணாமலைக்கு பக்தர்கள் வருகை தர தொடங்கினர்.
கிரிவலம் செல்ல உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வந்தனர். குறிப்பாக ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து பக்தர்கள் ஏராளமானோர் வந்தனர். காலையில் குறைந்த அளவிலான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.
பவுர்ணமி மாலையில் தொடங்கியதால் பெரும்பாலான பக்தர்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு கிரிவலம் செல்லலாம் என்று வரிசையில் நின்றனர். இதனால் அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது.
பக்தர்கள் கோவிலில் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். மதியம் வரை கோவிலில் ராஜகோபுரம் மற்றும் அம்மணி அம்மன் கோபுர நுழைவு வாயில் வழியாக பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். கோவிலில் சாமி தரிசனம் 4 மணி நேரத்திற்கு மேலானதாக கூறப்படுகிறது.
கோவிலில் பக்தர்கள் விரைந்து சாமி தரிசனம் செய்யும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. மேலும் கோவிலுக்கு வெளியில் மட்டுமின்றி கோவில் உட்புறமும் பல்வேறு வரிசைகள் அமைக்கப்பட்டு பக்தர்கள் சிரமமின்றி சாமி தரிசனம் செய்ய சென்றனர்.
முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், கைக்குழந்தையுடன் வந்த பெண்கள் ஆகியோருக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு விரைந்து சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.
மதியத்திற்கு மேல் ஏராளமான பக்தர்கள் கார், வேன் உள்ளிட்ட வாகனங்களில் திருவண்ணாமலைக்கு வருகை தந்தனர். பகலில் பக்தர்கள் பலர் தனித்தனியாக கிரிவலம் சென்ற வண்ணம் காணப்பட்டாலும் மாலையில் இருந்து கிரிவலம் செல்லும் பக்தர்களின் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது.
இரவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். கிரிவலம் சென்ற பக்தர்களுக்கு ஆங்காங்கே அன்னதானம் வழங்கப்பட்டது. பவுர்ணமி கிரிவலமானது இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4.48 மணியளவில் நிறைவடைகிறது. அதனால் பக்தர்கள் தொடர்ந்து விடிய, விடிய கிரிவலம் சென்றனர்.
இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் இன்றும் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பவுர்ணமியை முன்னிட்டு போலீசார் திருவண்ணாமலை நகரம் மற்றும் கிரிவலப்பாதையில் தொடர்ந்து ரோந்து பணியிலும், போக்குவரத்தை சீர் செய்யும் பணியிலும் ஈடுபட்டனர். 108 ஆம்புலன்ஸ் பணியாளர்களும் போலீசாருடன் இணைந்து தொடர்ந்து பணியாற்றினர்.
- கோமதி அம்பாளுக்கு சங்கரநாராயணராகவும், சங்கரலிங்க மூர்த்தியாகவும் காட்சி கொடுத்தார்.
- 108 முறை ஆடி சுற்று சுற்றி வந்தால் வேண்டுதல் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
சங்கரன்கோவில்:
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கர நாராயண சுவாமி கோவில் தென் தமிழகத்தின் பிரசித்தி பெற்ற ஆன்மீக தலங்களில் ஒன்று. சிவன் வேறு, விஷ்ணு வேறு என பிளவுபடுத்துவது தவறு என்பதை பக்தர்களுக்கு உணர்த்தும் பொருட்டு சிவபெருமான், கோமதி அம்பாளுக்கு சங்கரநாராயணராகவும், சங்கரலிங்க மூர்த்தியாகவும் காட்சி கொடுத்தார். இத்தகைய அரிய நிகழ்ச்சி ஆடித்தபசு திருவிழாவாக பக்தர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 11-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் தினமும் காலை, மாலை இருவேளைகளிலும் வீதி உலா நடைபெற்று வருகிறது.
மேலும் கோவில் உள் மண்டபத்தில் உள்ள கலையரங்கத்தில் பக்தி இன்னிசை கச்சேரி, சொற்பொழிவு, வழக்காடு மன்றம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
ஆடித்தபசு திருவிழா நாட்களில் கோவில் பிரகாரத்தை 108 முறை ஆடி சுற்று சுற்றி வந்தால் வேண்டுதல் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதனால் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆடி சுற்று சுற்றி வருகின்றனர். முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தேரோட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது.
திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான ஆடித்தபசு காட்சி இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. விழாவை முன்னிட்டு காலை 5 மணிக்கு சங்கரலிங்க சுவாமி-கோமதி அம்பாளுக்கு விளா பூஜையும், 9 மணிக்கு சங்கர நாராயண சுவாமி மற்றும் உற்சவமூர்த்திகளுக்கும், சுவாமி-அம்பாளுக்கும், சந்திரமவுலீஸ்வரருக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றது.
காலை 9.30 மணிக்கு கோமதி அம்பாளுக்கு அபிஷேக அலங்காரம், பரிவட்டம், பிற்பகல் 1.35 மணிக்கு தங்க சப்பரத்தில் கோமதி அம்பாளுக்கு ஆடித்தபசு மண்டகப்படிக்கு எழுந்தருளல் நடைபெற்றது.
மாலை 4.15 மணிக்கு சங்கரநாராயண சுவாமி தபசு காட்சிக்கு புறப்பாடு நிகழ்ச்சியும், 6.05 மணிக்கு சங்கரன்கோவில் தெற்கு ரதவீதியில் சிவபெருமான் அரியும், சிவனும் ஒன்று என்பதை உணர்த்தும் வகையில் சங்கரநாராயணசுவாமியாக ரிஷப வாகனத்தில் கோமதி அம்பாளுக்கு தபசு காட்சி கொடுக்கிறார்.
இரவு 11 மணிக்கு மேல் சங்கரலிங்க சுவாமி யானை வாகனத்தில் புறப்பாடு, இரவு 11.45 மணிக்கு சங்கரலிங்க சுவாமி யானை வாகனத்தில் கோமதி அம்பாளுக்கு காட்சி கொடுத்தல் நிகழ்ச்சியும் நடக்கிறது.
ஆடித்தபசு திருவிழாவை காண தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம் என தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான வர்கள் கோவிலில் குவிந்த வண்ணம் உள்ளனர். இதனால் சங்கரன் கோவிலில் எங்கு பார்த்தாலும் மனிதர்களின் தலையாகவே தெரிகிறது.
தபசு விழாவையொட்டி சங்கரன்கோவில் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. பக்தர்கள் வசதிக்காக நகராட்சி சார்பில் குடிநீர், சுகாதார வசதி செய்யப்பட்டுள்ளது. தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் தலைமையில் 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
ஆடித்தபசு விழாவை யொட்டி 4 இடங்களில் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. திருவிழா ஏற்பாடுகளை கோவில் அதிகாரிகள், நிர்வாகம் மற்றும் மண்டகப்படிதாரர்கள், நகராட்சி நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
தீயணைப்பு துறை சார்பில் 4 விதமான தீயணைப்பு வாகனங்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளது. மின் வாரியம் சார்பில் தடையில்லா மின்சாரம் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் கோவில் வாசல் அருகில் மருத்துவ குழுவினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளனர்.
- ஒவ்வொரு வாகனத்தில் ஸ்ரீ அம்பாள் வீதி வலம் வருகிறாள்.
- தங்கச்சப்பரத்தில் எழுந்தருளி தபசு மண்டபம் செல்கிறாள்.
ஆடி பவுர்ணமிக்கு 10 நாட்களுக்கு முன் சதுர்த்தி திதியில் பூரம் நட்சத்திரத்துடன் கூடிய புண்ணிய தினத்தில் காலை வேளையில் ஸ்ரீ கோமதி அம்மன் சந்நிதி முன்பாக அமைந்துள்ள தங்கக்கொடிமரத்தில் ஆடித்தபசு திருவிழா கொடியேற்றம் நடக்கும். ஸ்ரீ கோமதி அம்பாளுக்கான தனிப்பெரும் திருவிழா இது. ஆகையால் அம்பாளுக்கே கொடியேற்றம் செய்யப்படுகிறது.
கொடியேற்றும் அதே வேளையில் ஸ்ரீ அம்பாள் சிவிகையில் (தந்த பல்லக்கில்) எழுந்தருள்கிறாள். தொடர்ந்து 10 நாட்கள் காலையில் ஒவ்வொரு அலங்காரத்திலும், மாலை வேளையில் வெள்ளி சப்பரத்தில் மண்டகப்படி கட்டிடத்திற்கு அம்பாள் எழுந்தருள்கிறாள். இரவு வேளையில் சமுதாய மண்டகப்படி கட்டிடத்தில் இருந்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் ஸ்ரீ அம்பாள் வீதி வலம் வருகிறாள்.
அம்பாளுக்கான விழா ஆகையால் 9-ம் நாள் காலையில் அம்பாளுக்கு மட்டும் ரத உற்சவம் நடக்கிறது. 11-ம் நாள் காலையில் யாகசாலை மண்டபத்தில் ஸ்ரீ கோமதி அம்பாள், ஸ்ரீ சங்கரலிங்க சுவாமி, ஸ்ரீ சங்கர நாராயண சுவாமி ஆகிய உற்சவ மூர்த்திகளுக்கு விஷேச அபிஷேகம், அலங்காரமும், சோடஷ உபசாரனையும் நடக்கிறது. தொடர்ந்து ஸ்ரீ கோமதி அம்பாள் தபசுகோலத்தில் தங்கச்சப்பரத்தில் எழுந்தருளி தபசு மண்டபம் செல்கிறாள்.
ஆடி பவுர்ணமி தினத்தில் மாலை உத்திராட நட்சத்திர வேளையில் சுவாமி வெள்ளி ரிஷப வாகனத்தில் ஸ்ரீ சங்கர நாராயண மூர்த்தியாக, தபசுகோலத்தில் உள்ள அம்பாளுக்கு காட்சி அளிக்கிறார். பின் இரவு வேளையில் வெள்ளி யானை வாகனத்தில் அம்பாளுக்கு ஸ்ரீ சங்கரலிங்க சுவாமியாக காட்சியளிக்கிறார்.

3-டி அமைப்பில் ஓவியம்
கோவில் கருவறையின் பின்புறம் ஸ்ரீரங்கத்தில் ரங்கநாதர் படுத்திருப்பது போன்ற ஓவியம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் கண் அமைப்பு கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பே 3-டி அமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது அனைவருக்கும் வியப்பான ஒன்று. ஓவியத்தின் வலது மற்றும் இடது புறம், ஓவியத்தின் நடுப்பகுதியில் நின்று பார்த்தாலும் ரங்க நாதர் நம்மையே பார்ப்பது போல அவரது கண்களின் பார்வை அமைக்கப்பட்டு இருக்கும்.






