என் மலர்
முக்கிய விரதங்கள்
நவகிரகங்களால் பாதிக்கப்பட்டவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விரத முறைகளை அனுஷ்டித்து வந்தால் பிரச்சனைகளில் இருந்து படிப்படியாக விடுபடலாம்.
* பகைவரைக் கண்டு அஞ்சாத உள்ளத்தை தருபவர் செவ்வாய். செவ்வாய் தோஷம் என்பதைக் கேட்டாலே பெண்ணைப் பெற்றவர்கள் பதறுவார்கள். செவ்வாய் கிழமைகளில் விரதமிருந்து அருகில் உள்ள கோவில்களில் தீபமேற்றுவது செவ்வாய் தோஷத்தால் ஏற்படும் பாதிப்புக்களைக் குறைக்கும்.
• வாக்கு வன்மை, பேச்சினாலே பிறரை வசீகரிக்கும் திறன், பண்பு, கணிடம், ஜோதிடம், சிற்பம், பன்மொழிப் புலமை தருவது, எழுத்தாற்றல், கவிபாடும் திறன் ஆகியவற்றைத் தருபவர் புதன். புதன் நமது ஜாதகத்தில் தோஷமாக இருந்தால் கல்வித்தடை ஏற்படும். புதன் கிழமை விரதமிருந்து ஏதேனும் கோவிலில் தீபமேற்றி வழிபடுவது, படிக்க வசதியில்லாத ஏழைக் குழந்தைகளுக்கு உடைகள், புத்தகம், நோட்டுகள், பேனா, பென்சில் போன்றவற்றை வழங்குவது போன்றவற்றால் புதன் தோஷம் நீங்கும். கல்வியறிவு மேம்படும்.
• திருமணம், குழந்தைப் பேறு இரண்டும் நம் வாழ்வின் மிக முக்கியமான திருப்பங்கள் ஆகும். அவற்றை நமக்குத் தருபவர் வியாழன். வியாழக்கிழமைகளில் விரதமிருந்து மாலை நேரத்தில் ஏதேனும் ஒரு கோவிலில் தீபமேற்றி வழிபடுவதுடன், பெரியவர்கள், துறவிகள், மகான்கள், சாதுக்கள் ஆகியோரை வணங்கி அவர்களின் ஆசியைப் பெறுவதாலும் வியாழனால் ஏற்படும் தோஷங்கள் நீங்கி அனைத்து விதமான நலன்களையும் பெறலாம்.
• கலையுணர்ச்சி, அழகுணர்ச்சி, காதல், போகம் போன்றவற்றிற்கு அதிபதியாக விளங்குபவர் சுக்கிரன். வாழ்க்கை நமக்குத் தரும் சுகங்களை மன திருப்தியோடு அனுபவிக்க சுக்கிரனின் அருள் வேண்டும். திருமால் சந்நிதியில் விளக்கேற்றி வழிபடுவதுடன் வெள்ளிக்கிழமைகளில் விரதமிருந்து ஏழை சுமங்கலிப் பெண்களுக்கு உடை, ஏழைகளுக்கு அன்னதானம் போன்றவற்றைச் செய்வதால் சுக்கிரன் தோஷம் நீங்கி சுகம் பெறலாம்.
• நீண்ட ஆயுளையும், நல்ல செல்வத்தையும் வாரி வழங்குபவர் சனீஸ்வரன். நவக்கிரகங்களில் ஈஸ்வரன் பட்டம் பெற்ற ஒருவர் இவரே. சனிக்கிழமைகளில் விரதமிருந்து மாலையில் ஏதாவது ஒரு கோவிலுக்குச் சென்று விளக்கேற்றி வழிபடுவதுடன் எள் கலந்த சாதம் படைத்து நைவேத்தியம் செய்வது, ஏழைகளுக்கு அன்னதானம் செய்வதுடன், தினந்தோறும் காக்கைக்கு உணவு வைப்பதும் சனீஸ்வரனால் ஏற்படக்கூடிய தோஷங்கள் அனைத்தையும் நீக்கும்.
ஐயப்பனுக்கு ஒரு மண்டலம் விரதம் இருப்பதால் நல்ல பழக்கங்கள் ஏற்பட்டு பலரது வாழ்க்கை முறையே மாறியுள்ளது. இதனால்தான் ஆண்டுக்கு ஆண்டு ஐயப்பனை தேடி செல்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்தபடி உள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோவில் சுயம்புலிங்க பூமி, யாக பூமி, பலி பூமி, யோக பூமி, தபோ பூமி, தேவ பூமி, சங்கமம் பூமி என்ற 7 சிறப்புகளைக் கொண்டது.
சபரிமலைக்கு முதன் முதலில் மாலை அணிந்து செல்பவர்கள் 48 மைல் கொண்ட பெரிய பாதையில் செல்ல வேண்டும் என்பது மரபு.
சபரிமலையை அடைந்ததும் சரணம் கூறியபடி செல்ல வேண்டும். உங்கள் கழுத்தில் உள்ள மாலை நெஞ்சில் அடிபடும் போதெல்லாம் ஐயப்பன் உங்கள் மனசாட்சியை தட்டிக் கொண்டே இருக்கிறார் என்பதை மறந்து விடாதீர்கள்.
ஒரு மண்டலம் விரதம் இருப்பதால் நல்ல பழக்கங்கள் ஏற்பட்டு பலரது வாழ்க்கை முறையே மாறியுள்ளது. இதனால்தான் ஆண்டுக்கு ஆண்டு ஐயப்பனை தேடி செல்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்தபடி உள்ளது.
மகிஷியை வதம் செய்த மணிகண்டன் அவன் உடல் வளர்ந்து பூமிக்கு மேல் வரக்கூடாது என்பதற்காக கனமான கல்லை வைத்ததாக வரலாறு. இதை நினைவு கூரும் வகையில் அழுதை நதியில் மூழ்கி குளிக்கும் போது எடுக்கும் கற்களை கல்லிடும் குன்று பகுதியில் பக்தர்கள் போடுகிறார்கள்.
நம்மிடம் உள்ள ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்று அகந்தைகளையும் விரட்டவே சபரிமலை பதினெட்டாம் படியில் மூன்று கண்களை உடைய தேங்காயை உடைக்கிறார்கள்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் ``தத்துவமசி'' எனும் தத்துவம் எழுதப்பட்டுள்ளது. தத்துவமசி என்றால், ``நீ எதை நாடி வந்தாயோ, அது நீயாக உள்ளாய்'' என்று பொருள்.
ஐயப்பனின் படையில் சேனாதிபதியாக இருந்த கடுத்த சுவாமி பதினெட்டுப் படிக்கு அருகில் பிரதிஷ்டை செய்துள்ளார். அவருக்கு முந்திரி, திராட்சை, சுருட்டு படைத்து வழிபட்டால் தோஷங்கள் விலகி நன்மை உண்டாகும்.
சபரிமலை பொன்னம்பல மேட்டில் மகர சங்கராந்தியன்று தோன்றும் ஜோதியை அப்பச்சிமேடு, பம்பை, பெரியானை வட்டம், புல்மேடு ஆகிய இடங்களில் இருந்தும் காணலாம். புல்மேடு பகுதியில்தான் இந்த ஜோதி நன்றாக தெரியும்.
ஐயப்பனுக்கு நடைபெறும் மகர விளக்குப் பூஜையை முன்னிட்டு அவர் வளர்ந்த பந்தளம் நகரில் உள்ள பந்தளராஜா அரண்மனையில் இருந்து திருஆபரணம் கொண்டு செல்லப்படும்.
ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் திரு ஆபரணம் பந்தளராஜாவின் வம்சத்தைச் சேர்ந்த மூத்த குடும்ப உறுப்பினர் தலைமையில் கொண்டு செல்லப்படும். திருவாதிரைநாள் ராகவவர்ம ராஜா அரசரின் தூதராக இருந்து திருஆபரண ஊர்வலத்தை தலைமையேற்றுச் செல்கிறார்.
பந்தளம் கோவிலில் இருந்து திருஆபரணம் ஊர்வலம் புறப்படும்போது வானத்தில் அன்று மட்டும் ஒரு கழுகு தோன்றும். திருஆபரணம் கொண்டு செல்லப்படும் ஊர்வலப் பாதையில் வானில் அக்கழுகு தொடர்ந்து பறந்து வருவது இன்று வரை நடந்துவரும் ஓர் அதிசயமாகும்.

கந்தசஷ்டி திருவிழாவின் 7-ம் நாளான இன்று (சனிக்கிழமை) திருக்கல்யாண வைபவத்தை விரதம் இருக்கும் பக்தர்கள் பார்த்து, முருகப்பெருமானை வணங்குவார்கள். பின்னர் நடக்கும் திருமண விருந்தில் பக்தர்கள் கலந்துகொண்டு சஷ்டி விரதத்தை நிறைவு செய்வார்கள்.
பழனி முருகன் கோவிலில் கந்தசஷ்டி திருவிழாவையொட்டி பக்தர்கள் கைகளில் காப்பு கட்டி சஷ்டி விரதம் தொடங்கினர். அதன்படி, 6 நாட்கள் விரதம் இருக்கும் பக்தர்கள் 6-ம் நாளில் வாழைத்தண்டு, உளுந்தம்பருப்பு, கொய்யா, மாதுளை, திராட்சை, ஆப்பிள் உள்ளிட்ட பழங்கள், மாங்காய், தயிர் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து தண்டு கூட்டு தயாரிப்பார்கள்.
பின்னர் அதனை முருகனுக்கு படைத்து வழிபாடு நடத்துவார்கள். இந்த வழிபாடு தண்டுவிரதம் நிறைவு செய்யும் வழிபாடு என அழைக் கப்படுகிறது. பின்னர் பக்தர்கள் அதை சாப்பிட்டு தண்டு விரதத்தை நிறைவு செய்வார்கள்.
இதையடுத்து 7-ம் நாளான இன்று (சனிக்கிழமை) திருக்கல்யாண வைபவத்தை விரதம் இருக்கும் பக்தர்கள் பார்த்து, முருகப்பெருமானை வணங்குவார்கள். பின்னர் நடக்கும் திருமண விருந்தில் பக்தர்கள் கலந்துகொண்டு சஷ்டி விரதத்தை நிறைவு செய்வார்கள்.

கந்தசஷ்டி விழாவின் கடைசி நாளான இன்று (சூரசம்ஹாரம்) மௌன விரதம் அனுஷ்டிப்பதால் உங்கள் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
ஐப்பசி மாதத்தில் சுக்கிலபட்சத்தில் வரும் பிரதமை தொடங்கி சஷ்டி வரை ஆறு தினங்கள் விரதம் இருக்க வேண்டும். இந்த ஆறு நாளும் விரதம் இருக்க முடியாதவர்கள் கடைசி நாளான இன்று (சூரசம்ஹாரம்) முழு நாளும் விரதம் அனுஷ்டிக்கலாம்.
அதிகாலை எழுந்து ஆற்று நீரில் எதிர்முகமாகவும், குளம், கிணறு ஆகியவற்றில் வடக்கு நோக்கி நின்றும் தண்ணீரில் அறுகோணம் வரைந்து அதில் சடாட்சர மந்திரம் எழுதி இடையே பிரணவம் எழுதி, அந்தத் தண்ணீரைச் சிவகங்கையாகப் பாவித்து அதில் மூழ்க வேண்டும்.
தோய்த்து உலர்த்திய தூய ஆடையை அணிந்து இரவில் தம்பம், பிம்பம், கும்பங்களில் முருகனைப் பூஜித்து வெல்லம் சேர்த்து நெய்யில் சமைத்த மோதகத்தை நிவேதித்து பிற உபசாரங்களும் செய்தல் வேண்டும். முருகன் சன்னிதி சென்று வலம் வந்து வணங்க வேண்டும்.
இன்றைய தினம் முழுவதும் எதுவும் சாப்பிடாமல் உபவாசம் இருக்க வேண்டும். முடியாதவர்கள் பால், பழம், நீர் ஆகாரங்களை அருந்தலாம்.
அன்று திருமுருகாற்றுப்படை, கந்த சஷ்டி கவசம், கந்தரலங்காரம், கந்தரங்தாதி, கந்தரனுபூதி, கந்த கலிவெண்பா, திருப்புகழ் ஆகியவற்றை ஆசாரத்துடன் ஓதி கந்தபுராணம் படிக்க வேண்டும்.
பகலில் உறங்குதல் கூடாது. ஆறு காலங்களிலும் பூஜிக்க வேண்டும். கந்தனின் சரித்திரங்களை கேட்க வேண்டும். பாராயணம் புரிதல் வேண்டும். தியானம், ஜெபம் செய்தல் வேண்டும். மௌன விரதம் அனுஷ்டிப்பதால் உங்கள் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும்.
சூரசம்ஹாரத்தை முடிந்த பிறகு முருகப்பெருமான வணங்கி நெய்விளக்கு ஏற்றி வழிபாடு செய்ய பின்னர் உங்கள் விரதத்தை நிறைவு செய்யலாம்.
ஓர் ஏழை இவ்விரதமிருந்து மனு என்ற மன்னன் ஆனான். சஷ்டி விரதம் இருந்தால் நம் உள்ளத்தில் இறைவன் குடி கொள்வான் என்று பொருள்.

பக்தர்களின் துன்பங்களை போக்கி வாழ்வில் இன்பம் தரும் விரதங்கள் ஏராளமாக உள்ளன. அவற்றில் முருகப்பெருமானை நினைத்து வழிபடும் முக்கியமான விரதம், ‘கந்தசஷ்டி விரதம்’.
பக்தர்களின் துன்பங்களை போக்கி வாழ்வில் இன்பம் தரும் விரதங்கள் ஏராளமாக உள்ளன. அவற்றில் முருகப்பெருமானை நினைத்து வழிபடும் முக்கியமான விரதம், ‘கந்தசஷ்டி விரதம்’. இது குழந்தைப்பேறு கிடைக்கச் செய்யும் அதி அற்புதமான விரதமாக கருதப்படுகிறது. இதன் காரணமாகத்தான் ‘சஷ்டியில் இருந்தால் அகப்பையில் வரும்’ என்ற பழமொழி ஏற்பட்டது. கந்த சஷ்டி விரதம், ஒவ்வொரு வருடமும் தீபாவளி அமாவாசை முடிந்து சுக்லபட்ச பிரதமை திதியில் தொடங்கி, சஷ்டி திதி வரை ஆறு நாட்கள் அனுசரிக்கப்படும். ஆறாவது நாளில்தான் கந்த சஷ்டி கொண்டாடப்படுகிறது. அன்றுதான் முருகப்பெருமான், சூரபதுமனை வதம் செய்த நாள் ஆகும்.
அசுரனான சூரனை வதம் செய்த திருவிளையாடலே கந்த சஷ்டி விழா. சூரபதுமன் ‘நான்’ எனும் அகங்காரத்தாலும், அவனது தம்பிகளான தாரகாசூரன், சிங்கமுகன் ஆகியோர் மாயை மற்றும் கன்மத்தினாலும் வீழ்ந்தனர். இவர்களை கந்தனது ஞானவேல் வென்று உலகில் நீதியை நிலைநாட்டி மக்களை வீடுபேறடைய செய்த நிகழ்வே ‘கந்த சஷ்டி விரதம்’.
கந்தசஷ்டி விரதம் இருக்கும் ஆறு நாட்களும், முருகப்பெருமானின் சிந்தனையைக் கொண்டு சுய ஒழுக்கத்துடன் இருக்கவேண்டும். அதோடு மனதிலுள்ள காமம், குரோதம், உலோபம், மதம், மாச்சர்யம், கோபம், மயக்கம், கஞ்சத்தனம், ஆவல், செருக்கு, பொறாமை ஆகிய தீயகுணங்களை விட்டொழித்து, நற்குணங்களைப் பெறும் நோக்கத்துடன் கடைப்பிடிக்கப்பட்டு வருவதே சஷ்டி விரதத்தின் நோக்கம். விரத நாட்களில் குன்று தோறும் உள்ள முருகன் கோவில்களுக்கு சென்று, மலையை சுற்றி முருக கோஷம் இட்டபடி கிரிவலம் வருவதும் சாலச்சிறந்தது.
ஆறுநாட்களும் முருகனை நினைத்து விரதமிருந்து, ஆறாம் நாளான சூரசம்ஹாரம் தினத்தன்று அதிகாலை எழுந்து நீராடி, தூய உடை உடுத்தி, நெற்றியில் விபூதி, சந்தனம் பூசிக் கொள்ளவேண்டும். பிறகு பூஜை அறையில் முருகப்பெருமானுக்குரிய ஆறுகோண கோலத்தை பச்சரிசி மாவினால் இட்டு ‘சரவணபவ’ எனும் மந்திரம் எழுதி, மங்களத்தை நல்கும் ஐந்து முகவிளக்கேற்றி பூஜைக்கு தயார்படுத்தவேண்டும்.
வீட்டிலுள்ள முருகப்பெருமானின் படம் அல்லது விக்கிரகத்திற்கு தேன், பால், பன்னீர் போன்றவற்றால் அபிஷேகம் செய்து, மஞ்சள், குங்குமத்தால் அலங்கரித்து, வாசனை மிகு வண்ண மலர்களை சூடியும், நறுமணம் கமழும் சாம்பிராணி ஊதுபத்தி ஏற்றியும், சர்க்கரைப் பொங்கலை நைவேத்தியம் செய்ய வேண்டும். அத்துடன் கந்தகுரு கவசம், சஷ்டிக் கவசம் போன்றவைகளுடன் சரண கோஷங் களை எழுப்பியும் இறுதியில் அசுரனான சூரனை அழித்து இன்பம் தந்த முருகப் பெருமானை நினைத்து, தூய பழங்களை வெற்றிலை பாக்குடன் சமர்ப்பித்து, தேங்காய் உடைத்து கற்பூர ஆரத்தியுடன் வேண்டிய வரத்தைக் கேட்டு விரதத்தை நிறைவு செய்யவேண்டும்.
கந்த சஷ்டி விழாவானது முருகப்பெருமான் குடிகொண்டுள்ள, அனைத்து ஆலங்களிலும் பெருவிழாவாக கொண்டாடப்படுகிறது. அவற்றில் முக்கியமானது திருச்செந்தூர் திருத்தலம். இதுதான் சூரபதுமனை, முருகப்பெருமான் வதம் செய்த இடமாகும்.
விரதம் இருக்கும் முறை
விரத நாட்களில் அதிகாலையில் (பிரம்ம முகூர்த்தம்) கண்விழித்து, இயற்கைக் கடன்களை முடித்து, குளித்துவிட்டு தூய்மையான உடல் மற்றும் மனதுடன் திருநீறணிந்து முருக பக்தரான தேவராய சுவாமிகள் இயற்றிய கந்த சஷ்டிக் கவசம் பாடி முருகனை இருகரம் கூப்பித் தொழுது, ஆரத்தி நைவேத்தியம் படைத்துப் பிரார்த்திக்க வேண்டும்.
தொடர்ந்து ஆறுநாட்கள் விரதமிருக்க முடியாதவர்கள், ஆறாம் நாளன்று மட்டுமாவது விரதமிருந்து கந்தனை வணங்கி அடியார்களுக்கு உணவளித்துப் பின் ஒரு நேரம் மட்டும் புசிப்பது நல்லது. நாள் முழுவதும் விரதமிருந்து மதி யம் ஒருவேளை மட்டும் பச்சரிசி சாதத்துடன், தயிர் அல்லது வெல்லம் சேர்த்து உண்ணலாம். காலை மற்றும் இரவில் பால், பழங்கள் மட்டும் சாப்பிடலாம்.
ராட்சச குணங்களை தூண்டக்கூடிய மசாலாப் பொருட்கள், வெங்காயம் போன்றவைகளை விரத நாட்களில் தவிர்த்து சாத்வீக குணத்தைத் தரக்கூடிய வகையில் உணவுகளை நாம் எடுத்துக் கொள்வது உடல் ஆரோக்கியத்துடன், ஆன்மிக வெற்றிக்கும் வழிவகுக்கும். வயோதிகர்கள், நோயாளிகள் ஆகியோர் அவரவர் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு அதன்படி விரதங்களை கடைப்பிடிக்கலாம்.
விரதம் இருக்கும் ஆறுநாட்களும் முருகன் ஆலயங்களுக்கு சென்று வழிபடுவதுடன் வீட்டிலேயே கந்தசஷ்டிக் கவசம், திருப்புகழ், சண்முகக் கவசம், கந்த புராணம், சுப்ரமணிய பஞ்ச ரத்னம், கந்தர் அனுபூதி போன்ற முருகன் புகழ்பாடும் நூல்களை பாராயணம் செய்யலாம்.
இவ்விரதத்தின் பலனாக குழந்தைப் பேறு பெற்றவர்கள் எண்ணற்றவர்கள். முழுமனதோடும் நம்பிக்கையோடும் விரதத்தை மேற்கொள்ளும் பக்தர்களுக்கு, கண்டிப்பாக முருகப் பெருமானின் அருள் கிடைக்கும் என்பது அநேக மக்கள் தங்கள் அனுபவங்களால் உணர்ந்த உண்மை. குழந்தைப்பேறு மட்டுமின்றி குடும்பப் பிரச்சினைகள் நீங்கவும், வேலைவாய்ப்புகள் பெறவும், கடன், பிணி போன்ற தொல்லைகள் அகலவும் கந்த சஷ்டிவிரதம் பெருமளவு துணை புரிகிறது.

நாக சதுர்த்தி விரதம் இருந்து வழிபாடு செய்தால், ராகு கேது தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம். குழந்தை பாக்கியம் ஏற்படும். குழந்தை பாக்கியம் உள்ளவர்கள் இந்த விரதத்தை கடைப்பிடித்தால் புத்திரர்கள் நீண்ட ஆயுளுடன் வாழ்வார்கள்.
* கருடபஞ்சமிக்கு முன்பு சதுர்த்தி திதி அமையும் நாள் நாக சதுர்த்தி நாளாகும். பாற்கடலிருந்து வெளிவந்த ஆலகாலத்தினை சிவபெருமான் உண்ட தினமாக இந்நாள் கருதப்படுகிறது. கர்நாடக மாநிலத்தில் இந்நாளில் தம்பிட்டு என்னும் உணவுப்பொருளை தயார் செய்து இறைவனுக்குப் படைக்கின்றார்கள்.
* இந்நாளில் அட்ட நாகங்களான வாசுகி, ரட்சகன், காளிங்கன், மணிபத்ரன், ஜராவதன், திருதராஷ்டிரன், கார்க்கோடகன், தனஞ்சயன் ஆகியவர்களை வணங்க வேண்டும். நாக தேசத்திற்காக இந்த நாளில் நாக கற்களை வழிபடுதல், புற்றுக்கு பால் ஊற்றுதல் போன்ற சடங்குகளை செய்கின்றனர்.
* ராகு கேது தோஷங்களால் திருமணம் நடக்காதவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இந்த நாகங்களை வழிபடுகின்றனர். நாகப்பிரதிகளுக்கு புது துணி கட்டி பாலால் அபிஷேகம் செய்கின்றனர். சிலர் அருகிலுள்ள நீர் நிலைகளிலிருந்து நீரெடுத்துவந்து அவைகளுக்கு அபிஷேகம் செய்கின்றார்கள்.
நாக சதுர்த்தி விரதம் அனுஷ்டிக்கப்படுவதற்கு காரணம்:
* பகவான், அனந்தன் என்னும் நாகமாக இருந்து பூமியைக் காத்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு உதவியாக தட்சகன், வாசுகி, கார்க்கோடகன் முதலான நாகங்களும் பாதாள லோகத்தில் வசிக்கின்றனர்.
* கஸ்யபருக்கு கத்ரு என்பவளிடம் தோன்றியவர் நாகர். தாய் சொல்லைக் கேளாததால், நெருப்பில் வீழ்ந்து இறந்து போகும்படி தாயே சபித்து விட்டாள். அந்தச் சாபத்தால் பல சர்ப்பங்கள் நெருப்பில் மாண்டு போயின.
* அஸ்தீகர் ஜனமேஜயனது சர்ப்பயாகத்தை நிறுத்தி, சாபத்தை அகற்றினார். அதுவே இந்த பஞ்சமி. அப்பொழுது நாகங்களை வழிபட்டால் நலம் உண்டாகும்.
* புத்திரப்பேறு உண்டாக நாக பிரதிஷ்டை செய்யும்படி சாஸ்திரம் கூறுகிறது. அவ்வாறு பிறந்தவர்களுக்கு நாகராஜன், நாகசுவாமி, நாகப்பன், நாகலட்சுமி எனப் பெயர் சூட்டப்படுவதைக் காணலாம்.
* ஒரு பெண்ணுக்கு இரண்டு சகோதரர்கள் இருந்தனர். அவர்கள் வயலில் வேலை செய்து கொண்டிருக்கும்போது நாகப்பாம்பு கடித்து இறந்து விட்டனர். அவர்களை உயிர்ப்பித்துத் தரும்படி அந்தப் பெண், நாகராஜனை வேண்டி நோன்பு செய்தாள். அவரது வேண்டுகோளுக்காக அவளது சகோதர்களை நாகராஜன் உயிர்ப்பித்த நிகழ்வினை தொன்மமாக கருதுகிறார்கள். அதுவே நாக சதுர்த்தி. பாம்பு கடித்து இறந்தவருக்கு உயிர்ப்பிச்சை அளிக்கும்படி கருடனை நோக்கிச் செய்த நோன்பு கருட பஞ்சமி. தங்கள் விருப்பம் போல் நாக சதுர்த்தி, நாக பஞ்சமி, கருட பஞ்சமி விரதங்களை மேற்கொள்வார்கள்.
* விரதம் எதுவானாலும் சரி அன்றைய தினம், பாம்புப் புற்றில் பால் வார்த்து, புஷ்பங்களைச் சாத்தி, பழம் முதலியவற்றை வைத்து பூஜை செய்வார்கள். புற்று மண்ணை எடுத்து வந்து நெற்றியில் இட்டுக் கொள்வார்கள். குறிப்பாக சகோதரர்களின் நெற்றியில் இடுவார்கள்.
* இந்த நாக சதுர்த்தி நாளில் நாகர் கோவில் நாகராஜா கோவில், பரமக்குடி நயினார் கோவில், நாகப்பட்டினம் நாகநாதர் கோவில் மற்றும் கும்பகோணம் நாகநாதர் கோவில் போன்றவற்றில் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன.
இந்த நாளில் நாகர் சிலைக்கு நீரால் அபிஷேகம் செய்வார்கள். பின்னர் பால் அபிஷேகம் செய்வார்கள். பின் மஞ்சள் பூசிக் குங்குமம் வைப்பார்கள். நாக சதுர்த்தி வழிபாட்டைச் செய்தால், ராகு கேது தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம். அதில் உள்ள ராகு மற்றும் கேது பகவான்களுக்கு அர்ச்சனை செய்து வழிபடுவது மிகுந்த பலனைத் தரும்.
நாக சதுர்த்தியன்று நாக தேவதைக்குப் பூஜை செய்து, புற்றுக்குப் பால் ஊற்றி, புற்றுமண்ணைப் பிரசாதமாக இட்டுக் கொள்வார்கள். அன்றைய தினம் ஒன்பது நாக தேவதைகளான அனந்தன், வாசுகி, கிஷகாலன், அப்ஜன், மகரி அப்ஜன், கங்குபாலன், கார்க்கோடன், குளிஜன், பத்மன் ஆகியோர்களின் நாமத்தைச் சொல்லிக் கொண்டே புற்றுக்குப் பால் ஊற்றிப் பூஜிப்பது நல்லது. அருகில் உள்ள புற்றுக் கோயிலுக்குச் சென்று, பால் மற்றும் முட்டைகள் வழங்கி வழிபட்டால், சர்ப்ப தோஷங்கள் யாவும் நீங்கும்.
நாக சதுர்த்தி விரதத்தால் குழந்தை பாக்கியம் ஏற்படும். குழந்தை பாக்கியம் உள்ளவர்கள் இந்த விரதத்தை கடைப்பிடித்தால் புத்திரர்கள் நீண்ட ஆயுளுடன் வாழ்வார்கள்.

கொரோனா ஊரடங்கு காரணமாக சபரிமலைக்கு செல்ல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால், ஐயப்ப பக்தர்களே மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர். ஐயப்ப பக்தர்கள் அணியும் காவி வேட்டிகள், மாலைகள் விற்பனையும் கடுமையாக பாதிக்கப்பட்டது.
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் முதல் நாளில் மாலை அணிந்து விரதம் இருந்து மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜை காலங்களில் சபரிமலை சென்று ஐயப்பனை தரிசிப்பது வழக்கம்.
இதனால் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை முதல் நாளில் இருந்து தொடர்ந்து பத்து நாட்கள் வரையில் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து தங்களது விரதத்தை தொடங்குவார்கள்.
இந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக சபரிமலைக்கு செல்ல பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்து தமிழக எல்லையில் 24 மணி நேரத்திற்கு முன்னதாக கொரோனா மருத்துவ பரிசோதனை சான்றிதழுடன் வந்தால் மட்டுமே சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என கேரள அரசு அறிவித்துள்ளது. இதனால் பெரும்பாலான பக்தர்கள் இந்த ஆண்டு சபரிமலைக்கு சென்று ஐயப்பனை தரிசிக்க முடியாமல் மிகுந்த மனவேதனையில் உள்ளனர்.
இருப்பினும் ஆன்னலைனில் முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டும் கார்த்திகை முதல்நாளான நேற்று கோவில்களில் மாலை அணிந்து தங்களது விரதத்தை மேற்கொண்டனர். கோவில்களுக்கு சென்று தங்கள் குருசாமி கைகளால் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர். . மேலும் ஆன்லைனில் முன்பதிவு செய்யாத சில பக்தர்களும், எப்படியும் ஐயப்பனை தரிசிக்க வழி கிடைக்கும் என்ற நோக்கத்தில் மாலை அணிந்து கொண்டனர்.
தஞ்சை யாகப்பா நகரில் உள்ள ஐயப்பன் கோவில், புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில், தஞ்சை பெரியகோவில் உள்பட பல்வேறு கோவில்களிலும் பக்தர்கள் நேற்று மாலை அணிந்து கொண்டனர்.
ஒரு சில பக்தர்கள் கோவிலுக்கு செல்லாமல் வீட்டிலேயே பூஜை அறையில் தங்களது பெற்றோர் கைகளினால் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.
இதனால் இந்த ஆண்டு ஐயப்பனுக்கு மாலை அணியும் பக்தர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது.
மாலை அணியும் ஐயப்ப பக்தர்களின் எண்ணிக்கை குறைந்ததால் காவி, கறுப்பு வேட்டிகள் விற்பனை, ஐயப்ப பக்தர்கள் அணியும் மாலைகள் விற்பனையும் கடுமையாக பாதிக்கப்பட்டது.

முக்கடல் சங்கமத்தில் புனித நீராடி ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர். குரு சாமிகள் மற்ற சாமிகளுக்கு மாலை அணிவித்தனர்.
கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல, மகர விளக்கு பூஜைக்காக நேற்று முன்தினம் நடை திறக்கப்பட்டது. கார்த்திகை மாதம் நேற்று பிறந்தது. அதைத்தொடர்ந்து தமிழகத்தில் உள்ள ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினார்கள்.
அதே போல் குமரி மாவட்டத்திலும் ஐயப்ப பக்தர்கள் விரதத்தை தொடங்கினார்கள். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான ஐயப்ப பக்தர்கள் கன்னியாகுமரி கடலுக்கு அதிகாலை வந்தனர். அவர்கள் முக்கடல் சங்கமத்தில் புனித நீராடினார்கள். பின்னர் அவர்கள் கருப்பு மற்றும் நீல நிற உடை அணிந்து பரசுராமர் விநாயகர் கோவிலில் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினார்கள். குரு சாமிகள் மற்ற சாமிகளுக்கு மாலை அணிவித்தனர். அப்போது அவர்கள் ‘சாமியே சரணம் ஐயப்பா‘ என்று பக்தி கோஷமிட்டனர். அதைத்தொடர்ந்து அவர்கள் பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.
நாகர்கோவில் நாகராஜா கோவிலுக்கு நேற்று காலை ஏராளமான ஐயப்ப பக்தர்கள் வந்திருந்தனர். அவர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர். இதேபோல் பார்வதிபுரம் ஐயப்பன் கோவில், சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.
குமரி மாவட்டத்தில் 20 வயது முதல் 50 வயதுக்குட்பட்டவர்களே அதிக அளவில் மாலை அணிந்ததை காணமுடிந்தது. இதுகுறித்து ஐயப்ப பக்தர்களிடம் கேட்டபோது, வழக்கமாக கார்த்திகை மாதம் விரதம் இருந்து சபரிமலைக்கு செல்ல வேண்டும். தற்போது கொரோனாவால் கேரள அரசு கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதனால் வயதில் மூத்தவர்கள், சிறுவர், சிறுமிகள் பெரும்பாலானோர் விரதத்தை மேற்கொள்ளவில்லை. இருப்பினும் நாங்கள் கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றி சாமியை தரிசனம் செய்வோம் என்றனர்.

ஆண்டு தோறும் ஐயப்பனை விரதம் இருந்து வழிபட செல்லும் ஐயப்ப பக்தர்களில் பெரும்பாலானவர்கள் மாலை அணியாமல் விரதம் இருக்க தொடங்கி விட்டனர்.
கார்த்திகை மாதம் பிறந்தாலே சரணகோஷமும், எங்கு பார்த்தாலும் மாலை அணிந்த ஐயப்ப பக்தர்களையும் பார்க்க முடியும்.
ஆனால் இந்த ஆண்டு கொரோனா காரணமாக சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மண்டலபூஜை, மகர விளக்கு காலத்தில் ஐயப்ப பக்தர்கள் எல்லோராலும் செல்ல இயலாது.
தினமும் ஆன்-லைனில் முன்பதிவு செய்த ஆயிரம் பேரும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தலா 2 ஆயிரம் பேரும் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
அந்தவகையில் இந்த ஆண்டு நடைபெறும் மண்டல பூஜை, மகர விளக்கு காலங்களில் அதிகபட்சமாக மொத்தம் ஓரு லட்சம் பக்தர்கள் பட்டுமே செல்ல முடியும். வழக்கமாக மண்டல பூஜை நாளான டிசம்பர் 27 மற்றும் மகரவிளக்கு நாளான ஜனவரி 14 ஆகிய இரு தினங்களில் மட்டுமே பல லட்சம் பக்தர்கள் வழிபட செல்வது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டு தரிச னத்துக்கு செல்லும் பக்தர்களுக்கான முன்பதிவு அனைத்தும் நிறைவடைந்து விட்டது.
இதனால் ஆண்டு தோறும் மாலை அணிந்து விரதம் இருந்து இருமுடிகட்டி ஐயப்பன் கோவில் செல்லும் பக்தர்கள் நெருக்க டியான இந்த சூழ்நிலை காரணமாக சபரிமலை யாத்திரை செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்குவார்கள். ஆண்டு தோறும் அண்ணாநகர் ஐயப்பன் கோவிலில் இதே நாளில் குறைந்த பட்சம் 3 ஆயிரம் பேர் மாலை அணிவார்கள். ஆனால் இன்று சுமார் 200 பேர்தான் மாலை அணிந்தனர்.
அதேபோல் மகாலிங்க புரம், மடிப்பாக்கம், ராஜா அண்ணாமலைபுரம் அய்யப் பன் கோவில்களிலும் மிக குறைந்த அளவிலேயே பக்தர்கர் மாலை அணிந்தனர்.
மாலை அணிவது பிரச்சினை அல்ல. மாலை அணிந்த பிறகு விரதம் இருந்து இருமுடி கட்டி பதினெட்டு படிகள் வழியாக சென்று ஐயப்பனை தரிசிக்க வேண்டும். அது முடியாது என்பதால் பலர் இந்த ஆண்டு மாலை அணிவதை தவிர்த்து விட்டனர்.
மடிப்பாக்கம் ஐயப்பன் கோவிலில் பதினெட்டு படிகள் உள்ளது. மேலும் அங்கு கேளர நம்பூதிரிகள்தான் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை முறைகள் படியே பூஜை செய்கிறார்கள்.
வழக்கமாக சபரிமலை செல்ல இயலாதவர்கள் இருமுடி தாங்கி பதினெட்டு படிவழியாக செல்ல அனுமதிக்கப்படுவார்கள். ஆனால் கொரோனா காரணமாக இந்த ஆண்டு இங்கும் பல்வேறு கட்டுப் பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
மாலை அணிய வரும் பக்தர்களின் மாலையை சன்னிதானத்தில் வைத்து பூஜித்து கொடுத்தனர். குருசாமி மார்கள் மட்டுமே மாலை போட்டுவிட்டனர்.
அதேபோல் இருமுடி கட்டி வருபவர்களும் 3 நாட்களுக்கு முன்பு முன்பதிவு செய்ய வேண்டும் கோவிலில் வைத்து இருமுடி கட்ட அனுமதி இல்லை. கொரோனா பரிசோதனை செய்து சான்றிதழுடன் வரவேண்டும். படியேறி தரிசிக்கலாம். நேரடியாக நெய்அபிஷேகம் செய்ய முடியாது. இருமுடியில் எடுத்துவரும் நெய்யை ஒப்படைத்துவிட வேண் டும். அபிஷேகம் செய்த நெய் பிரசாதமாக வழங்கப் படும். 10 வயதுக்கு கீழ் மற்றும் 60 வயதுக்கு மேற் பட்டவர்களுக்கு அனுமதி இல்லை.
ராஜா அண்ணாமலை புரம் ஐயப்பன் கோவிலில் கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளுடன் வழக்கம்போல் படியேற ஐயப்ப பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
ஆண்டு தோறும் ஐயப்பனை விரதம் இருந்து வழிபட செல்லும் ஐயப்ப பக்தர்களில் பெரும்பாலானவர்கள் மாலை அணியாமல் இன்று முதல் விரதம் தொடங்கி விட்டனர். அவர்கள் தங்கள் வீடுகளிலேயே நெய்தீபம் ஏற்றி தினமும் ஐயப்பன் பூஜை செய்கிறார்கள்.
குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான ஐயப்ப பக்தர்கள் முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரி கடலில் புனித நீராடினார்கள்.
இதைத்தொடர்ந்து சாமியே சரணம் ஐயப்பா என்ற பக்தி கோஷத்துடன் மாலை அணிந்து விரதம் தொடங்கினார்கள். குரு சாமிகள் மற்ற சாமிகளுக்கு மாலை அணிவித்தனர். கருப்பு மற்றும் நீல உடையுடன் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் கன்னியாகுமரியில் குவிந்திருந்தனர். பின் னர் பகவதி அம்மன் கோவிலிலும் சாமி தரிசனம் செய் தனர்.
இதேபோல் பார்வதிபுரம் ஐயப்பன் கோவிலிலும் மாலை அணிந்து விரதம் தொடங்க ஐயப்ப பக்தர்கள் வந்திருந்தனர்.
நாகர்கோவில் நாகராஜா கோவில், சுசீந்திரம் தாணுமாலயசுவாமி கோவில், பூதப்பாண்டி பூதலிங்க சுவாமி கோவில் மற்றும் மாவட்டத்தில் உள்ள பல்வேறு அம்மன் கோவில்களிலும் ஐயப்ப பக்தர்களின் கூட்டம் அலை மோதியது.

முருகனின் அறுபடை வீடுகள் அமைந்துள்ள தலங்களிலும் மற்ற கோவில்களிலும் காப்புக்கட்டி கந்தசஷ்டி விரதத்தை பக்தர்கள் தொடங்கினர்.
தமிழ் கடவுளான முருகப்பெருமானுக்கு நடத்தப்படும் விழாக்களில் கந்த சஷ்டி விழா மிகவும் முக்கியமானதாகும். ஐப்பசியில் வரும் அமாவாசைக்கு மறுநாள் இந்த விழா தொடங்குவது வழக்கம். அதன்படி முருகனின் அறுபடை வீடுகள் அமைந்துள்ள தலங்களிலும் மற்ற கோவில்களிலும் காப்புக்கட்டி கந்தசஷ்டி விரதத்தை பக்தர்கள் தொடங்கினர்.
தேவர்களை துன்புறுத்திய சூரபதுமனை முருகன் வதம் செய்தார். அந்த நாள் கந்தசஷ்டி விழாவாகவும், சூரசம்ஹாரம் நிகழ்ச்சியாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவையொட்டி 6 நாட்கள் பக்தர்கள் விரதம் இருந்து கடைசி நாளில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சியை பார்த்து தனது விரதத்தை முடிப்பார்கள்.
இதையொட்டி அனைத்து முருகன் கோவில்களிலும் 6 நாட்களும் சுவாமிக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படும். விழா நாட்களில் உள் திருவிழாவாக யாகசாலை பூஜை, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் வருகிற 20-ந் தேதி மாலை 4.30 மணிக்கு நடக்கிறது.
திருச்செந்தூர், பழனி உள்ளிட்ட முருகனின் அறுபடை வீடுகளில் சூரசம்ஹார விழா மிக சிறப்பாக நடத்தப்படுவது வழக்கம். வயலூர் முருகன் கோவிலிலும் சூரசம்ஹாரம் நடத்தப்படுவது உண்டு. அதற்கு முன்னதாக சுவாமி தினமும் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். ஆனால் கொரோனா காரணமாக சுவாமி வீதி உலா வருவது நிறுத்தப்பட்டுள்ளது. சூரசம்ஹாரம் மட்டும் பக்தர்கள் இன்றி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கேதார கவுரி விரதம் பொதுவாக, 21 நாள் அனுசரிக்க வேண்டிய விரதம். புரட்டாசி மாதம் சுக்லபட்ச தசமி திதியில் தொடங்கி, ஐப்பசி மாதம் கிருஷ்ணபட்சம் அமாவாசை வரைக்கும் தொடரும் விரதம் இது.
கயிலாயத்தில் பரமசிவனும், பார்வதியும் வீற்றிருந்தனர். பிரம்மா, விஷ்ணு முப்பத்து முக்கோடி தேவர்களும், ரிஷிகளும் அனுதினமும் சிவனையும், பார்வதியையும் வலம் வந்து வணங்கிச் செல்வார்கள். ஆனால் பிருங்கி என்ற பெயருடைய முனிவர் மட்டும், பார்வதியை விடுத்து சிவபெருமானை மட்டும் வலம் வந்து வணங்கிச் செல்வதை வழக்கமாக வைத்திருந்தார். இதனால் கோபம் கொண்ட பார்வதிதேவி, இதுபற்றி சிவபெருமானிடம் கேட்டாள்.
அதற்கு சிவபெருமான், “பிருங்கி முனிவருக்கு, பாக்கியங்கள் எதுவும் தேவையில்லை. அவர் மோட்சத்தை மட்டுமே விரும்புகிறார். எனவேதான் என்னை மட்டும் சுற்றி வந்து வழிபடுகிறார்” என்றார்.
உடனே பார்வதி, பிருங்கி முனிவரைப் பார்த்து “முனியே.. உன்னுடைய தேகத்தில் ஓடும் ரத்தம், தசை, நரம்புகள் உள்ளிட்ட சக்திக்குரிய அனைத்தும் நான் வழங்கியவை. அதனை எனக்குத் திருப்பிக்கொடு” என்றாள். பிருங்கி முனிவர் அப்படியேச் செய்தார். இதனால் அவர் எலும்பும், தோலும் மட்டும் கொண்டவராக வலுவிழந்து தடுமாறினார். அப்போது சிவபெருமான், பிருங்கி ரிஷியினை நோக்கி, ‘நீ பார்வதி தேவி யினை விட்டு என்னை நமஸ்கரித்ததால் அன்னை உனக்கு இந்த தண்டனை அளித்தாள்’ எனக் கூறி ஒரு கைத்தடி ஒன்றினைக் கொடுத்தார்.
இதைக்கண்டு சிவன் மீது கோபமடைந்த பார்வதி, கயிலாயத்தை விட்டு பூவுலகிற்கு வந்தாள். ஒரு நந்தவனத்தில் இருந்த ஒரு மரத்தின் அடியில் எழுந்து அருளினாள். அந்தப் பகுதியானது 12 ஆண்டுகள் மழையின்றி வறண்டு கிடந்தது. பார்வதி தேவி வந்ததும், மழை பெய்தது. அங்கிருந்த செடி, கொடி, மரங்கள் அனைத்தும் புத்துயிர் பெற்றன. பல அரிய பூக்களின் வாசத்தை நுகர்ந்து, அங்கு வந்தார் வால்மீகி முனிவர். அவர் அம்பிகையை வழிபட்டு, தன்னுடைய ஆசிரமத்திற்கு அழைத்துச் சென்றார்.
அப்போது பார்வதி தேவி, “முனிவரே.. நான் மீண்டும் ஈசனுடன் சேருவதற்கு, இந்த பூலோகத்தில் மிக மேலான ஒரு விரதத்தினை நான் ஏற்று செய்ய வேண்டும். அப்படியொரு விரதத்தைப் பற்றி கூறுங்கள்” என்று கேட்டாள்.
“இந்த பூலோகத்தில் ஒருவரும் அறியாத ஒரு விரதமுண்டு. அந்த விரதத்திற்கு ‘கேதாரீஸ்வரர் நோன்பு’ என்று பெயர். அந்த விரதத்தினை அனுஷ்டித்தால் நீங்கள் நினைத்தது நடக்கும்” என்றார், வால்மீகி முனிவர்.
அதன்படி அம்பிகை, அந்த விரதத்தை முறை தவறாமல் கடைப்பிடித்தாள். இதையடுத்து விரதத்தின் 21-ம் நாள் அன்று, தேவ கணங்கள் சூழ அம்பிகைக்கு சிவபெருமான் காட்சி அளித்தார். அதோடு தனது இட பாகத்தினை அம்பிகைக்கு அளித்து, அர்த்தநாரீஸ்வரராக கயிலாயம் சென்றார். அம்பிகையே விரதம் இருந்த காரணத்தால், இது ‘கேதார கவுரி விரதம்’ என்று அழைக்கப்படுகிறது.
விரதம் இருக்கும் முறை
கேதார கவுரி விரதம் பொதுவாக, 21 நாள் அனுசரிக்க வேண்டிய விரதம். புரட்டாசி மாதம் சுக்லபட்ச தசமி திதியில் தொடங்கி, ஐப்பசி மாதம் கிருஷ்ணபட்சம் அமாவாசை வரைக்கும் தொடரும் விரதம் இது. தினமும் காலை எழுந்து நீராடி சுத்தமான ஆடை அணிந்து, சிவ பூஜை செய்ய வேண்டும். நோன்பின் முதல் நாள் அன்று 21 நூல் கொண்டு 21 முடிச்சுகளால் கலசத்தினை சுற்றி அமைப்பர். இக்கலசமே சிவ-பார்வதியாக வழிபடப்படுகின்றது. இந்த விரதம் இருப்பவர்கள், தினமும் வெற்றிலை, பாக்கு, பழம், தேங்காய் நைவேத்தியம் வைத்து அதனையே பிரசாதமாக உண்பார்கள். 21-ம் நாள் அன்று 21 அதிரசம், 21 வாழைப்பழம், 21 மஞ்சள், 21 வெற்றிலை, 21 கொட்டை பாக்கு, தேங்காய், சந்தனம், பூக்கள் வைத்து வழிபடுவர். 21 வகை காய்கறிகள் கொண்டு உணவினை சமைத்து உற்றார், சுற்றார் சூழ சாப்பிட்டு விரதத்தினை முடிப்பர்.
இது பெண்களுக்கு மிகச் சிறப்பான விரத பூஜையாகும். இப்பூஜை அவரவர் குடும்ப வழக்கப்படி சற்று மாறுபடும். அவரவர் பெரியோர்களிடம் கேட்டு அறிந்து அவர்கள் மூலம் எடுத்துச் செய்வது நல்லது. ஐப்பசி அமாவாசை அன்று செய்யும் பூஜையில் முடிந்தால் தங்கம் (நகை) சாத்தி, பட்டு வஸ்திரம் சுற்றி பூவால் அலங்கரித்து சந்தன குங்குமம் இட வேண்டும். விளக்கேற்றி வைக்க வேண்டும். மஞ்சளால் பிள்ளையார் பிடித்து வைத்து அருகம்புல், பூ சுற்றி, மஞ்சள் குங்குமம் இட்டு விநாயகரை அர்ச்சிக்க வேண்டும். அதோடு இறைவனின் 16 நாமங் களைச் சொல்லி தூப தீப ஆராதனை செய்து நைவேத்தியம் படைத்து வழிபட வேண்டும்.
பின்னர் அம்மி குழவியை நன்கு சுத்தம் செய்து பலவித அலங்காரங்களை அதற்கும் செய்து வில்வம், தும்பை போன்ற விசேஷ இலை, பூக்களையும் சேர்த்து சிவ நாமம் செய்து பூஜிக்க வேண்டும். தூப, தீப ஆராதனைகள் நைவேத்தியம் வைத்து அட்சதை போட்டு வணங்கி, வீட்டில் உள்ள பெரியவர்கள் மூலம் நோன்பு கயிறு கட்டிக் கொள்ள வேண்டும். ஆண்கள் வலது கையிலும், பெண்கள் இடது கையிலும் நோன்பு கயிறு கட்டிக் கொள்ள வேண்டும். வருவோருக்கு மஞ்சள், குங்குமம், தாம்பூலம் கொடுக்க வேண்டும். இவ்வாறு செய்து வந்தால், 21-வது நாள் ஈஸ்வரன் காட்சி அளித்து வேண்டிய வரம் அளிப்பார் என்பது ஐதீகம்.

ஐப்பசி மாதம் என்பது விசேஷமான மாதம். அற்புதமான மாதம். இந்த மாதத்தில் வருகிற பிரதோஷம் மகத்துவமானது. இன்று விரதம் இருந்து சிவபெருமானை வழிபாடு செய்யுங்கள்
ஐப்பசி மாதம் என்பது விசேஷமான மாதம். அற்புதமான மாதம். இந்த மாதத்தில் வருகிற பிரதோஷம் மகத்துவமானது. ஐப்பசியை துலா மாதம் என்பார்கள். காவிரியில் துலா ஸ்தானக் கட்டம் என்றே உள்ளது. மயிலாடுதுறையில் காவிரிக்கரையில் துலா ஸ்தானக் கட்டம் என்றே அமைக்கப்பட்டுள்ளது.
இந்த மாதத்தில், காவிரியில் நீராடி, துவாதசியில் பெருமாளை தரிசிப்பது மகா புண்ணியம். தனம் தானியத்தைப் பெருக்கித் தரும் என்பது ஐதீகம்.
ஐப்பசி மாதத்தில் வரும் பிரதோஷம் இல்லத்தில் சுபிட்சத்தைத் தரும், கடன் தொல்லையில் இருந்து மீட்டெடுக்கும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
இன்று பிரதோஷ நாளில் காலையில் இருந்து விரதம் இருந்து பிரதோஷ வேளையில், மாலையில், சிவன் கோவிலுக்குச் செல்லுங்கள். நந்திதேவருக்கு நடைபெறும் அபிஷேக ஆராதனையைக் கண்ணார தரிசித்துப் பிரார்த்தனை செய்யுங்கள். சிவ கடாக்ஷத்தைப் பெறுவீர்கள். இல்லத்தில் சுபிட்சம் உண்டாகும்.