search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    முருகன்
    X
    முருகன்

    பக்தர்கள் தண்டு விரதம் நிறைவு செய்து வழிபாடு

    கந்தசஷ்டி திருவிழாவின் 7-ம் நாளான இன்று (சனிக்கிழமை) திருக்கல்யாண வைபவத்தை விரதம் இருக்கும் பக்தர்கள் பார்த்து, முருகப்பெருமானை வணங்குவார்கள். பின்னர் நடக்கும் திருமண விருந்தில் பக்தர்கள் கலந்துகொண்டு சஷ்டி விரதத்தை நிறைவு செய்வார்கள்.
    பழனி முருகன் கோவிலில் கந்தசஷ்டி திருவிழாவையொட்டி பக்தர்கள் கைகளில் காப்பு கட்டி சஷ்டி விரதம் தொடங்கினர். அதன்படி, 6 நாட்கள் விரதம் இருக்கும் பக்தர்கள் 6-ம் நாளில் வாழைத்தண்டு, உளுந்தம்பருப்பு, கொய்யா, மாதுளை, திராட்சை, ஆப்பிள் உள்ளிட்ட பழங்கள், மாங்காய், தயிர் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து தண்டு கூட்டு தயாரிப்பார்கள்.

    பின்னர் அதனை முருகனுக்கு படைத்து வழிபாடு நடத்துவார்கள். இந்த வழிபாடு தண்டுவிரதம் நிறைவு செய்யும் வழிபாடு என அழைக் கப்படுகிறது. பின்னர் பக்தர்கள் அதை சாப்பிட்டு தண்டு விரதத்தை நிறைவு செய்வார்கள்.

    இதையடுத்து 7-ம் நாளான இன்று (சனிக்கிழமை) திருக்கல்யாண வைபவத்தை விரதம் இருக்கும் பக்தர்கள் பார்த்து, முருகப்பெருமானை வணங்குவார்கள். பின்னர் நடக்கும் திருமண விருந்தில் பக்தர்கள் கலந்துகொண்டு சஷ்டி விரதத்தை நிறைவு செய்வார்கள்.
    Next Story
    ×