என் மலர்tooltip icon

    முக்கிய விரதங்கள்

    கர்ம வினைகளுக்கு ஏற்ப அவர்களுக்கு இன்ப- துன்பங்களை வழங்குபவர், சனி பகவான். ஐயப்பனை நோக்கி விரத முறைகளை சரியாக பின்பற்றி வந்தால், சனி பகவானின் பார்வையில் இருந்தும் தப்பிக்கலாம்.
    மனிதர்களின் கர்ம வினைகளுக்கு ஏற்ப அவர்களுக்கு இன்ப- துன்பங்களை வழங்குபவர், சனி பகவான். உலக உயிர்களின் படைத்தல் தொழிலை செய்பவர், பிரம்மன். அவர்களை காக்கும் தொழிலை செய்பவர், மகாவிஷ்ணு. அழித்தல் தொழிலை செய்பவர், ஈசன். அதன்படியே உயிர்களின் கர்மவினைப்படி, அவர்களுக்கு பலன்களைக் கொடுக்கும் வேலையைச் செய்பவர், சனி பகவான். படைத்தல், காத்தல், அழித்தல் போன்ற தொழில்கள் நின்றுவிட்டால் எப்படி உலகம் இயங்காதோ, அப்படித்தான், கர்மவினைகளுக்கு ஏற்ப சனி பகவான் பலன்கள் வழங்குவதை நிறுத்தி விட்டாலும், உலக இயக்கம் தடைப்பட்டுப் போகும்.

    சபரிமலையில் வீற்றிருக்கும் ஐயப்பன், தன்னுடைய பக்தர்களுக்கு சனியின் 7½ ஆண்டு பிடியில் இருந்து விலக்கு அளிக்கும்படி கேட்டார். அதற்கு பதிலளித்த சனி பகவான், “அவ்வாறு செய்வதால், உலகின் இயக்கம் தடைபட்டுப் போகும். எனவே அதனைச் செய்ய இயலாது” என்று மறுத்து விட்டார்.

    இருப்பினும் விடாமல், சனி பகவானிடம் தன்னுடைய கோரிக்கையை நிறைவேற்றித் தரும்படி கேட்டார், ஐயப்பன். அதோடு 7½ ஆண்டுகளில் கர்ம வினைகளுக்கு ஏற்ப வழங்கும் தண்டனையை, என்னை வழிபடும் பக்தர்களை ஒரு மண்டல கால விரதத்தில் செய்ய வைப்பதாகவும், அவ்வாறு செய்தால் தன்னுடைய பக்தர்களுக்கு ஏழரை ஆண்டு தண்டனையில் இருந்து விடுதலை அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண் டார்.

    அதைக் கேட்ட சனி பகவான், “முதலில் ஏழரை ஆண்டுகளில் நான் அளிக்கும் கர்மவினையின் பலன்களைப் பற்றி கூறுகிறேன். அதன்பிறகு நீங்கள் ஒரு முடிவுக்கு வாருங்கள்” என்றார். பின்னர் அந்த பலன்களைப் பற்றி சொல்லத் தொடங்கினார். “விதவிதமான உணவு உண்டு, பழச்சாறுகளை அருந்தி மகிழும் பலரை, சோற்றுக்கே வழியின்றி அலைய வைப்பேன். 

    அதனால் அவர்கள் பட்டினியிலிருந்து தப்பிக்க முடியாது. மலர் தூவிய மஞ்சத்தில் உறங்கிய மன்னவனைக் கூட, கல்லிலும், மண்ணிலும் உறங்க வைப்பேன். முக்கிய விஷயம் என்னவென்றால், சிலரின் கர்மவினைப் பயனாக, என் பார்வை பட்டால் இணைந்திருக்கும் தம்பதியர் கூட பிரிந்து விடுவார்கள். கட்டிக்கொள்ள உடை இல்லாமல், தலைக்கு எண்ணெய் இல்லாமல், காலுக்கு காலணி இல்லாமல், தன்னைத் தானே கண்டுகொள்ள முடியாத படி, உருவம் சிதைந்து, செயலிழந்து, சக்தியின்றி வாடிப் போக வைத்துவிடுவேன். மனம் மிகு பன்னீரில் குளித்தவர்களைக் கூட, நான் வெறும் தண்ணீருக்கே அல்லாட வைப்பேன்” என்று பட்டியலிட்டார்.

    உடனே ஐயப்பன், சனி பகவானின் ஏழரை ஆண்டு தண்டனையை, ஒரு மண்டலத்தில் பொருந்தும்படி ஒவ்வொன்றுக்காக விளக்கம் அளித்தார். அதன்படி “என்னுடைய பக்தர்கள் எளிமையான உணவை, அதுவும் ஒருவேளை மட்டுமே உண்டு விரதம் இருப்பார்கள். அதோடு அவர்கள் கட்டில் போன்ற ஆடம்பரங்களின் மேல் நாட்டம் வைக்காமல், என்னை நினைத்து விரதம் இருக்கும் ஒரு மண்டல காலமும், வெறும் தரையில் படுத்து உறங்குவார்கள். 

    அந்த விரத காலத்தில் திருமணமானவராக இருந்தால், கடுமையான பிரம்மச்சரியத்தைக் கடைப்பிடித்து, காலில் காலணி இல்லாமல் காடு மேடுகளைக் கடந்து, என்னை தரிசிக்க வருவார்கள். மேலும் உனக்கு பிடித்த வண்ணமான கருப்பு நிறத்தில் மட்டுமே, விரத காலம் முழுவதும் ஆடை அணிவார்கள். என்னை நோக்கி விரதம் இருக்கும் அந்த ஒரு மண்டல காலமும், என்னுடைய பக்தர்கள் அவர்களை அழகுபடுத்திக்கொள்ளாமல், சுகங்களை தியாகம் செய்து பக்தி சிரத்தையோடு, நீங்கள் சொன்ன பலன்களை அனுபவித்தபடியே என்னை வழிபட வருவார்கள். காலையிலும், மாலையிலும் பச்சை தண்ணீரில் குளித்து விரதத்தை மேற்கொள்வார்கள்.”

    சபரிமலை தர்ம சாஸ்தாவான, ஐயப்பனின் இந்த விளக்கத்தை ஏற்றுக்கொண்டார் சனி பகவான். அதன்படியே இன்றளவும் ஐயப்ப பக்தர்கள் தங்கள் விரதத்தை மேற்கொண்டு வருகிறார்கள். எனவே ஐயப்பனை நோக்கி விரத முறைகளை சரியாக பின்பற்றி வந்தால், சனி பகவானின் பார்வையில் இருந்தும் தப்பிக்கலாம்.
    பிரதோஷ விரதத்தை எந்த மாதத்தில் தொடங்க வேண்டும் இந்த விரதத்தை அனுஷ்டிப்பதால் கிடைக்கு பலன்கள் என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
    பிரதோஷ விரதம் மேற்கொண்டால் திருமணம் கைகூடும், வறுமை விலகும், நோய்கள் நீங்கும், சகல காரியங்களில் வெற்றி கிடைக்கும்.

    பிரதோஷ விரதம் இருந்து சிவனை வழிபட்டால் சிவன் அருள் கிடைக்கும்.

    சிவபெருமானை நினைத்து தியானம் செய்வதற்கு மிக உகந்த நேரம் பிரதோஷ நேரம் தான்.

    பிரதோஷ வழிபாட்டை தொடர்ந்து செய்து வந்தால் மறுமையிலும் பலன்கள் கிடைக்கும்.

    பிரதோஷ கால விரதம் ஆவணி, கார்த்திகை ஆகிய மாதங்களில் தொடங்குவது சிறந்தது.

    பிரதோஷ நேரத்தில் சிவாலயம் சென்று பூஜையில் கலந்து கொண்டு சிவபெருமானை வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறும்.
    எந்த ராசிக்காரர்கள் எந்த கிழமைகளில் பைரவரை விரதம் இருந்து வழிபட்டால் என்வென்ன பலன்களை அடையலாம் என்று அறிந்து கொள்ளலாம்.
    ஞாயிறு - சிம்மம்

    வாரத்தின் முதல் நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் பைரவருக்கு அர்ச்சனை மற்றும் ருதராபிஷேகம் செய்து வடமாலை சாத்தி வழிபட்டால் திருமணத் தடைகள் நீங்கும். பொருளாதாரத்தில் பின்தங்கி இருப்பவர்கள் ராகுகால நேரத்தில் கால பைரவருக்கு முந்திரி பருப்பு மாலைகட்டி, புனுகுசாற்றி, வெண்பொங்கல் நைவேத்தியம் செய்தால் இழந்த செல்வத்தை மீட்கலாம். செல்வ வளம் பெருகும்.
    சிம்ம ராசிக்காரர்கள் இந்த கிழமைகளில் பைரவரை வழிபடுவது மிகவும் சிறப்பானது ஆகும். 
    மகம்: ஸ்ரீநர்த்தன பைரவர்-வேலூர் கோட்டையின் ஒரு பகுதியில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோவில். பூரம்: ஸ்ரீ கோட்டை பைரவர்- பட்டீஸ்வரம்-தேனு புரீசுவரர்கோவில். உத்திரம்: ஸ்ரீ ஜடாமண்டல பைரவர்- சேரன்மாதேவி அம்மைநாதர் கைலாசநாதர் கோவில்.

    திங்கட்கிழமை - கடகம்

    கடக ராசிக்காரர்கள் திங்கட்கிழமைகளில் பைரவரை வழிபடலாம். திங்கட்கிழமையில் சிவபெருமானுக்கு பிரியமான வில்வத்தால் அர்ச்சனை செய்து பைரவரை வழிபட்டால், சிவனருள் கிடைக்கும். திங்கட்கிழமை அல்லது சங்கடஹர சதுர்த்தியன்று பைரவருக்கு பன்னீர் அபிஷேகம் செய்து சந்தனக்காப்பு போட்டு, புனுகு பூசி நந்தியாவட்டை மலரை சாற்றி வழிபட்டால் கண் சம்மந்தமான நோய்கள் அகலும்.
    புனர்பூசம்: ஸ்ரீவிஜய பைரவர்-பழனி சாதுசுவாமிகள் மடாலயம். பூசம்: ஸ்ரீ ஆவின் பைரவர்-(திரு) வாஞ்சியம்- வாஞ்சி நாதர் கோவில்.
    ஆயில்யம்: ஸ்ரீ பாதாள பைரவர்- காளஹஸ்தி.

    செவ்வாய் - மேஷம் விருச்சிகம்

    செவ்வாய்க்கிழமை மாலையில் பைரவருக்கு மிளகு தீபம் ஏற்றி வழிபட்டால் நாம் இழந்த பொருள் எதுவாக இருந்தாலும் அது திரும்ப கிடைக்கும். மேலும் மேஷம், விருச்சிக ராசிக்காரர்கள் பைரவரை வழிபட உகந்த நாளாகும். எல்லா அஷ்டமி திதிகளிலும் பைரவர் விரதம் இருக்கலாம். செவ்வாய்க்கிழமைகளில் அஷ்டமி திதி இணைந்து வந்தால் சிறப்பு. குறைந்தது 21 அஷ்டமிகள் தொடர்ந்து விரதம் இருக்க வேண்டும். ஆறு தேய்ப்பிறை அஷ்டமிகளில் பைரவரை சிவப்பு நிற அரளிப் பூவால் வழிபட்டு வந்தால் நற்பலன்கள் உங்களை வந்தடையும்.
    அஸ்வினி: ஸ்ரீ ஞான பைரவர்- கோவை, பேரூர், பட்டீஸ்வரர் கோவில், இங்கு பைரவருக்கு நாய் வாகனம் இல்லை. பரணி: ஸ்ரீமகா பைரவர்- திருப்பத்தூர் அருகில் உள்ள பெரிச்சி கோவில். கார்த்திகை: ஸ்ரீ சொர்ண பைரவர்- திருவண்ணாமலை. அனுஷம்: ஸ்ரீ சொர்ண பைரவர்- கும்பகோணம் அருகே உள்ள ஆபத்சகாய ஈஸ்வரர் கோவில். கேட்டை: ஸ்ரீகதாயுத பைரவர்-சூரக்குடி- சொக்கநாதர் கோவில்.

    புதன்கிழமை - மிதுனம், கன்னி

    மிதுனம், கன்னி ராசிக்காரர்கள் வழிபட வேண்டிய நாள் புதன்கிழமை. இந்த நாளில் பைரவருக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடும் பட்சத்தில் வீடு, மனை வாங்கும் யோகம் கிடைக்கும். திருவாதிரை: ஸ்ரீவடுக பைரவர்- ஆண்டாள் கோவில் பாண்டிச்சேரி விழுப்புரம் சாலையில் உள்ளது. புனர்பூசம்: ஸ்ரீவிஜய பைரவர்-பழனி சாதுசுவாமிகள் மடாலயம். அஸ்தம்: ஸ்ரீ யோக பைரவர்-திருப்பத்தூர் திருத்தளிநாதர் கோவில். சித்திரை: ஸ்ரீ சக்கர பைரவர்-தர்மபுரி- மல்லிகார்ச்சுன காமாட்சி கோவில்.

    வியாழன் தனுசு மீனம்

    தனுசு, மீன ராசிக்காரர்கள் வியாழக்கிழமைகளில் பைரவருக்கு விளக்கேற்றி வந்தால் ஏவல், பில்லி, சூனியம், காத்து, கருப்பு போன்றவைகள் நம்மை விட்டு விலகி நலம் கிடைக்கும். மூலம்: ஸ்ரீ சட்டநாதர் பைரவர்-சீரகாழி-பிரம்ம புரீசுவர் கோவில்.
    பூராடம்: ஸ்ரீகால பைரவர்-அவிநாசி- அவிநாசியப்பர் கோவில். உத்திராடம்: ஸ்ரீவடுகநாதர் பைரவர்-கரூர்- கல்யாணபசுபதி ஈஸ்வரர் கோவில். பூரட்டாதி: கோட்டை பைரவர்- ஈரோடு அருகே கொக்கரையான் பேட்டை கிராமத்தில் உள்ள பிரம்மலிங்கேஸ்வரர் கோவில்.
    உத்திரட்டாதி: ஸ்ரீ வெங்கல ஓசை பைரவர்-சேங்கனூர்-சத்தியகிரி ஈஸ்வரர் கோவில் கும்பகோணம், பந்தநல்லூர் பாதையில் உள்ளது.
    ரேவதி: ஸ்ரீ சம்காரமூர்த்தி பைரவர்- தாத்தையங்கார் பேட்டை, காசி விசுவநாதர் கோவில்.

    வெள்ளிக்கிழமை ரிஷபம் - துலாம்

    ரிஷபம், துலாம் ராசிக்காரர்கள் மங்களகரமான வெள்ளிக்கிழமை மாலை வேளையில் பைரவ மூர்த்திக்கு வில்வ இலைகளால் அர்ச்சனை செய்து வந்தால் செல்வம் பெருகும். ரோகிணி: ஸ்ரீகால பைரவர்-பிரம்ம கிரக்கண்டீஸ்வரர் கோவில்- கண்டியூர், தஞ்சாவூர். மிருகசீரிஷம்:ஸ்ரீ சேத்திரபால பைரவர்- சேத்திரபாலபுரம். சுவாதி: ஸ்ரீ ஜடா முனி பைரவர்- புதுக்கோட்டை அருகே உள்ள பொற்பனைக் கோட்டை. விசாகம்: ஸ்ரீ கோட்டை பைரவர்-திருமயம்.

    சனிக்கிழமை மகரம், கும்பம்

    சனிபகவானுக்கு குரு, பைரவர். ஆகவே சனிக்கிழமையன்று இவரை வழிபடுவதால் சனி தோஷம் விலகி நன்மை கிடைக்கும். மகரம், கும்ப ராசிக்காரர்கள் வழிபட வேண் டிய நாள் இது. உத்திராடம்: ஸ்ரீவடுகநாதர் பைரவர்-கரூர்- கல்யாண பசுபதி ஈஸ்வரர் கோவில்.
     திருவோணம்: திருப் பத்தூர் அருகே உள்ள ஸ்ரீ மார்த் தாண்ட பைரவர்-வைர வன்பட்டி-வளரொளி நாதர் கோவில். அவிட்டம்: சீர்காழி பிரம்மபுரீசுவர் கோவிலில் அஷ்ட பைரவர் சந்நிதி. சதயம்: ஸ்ரீசர்ப்ப பைரவர்-சர்ப்பம் ஏந்திய பைர வர்-சங்கரன் கோவில் தலம். 12 ராசிக்காரர் களும் ஸ்ரீ தன் வந் திரி பீடத் தில் அருள் பாலிக்கும் அஷ்ட பைரவர்களை வணங்கலாம்.

    புலன்களை அடக்கி, பிரம்மச்சரிய விரதம் இருந்து ஆண்களும் பெண்களும், இந்த யோகினிக்களை வழிபட்டால், அவர்களுடைய அருளால், பில்லி சூன்யம், ஏவல் போன்ற தொல்லையிலிருந்து விடுபடலாம் என்று புராணங்கள் கூறுகின்றன.
    யோகினி என்றால் யார்? இவர்கள், அம்பிகையான லலிதா பரமேஸ்வரியை வழிபடும் தேவதைகள் ஆவர்.

    முன்னொரு காலத்தில் மகிஷாசுரன், அரக்கர்களுக்கே உரிய கொடூரத்துடன் தேவர்களைத் துன்புறுத்தி வந்தான். தேவர்கள் பராசக்தியை வேண்டி தங்களைக் காத்தருளும்படி வேண்டினர்.

    ஆதிசக்தியும் அவர்களுக்கு அபயம் அளித்து, தன்னுடைய உடலிலிருந்து துர்க்கை என்னும் சக்தியைத் தோற்றுவித்தார். இந்த துர்க்கை தன் உடலிலிருந்து எட்டு சக்தியரைத் தோற்றுவித்தாள். அவர்களே யோகினிகள் ஆவர்.

    இப்படித் தோன்றிய ஒவ்வொரு யோகினியும் எட்டு எட்டு யோகினிகளாகப் பிரிந்தனர். இந்த 64 யோகினிகளும் மகிஷாசுரவதத்துக்கு உதவி செய்து மகிஷாசுரனின் சகோதரர்கள், கம்பன், நிசும்பன் மற்றும் அரக்கர் சேனை அழிவுக்குக் காரணமாய் இருந்தார்கள்.

    இவர்கள் மிகவும் அதீதமான சக்தி படைத்தவர்கள். இவர்களை வழிபடுவதன் மூலம் மனிதர்களுக்கு அபாரமான சித்திகள் கிடைத்தன என்று புராணங்கள் விவரிக்கின்றன.

    இந்த யோகினி விரத வழிபாட்டை, தாந்த்ரீக வழிபாடு என்று குறிப்பிடுவார்கள். இதில் அதிகமாக பெண்களே ஈடுபட்டனர். புலன்களை அடக்கி, பிரம்மச்சரிய விரதம் இருந்து ஆண்களும் பெண்களும், இந்த யோகினிக்களை வழிபட்டால், அவர்களுடைய அருளால், பில்லி சூன்யம், ஏவல் போன்ற தொல்லையிலிருந்து விடுபடலாம் என்று புராணங்கள் கூறுகின்றன.

    இந்த யோகினி வழிபாடு வட இந்தியாவிலும், புத்த மதம் அதிகமாக பரவிய திபெத், சீனா, ஜப்பான், பர்மாவிலும் (இன்றைய மியான்மர்) காணப்பட்டது. இந்த 64 யோகினிகளுக்கும் வட இந்தியாவில் தனித்தனியாக கோவில்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
    கார்த்திகை மாதத்தில் வரும் அஷ்டமி திதியானது, ‘மகாதேவ அஷ்டமி’யாக வழிபடப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை மாலை ராகு கால நேரத்தில் பைரவருக்கு 11 நெய் தீபம் ஏற்றி விபூதி அல்லது ருத்திராபிஷேகம் செய்து வழிபடலாம்.
    8-12-2020 மகாதேவ அஷ்டமி

    சிவபெருமானின் திருவடிவங்களில் முக்கியமானது பைரவரின் திருக்கோலம். சிவபெருமானுக்கு இருக்கும் 64 வடிவங்களைப் போல, பைரவருக்கும் கூட 64 விதமான தோற்றங்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதில் அஷ்ட பைரவர்களின் வடிவம் மிகவும் பிரசித்திப்பெற்றது. பைரவ மூர்த்தி காவல் தெய்வமாக பார்க்கப்படுகிறார். தேய்பிறையில் வரும் அஷ்டமி திதிகள் இவருக்குரிய வழிபாட்டு தினமாக இருக்கிறது. எல்லாத அஷ்டமி திதிகளையும் விட, கார்த்திகை மாதத்தில் வரும் அஷ்டமி திதியானது, ‘மகாதேவ அஷ்டமி’யாக வழிபடப்படுகிறது.

    பைரவரின் திருவுருவத்தில் நவக்கிரகங்களும், பன்னிரண்டு ராசிகளும் அடக்கமாகியுள்ளன. ஒவ்வொரு சிவன் கோவிலிலும் வடகிழக்குப் பகுதியில் தனிச் சன்னிதியில், கால பைரவர் எழுந்தருளி இருப்பார். சில கோவில்களில் சூரியன், பைரவர், சனி பகவான் என்ற வரிசையில் காட்சி தருவதும் உண்டு. சிவன் கோவில்களில் இரவு பூஜை முடிந்த பின் சன்னிதிகளைப் பூட்டி சாவியைக் கால பைரவர் காலடியில் வைத்து வீடு செல்வார்கள். மறுநாள் அதிகாலையில் அந்தச் சாவிகளை எடுத்து சன்னிதி திறந்து பூஜைகள் செய்யத் தொடங்குவர். ஏனெனில் கால பைரவரே, சிவாலயத்தின் காவல்தெய்வம் என்ற நம்பிக்கை உள்ளது.

    பாம்பைப் பூணுலாகக் கொண்டும், சந்திரனை சிரசில் வைத்தும், சூலம், மழு, பாசம், ஆகியவற்றை கையில் ஏந்தியும் பைரவர் காட்சி தருவார். கால பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியிலும், ராகு காலத்திலும் பூஜை செய்வது சிறப்பானது. அமாவாசை மற்றும் பவுர்ணமி ஆகிய திதிகளுக்கு அடுத்த எட்டாம் நாளான அஷ்டமி திதியன்று, கால பைரவரை வணங்க உகந்த நாட்களாகும். அன்றைய தினம் கால பைரவருக்கு அபிஷேகம், அர்ச்சனை ஆகியவற்றைச் செய்யலாம். கால பைரவரை வணங்கினால் உடைமைகள் கூடக் களவு போகாது என்பது ஐதீகம்.

    அஷ்டமி திதியில் மட்டுமல்லாது ஆயில்யம், சுவாதி, மிருகசீரிஷம் நட்சத்திர தினங்களிலும் பைரவரை வழிபட்டால் உத்தியோகத்தில் மதிப்பும், பதவி உயர்வும் கிட்டும். தொழிலில் லாபம் கிட்டும். சனி பிரதோஷத்தன்று பைரவருக்கு தயிர் அன்னம் படைத்து வழிபட்டால் வழக்குகளில் வெற்றி கிட்டும். பைரவர், வாழ்க்கையில் வறுமை வராமல் காத்து செல்வச் செழிப்பை வழங்குபவர். சொர்ணாகர்ஷண பைரவரை வடக்கு திசை நோக்கி அமர்ந்து வழிபடுவது சிறப்பு. திருவாதிரை நட்சத்திரத்தில் வழிபடுவதால் சிவனது அருள், செல்வம் கிட்டும், தாமரை மலர் மாலை, வில்வ இலை மாலை போடலாம். ஞாயிற்றுக்கிழமை மாலை ராகு கால நேரத்தில் பைரவருக்கு 11 நெய் தீபம் ஏற்றி விபூதி அல்லது ருத்திராபிஷேகம் செய்து வழிபடலாம். மேலும் வடைமாலை அணிவித்தும், சகஸ்ரநாம அர்ச்சனை செய்தும் வழிபட்டால் திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும்.

    நம்பிக்கையுடன், பக்தியுடன் சொர்ணாகர்ஷண பைரவர் படத்தை வீட்டில் வைத்து தினந்தோறும் தூப தீபம் காட்டி வழிபட்டு வருவதுடன் தேய்பிறை அஷ்டமி திதியில் திருவிளக்கு பூஜை செய்து பலவிதமான மலர்களைக் கொண்டு பூஜித்து வணங்கி வந்தால் வீட்டில் செல்வச் செழிப்பு ஏற்படும். வியாபாரிகள் கல்லாப் பெட்டியில் சொர்ண ஆகர்ஷண பைரவர், பைரவி சிலை அல்லது படத்தை வைத்து பூஜித்து வர கடையில் வியாபாரம் செழித்து செல்வம் பெருகி வளம் பெறுவார்கள். நீண்ட நாட்கள் வறுமையில் இருந்தவர்கள் அதிலிருந்து விடுபடுவர்.
    துவாதசி புண்ணிய விரதத்தை பெண்கள் அனைவரும் அனுஷ்டிப்பது மிகுந்த பலன்களை அளிக்கும். கணவன் - மனைவிக்குள் இந்த விரத பலனால் ஒற்றுமை உண்டாக்கும். பிரிந்து வாழும் தம்பதிகள் ஒன்று சேர்வர் என்றும் பெரியோர்கள் கூறுவர்.
    பிருந்தாவன துவாதசி எனப்படும் துளசிமாட துவாதசி நாள் அன்று துளசிக்குத் திருமணம் செய்துவைப்பது நன்மை பயக்கும் என்பர். மகாலட்சுமியின் அம்சம் நிறைந்துள்ள துளசிதேவியானவள் செல்வவளத்தை அளிப்பவள்.

    துளசியின் மகிமை சொல்லிலே அடங்காதது என்பர். கண்ணனோடு பிறந்து அவனோடு வளர்ந்த கோபிகைப் பெண்ணான பிருந்தா திருமகளுக்கு இணையான பெருமை கொண்டவள். கண்ணனையே மணக்க வேண்டும் என்று வைராக்கியம் கொண்டு வாழ்ந்தவள் பிருந்தா. அதற்காக 20,000 ஆண்டுகள் தவமிருந்து விதிப் பயனால் மறு பிறவியில் சங்கசூடன் என்னும் அசுரனை மணந்து இறுதியில் திருமாலின் திருமார்பில் எப்போதும் தவழும் துளசியானாள். துளசியின் பக்தி தூய்மையானது. திருமால் அடியார்களுக்கு இலக்கணமானது அவள் வாழ்வு. அதனாலேயே திருமால் வழிபாட்டில் துளசி இல்லாமல் எதுவுமே இல்லை என்றானது.

    கார்த்திகை மாத சுக்ல பட்ச துவாதசி நாள் 'பிருந்தாவன துவாதசி' என்று வழங்கப்படுகிறது. அன்று, திருமால் பிருந்தாவை திருமணம் செய்து கொண்டதாக விஷ்ணு புராணம் கூறுகிறது. துவாதசி புண்ணிய விரதத்தை பெண்கள் அனைவரும் அனுஷ்டிப்பது மிகுந்த பலன்களை அளிக்கும். குறிப்பாக இல்லறத்தின் மேன்மை சிறந்து விளங்கும் என்பர். கணவன் - மனைவிக்குள் இந்த விரத பலனால் ஒற்றுமை உண்டாக்கும். பிரிந்து வாழும் தம்பதிகள் ஒன்று சேர்வர் என்றும் பெரியோர்கள் கூறுவர்.

    பிருந்தாவன துவாதசி எனப்படும் துளசிமாட துவாதசி நாள் அன்று துளசிக்குத் திருமணம் செய்துவைப்பது நன்மை பயக்கும் என்பர். மகாலட்சுமியின் அம்சம் நிறைந்துள்ள துளசிதேவியானவள் செல்வவளத்தை அளிப்பவள்.

    விஷ்ணு ப்ரியா என்று போற்றப்படும் துளசிதேவியை இந்தப் புண்ணிய நாளில் விரதமிருந்து வழிபட வேண்டும். துவாதசியன்று அதிகாலையில் திருமணமானப் பெண்கள் நீராடியபின், துளசி மாடத்தைச் சுற்றி தூய்மை செய்து மெழுகிக் கோலமிட்டு காவி இடவேண்டும். துளசியோடு ஒரு நெல்லி மரக்கன்றை இணைத்து வைத்து இரண்டுக்கும் பஞ்சினாலான மாலையும், வஸ்திரமும் அணிவிக்க வேண்டும். துளசி செடிக்கு கருகமணி, நகைகள் அணிவித்து அலங்காரம் செய்யலாம். சர்க்கரைப் பொங்கல், பாயசம் போன்ற நைவேத்தியங்கள் படைத்து, வெற்றிலை, பாக்கு, பழங்கள், மஞ்சள், மணமுள்ள மலர்கள், தேங்காய் வைத்து, குத்துவிளக்குகள் ஏற்றி வழிபட வேண்டும். நெல்லி மரம் மகாவிஷ்ணுவின் அம்சம் என்பதால் இதை துளசி விவாகம் என்றே பெரியோர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். எனவே இந்நாளில் துளசி விவாகம் செய்து வழிபடுவது இல்லறத்தை இனிமையாக்கும் என்பார்கள்.

    துளசிச் செடியின் அடியில், திருமாலின் விக்கிரகம் அல்லது படம், சங்கு, சாளக்கிராமம் வைத்து பூஜிக்கலாம். துளசி தேவியே தெய்வ அம்சம் என்பதால் அவளை ஆவாஹனம் செய்ய வேறு எந்த வடிவமும் தேவையில்லை. துளசி மாடத்தின் இரு புறமும் வாழை, மாவிலை தோரணம் கட்டி பூஜை செய்வது சிறப்பானது. முதலில், கணநாதனுக்குப் பூஜை செய்து விட்டு, பின் துளசி பூஜை செய்ய வேண்டும். இந்த விதமான பலன்களுக்காக பூஜை செய்கிறேன் என்று சங்கல்பம் செய்து கொண்டு பூஜையை ஆரம்பிக்க வேண்டும். 16 விதமான உபசார பூஜைகளைச் செய்து, மலர்கள் தூவி, துளசி அஷ்டோத்திரம் அல்லது விஷ்ணு சஹஸ்ரநாமம் சொல்லி வழிபட வேண்டும். பூஜையின் முடிவில், ஆரத்தி எடுத்து துளசி தேவியை நமஸ்கரிக்க வேண்டும்.

    இந்நாளில் மங்கலப் பொருள்களை தானமளிப்பது இரட்டிப்பு பலன்களை அளிக்கும். எந்த தானம் அளித்தாலும் அதோடு துளசியை வைத்துக் கொடுப்பது வழக்கம். தியானத்தில் வீற்றிருக்கும் திருமால் இந்த பிருந்தாவன துவாதசி நாளில்தான் கண் விழிப்பதாக புராணங்கள் கூறுகின்றன. வட இந்தியாவில் சிறப்பாகக் கொண்டாடப்படும் இந்த பண்டிகை வாஸ்துவுக்கு ஏற்ற நாளாகவும் சொல்லப்படுகிறது. ஆந்திரம், கர்நாடகா மாநிலங்களிலும் இந்தப் பண்டிகை மிக விமரிசையாக நடைபெறுகிறது. கர்நாடகாவில், 'சிக்க தீபாவளி' அதாவது சின்ன தீபாவளி என்று வீடெங்கும் விளக்குகள் ஏற்றி, வாணவேடிக்கைகளுடன் சிறப்புறக் கொண்டாடுகின்றனர்.

    மாங்கல்ய பலம் பெறவும், விரும்பிய வரன் அமையவும் இந்த விரதத்தை மேற்கொள்வது நல்ல பலன் அளிக்கும். இந்நாளில் மாவிளக்கு ஏற்றியும் வழிபடுவது வழக்கம். இல்லறத்தின் மேன்மையை சிறப்பாகும் இந்த புனித நாளில் மகாவிஷ்ணு மற்றும் துளசிதேவிக்கு உரிய துதிப்பாடல்களை யும் ஸ்லோகங்களையும் பாடி வழிபடுவதால், அந்த வீட்டில் தம்பதி ஒற்றுமை மேலோங்கும்; மகிழ்ச்சி பெருகும்.
    சங்கடங்களைத் தீர்க்கும் தெய்வமாக விநாயகப்பெருமான் திகழ்கிறார். ஒருவருக்கு மனதாலும், பணத்தாலும் வரும் சங்கடங்கள் தீரவும், சந்தோஷம் நிலைக்கவும், கணபதியை ‘சங்கடஹர சதுர்த்தி’ நாளில் விரதம் இருந்து வழிபட வேண்டும்.
    ஒவ்வொருவருக்கும், கோரிக்கைகள் மாறுகின்றன. தேவைகள் மாறுகின்றன. அந்த கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையிலான தெய்வங்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்குரிய சிறப்பு நாட்களில் விரதம் இருந்தால், அந்தக் கோரிக்கைகள் நல்ல முறையில் நிறைவேறும். அதன்படி சங்கடங்களைத் தீர்க்கும் தெய்வமாக விநாயகப்பெருமான் திகழ்கிறார். ஒருவருக்கு மனதாலும், பணத்தாலும் வரும் சங்கடங்கள் தீரவும், சந்தோஷம் நிலைக்கவும், கணபதியை ‘சங்கடஹர சதுர்த்தி’ நாளில் விரதம் இருந்து வழிபட வேண்டும்.

    சதுர்த்தி திதி என்றாலே நம் நினைவிற்கு வருபவர் கணபதி. ஆவணி மாதத்தில் கொண்டாடப்படும் சதுர்த்தி ‘விநாயகர் சதுர்த்தி’ ஆகும். சதுர்த்தி திதி தேய்பிறையில் வந்தால் அது ‘சங்கடஹர சதுர்த்தி’ என்று அழைக்கப்படுகிறது. சதுர்த்தி தினத்தன்று காலையில் எழுந்து உடலையும், உள்ளத்தையும் சுத்தமாக்கி, அன்றைய தினம் சந்திரன் உதயமாகும் வரை எந்த உணவையும் உண்ணாது, விநாயகப் பெருமான் வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும்.

    வழிபாடு செய்வதற்காக மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைக்க வேண்டும். மேலும் மாலை அணிவிப்பதற்காக விநாயகர் படம் அல்லது விக்கிரகமும் சேர்த்து வைத்துக் கொள்ள வேண்டும். அர்ச்சனை செய்வதற்கு மஞ்சள் கலந்த அட்சதை பூக்கள், வாசனை மிக்க பூக்களால் ஆன மாலைகள், பஞ்சபாத்திரம். தீர்த்த பாத்திரத்தில் சுத்தமான நீர், மணி, தூபக்கால், தீபத்தட்டு, கற்பூரம், குத்துவிளக்கு, திரி, எண்ணெய், ஊதுபத்தி, சாம்பிராணி, விபூதி, குங்குமம், அமர்ந்து பூஜை செய்வதற்கு பலகை, இனிப்புச் சுவையுடைய நைவேத்தியப் பொருட்கள் வைத்து வழிபாடு செய்யலாம்.

    இவற்றை யெல்லாம் வைத்துக் கொண்டு பூஜையறையில் ஐந்துமுக விளக்கேற்றி, உள்ளங்கையை தீர்த்தத்தால் சுத்தம் செய்து பிறகு தீர்த்தத்தைப் பருகி ‘ஓம் அச்யுதாய நம’ என்றும், ‘அனந்தாய நம’ என்றும் மூன்றுமுறை சொல்ல வேண்டும். பிறகு இரண்டு உள்ளங்கைகளிலும் மஞ்சள் அரிசியான அட்சதையை வைத்துக் கொண்டு, ‘சுக்லாம்பரதம் விஷ்ணும் சசிவர்னம் சதுர்புஸம், ப்ரஸன்ன வதனம் த்யோயேத் ஸர்வ வின்னோப சாந்தயே’ என்று கூறிய படி தலையில் ஐந்துமுறை குட்டிக் கொள்ள வேண்டும். பிறகு தியானம் செய்ய வேண்டும். தங்களுக்குத் தெரிந்த விநாயகர் அகவல், விநாயகர் பாடல், மந்திரங்களைச் சொல்லி மனமுருகி விநாயகரை வழிபட வேண்டும்.

    பூஜை செய்யும் பொழுது நைவேத்தியமாகப் படைக்கும் கொழுக்கட்டையை, குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு கொடுத்துவிட்டு இரவு விரதமிருந்தவர்கள் அந்தக் கொழுக்கட்டையை சாப்பிட்டு பால் அருந்தலாம். இயலாதவர்கள் உடல் நலம் கருதி இரவு உணவை பலகாரமாக உட்கொள்ளலாம். பகலில் பால் அல்லது பழச் சாறு குடித்துக் கொள்ளலாம்.

    பூஜையால் பலன் பெற்றவர்கள் :

    பார்வதி தேவி, சிவபெருமான், அரிச்சந்திரன் ஆகியோர் சதுர்த்தி விரதம் இருந்து சங்கடம் நீங்கியுள்ளனர். சீதையைத் தேடுவதற்காக அனுமன் இவ்விரதத்தை மேற்கொண்டு வெற்றி பெற்றுள்ளார். இவ்விரதத்தை மேற்கொண்ட தேவேந்திரன் மூவுலகத்தையும் ஆண்டிருக்கின்றார். பஞ்சபாண்டவர்கள் நாடிழந்து வனவாசம் சென்ற பொழுது இந்த விரதத்தை பகவான் விஷ்ணுவின் அறிவுரைப்படி மேற்கொண்டு குருச்சேத்திரப் போரில் பகைவர்களை வென்றிருக்கின்றனர். கந்தக் கடவுளாம் முருகக் கடவுளே தவத்தில் சிறந்த முனிவர்களிடம் மனிதர்களின் சிக்கல்கள் தீர, விநாயகப் பெருமானுக்குரிய இந்த சங்கடஹர சதுர்த்தியைத் தான் வலியுறுத்திக் கூறியிருக்கின்றார் என்று சான்றோர்கள் எடுத்துரைப்பார்கள்.

    போராட்டங்களைச் சந்தித்தவர்களெல்லாம் இந்த விரதத்தினால் பலன் பெற்றிருப்பதால் நாமும் சங்டஹர சதுர்த்தி விரதத்தை முறைப்படி மேற்கொண்டு மனக்கஷ்டமும், பணக்கஷ்டமும் இல்லாமல் வாழலாம். சங்கடஹர சதுர்த்தி விரதத்தைக் கடைப்பிடிப்போம். சந்தோஷத்தோடு வாழ்வில் வளம் சேர்ப்போம்.
    அன்னம் எனும் உணவு ஒருவருக்கு வாழ்நாள் முழுக்க தங்கு, தடையில்லாமல் கிடைக்க அருள் புரியும் தெய்வம் ஸ்ரீ அன்னபூரணி தேவி. அந்த அன்னபூரணியை விரதம் இருந்து பூஜை செய்து வழிபட்டு மேலும் பல நன்மைகள் பெறும் முறைகளை இங்கே தெரிந்து கொள்ளலாம்.
    அன்னம் எனும் உணவு ஒருவருக்கு வாழ்நாள் முழுக்க தங்கு, தடையில்லாமல் கிடைக்க அருள் புரியும் தெய்வம் ஸ்ரீ அன்னபூரணி தேவி. அந்த அன்னபூரணியை விரதம் இருந்து பூஜை செய்து வழிபட்டு மேலும் பல நன்மைகள் பெறும் முறைகளை இங்கே தெரிந்து கொள்ளலாம். 

    அன்னபூரணி தேவியை விரதமிருந்து வழிபடக்கூடிய இந்த பூஜையை மாதத்தில் வருகிற வளர்பிறை செவ்வாய், வெள்ளிக்கிழமைகள் ஆகிய தினங்களில் அதிலும் குறிப்பாக ஆடி மாதத்தில் வருகிற செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் செய்வது சிறப்பு. பௌர்ணமி, அமாவாசை தினங்களிலும் விரதமிருந்து வழிபடலாம். இந்த பூஜையை திருமணமான பெண்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் செய்து வந்தால் மிகவும் சிறப்பான பலன்கள் ஏற்படும். 

    அன்னபூரணி பூஜையை செய்ய விரும்புபவர்கள் தங்கள் வீட்டு பூஜையறையை சுத்தம் செய்து, ஒரு பீடத்தின் மீது வெள்ளை துணியை பரப்பி, அதன் மீது ஒரு சிறிய செம்பு அல்லது வெள்ளி கிண்ணத்தில் உயர்தரமான அரிசி தானியங்கள் வைக்க வேண்டும். பிறகு அக்கிண்ணத்தில் வைக்கும் அளவிற்கு சிறிய அளவிலான அன்னபூரணி சிலை அல்லது படத்தை அக்கிண்ணத்தில் வைத்து, பின்பு மலர்கள் சமர்ப்பித்து, பழங்கள் மற்றும் இனிப்புகள் நைவேத்தியம் வைத்து, தூபங்கள் கொளுத்தி வைக்க வேண்டும். 

    பூஜையை தொடங்கும் முன்பு விநாயகருக்குரிய மந்திரங்கள் ஓதி, பிறகு அன்னபூரணி தேவிக்குரிய மந்திரங்கள், துதிகள் போன்றவற்றை துதித்து, தேவியின் சிலைக்கு ஆரத்தி காண்பித்து வழிபட வேண்டும். இந்த பூஜையை செய்து முடிக்கும் வரை உணவேதும் உண்ணாமல் இருப்பது சிறப்பு. காலை முதல் மாலை வரை உண்ணாவிரதம் இருந்தும் இப்பூஜையை செய்யலாம். 

    அன்னபூரணிக்கு தீபாராதனை காட்டி வழிபட்டு பூஜை முடித்த பிறகு, நைவேத்திய பிரசாதங்களை குடும்பத்தினர் அனைவருக்கும் வழங்கிய பிறகு விரதம் இருப்பவர்கள் பிரசாதங்களை சாப்பிட வேண்டும். முடிந்தால் இந்த அன்னபூரணி பூஜை முடித்த பிறகு வசதி குறைந்தவர்களுக்கு அன்ன தானம் செய்யலாம். 

    நாம் உண்ணும் உணவிற்கு கடவுளாக இருப்பவர் அன்னபூரணி என்பதால் மேற்சொன்ன முறைப்படி அன்னபூரணி தேவியை வழிபடுபவர்களுக்கு வாழ்வில் என்றென்றும் உணவிற்கு பஞ்சம் ஏற்படாது. குடும்பத்தில் இருக்கின்ற தரித்திர நிலை முற்றிலும் நீங்கும். பொருளாதார நிலை மேம்படும். குடும்பத்தில் திருமணம் தடை தாமதங்களுக்கு ஆளாகின்ற ஆண்களுக்கும், பெண்களுக்கும் விரைவில் திருமணம் நடக்கும்.
    கார்த்திகை மாதத்தில், செவ்வாய்க்கிழமையில் விரதம் இருந்து முருகப்பெருமானை மனதார வேண்டிக்கொண்டால், செவ்வாய் தோஷம் நீங்கும். கல்யாண மாலை தோள் சேரும் என்பது ஐதீகம்.
    கார்த்திகைச் செவ்வாயில், அழகன் முருகனை விரதம் இருந்து வணங்கி வழிபடுங்கள். வீட்டுப் பூஜையறையிலும் வாசலிலும் விளக்கேற்றி பிரார்த்தனை செய்யுங்கள். வளமும் சுபிட்சமும் தந்தருள்வார் ஞானவேலன். வளமும் நலமும் தந்து அருளுவான் வெற்றிவேலன். கவலைகளையெல்லாம் போக்கி இல்லத்திலும் உள்ளத்திலும் நிம்மதியைத் தந்தருள்வான் வள்ளி மணாளன்.

    கார்த்திகை மாதத்தில் கார்த்திகேயனை தரிசிப்பது மகத்தான பலன்களைத் தந்தருளும். செவ்வாய்க்கிழமை என்பதே முருகப்பெருமானை வழிபடுவதற்கு உரிய நாள். செவ்வாய் பகவானுக்கு அதிபதி முருகப்பெருமான். செவ்வாய் என்பவர் பூமிகாரகன். எனவே முருகப்பெருமானை விரதம் இருந்து வணங்கி வழிபட்டாலே, வீடு மனை வாங்கும் யோகம் தந்தருளும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

    அதேபோல், செவ்வாய்க்கிழமைகளில் விரதம் இருந்து முருகக் கடவுளை செவ்வரளி மாலை சார்த்தி வேண்டிக்கொண்டால், செவ்வாய் தோஷம் நீங்கும். கல்யாண மாலை தோள் சேரும் என்பது ஐதீகம்.

    கார்த்திகை மாதத்தில், செவ்வாய்க்கிழமையில் விரதம் இருந்து முருகப்பெருமானை மனதார வேண்டுங்கள். காலையும் மாலையும் பூஜையறையிலும் வீட்டு வாசலிலும் விளக்கேற்றி வேண்டிக்கொள்ளுங்கள். கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்து கந்தனை வேண்டுங்கள்.

    வளமும் நலமும் தந்து அருளுவான் வெற்றிவேலன். கவலைகளையெல்லாம் போக்கி இல்லத்திலும் உள்ளத்திலும் நிம்மதியைத் தந்தருள்வான் வள்ளி மணாளன்.
    சோமவாரத்தில் செய்யும் வழிபாடு அனைத்துமே சிறப்பானது என்றாலும், கார்த்திகை மாதத்தில் வரும் சோம வாரங்கள் பிரசித்திப்பெற்றதாக விளங்குகிறது.
    சிவபெருமானை திங்கட்கிழமைகளில் வழிபடுவது மிகவும் சிறப்புக்குரியதாகும். திங்கட்கிழமையை ‘சோமவாரம்’ என்றும் குறிப்பிடுவார்கள். ‘சோம’ என்பதற்கு ‘பார்வதி உடனாய சிவபெருமான்’ என்றும், ‘சந்திரன்’ என்றும் பொருள். சோமவாரத்தில் செய்யும் வழிபாடு அனைத்துமே சிறப்பானது என்றாலும், கார்த்திகை மாதத்தில் வரும் சோம வாரங்கள் பிரசித்திப்பெற்றதாக விளங்குகிறது.

    ஒரு முறை சாபத்தின் காரணமாக சந்திரன் தேய்ந்து போனான். அந்த சாபம் நீங்க, சிவபெருமானை நினைத்து தவம் இருந்தான், சந்திரன். அதன் பயனாக அவன் சாபம் நீங்கப்பெற்றான். மேலும் நவக்கிரகங்களில் ஒருவராகும் வாய்ப்பையும் பெற்றான். அவன் பெயரில் உருவானதே சோமவார விரதமாகும். இந்த விரதத்தை கடைப்பிடிப்பவர்களுக்கு துன்பங்கள், பாவங்கள் விலகுவதுடன், நல்ல வாழ்க்கைத் துணை அமையும்.

    இந்து சமய திருமணங்களில் அருந்ததி பார்ப்பது என்று ஒரு நிகழ்வு உண்டு. கற்புக்கரசியான அந்த அருந்ததி தேவியை வசிஷ்ட முனிவர் தன் வாழ்க்கைத் துணைவியாக பெற்றது, சோமவார விரதத்தை கடைப்பிடித்துதான். எனவே பெண்கள் மட்டுமின்றி, ஆண்களும் இந்த விரதத்தைக் கடைப்பிடித்து நல்ல வாழ்க்கைத் துணையை அடையலாம்.

    கார்த்திகை மாத சோமவாரங்களில், அனைத்து சிவாலயங்களிலும், இறைவனுக்கு சங்காபிஷேகம் செய்யப்படும். கார்த்திகை மாதத்தில் இறைவன் அக்னிப் பிழம்பாக இருப்பதாக ஐதீகம். எனவே அவரைக் குளிர்விக்கும் பொருட்டு சங்காபிஷேகம் செய்யப்படுகிறது.

    கார்த்திகை திங்கட்கிழமையான சோமவாரத்தில், கணவனும் மனைவியும் ஆலயங்களுக்குச் சென்று வருவது உத்தமம். அதனால் சிவசக்தியின் ஆசி கிடைத்து, காலம் முழுவதும் அந்தத் தம்பதியர் கருத்து வேறுபாடின்றி இணைந்திருப்பார்கள்.

    இது தவிர கார்த்திகை மாதத்தில் செய்யப்படும் எந்த பூஜையாக இருந்தாலும், அது பன்மடங்கு பலன் அளிக்கக்கூடியதாகும். அந்த பூஜைகளால் பாவங்கள், வறுமை விலகி, வளமான வாழ்வு அமையும். கார்த்திகை மாதத்தில் ஸ்ரீமன் நாராயணர், ஒவ்வொருவர் வீட்டில் உள்ள நீரிலும் எழுந்தருள்வதாக ஐதீகம். கார்த்திகை மாதத்தில் கஸ்தூரி மஞ்சளால் அபிஷேகம் செய்து, தாமரை மலரால் அர்ச்சனை செய்தால், மகா விஷ்ணுவுடன் லட்சுமிதேவி நம் வீட்டில் நிரந்தரமாகத் தங்கிவிடுவாள். வில்வ இலையால் சிவனை பூஜிப்பவர்களுக்கு முக்தி கிடைக்கும். கார்த்திகை மாதத்தில் சாளக்கிராமத்தை துளசியால் அர்ச்சிப்பவர்கள், வைகுண்டம் செல்லும் பாக்கியத்தை அடைவர்.

    விரதம் இருப்பது எப்படி?

    இந்த விரதத்தை ஆண், பெண் இருவரும் கடைப்பிடிக்கலாம். இந்த வழிபாட்டுக்காக மஞ்சள்பொடி, குங்குமம், சந்தனம், பூமாலை, உதிரிப் பூக்கள், வெற்றிலை, பாக்கு, ஊதுபத்தி, சாம்பிராணி, பஞ்சு, நல்லெண்ணெய், கற்பூரம், வெல்லம், மாவிலை, வாழைப் பழம், அரிசி, தேங்காய், தயிர், தேன், தீப்பெட்டி, பூணூல், வஸ்திரம், அட்சதை (பச்சரிசியுடன் மஞ்சள்பொடி கலந்தது), பஞ்சாமிர்தம், திராட்சை, கல்கண்டு, சர்க்கரை கலந்த பசுவின்பால் ஆகியவற்றை சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

    ராகு காலத்துக்கு முன்பே பூஜையை தொடங்கவேண்டும். அதிகாலையில் விநாயகர் பூஜை செய்து சங்கல்பம் செய்து கொள்ள வேண்டும். மஞ்சளில் பிள்ளையார் பிடித்து, தேங்காய் உடைத்து கற்பூரம் காட்டவேண்டும். கலசத்தில் தண்ணீர் பிடித்து அதில் நாணயம், மஞ்சள்பொடி கலந்து கலசத்துக்கு மேலே மாவிலைக்கொத்தை செருகி, மையத்தில் மஞ்சள் தடவிய தேங்காயை வைத்து சந்தனம், குங்குமத்தால் அலங்கரிக்க வேண்டும். பின்னர் பூஜையை தொடங்க வேண்டும்.

    சாதம், நெய், பருப்பு, பாயசம், தேங்காய், வாழைப்பழம் போன்றவற்றை நைவேத்தியமாக படைக்க வேண்டும். தொடர்ந்து சிவநாமங்களைச் சொல்ல வேண்டும். பூஜை முடிந்த பிறகு, வயதான தம்பதியரை பார்வதி - பரமேஸ்வரனாக நினைத்து சந்தனம், குங்குமம் அளித்து நமஸ்காரம் செய்ய வேண்டும். அவர்களுக்கு தட்சணையும் அளிக்க வேண்டும். உணவு பரிமாறி, அட்சதையை அவர்கள் கையில் கொடுத்து வணங்கி ஆசி பெற வேண்டும்.

    இழப்புகளை ஈடுசெய்யும் இந்த விரதத்தை எல்லோரும் கடைப்பிடித்து வாழ்க்கையில் வளம் பெறலாம். எனவே கந்தன் புகழ்பாடி கார்த்திகையை கொண்டாடினால் எந்த நாளும் இனிய நாளாக மாறும்.
    முருகப்பெருமானுக்கு உகந்த நாள், திருக்கார்த்திகைத் திரு நாள். திருக்கார்த்திகை நாளன்று, முருகப்பெருமானுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபடுவதோடு விரதமும் இருந்து வழிபட்டால், அந்த முத்துக்குமரன் முத்தான வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பான்.

    எல்லா மாதங்களிலும் கார்த்திகை நட்சத்திரம் வந்தாலும், கார்த்திகை மாதம் வரும் கார்த்திகையை மட்டும் ‘திருக்கார்த்திகை’ என்று அழைப்பது வழக்கம். அந்த இனிய திருக்கார்த்திகை திருநாள், இந்த ஆண்டு கார்த்திகை மாதம் 14-ந் தேதி (29.11.2020) அன்று வருகிறது.

    அதற்கு முதல் நாள், பரணி தீபமாகும். பாவங்கள் போக்கும் பரணி தீப வழிபாட்டினையும் நாம் மேற்கொள்ள வேண்டும். நட்சத்திரத்தின் பெயரும், மாதத்தின் பெயரும் ஒன்றாக அமைவது இந்த மாதத்தில் மட்டும்தான். ‘பரணி தரணி ஆளும்’ என்பார்கள். எனவே பரணி நட்சத்திரமன்று நாம் முருகப்பெருமானை வழிபட்டால், தரணி ஆளக்கூடிய யோகம் கிடைக்கும்.

    ‘கலியுகத்தில் பாவங்கள் அதிகரிக்கும்’ என்று புராணங்கள் கூறுகின்றன. நாம் செய்த பாவங்கள் எல்லாவற்றிற்கும் பரிகாரமாகத்தான், ஆலயங்களுக்குச் சென்று தீபம் ஏற்றி வழிபாடு செய்கின்றோம். பரணி தீபத்தன்று விநாயகர், முருகப்பெருமான், நந்தீஸ்வரர், உமா மகேஸ்வரர் வழிபாட்டையும் மேற்கொள்ள வேண்டும். மறுநாள் கார்த்திகையும் வருகின்றது. அன்றைய தினம் முழுமையாக கந்தன் புகழ்பாடிக் கைகூப்பித் தொழுதால் வந்த துயரங்கள் வாசலோடு நிற்கும். வருங்காலம் நலமாக அமையும்.

    தீபம் ஏற்றுவதன் முழுமையான பலன் நமக்குக் கிடைக்கும் நாள்தான், திருக்கார்த்திகை. முதல் நாள் வரும் பரணி நட்சத்திரமன்று மாலையில் நம் இல்லங் களில் விளக்கேற்றி வைத்தால் உன்னதமான வாழ்க்கை அமை யும். வீட்டில் நல்லெண்ணெயிலும், ஆறுமுகப் பெருமான் சன்னிதியில் இலுப்பை எண்ணெயிலும் தீபம் ஏற்ற வேண்டும் என்பது மரபு.

    வீட்டில் விளக்கேற்றும் பொழுது, படிக்கு மூன்று விளக்கு ஏற்ற வேண்டும். மறுநாள் திருக்கார்த்திகையன்று வீடு முழுவதும் சுத்தம் செய்து முருகப்பெருமானை வரவேற்க வேண்டும். பூஜை அறையில் முழுமுதற் கடவுள் விநாயகப் பெருமானின் படத்தோடு, அவனது தம்பியான முருகப்பெருமானின் படத்தையும் வைத்து மாலை சூட்ட வேண் டும். பஞ்சமுக விளக்கேற்றி, அதில் ஐந்து வகையான எண் ணெய் ஊற்றி, கந்தனுக்கு பிடித்த கந்தரப்பத்தை நைவேத்தியமாக வைத்து, கந்தனுக்குரிய பதிகங் கள், சண்முக கவசம், திருப்புகழ் போன்றவற்றை பாராயணம் செய்து வழிபட்டால் இனிய வாழ்க்கை அமையும்.

    கார்த்திகைத் திருநாளில் அன்னதானம் செய்தால், ஆச் சரியப்படத்தக்க சம்பவங்கள் அதிகம் நடைபெறும். காக்கைக்கும் உணவளிக்க வேண்டும். ஜோதி வடிவான இறைவனை நினைத்து சிவாலயங்கள் தோறும் சொக்கப்பனை ஏற்றி வழிபாடு செய்வார்கள். அதிலுள்ள கம்பு அனலில் எரிந்து முடிந்ததும், அதை எடுத்து வந்து வீட்டில் வைத்தால் செடிகள் வளரும். தோட்டத்தில் காய்கனிகள் அதிகம் காய்க்கும்.

    இந்த விரதத்தின் மூலமாகத்தான் அருணகிரிநாதர், முருகப்பெருமானின் அருளைப்பெற்றார். இழப்புகளை ஈடுசெய்யும் இந்த விரதத்தை எல்லோரும் கடைப்பிடித்து வாழ்க்கையில் வளம் பெறலாம். எனவே கந்தன் புகழ்பாடி கார்த்திகையை கொண்டாடினால் எந்த நாளும் இனிய நாளாக மாறும். 

    -‘ஜோதிடக்கலைமணி’ சிவல்புரி சிங்காரம்
    தினமும் பகலும், இரவும் சந்திக்கின்ற சந்தியா காலமாகிய ,மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை உள்ள காலமாகும். இந்த நேரத்தில் ஈசனைத் தரிசனம் செய்வது உத்தமம் ஆகும்.
    ஈசன் விஷம் உண்ட நாள் கார்த்திகை மாதம், சனிக்கிழமை, திரயோதசி திதி ஆகும். எனவே சனிக்கிழமையும், திரயோதசி திதியும் சேர்ந்து வருகின்ற பிரதோஷம் “மகா பிரதோஷம்” ஆகும். இந்த மகா பிரதோஷத்து அன்று எமன் வழிபட்ட சுயம்பு லிங்கத்தை தரிசிக்க வேண்டும். மாசி மாதம் வரும் மகா சிவராத்திரிக்கு முன்னால் வரும் பிரதோஷமும், “மகா பிரதோஷம்” எனப்படும்.

    பிரதோஷ வகைகளும் பலன்களும்

    தினசரி பிரதோஷம் 

    தினமும் பகலும், இரவும் சந்திக்கின்ற சந்தியா காலமாகிய ,மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை உள்ள காலமாகும். இந்த நேரத்தில் ஈசனைத் தரிசனம் செய்வது உத்தமம் ஆகும். நித்தியப்பிரதோஷத்தை யார் ஒருவர் ஐந்து வருடங்கள் முறையாகச் செய்கிறார்களோ, அவர்களுக்கு ‘முக்தி’ நிச்சயம்.

    பட்சப் பிரதோஷம் 

    அமாவாசைக்குப் பிறகான, சுக்லபட்சம் என்ற வளர் பிறை காலத்தில், 13-வது திதியாக வரும் திரயோதசி திதியே பட்சப் பிரதோஷம் ஆகும். இந்தத்திதியின் மாலை நேரத்தில் பட்சிலிங்க வழிபாடு [ செய்வது உத்தமம். 

    மாதப் பிரதோஷம் 

    பவுர்ணமிக்குப் பிறகு வரும் தேய்பிறை காலத்தில், 13-வது திதியாக வரும் “திரயோதசி” திதியே மாதப் பிரதோஷம் ஆகும். இந்த திதியின் மாலை நேரத்தில் “பாணலிங்க” வழிபாடு செய்வது சிறப்பு. 

    நட்சத்திரப் பிரதோஷம் 

    திரயோதசி திதியில் வரும் நட்சத்திரத்திற்கு உரிய ஈசனை, பிரதோஷ நேரத்தில் வழிபடுவது நட்சத்திர பிரதோஷம் ஆகும்.

    பூரண பிரதோஷம் 

    திரயோதசி திதியும், சதுர்த்தசி திதியும் சேராத திரயோதசி திதி மட்டும் உள்ள பிரதோஷம் பூரண பிரதோஷம் ஆகும். இந்தப் பிரதோஷத்தின் போது சுயம்பு லிங்கத்தை தரிசனம் செய்வது உத்தம பலனை தரும். 

    திவ்யப் பிரதோஷம் 

    பிரதோஷ தினத்தன்று துவாதசியும், திரயோதசியும் சேர்ந்து வந்தாலோ, அல்லது திரயோதசியும், சதுர்த்தசியும் சேர்ந்து வந்தாலோ அது திவ்யப் பிரதோஷம் ஆகும். இந்த நாளன்று மரகத லிங்கத்துக்கு அபிஷேக ஆராதனை செய்தால், பூர்வஜென்ம பாவம் நீங்கும்.

    தீபப் பிரதோஷம் 

    பிரதோஷ தினமான திரயோதசி திதியில், தீப தானங்கள் செய்வது, ஈசனுடைய ஆலயங்களைத் தீபங்களால் அலங்கரித்து வழிபட்டால்,  சொந்த வீடு அமையும்.

    சப்தரிஷி பிரதோஷம் 

    வானத்தில் “வ” வடிவில் தெரியும் நட்சத்திர கூட்டங்களே, “சப்தரிஷி மண்டலம்” ஆகும். இது ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை, மாசி, பங்குனி மாதங்களில், வானில் தெளிவாகத் தெரியும். இந்த மாதங்களில் திரயோதசி திதியில், பிரதோஷ வழிபாடு செய்து, சப்தரிஷி மண்டலத்தைத் தரிசிப்பதே் சப்தரிஷி பிரதோஷம் ஆகும்.  
     
    மகா பிரதோஷம் 

    ஈசன் விஷம் உண்ட நாள் கார்த்திகை மாதம், சனிக்கிழமை, திரயோதசி திதி ஆகும். எனவே சனிக்கிழமையும், திரயோதசி திதியும் சேர்ந்து வருகின்ற பிரதோஷம் “மகா பிரதோஷம்” ஆகும். இந்த மகா பிரதோஷத்து அன்று எமன் வழிபட்ட சுயம்பு லிங்கத்தை தரிசிக்க வேண்டும்.  மாசி மாதம் வரும் மகா சிவராத்திரிக்கு முன்னால் வரும் பிரதோஷமும், “மகா பிரதோஷம்” எனப்படும்.
     
    உத்தம மகா பிரதோஷம் 

    சிவபெருமான் விஷம் அருந்திய தினம் சனிக்கிழமையாகும். அந்தக் கிழமையில் வரும் பிரதோஷம் மிகவும் சிறப்பானதாகும். சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய மாதங்களில் வளர்பிறையில், சனிக்கிழமையில் திரயோதசி திதியன்று வரும் பிரதோஷம் உத்தம மகா பிரதோஷம் ஆகும். 

    ஏகாட்சர பிரதோஷம்

    வருடத்தில் ஒரு முறை மட்டுமே வரும் மகா பிரதோஷத்தை `ஏகாட்சர பிரதோஷம்’ என்பர். அன்றைக்கு சிவாலயம் சென்று, `ஓம்’ என்ற பிரணவ மந்திரத்தை எத்தனை முறை ஓத முடியுமோ, அத்தனை முறை சொல்ல வேண்டும்.  பின், விநாயகரையும் வழிபட்டு, ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் வழங்கினால் பல விதமான நன்மைகள் ஏற்படும்.

    அர்த்தநாரி பிரதோஷம் 

    வருடத்தில் இரண்டு முறை மகாபிரதோஷம் வந்தால் அதற்கு அர்த்தநாரி பிரதோஷம் என்று பெயர். அந்த நாளில் சிவாலயம் சென்று வழிபட்டால், தடைப்பட்ட திருமணம் நடைபெறும். பிரிந்து வாழும் தம்பதி ஒன்று சேர்வார்கள். 

    திரிகரண பிரதோஷம்

    வருடத்துக்கு மூன்று முறை மகாபிரதோஷம் வந்தால் அது திரிகரண பிரதோஷம். இதை முறையாகக் கடைப்பிடித்தால் அஷ்ட லட்சுமிகளின் ஆசியும் அருளும் கிடைக்கும். 

    பிரம்மப் பிரதோஷம் 

    ஒரு வருடத்தில் நான்கு மகா பிரதோஷம் வந்தால், அது பிரம்மப் பிரதோஷம். இந்தப் பிரதோஷ வழிபாட்டை முறையாகச் செய்தால் முன்ஜென்மப் பாவம் நீங்கி, நன்மைகளை அடையலாம்.
     
    அட்சரப் பிரதோஷம் 

    வருடத்துக்கு ஐந்து முறை மகா பிரதோஷம் வந்தால் அது அட்சரப் பிரதோஷம். தாருகா வனத்து ரிஷிகள். `நான்’ என்ற அகந்தையில் ஈசனை எதிர்த்தனர். ஈசன், பிட்சாடனர் வேடத்தில் வந்து தாருகா வன ரிஷிகளுக்குப் பாடம் புகட்டினார். தவறை உணர்ந்த ரிஷிகள், இந்தப் பிரதோஷ விரதத்தை அனுஷ்டித்து பாவ விமோசனம் பெற்றனர்.

    கந்தப் பிரதோஷம்

    சனிக்கிழமையும், திரயோதசி திதியும், கிருத்திகை நட்சத்திரமும் சேர்ந்து வரும் பிரதோஷம் கந்தப் பிரதோஷம். இது முருகப் பெருமான் சூரசம்ஹாரத்துக்கு முன் வழிபட்ட பிரதோஷ வழிபாடு. இந்தப் பிரதோஷத்தில் முறையாக விரதம் இருந்தால், முருகன் அருள் கிட்டும்.

    சட்ஜ பிரபா பிரதோஷம் 

    ஒரு வருடத்தில் ஏழு மகா பிரதோஷம் வந்தால் அது, `சட்ஜ பிரபா பிரதோஷம்’. தேவகியும் வசு தேவரும் கம்சனால் சிறையிடப்பட்டனர். ஏழு குழந்தைகளைக் கம்சன் கொன்றான். எனவே, எட்டாவது குழந்தை பிறப்பதற்கு முன்பு ஒரு வருடத்தில் வரும் ஏழு மகா பிரதோஷத்தை முறையாக அவர்கள் அனுஷ்டித்ததால், கிருஷ்ணர் பிறந்தார்.  

    அஷ்ட திக் பிரதோஷம் 

    ஒரு வருடத்தில் எட்டு மகா பிரதோஷ வழிபாட்டை முறையாகக் கடைப்பிடித்தால், அஷ்ட திக்குப் பாலகர்களும் மகிழ்ந்து நீடித்த செல்வம், புகழ், கீர்த்தி ஆகியவற்றைத் தருவார்கள்.

    நவக்கிரகப் பிரதோஷம் 

    ஒரு வருடத்தில் ஒன்பது மகா பிரதோஷம் வந்தால், அது நவக்கிரகப் பிரதோஷம். இது மிகவும் அரிது. இந்தப் பிரதோஷத்தில் முறையாக விரதம் இருந்தால் சிவனின் அருளோடு, நவக் கிரகங்களின் அருளும் கிடைக்கும்.

    துத்தப் பிரதோஷம் 

    அரிதிலும் அரிது பத்து மகாபிரதோஷம் ஒரு வருடத்தில் வருவது. அந்தப் பிரதோஷ வழிபாட்டைச் செய்தால் பிறவி குறைபாடுகள்  சரியாகும்.

    ×