என் மலர்tooltip icon

    முக்கிய விரதங்கள்

    நீண்டகாலமாக இழுபறியாகும் வழக்கு, உறவினர்களுக்குள் சொத்து தகராறு உள்ளவர்கள் வழக்குகளில் வெற்றி பெற, திதி நித்யா தேவியான விஜயாவை விரதம் இருந்து வழிபடலாம்.
    நீண்டகாலமாக இழுபறியாகும் வழக்கு, உறவினர்களுக்குள் சொத்து தகராறு, மன உளைச்சல் வழக்கு என்று வருத்தத்துடன் வாழ்க்கை நடத்தும் நேர்மைவாதிகள், வழக்குகளில் வெற்றி பெற, திதி நித்யா தேவியான விஜயாவை விரதம் இருந்து வழிபடலாம்.

    சக்தியின் அம்சமாக விளங்கும் இவள், ஆணவத்தை அடக்கி பக்தர்களைக் காப்பதிலும் அருள்புரிகிறாள். கலைத்துறையில் ஈடுபட விரும்புபவர்கள், கலைத்துறையில் வெற்றிபெறவும். வளர்ச்சியோடு நீடித்த புகழை பெறவும் இந்த திதி நித்யா தேவி விஜயா அருள்புரிகிறாள்.
     
    நீங்கள் பிறந்ததேதிக்கு உரிய திதி நித்யாதேவியை, அந்த திதி நாளில் ஸ்ரீ லலிதாம்பிகையுடன், ஸ்ரீ சக்கரம் வைத்து கொடுத்திருக்கும் மூலமந்திரத்தை ஒரு வருடம் விரதம் இருந்து சொல்லி வந்தால், திதி சூனியம் நீங்கி வாழ்வில் வெற்றி மேல் வெற்றி வந்து சேரும்.

    நீங்கள் வளர்பிறை துவாதசி அல்லது தேய் பிறை சதுர்த்தி திதியில் பிறந்திருந்தால், உங்களுக்குரிய திதி நித்யா தேவி விஜயா. அன்றைய தினம் விரதம் இருந்து வீட்டில் விளக்கேற்றி, விஜயாவை வணங்கினால் வழக்குகளில் வெற்றி உண்டாகும். கலைத்துறையில் வளர்ச்சி ஏற்படும்.

    மூலமந்திரம்:

    ஓம் விஜயா தேவ்யை வித்மஹே
    மஹா நித்யாயை தீமஹி
    தன்னோ தேவி ப்ரசோதயாத்.
    ராமபிரானுக்கு விரதத்தை மேற்கொள்வதன் மூலம் நினைத்த காரியங்கள் கைகூடும். செல்வம், புகழ் உள்ளிட்ட எண்ணற்ற பலன்கள் கிடைக்கும்.
    ராமாயணத்தின் நாயகனாகவும், மனித உருவில் வாழ்ந்த தெய்வமாகவும் போற்றப்படுபவர், ராமபிரான். இவர் சித்திரை மாதம் வளர்பிறையான நவமி திதியில் பிறந்தவர். அதைத் தான் ‘ராம நவமி’ என்ற பெரும் விழாவாக பக்தர்கள் கொண்டாடி வருகின்றனர். எந்த ஒரு காரியத்தை அஷ்டமி மற்றும் நவமி திதிகளில் செய்யாமல், மக்கள் தவிர்த்து விடுவார்கள். இதனால் அந்த இரண்டு திதிகளும் மிகவும் வருத்தம் கொண்டன. அவை தங்களின் கவலையை, மகா விஷ்ணுவிடம் சென்று வெளிப்படுத்தின.

    “இறைவா! நாங்கள் என்ன பாவம் செய்தோம்? எங்களை மட்டும் மற்ற திதிகளைப் போல் பார்க்காமல், மக்கள் ஒதுக்கி வைக்கிறார்களே. எங்களுக்கு இதில் இருந்து விமோசனம் இல்லையா?” என்றனர்.

    அதைக் கேட்டு மனம் இரங்கிய மகாவிஷ்ணு, “மக்கள் உங்கள் இருவரையும் போற்றித் துதிக்கும் நாள் ஒன்று வரும். நான் உலக நன்மைக்காக பூமியில் அவதரிக்கும் போது, உங்களின் இந்த வருத்தம் மறைந்து போகும்” என்று அருள்புரிந்தார்.

    அதன்படியே தசரதர்- கவுசல்யா தம்பதியருக்கு, நவமி திதியில் ராமனாக அவதரித்தார், மகாவிஷ்ணு. அதே போல் மற்றொரு அவதாரத்தில் வசுதேவர்-தேவகி தம்பதியருக்கு மகனாக அஷ்டமி திதியில் கிருஷ்ணராக பிறந்தார். இந்த இரண்டு அவதாரங்களின் மூலமாக, அஷ்டமி மற்றும் நவமி திதிகள் பெரும் பேறு பெற்றன. இறைவனின் அவதாரங்கள் உதித்த அந்த இரண்டு நாட்களையும் மக்கள் வெகு விமரிசையாக கொண்டாடி மகிழ்கிறார்கள்.

    நவமியில் பிறந்த ராமபிரான், இலங்கையை ஆட்சி செய்து வந்த ராவணனை வதம் செய்வதற்காகவே அவதரித்தவர். சிவபெருமானிடம் இருந்தும், பிரம்மதேவனிடம் இருந்தும் பல சக்திவாய்ந்த வரங்களைப் பெற்றிருந்த ராவணன், அந்த வரங்களைக் கொண்டு, முனிவர்களையும், தேவர்களையும் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருந்தான். தன்னை எதிர்த்தவர்கள் அனைவரையும் தயவு தாட்சன்யம் இன்றி துன்புறுத்தினான்.

    கர்மவினையின் பயனாக, ராம அவதார நோக்கம் நிறைவேறுவதற்காக ராமபிரான் வனவாசம் செல்ல நேர்ந்தது. அவரோடு சீதையும், லட்சுமணரும் உடன் சென்றனர். வனத்தில் இருந்தபோது, சீதையின் அழகு பற்றி அறிந்த ராவணன், அவளைக் கடத்திச் சென்றான். இதனால் ராமனுக்கும், ராவணனுக்கும் யுத்தம் வந்தது. வானர வீரர்களை தன்னுடன் இணைத்துக் கொண்டு, கடலில் பாலம் அமைத்து, இலங்கை சென்ற ராமர், ராவணனை அழித்து சீதையை மீட்டார். அதர்மம் அழிக்கப்பட்டு, தர்மம் நிலைநாட்டப்பட்டது.

    ராமபிரான் அவதரித்த நாளில் விரதம் இருப்பது மிகவும் நன்மை அளிக்கக்கூடியது. இந்த விரதமானது, இரண்டு விதமாக கடைப்பிடிக்கப்படுகிறது. சித்திரை மாதம் வளர்பிறை பிரதமை திதியில் இருந்து நவமி திதி வரை ஒன்பது நாட்களுக்கு கடைப் பிடிக்கும் விரதத்திற்கு ‘கர்ப்போஸ் தவம்’ என்று பெயர். நவமி திதியில் இருந்து அடுத்துவரும் ஒன்பது நாட்களுக்கு கடைப்பிடிக்கப்படுவது ‘ஜன்மோதீஸவம்’ என்று பெயர்.

    விரதம் இருப்பதற்கு முன்தினம் வீட்டை சுத்தம் செய்துவிட வேண்டும். விரத தொடக்க நாள் முதல், ஒரு வேளை மட்டும் உணவு உண்ண வேண்டும். விரதம் இருக்கும் ஒன்பது நாட்களும் ராம நாமத்தை உச்சரித்தபடியே இருக்க வேண்டும். ஒன்பது நாட்களும் ராமபிரானுக்கு சர்க்கரைப் பொங்கல், பாயசம் என நைவேத்தியம் படைத்து வழிபடுவது சிறப்பு. ராமருக்கு துளசி மாலையும், அனுமனுக்கு வடை மாலையும் சாத்தி வணங்குங்கள். ஒன்பது நாட்களும் நைவேத்தியம், மாலை அணிவிக்க முடியாதவர்கள், ராமநவமி அன்று மட்டுமாவது அதைச் செய்வது நல்லது. இந்த விரதத்தை மேற்கொள்வதன் மூலம் நினைத்த காரியங்கள் கைகூடும். செல்வம், புகழ் உள்ளிட்ட எண்ணற்ற பலன்கள் கிடைக்கும்.
    பஞ்சமி திதியில் விரதம் இருந்து நாக தேவதைகளையும் ராகு பகவானையும் வழிபட்டு வந்தால் ராகு தோஷம், நாக தோஷம் உள்ளிட்ட தோஷங்கள் விலகும்.
    ஜோதிட சாஸ்திர படி ராகு கேது ஆகிய இரு கிரகங்களும் நிழல் கிரகங்கள் என்று கூறப்படுகிறது. ஒருவர் தன்னுடைய முன் ஜென்மத்தில் செய்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்றவாறு இந்த இரு கிரகங்களும் ஒருவரது ஜாதகத்தில் அமர்கின்றன.

    ஒருவரது ஜாதகத்தில் ராகுவால் ஏதேனும் தோஷம் இருந்தால் பற்பல சிக்கல்கள் ஏற்படும். அதே போல ஒருவரது ஜாதகத்தில் ராகு சிறப்பான இடத்தில் அமைந்தால் ராஜ வாழ்க்கை வாழலாம். இதனாலேயே ராகுவை போல் கொடுப்பார் இல்லை என்று சொல்லி வைத்தனர் நம் முன்னோர்கள்.

    ராகு காயத்ரி மந்திரம்

    ஓம் நாகத்வஜாய வித்மஹே
    பத்ம அஸ்தாய தீமஹி
    தன்னோ ராகு ப்ரசோதயாத்

    பஞ்சமி திதியில் விரதம் இருந்து நாக தேவதைகளையும் ராகு பகவானையும் வழிபட்டு மேலே உள்ள மந்திரத்தை 108 முறை ஜபித்தால் ராகு தோஷம், நாக தோஷம் உள்ளிட்ட தோஷங்கள் விலகும். அதோடு ராகு பகவானின் பரிபூரண அருளை பெற்று ராஜ வாழ்க்கை வாழ முடியும். விரதம் இருக்க இயலாதவர்கள் வெள்ளிக்கிழமைகளில் புற்றுள்ள அம்மன் கோயிலிற்கு சென்று வழிபாடு செய்து இந்த மந்திரத்தை ஜபித்து வரலாம்.
    நீங்கள் இழந்த செல்வம், பணம், புகழ், கெளரவம் போன்றவைகளை பெற ஒரு எளிய விரத பரிகாரம் உள்ளது. அது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    பலரும் பல நேரங்களில் எதோ ஒரு காரணத்தால் அவர்களின் செல்வங்களை இழப்பார்கள். நல்ல புகழில் இருப்பவர்கள் புகழை இழப்பார்கள். சில நேரங்களில் சொத்துக்கள் கை நழுவி போய் விடும். இப்படி நீங்கள் இழந்த செல்வம், பணம், புகழ், கெளரவம் போன்றவைகளை பெற ஒரு எளிய விரத பரிகாரம் உள்ளது.

    நீங்கள் வராகி அம்மனை விரதம் இருந்து வழிபட்டு வந்தால் இழந்த அனைத்தையும் பெறுவீர்கள். சப்தகன்னியரில் ஒருவரும் அம்மனின் காவல் தெய்வமாகவும் இருப்பவர் வராகி அம்மன் இவர் வராகமென்னும் பன்றி முகமும் எட்டு கரங்களையும் உடையவர். இவர் இரு கரங்களிலும் தண்டமும், கலப்பையும் உள்ளது.

    வராகி அம்மனுக்கு 8 சனிக்கிழமைகள் காலை 6 மணி முதல் 7 மணிக்குள் மண் அகலில் கருநீல துணியில் சிறிது வெண்கடுகை இட்டு முடிந்து அதில் நல்லெண்ணெய் விட்டு தீபமிட்டு மனமுருகி வேண்டுதல் வைத்தால் நீங்கள் இழந்த அனைத்தையும் திரும்ப பெறலாம். காலையில் முடியாதவர்கள் இரவு 8 மணியிலிருந்து 9 மணிக்குள் செய்யலாம்.

    விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சாலமேடு என்னும் ஊரில் அஷ்டவராகி கோவில் அமைந்துள்ளது. கடலூர் மாவட்டத்தில் நெல்லிக்குப்பம் என்னுமூரில் சப்தமாதாக்கள் கோவில் உள்ளது. இது செல்லியம்மன் என்னும் பெயரிலும் அறியப்படுகிறது. இங்கு வராகி அம்மனுக்கு பஞ்சமி திதியில் விரதம் இருந்து பூஜை செய்தால் வேண்டுதல்கள் நிறைவேறும்.
    மலையைச் சுமந்து செல்லும் அனுமனை நாம் விரதம் இருந்து வழிபட்டால் நலமும், வளமும் நமக்குக் கிடைக்கும். காரியங்கள் நிறைவேறும்.
    வரம் தரும் தெய்வங்களின் வரிசையில் வாயுபுத்திரன் அனுமனும் ஒருவா் ஆவார். நாம் ஒருவரை, ஒரு ஊருக்குச் சென்று ஏதேனும் வேலையை முடித்து வரச் சொல்வோம். அவர் போய் வந்த பிறகு “என்ன நடந்தது?” என்று நாம் கேட்கும் பொழுது, ஒரு சிலர் “வளவள” என்று வர்ணித்துக் கொண்டே செல்வார்கள். சொல்ல வேண்டிய விஷயத்தை கடைசியாகத்தான் சொல்வர். ஆனால், ஒரு சிலரோ ரத்தினச் சுருக்கமாகப் பேசுவர்.

    சீதையை தேடிச் சென்ற அனுமன், அசோகவனத்தில் அவரைக் கண்டார். சீதையிடம் ராமன் விரைவில் வந்து தங்களை மீட்பார் என்று கூறிவிட்டு, ராமனின் இருப்பிடம் வந்தார். அனுமனைப் பார்த்த ராமர், “சீதையைப் பற்றி ஏதாவது தெரிந்ததா?” என்பார்.

    அதற்கு அனுமன் “கண்டேன் அந்த கற்பினுக்கு அணியை” என்று சுருக்கமாக முடிப்பார். சீதை எப்படி இருக்கிறாளோ என்று நினைத்த ராமனுக்கு, அனுமன் ரத்தினச் சுருக்கமாகச் சொல்லும் வாக்கியம் அதுதான்.

    முதலில் அவளைக் கண்டேன் என்று சொல் கிறார். அவள் கற்போடு இருக்கிறாள் என்பதையும் உரைக்கிறார். ராமன் எதை எதிர்பார்த்தானோ அதைச் சொல்லியதால் தான் அனுமன் சிறப்புடையவராக ஆனார்.

    அஞ்சிலே ஒன்று பெற்றான்!

    அஞ்சிலே ஒன்றைத் தாவி,

    அஞ்சிலே ஒன்று ஆறாக,

    ஆரியர்க் காக ஏகி,

    அஞ்சிலே ஒன்று பெற்ற

    அணங்கைக் கண்டு அயலார் ஊரில்,

    அஞ்சிலே ஒன்றை வைத்தான்!

    அவன் நம்மை அளித்துக் காப்பான்!

    என்பது அனுமனுக்குரிய துதிப்பாடல்.

    நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்களையும் வர்ணித்து அதன் மூலமாகப் பிறந்த ஆற்றல் மிக்க அனுமனை வழிபட முன்னோர்கள் வழி வகுத்தனர். பஞ்ச பூதங்களில் ஒன்றான வாயுவின் புதல்வன் தான் அனுமன். சீதையைக் கண்டுபிடித்து ராமனுக்கு ஏற்பட்ட துயரத்தைப் போக்கியதால் “சொல்லின் செல்வன்” என்ற பட்டத்தைப் பெற்றார். அப் படிப்பட்ட சொல்லின் செல்வனை நாம் வணங்கினால் நமக்கு செல்வாக்கும், சொல்வாக்கும் மேலோங்கும். சொன்ன சொல்லை நிறைவேற்றுகிற ஆற்றல் பிறக்கும். அனுமன் ஜாதகத்தை வைத்து வழிபட்டாலும் தடைகள் அகலும்.

    ‘ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம் அதை நம்பிய பேருக்கு ஏது பயம்?’ ஏன்று சொல்லியவர் அனுமன். அனுமனுடைய நட்சத்திரம் மூலம். தனுசு ராசி. மேஷ லக்னம். லக்னத்திலேயே செவ்வாய் சொந்த வீட்டில் சஞ்சரிக்கிறார்.

    5-ல் குரு வீற்றிருந்து சந்திரனையும், லக்னத்தையும் பார்க்கிறார். 10-ல் சனி சொந்த வீட்டில் இருக்கிறார். எனவே தான் பலசாலியாகவும், பிரம்மச்சாரியாகவும், ஆற்றல் மிக்கவராகவும், ஐஸ்வரியம் தருபவராகவும், மலையைத் தூக்கும் மாருதியாகவும் விளங்குகிறார்.

    ராமதூதன் என்று வர்ணிக்கப்படும் அனுமனை வழிபட்டால் ஏழரைச் சனி, அஷ்டமத்துச் சனி, அர்த்தாஷ்டமச் சனி ஆகியவற்றின் ஆதிக்கத்திலிருந்து விடுபடும் ஆற்றல் நமக்குக் கிடைக்கும்.

    சஞ்சீவி மலையை அனுமன் சுமந்து வரும் பொழுது, ஏழரைச் சனி அவருக்கு ஆரம்பமாகியது. சனிபகவான் அனுமனைப் பிடிக்க வந்தார். சஞ்சீவி மலையைக் கீழே இறக்கி வைத்திருக்கும் சமயம் பார்த்து அனுமன் தலைமீது சனி ஏறி அமர்ந்து கொண்டார்.

    திடீரென அனுமன் மலையைத் தூக்கி தன் தலையில் வைத்துக் கொண்டு பறக்கத் தொடங்கினார். மலைக்கும், அனுமன் தலைக்கும் இடையில் சிக்கிய சனி தன்னை விடுவிக்குமாறு வேண்டினார். அப்பொழுது “என்னைத் தொழுது வழிபடும் பக்தர்களுக்கு தொல்லை கொடுக்கக்கூடாது” என்று அனுமன் கேட்டுக்கொண்டு, சனியை விடுவித்ததாக புராணங்கள் சொல்கின்றன.

    எனவே மலையைச் சுமந்து செல்லும் அனுமனை நாம் விரதம் இருந்து வழிபட்டால் நலமும், வளமும் நமக்குக் கிடைக்கும். அனுமன் வீற்றிருந்து அருள் வழங்கும் ஆலயங்கள் ஆயிரக்கணக்கில் இருக்கின்றன. நாமக்கல் ஜெய்அனுமன், சுசீந்திரம் விஸ்வரூப ஆஞ்சநேயர், மதுரை வால் சுருட்டி ஆஞ்சநேயர், சிவகங்கை மாவட்டம் கீழச்சிவல்பட்டியில் வாலில் மணி கட்டிய வரம் தரும் அனுமன், வைரவன்பட்டியில் ராமர் வழிபட்ட தோற்றத்தில் ஜெய அனுமன், காரைக்குடி அருகில் உள்ள வ.சூரக்குடியில் ஸ்ரீ சிவ ஆஞ்சநேயர், பொன்னமராவதி அருகில் உள்ள வேகுப்பட்டியில் விஸ்வரூப ஆஞ்சநேயர் போன்றவை சிறப்பு வாய்ந்த தலங்கள் ஆகும்.

    உங்கள் வயதிற்கேற்ற வெற்றிலை மாலை அணிவித்தும், வடை மாலையை யோகபலம் பெற்ற நாளில் அணிவித்தாலும் தடைகள் அகன்று தன லாபம் பெருகும். கோரிக்கையை நினைத்துக் கொண்டு விரதம் இருந்து ஸ்ரீராமஜெய மாலையை அணிவித்தால் காரியங்கள் நிறைவேறும். வாயுபுத்திரனை சனிக்கிழமை அல்லது மூலம் நட்சத்திரமன்று முறைப்படி விரதம் இருந்து வழிபட்டால் வரமும் கிடைக்கும், வளமும் பெருகும்.
    கேதார கௌரி விரதம் என்பதே கணவன்-மனைவி ஒற்றுமைக்காகவும், என்றென்றும் தம்பதியர் இணைபிரியாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவும் கடைபிடிக்கப்படுவதாகும்.
    ஐப்பசி மாத அமாவாசை நாளில் கேதாரகௌரி விரதம் கொண்டாடப்படுகிறது. ஜோதிடவியலைப் பொறுத்த வரை ஐப்பசி மாதத்தில் சூரியன் துலாம் ராசியில் சஞ்சரிப்பதால் துலா மாதம் என்றழைக்கப்படுகிறது. இந்த மாதம் முழுவதும் துலாம் ராசியில் சூரியன் நீசம் பெற்ற நிலையில் அமர்ந்திருப்பார். அதாவது தனது வலிமை முழுவதையும் இழந்த நிலையில் வாசம் செய்யும் காலம் இது. சூரியனை தந்தைக்குரிய கிரகமாக பிதுர்காரகன் என்றும், சந்திரனை தாயாருக்கு உரிய கிரகமாக மாதுர்காரகன் என்றும் அழைப்பார்கள். சூரியனுக்குரிய பிரத்யதி தேவதை பரமேஸ்வரன். சந்திரனுக்குரிய பிரத்யதி தேவதை கௌரி.

    நீசம் பெற்ற தந்தையாகிய சூரியனோடு தாயான சந்திரன் இணையும் காலம் ஐப்பசி அமாவாசை. சக்தி இல்லையேல் சிவம் இல்லை என்ற கூற்றினை மெய்ப்பிக்கும் விதமாக பலம் இழந்து நீசம் பெற்ற நிலையில் சஞ்சரிக்கும் பிதுர்காரகன் சூரியனோடு சக்தியாகிய அன்னையின் அம்சமான சந்திரன் வந்து இணையும்போது சிவம் சக்தியைப் பெறுகிறது. சிவசக்தி ஐக்கியமானது நடைபெறுகிறது. அன்றைய தினத்தில் கேதார கௌரி விரதத்தினைப் பூர்த்தி செய்து அன்னை பார்வதியானவள் சிவபெருமானின் உடம்பினில் சரிபாதியைப் பெற்று தனது உரிமையை நிலைநாட்டியதை புராணங்களின் வாயிலாக அறிகிறோம். சிவசக்தி இணைந்திருந்தால் மட்டுமே உலகம் இயங்கும்.

    அவ்வாறே குடும்பத்தில் கணவனின் வலிமை குறையும்போது மனைவியானவள் அவருக்குத் துணை நிற்க வேண்டும், அவ்வாறே கணவனும் தனது துணைவிக்கு சரிபாதி உரிமையைத் தரவேண்டும் என்பதை சூசகமாகச் சொல்வதே இந்த கேதார கௌரி விரதம். இதே கருத்தினையே தீபாவளிப் பண்டிகையும் அறிவுறுத்துகிறது. நாம் தீபாவளி கொண்டாடுவதன் அடிப்படை காரணமான நரகாசுர வதத்தினை எண்ணிப் பாருங்கள். கிருஷ்ண பகவான் நரகாசுர யுத்தத்தின் போது மூர்ச்சையாகிவிட்ட நிலையில், தேரை ஓட்டும் சாரதியாக உடனிருந்த பாமா (பூமாதேவியின் மறு அவதாரம் - நரகாசுரனின் தாய்) வில்லெடுத்து போரிட்டு நரகாசுரனை வதம் செய்கிறாள் அல்லவா... அதாவது தந்தையின் வலிமை குறையும்போது தாய் அப்பொறுப்பினை சுமந்து வெற்றி காண்கிறாள்.

    குடும்பத்தில் கணவனும், மனைவியும் இணைந்து செயல்பட்டால்தான் வெற்றியைக் காண இயலும் என்பதை புராணங்கள் தெளிவாக எடுத்துரைக்கின்றன. கேதார கௌரி விரதம் என்பதே கணவன்-மனைவி ஒற்றுமைக்காகவும், என்றென்றும் தம்பதியர் இணைபிரியாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவும் கடைபிடிக்கப்படுவதாகும். அதனை நாம் எளிதாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக நரகாசுர வதம் முந்த தீபாவளியைத் தொடர்ந்து வரும் அமாவாசை நாளில் கேதார கௌரி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது.
    நம்முடைய பாவச் சுமையைக் குறைக்க உகந்த நாளாக இந்த சித்ரா பவுர்ணமி தினம் திகழ்கிறது. இன்று சித்ரகுப்தனை விரதம் இருந்து வழிபட்டால், புண்ணிய பலன்கள் அதிகரிக்கும்.
    நாம் முற்பிறவியில் செய்த வினைகளுக்கேற்ப இப்பிறவி நமக்கு அமையும். இதையே ஜோதிட ரீதியாக யோகம், காலம், நேரம் என்கிறோம். யோகம் என்பது ஒருவரது ஜாதகத்தில் கிரகங்களின் சேர்க்கை, பார்வையால் ஏற்படுவது. காலம் என்பது அவரவருக்கு நடைபெறும் தசாபுத்தி, அந்தரம் போன்றவை யோகமாகவும், யோகமில்லாமலும் அமைவது. நேரம் என்பது கோச்சார நிலையில் கிரகங்கள் சுற்றி வரும் நிலையில் தரும் பலன்களாகும்.

    முற்பிறவியில் நாம் செய்த கா்ம வினைகளின் பயனை நாம் அனுபவிக்க வேண்டும் என்பது நியதி. அந்த பாதிப்பில் இருந்து விடுபட முடியாது என்றாலும், அந்த தாக்கத்தை தாங்குவதற்கான மன வலிமையையும், உடல்பலத்தையும் பெறுவதற்காகவே நாம் இறைவனை பிரார்த்திக்கிறோம்.

    மனித வாழ்வில் விதி தந்த பலனால், எந்த வழியில் சென்றால் வாழ்க்கை வளமாக அமையும் என்பதற்கு ஜோதிடம் கூறும் எளிய பரிகார வழிபாட்டு முறை திதி, நட்சத்திர வழிபாடு. அந்த வகையில் அமாவாசை, பவுர்ணமி திதியிலும், சில குறிப்பிட்ட நட்சத்திர நாளிலும் செய்யும் பூஜை பல மடங்கு பலன் தரும். ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி வரும். அவற்றில் சித்ரா பவுர்ணமிக்கு அதிக பலம் இருக்கிறது. அந்த நாளில் செய்யும் வழிபாடு, நம்முடைய ஜனன ஜாதகத்தின் பலனையே மாற்றும் வல்லமை கொண்டது.

    நம்முடைய பாவச் சுமையைக் குறைக்க உகந்த நாளாக இந்த சித்ரா பவுர்ணமி தினம் திகழ்கிறது. மனிதர்களின் பாவ புண்ணியங்களை எழுதி வைக்கும் பணியைச் செய்பவர் சித்ரகுப்தன். ஒருவர் இறந்தபிறகு அவரது ஆன்மா, சொர்க்கத்திற்கு செல்வதா? நரகத்திற்குச் செல்வதா? என்பதை முடிவு செய்யும் எமதர்மனின் உதவியாளராக சித்ரகுப்தன் உள்ளார். ஒரு உயர் அதிகாரியை சந்திக்க அவரின் உதவியாளரை சந்தித்து முதலில் அனுமதி பெற வேண்டும். அதன்பிறகே அந்த அதிகாரியை சந்திக்க முடியும். அதன்படி எமதர்மனின் உதவியாளரான சித்ரகுப்தனை வழிபட்டால், புண்ணிய பலன்கள் அதிகரிக்கும்.

    சித்ரா பவுர்ணமி அன்று பூஜை அறையை சுத்தம் செய்து, சித்ரகுப்தன் படம் வைத்து, அதற்கு சந்தனம் குங்குமம் வைத்து, மலர் அலங்காரம் செய்யுங்கள். பழங்கள், காய்கறிகள், வேப்பம்பூ பச்சடி, பச்சரிசி வெல்லத்துடன் இனிப்புகள், கலவை சாதங்கள் நைவேத்தியமாக படைக்க வேண்டும். ஐந்து முகம் கொண்ட குத்துவிளக்கு ஏற்றி, தீப தூபம் காட்டி சித்ரகுப்தனை மனதார வழிபட வேண்டும். இதன் மூலம் பாவ பலன் குறைந்து, புண்ணிய பலன் பெருகும். மேலும் பஞ்சாங்கம் படிப்பதும், கடல் நீரில் நீராடுவதும் வாழ்வில் சுபீட்சத்தை அருளும்.

    சித்ர குப்தனின் மனைவி சித்ராதேவி ஆவாள். அந்த அன்னைக்கு, தேங்காய் சாதம், எலுமிச்சை சாதம், புளியோதரை, தயிர்சாதம், பருப்புபொடி சாதம், கறிவேப்பிலைப் பொடி சாதம், மாங்காய் சாதம், வெண் பொங்கல், சர்க்கரை பொங்கல், அரிசி உப்புமா, அவல் உப்புமா, கோதுமை உப்புமா படைத்து, அவற்றை தானமாக வழங்கியும் புண்ணியம் பெறலாம். கல்வி கேள்விகளில் சிறந்தவர் சித்ரகுப்தன் என்பதால், அவரது பூஜையில் எழுத்தாணி மற்றும் கணக்கு நோட்டு புத்தகங்களை வைத்து வழிபட்டால் பிள்ளைகளுக்கு படிப்பு நன்றாக வரும்.

    மனிதனாய் பிறந்த ஒவ்வொருவருக்கும் இரண்டு வகையான கடன் உண்டு. ஒன்று பிறவிக் கடன், மற்றொன்று பொருள் கடன். பெரும்பான்மையானவர்கள், இந்த இரண்டு கடன்களில் இருந்து மீள முடியாதவர்களாக, அவதிப்பட்டுக் கொண்டு இருப்பார்கள். அந்த துன்பத்தை நீக்கும் வழிபாடாகத் திகழ்வதுதான் சித்ரா பவுர்ணமி வழிபாடு.

    இந்த ஆண்டு சித்ரா பவுர்ணமி அன்று, சூரியன் அஸ்வினி நட்சத்திரத்திலும், சந்திரன் சித்திரை நட்சத்திரத்திலும் சஞ்சாரம் செய்வதால் முறையான பவுர்ணமி பூஜை வழிபாடு பாவ விமோசனம் தரும். சூரியன் சித்திரை மாதத்தில் அஸ்வினி நட்சத்திரத்தில் உச்சம் பெறுவார். அஸ்வினி நட்சத்திரத்தின் அதிபதி கேது. அவருக்கு ஞானகாரகன், மோட்சக்காரகன் என்று பெயர். அன்று சூரியன் தன் முழு சக்தியான உச்சத்தை வெளிப்படுத்துவதால் செய்யும் பவுர்ணமி வழிபாடு ஆன்ம பலத்தையும், ஞானத்தையும், மோட்சத்தை தந்து பிறவிக் கடனில் இருந்து மீளச் செய்யும். சந்திரன் சஞ்சாரம் செய்வது சித்திரை நட்சத்திரம். அது செவ்வாயின் நட்சத்திரம் என்பதால் பொருள் கடன் தீரும் என்பதில் ஐயமில்லை. எல்லா வருடமும் சூரியன் அஸ்வினி நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்யும் காலத்தில் பவுர்ணமி வருவதில்லை. எனவே இந்த ஆண்டு சித்ரா பவுர்ணமியில் வழிபடுவது பல மடங்கு பலனைத் தரும்.

    சூரியனின் அதிதேவதை சிவன், சந்திரனின் அதிதேவதை அம்பிகை. எனவே சிவசக்தியை சித்ரா பவுர்ணமியில் வழிபட்டால் கணவன்- மனைவி ஒற்றுமை அதிகரிக்கும்.

    பிரசன்ன ஜோதிடர் ஐ.ஆனந்தி
    சித்ரா பவுர்ணமி (நாளை) நன்னாளில், சித்ரகுப்தருக்கு விரதம் இருந்து, பூஜித்து வழிபடுவது வழக்கம். பெரும்பாலும் பெண்களே விரதமிருந்து வழிபாடுகளைச் செய்கிறார்கள்.
    சித்ரா பவுர்ணமி நன்னாளில், சித்ரகுப்தருக்கு விரதம் இருந்து, பூஜித்து வழிபடுவது வழக்கம். பெரும்பாலான குடும்பங்களில், இது முக்கியப் பண்டிகையாகவே கொண்டாடப்படுகிறது. பெரும்பாலும் பெண்களே விரதமிருந்து வழிபாடுகளைச் செய்கிறார்கள். சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரம் கூடி வரும் பவுர்ணமி நாள் ‘சித்ரா பவுர்ணமி’யாகும். இது வசந்த காலம். “காலங்களில் நான் வசந்த காலமாக இருக்கிறேன்” என்று பகவான் கண்ணன் பகவத்கீதையில் கூறுகிறார்.

    ஒரு சமயம், கயிலையில் பார்வதி தேவி, தங்கப்பலகையில், சித்திரம் ஒன்றை வரைந்தார். அந்தச் சித்திரத்திற்கு, சிவனாரை உயிர் கொடுக்க வேண்டினார். அந்த‌ வேண்டுகோளை ஏற்று, சிவபெருமானும் சித்திரத்திற்கு உயிர் கொடுத்தார். சித்திரத்தில் இருந்து தோன்றியதால் ‘சித்திர புத்திரன்’ என்றும், ‘சித்ரகுப்தன்’ என்றும் அழைக்கப்படலானார். சித்ரகுப்தர் தோன்றிய தினம் ‘சித்ரா பவுர்ணமி’ என்று புராணங்கள் சொல்கின்றன.

    வசந்த ருதுவில் நீர் நிலைகள் தெளிவாக இருக்கும். அந்த தெளிந்த நீரில் பவுர்ணமி நிலவு அழகிய சித்திரத்தை போல் தோன்றும் என்பதால்தான் ‘சித்ரா பவுர்ணமி’ என பெயர் ஏற்பட்டதாக மற்றொரு கதை கூறுகிறது.

    மனிதர்கள், தேவர்கள் உள்ளிட்ட அனைத்து ஜீவராசிகளின் பாவ புண்ணியங்களை கணக்கிட, சிவபெருமான் ஒருவரை நியமிக்க எண்ணினார். அதன்படி அந்தப் பணிகளை சித்ரகுப்தனிடம் வழங்கினார். சித்ரகுப்தனும் அந்தப் பணியை சிறப்பாக செய்து வரலானார். இவர் குறித்து வைக்கும் பாவ- புண்ணிய கணக்குகளைக் கொண்டே, எமதர்மன் ஜீவராசிகளுக்கு தண்டனை வழங்குவதாக புராணங்கள் சொல்கின்றன. ‘சித்' என்றால் ‘மனம்’, என்றும், ‘குப்த' என்றால் ‘மறைவு’ என்றும் பொருள்படும். நம் மனதில், மறைவாக இருந்து நாம் செய்யும் பாவ - புண்ணியங்களைக் கண்காணிப்பதால், சித்ரகுப்தனுக்கு இந்தப் பெயர் வந்ததாக சொல்வார்கள்.

    சித்ரகுப்தனுக்கு காஞ்சீபுரத்தில் தனிக்கோவில் உள்ளது. அருப்புக்கோட்டை அமிர்தகடேஸ்வரர் கோவிலிலும் அவருக்கு தனிச் சன்னிதி இருக்கிறது. இந்த ஆலயங்களுக்குச் சென்று சித்ரகுப்தனை வழிபட்டு சிறப்பான வாழ்வை அமைத்துக்கொள்ளலாம்.

    விரதம் இருப்பது எப்படி?

    சித்ரா பவுர்ணமி அன்று சந்திர பகவான், தம் பூரண கலைகளுடன் பிரகாசிக்கிறார். பூமிக்கு மிக அருகில் சஞ்சாரம் செய்கிறார். எனவே அன்றைய தினம் இறைவழிபாடு செய்வது மிக அதிக நற்பலன்களைப் பெற்றுத் தரும். அதோடு சித்ரா பவுர்ணமி வரும் சித்திரை மாதத்தில் சூரியனும் தனது உச்ச வீட்டில் பலம் பெற்று நிற்கிறார்.

    அன்றைய தினம் அதிகாலையில் வீட்டை சுத்தம் செய்து மாக்கோலம் இட வேண்டும். பூஜை அறையில் சித்ரகுப்தனின் படத்தை வைத்து வழிபாடு செய்யலாம். அவரது படம் இல்லாதவர்கள், பூஜை அறையில் மாக்கோலமாக சித்ரகுப்தனின் படத்தை வரைய வேண்டும். அவரது கையில் ஏடும், எழுத்தாணியும் இருப்பது போல் வரைவது அவசியம். சித்ரகுப்தரின் திருவுருவத்துக்கு தீப, தூபம் காட்டி, மலர்களால் அர்ச்சனை செய்ய வேண்டும். நாம் அறிந்தும் அறியாமலும் செய்யும் சகல பாவங்களையும் மன்னித்து அருளும்படி, மனமுருகி வழிபட வேண்டும். அன்றைய தினம் மலை வலம் வருவதும், முருகப்பெருமானையும், சித்ரகுப்தனையும் வழிபடுவதும் சிறப்பானதாகும். இந்த வழிபாட்டின் மூலமாக ஆயுள் விருத்தியும், ஆதாயம் தரும் செல்வ விருத்தியும் உண்டாகும்.

    வண்ணங்களில் வஸ்திரங்கள்

    ஏழு வண்ணங்கள் ஒன்றிணைந்து உருவான நீனாதேவிக்குப் பிறந்தவர், சித்ரகுப்தர் என்றும் ஒரு புராணக்கதை கூறுகிறது. அதன்படி சித்ரகுப்தனை வழிபடும்போது, வானவில்லின் ஏழு நிறங்களை நினைவுபடுத்தும் வகையில், அவருக்கு வண்ண வண்ண வஸ்திரங்களை சாத்தி வழிபடுவது சிறப்பு. தயிர் சாதம், தேங்காய் சாதம், உளுந்து வடை முதலியவற்றை நைவேத்தியமாக படைக்க வேண்டும். பசும்பால், தயிர் போன்றவற்றை நைவேத்தியமாக படைக்கக்கூடாது. சித்ரகுப்தனின் அபிஷேகத்திற்குக் கூட பசும்பால் பயன்படுத்துவது கிடையாதாம். சித்ரகுப்தனை நினைத்து விரதம் இருப்பவர்களும், உப்பு, பசும் பால், தயிர் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.
    ஓவ்வொரு நாளும் பக்தியோடு விரதம் இருந்து, திருமகள் துதிப்பாடல்களைப் படித்துத் திருமகளை வழிபட்டுவந்தால், நம் வறுமைகள் நீங்கும்; வாழ்க்கை வளம் பெறும்.
    புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமி முதல் பதினாறு நாள்கள் லட்சுமி தேவியைப் பிரார்த்தித்துச் செய்யப்படும் விரதம் இது. ஓவ்வொரு நாளும் பக்தியோடு விரதம் இருந்து, திருமகள் துதிப்பாடல்களைப் படித்துத் திருமகளை வழிபட்டுவந்தால், நம் வறுமைகள் நீங்கும்; வாழ்க்கை வளம் பெறும்.

    இந்த 16 தினங்களில் அனுதினமும் மகாலட்சுமி தேவிக்கு நெய் தீபங்கள் ஏற்றிவைத்து, சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து, கீழ்க்காணும் லட்சுமி ஸ்தோத்திரத்தைச் சொல்லி வழிபடுங்கள். மேலும், தங்களது சக்திக்கு உகந்தவாறு ஏழைகளுக்கு அன்னதானம் செய்யுங்கள். இதனால், ரோகங்கள், மனத் துயரங்கள், சஞ்சலங்கள் ஆகிய யாவையும் நீங்கி புது நம்பிக்கைப் பிறக்கும். தேவியின் திருவருளால் வீட்டில் செல்வகடாட்சம் உண்டாகும்; நினைத்த காரியங்கள் நினைத்தபடி நிறைவேறும்.

    நமஸ்தேஸ்து மஹாமாயே ஸ்ரீபீடே ஸுரபூஜிதே
    ஸங்கசக்ரகதா ஹஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
    நமஸ்தே கருடாரூடே கோலாஸுரபயங்கரீ
    ஸர்வபாபஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
    ஸர்வக்ஞே ஸர்வவரதே ஸர்வதுஷ்டபயங்கரீ
    ஸர்வ து:க்கஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
    ஸித்திபுத்தி ப்ரதே தேவி புக்திமுக்தி ப்ரதாயினி
    மந்த்ரமூர்த்தே ஸ்தாதேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
    ஆத்யந்த்ரஹிதே தேவி ஆத்யஸக்தி மஹேஸ்வரி
    யோகஜே யோக ஸம்பூதே மகா லக்ஷ்மி நமோஸ்துதே

    கருத்து: மகாமாயையும் ஸ்ரீ பீடத்தில் வசிப்பவளும் தேவர்களால் பூஜிக்கப்பட்டவளும் சங்கம், சக்கரம், கதாயுதம் ஆகியவற்றைத் தரித்தவளுமான மகாலட்சுமி தேவியே தங்களை வணங்குகிறோம்.

    கருட வாகனத்தில் அமர்ந்தவளும் கோலாசுரனுக்கு பயத்தை அளித்தவளும் சர்வ பாவங்களையும் போக்குபவளான மகாலட்சுமி தேவியே தங்களை வணங்குகிறோம்.எல்லோருக்கும் வரங்களை அளிப்பவளும், துஷ்டர்களுக்குப் பயத்தை அளிப்பவளும், சர்வ துக்கங்களைப் போக்குபவளுமான மகாலட்சுமி தேவியே தங்களை வணங்குகிறோம்.

    ஸித்தி-புத்தியை அளிப்பவளும், போகம், மோட்சம் ஆகியவற்றைக் கொடுப்பவளும், மந்திர மூர்த்தியும், எப்போதும் பிரகாசிப்பவளுமான மகாலட்சுமி தேவியே தங்களை வணங்குகிறோம். ஆதியந்தம் இல்லாதவளும், தேவியும், முதல் சக்தியும், மகேஸ்வரியும், யோகத்தினால் உண்டானவளும், யோகத்துக்குப் பலமுமான மகாலட்சுமி தேவியே தங்களை வணங்குகிறோம்.
    ஸ்ரீ பைரவருக்குப் பவுர்ணமிக்கு பின்வரும் தேய்பிறை அஷ்டமியில் விரதம் இருந்து பஞ்சதீபம் ஏற்றி வழிபட்டால் காலத்தினால் தீர்க்க முடியாத தொல்லைகள் நீங்கும்.
    ஸ்ரீ பைரவருக்குப் பவுர்ணமிக்கு பின்வரும் தேய்பிறை அஷ்டமியில் விரதம் இருந்து பஞ்சதீபம் ஏற்றி வழிபட்டால் காலத்தினால் தீர்க்க முடியாத தொல்லைகள் நீங்கும்.

    காலபைரவர் அல்லது மார்த்தாண்ட பைரவரை, தேய்பிறை அஷ்டமியில் வழிபடுவது உகந்தது. தொடர்ந்து எட்டு அஷ்டமியில் இந்த பைரவரை விரதம் இருந்து வழிபட்டு வந்தால் இழந்த பொருட்களை மீண்டும் பெறலாம். அடகுவைத்த நகைகளை திருப்பும் வாய்ப்பும் கிட்டும்.

    தேனும், பாலும் கலந்து பைரவருக்கு அபிஷேகம் செய்தால் எதிர்ப்புகள் அகலும். பொதுவாக அஷ்டமி திதியில் பைரவரை விரதம் இருந்து வழிபட்டால் அனைத்து நற்பலன்களும் கிடைக்கும். செவ்வாய்க் கிழமை தீபமேற்றி வழிபட்டால் வராத கடன்கள் கூட வசூலாகும். வாழ்க்கை வளமாகும்.

    இவரை வழிபாடு செய்வதால் வறுமை, பகைவர்களின் தொல்லைகள், பயம் நீங்கி அவர் அருளால் அஷ்ட ஐஸ்வர்யங்களும், தன லாபமும், வியாபார முன்னேற்றம், பணியாற்றும் இடத்தில் தொல்லைகள் நீங்கி மனத்தில் மகிழ்ச்சியை பெறலாம்.

    தினமும் பைரவர் காயத்ரியையும், பைரவி காயத்ரியையும் ஓதி வந்தால் விரைவில் செல்வம் பெருகும். வெல்லம் கலந்த பாயசம், உளுந்து, வடை, பால், தேன், பழம், வில்வ இலைகளால் மூல மந்திரம் சொல்லி அர்ச்சனை செய்ய தொழில் விருத்தியாகும்.
    ராம நவமி அன்று விரதமிருந்து வழிபடுவதன் மூலமும், ராமருடன் இணைந்து சீதா, லட்சுமணர், அனுமன் வழிபாட்டை மேற்கொள்வதன் மூலமும் லட்சியங்கள் நிறைவேறும்.
    ராமநவமி விரதம் இரண்டு விதமாக அனுஷ்டிக்கப்படுகிறது. அதாவது, சித்திரை மாதம் சுக்லபட்ச பிரதமை திதியில் இருந்து நவமி திதி வரை உள்ள ஒன்பது நாள் விரதம் முதல் வகையாகும். இதற்கு 'கர்ப்போஸ்தவம்' என்று பெயர். சித்திரை மாத சுக்லபட்ச நவமி திதியில் இருந்து அடுத்து வரும் ஒன்பது நாட்கள் அனுஷ்டிப்பது இரண்டாவது வகை.

    இதற்கு 'ஜன்மோதீஸவம்' என்று பெயர். இவ்வாறு ராமர் பிறப்பதற்கு முன் ஒன்பது நாட்கள் ஒரு விரத முறையாகவும், ராமர் , பிறந்ததில் இருந்து ஒன்பது நாட்கள் ஒரு விரத முறையாகவும் அனுஷ்டிக்கப்பட்டு, ராமநவமியை பக்தர்கள் கொண்டாடி வருகின்றனர். விரதத்தை தொடங்குவதற்கு முதல் நாள், வீட்டை சுத்தம் செய்ய வேண்டும்.

    விரதம் தொடங்கும் நாளன்று ஒரு வேளை மட்டும் உணவு உட்கொண்டு, ராமநாமத்தை உச்சரித்துக் கொண்டிருக்க வேண்டும். பின்னர் வரும் ஒவ்வொரு நாளும் சர்க்கரை பொங்கல், பாயசம் உள்ளிட்ட நைவேத்தியங்களை படைத்து வழிபடுவதுடன், ராமருக்கு துளசி மாலையும், அனுமனுக்கு வடை மாலையும் சாத்த வேண்டும்.

    இதனை ஒன்பது நாளும் சாத்த முடியாதவர்கள், ராம நவமி தினத்திலாவது செய்ய வேண்டும். ராம நவமி விரத நாட்களில் மட்டும் அல்லாத எல்லா காலங்களிலும், ராமஜாதகத்தை படமாக காகிதத்தில் வரைந்து வைத்தோ, அல்லது செப்பு தகட்டில் வரைந்து வைத்தோ வழிபடுவது சிறப்பான பலனை தரக்கூடியது.

    ராமருடைய ஜாதகத்தின்படி சூரியன்- மேஷ ராசியிலும், செவ்வாய்- மகர ராசியிலும், குரு- கடக ராசியிலும், சுக்ரன்- மீன ராசியிலும், சனி- துலாம் ராசியிலும் உச்சஸ்தானத்தில் இருக்கின்ற ஜாதகம் என்பதால் அவரின் ஜாதகம் சிறப்பு வாய்ந்ததாக உள்ளது. இந்த ஜாதகத்தை வைத்து வழிபடுவதால், நினைத்த காரியம் கைகூடும். செல்வம், புகழ் என எண்ணற்ற பலன்கள் கிடைக்கும்.

    ராமர் நவமி திதியில் பிறந்ததால் அன்றைய தினம் ‘ராமநவமி’ என்று அழைக்கப்படுகிறது. இன்று ராமபிரானை விரதமிருந்து வழிபடுவதன் மூலமும், ராமருடன் இணைந்து சீதா, லட்சுமணர், அனுமன் வழிபாட்டை மேற்கொள்வதன் மூலமும் லட்சியங்கள் நிறைவேறும். அனுமன் வழிபாட்டால் தம்பதியர் ஒற்றுமை உருவாகும். 
    அனைவரும் கலைகளில் தேர்ச்சி பெறவும், செல்வ வளம் பெறவும் அன்னை ராஜ மாதங்கியை வெள்ளிக்கிழமை தோறும் விரதம் இருந்து வணங்கினால் சகல நன்மைகளும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
    கலைகளில் தேர்ச்சி பெறவும், பதவி உயர்வு பெறவும், குரல் வளம் பெறவும் மாதங்கி தேவியை வணங்கலாம். நவ ஆவரண பூஜையும், குங்கும அபிஷேகமும் இவளுக்கு பிடித்தமானது. மதுரை மீனாட்சி, ராஜ மாதங்கியின் அம்சம் என்பதால், அவளை வணங்குவதே ராஜ சியாமளாவை வணங்குவது போல் ஆகும்.

    சியாமளா நவரத்தின மாலை, சியாமளா ஆவரணம், மாதங்கி சகஸ்ர நாமம், சியாமளா தண்டகம், சியாமளா கவசம், மாதங்கி ஹிருதயம், ராஜ மாதங்கி மந்திரம், மாதங்கி ஸ்தோத்திரம், மாதங்கி ஸுமுகி கவசம், சியாமளா சகஸ்ர நாமம் போன்ற பல துதிகள் அன்னையின் புகழை போற்றுகின்றன.

    அனைவரும் கலைகளில் தேர்ச்சி பெறவும், செல்வ வளம் பெறவும் அவதரித்தவள் அன்னை ராஜ மாதங்கி. அவளை வெள்ளிக்கிழமை தோறும் விரதம் இருந்து வணங்கினால் சகல நன்மைகளும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
    ×