என் மலர்tooltip icon

    தோஷ பரிகாரங்கள்

    மூல நட்சத்திரத்தை பற்றியும், மூல நட்சத்திரத்தின் தோஷங்களை நீக்குவதற்கான பரிகாரங்களையும் இங்கு தெரிந்து கொள்ளலாம்.
    மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்களின் நட்சத்திர தோஷத்தை போக்கவும், அதிகமான நன்மைகளை பெறவும் இந்நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தினந்தோறும் காலையில், குளித்து முடித்ததும், விநாயக பெருமானை வழிபட்ட பின் மற்ற காரியங்களை செய்ய தொடங்குவது நன்மைகளை உண்டாக்கும். இந்நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்களால் முடிந்த போது அடர்பழுப்பு(பிரவுன்) நிற ஆடைகளை வசதியில்லாதவர்களுக்கு தானம் அளிப்பது மூல நட்சத்திர தோஷத்தை போக்கும்.

    கோவில்களில் திருவிழாக்கள், உற்சவங்கள் போன்றவற்றை தொடங்கும் போது கோவிலில் ஏற்றப்படும் கொடியை உங்கள் செலவில் செய்து கோவிலுக்கு காணிக்கையாக கொடுப்பது சிறந்த பரிகாரமாகும்.மூல நட்சத்திரத்தில் உங்களுக்கு குழந்தைகள் பிறக்கும் பட்சத்தில் குழந்தை பிறந்த 27 ஆம் நாளில் நட்சத்திர சாந்தி பூஜை செய்வதால் குழந்தை மூல நட்சத்திரத்தின் எந்த பாதத்தில் பிறந்திருந்தாலும், எதிர்கால வாழ்க்கையில் பாதிப்புகள் ஏதும் ஏற்படாமல் காக்கும். பூஜை சடங்குகளை செய்யும் வேதியர்களுக்கு அரிசி, ஆடை போன்றவற்றை தானமாக அளிப்பது நற்பலன்களை தரும்.

    மூல நட்சத்திரத்தில் பிறந்த பல ஆண்களும் பெண்களும் திருமணம் தடை தாமதங்கள் போன்றவற்றால் அவதிப்படுகின்றனர். இந்த பிரச்சனையை தீர்ப்பதற்கு சித்தர்கள் கூறிய ஒரு எளிய பரிகாரம் உள்ளது. சிவன் கோயில் தல விருட்சத்தின் வேர்ப்பகுதியில் இருக்கும் மண் ஒரு கைப்பிடி, விநாயகரின் அம்சமாக இருக்கும் யானை கால் பட்ட மண் ஒரு கைப்பிடி, பால் சுரக்கும் பசுமாடு கால் பட்ட மண் ஒரு கைப்பிடி, பாம்பு புற்று மண் ஒரு கைப்பிடி, வயல்வெளி அல்லது கண்மாயில் இருக்கின்ற நண்டு வளை மண் ஒரு கைப்பிடி. கண்மாய் அல்லது ஊருணியில் இருக்கும் மண் ஒரு கைப்பிடி, ஆறு அல்லது கடற்கரை மண் ஒரு கைப்பிடி என எடுத்துவைத்து கொண்டு, மேற்கண்ட மண்களை எல்லாம் ஒரு பாத்திரத்தில் போட்டு, தண்ணீர் ஊற்றி நன்கு பிசைந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

    மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்களின் உடல் முழுவதும் இந்த மண்ணை நன்கு பூசிக்கொண்டு 45 நிமிடங்கள் கழித்து குளிக்க வேண்டும். இப்படி செய்வதால் மூல நட்சத்திர தோஷம் நீங்கப் பெற்று, இந்த குளியலை மேற்கொள்ளும் திருமணமாகாத ஆண்கள் மற்றும் பெண்களுக்கு 90 நாட்களுக்குள் திருமண நிச்சயம் நடக்கும்.
    கீழப்பாவூர் நரசிம்மர் கோவில் கல்யாணத்தடை, கடன் தொல்லை, கோர்ட் வழக்கு, கடுமையான நோய் ஆகியவற்றுக்கான மிகச் சிறந்த பரிகாரத்தலமாக விளங்குகிறது.
    நரசிம்மருக்கு பக்தவஸலன் என்று திருநாமம் உண்டு. அதாவது தன் பக்தனுக்கு குழந்தை போன்றவன் என்று பொருள். வத்ஸ: என்றால் குழந்தை. அன்றே ஈன்றெடுத்த கன்றிடம் தாய்ப்பசுவிற்கு ஏற்படும் அளவற்ற பாசமே வாத்ஸல்யம். நாம் அனைவரும் இறைவனின் குழந்தைகளே! பக்தர்களாகிய புத்திரர்களுக்கும் அன்பு காட்டுபவனே பக்தவஸலன். பகவானை அணுகும் பக்தன் தன் குற்றங்களை நினைத்து அஞ்சும்போது எப்பெருமானின் வாத்சல்யத்தை நினைத்து அச்சம் தீரலாம்.

    குழந்தையைக் கண்டதும் தாயின் முகம் மலர்கிறது. அதைப்போல பக்தனைக் கண்டதும் பகவானின் முகம் மலர்கிறது. ஏராளமான பக்தர்களை ஒருங்கே காண நேரிடும் போது நரசிம்மனுக்கு ஆனந்தக்களிப்பு தலைக்கேறி முகமலர்ச்சி உண்டாகிறது. ஆகவே, குழந்தை முகமும் குணமும் கொண்ட கீழப்பாவூர் நரசிம்மரை தரிசிக்க இன்றே வருகை தாருங்கள்.

    பரிகாரத்தலம்: கீழப்பாவூர் நரசிம்மர் கோவில் கல்யாணத்தடை, கடன் தொல்லை, கோர்ட் வழக்கு, கடுமையான நோய் ஆகியவற்றுக்கான மிகச் சிறந்த பரிகாரத்தலமாக விளங்குகிறது. சுவாதி நட்சத்திரக் கார்களுக்குரிய ஸ்தலமாகவும் திகழ்கிறது.

    வழிபட உகந்த நாட்கள்: நரசிம்மரை வழிபடுவதற்கு செவ்வாய், புதன், சனி ஆகிய நாட்களும் மாலை வேளையும் உகந்ததாகும். திருவோணம், பிரதோஷம், வளர்பிறை சதுர்தசி தினங்களில் சிறப்பு பூஜை நடக்கிறது.

    நடை திறப்பு: காலை 8.00-11.30, மாலை 5.00-800

    அர்ச்சகர்: இரா.ஆனந்தன் 9442330643.

    இருப்பிடம்: திருநெல்வேலி-தென்காசி நெடுஞ்சாலையில் திருநெல்வேலி மேற்காக 44 கி.மீ. தொலைவிலும் தென்காசியில் இருந்து கிழக்காக 10 கி.மீ. தொலைவிலும் உள்ளது பாவூர்சத்திரம் என்னும் ஊர். இங்கிருந்து 2 கி.மீ. அருகில் சுரண்டை என்ற ஊருக்கு செல்லும் வழியில் கீழப்பாவூர் அமைந்துள்ளது.

    - கி.ஸ்ரீமுருகன், கீழப்பாவூர். 
    மீன ராசியில் பிறந்தவர்கள் வாழ்வில் மிகுதியான யோகங்களும், அதிர்ஷ்டங்களும் பெறுவதற்கு செய்ய வேண்டிய பரிகாரங்கள் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.
    மீன ராசியில் பிறந்தவர்கள் வருடத்திற்கு ஒருமுறை திருச்செந்தூரில் இருக்கும் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு சென்று முருகப் பெருமானுக்கு அபிஷேகம் மற்றும் அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். இந்த வழிபாடு உங்களுக்கு வாழ்வில் ஏற்றமிகு பலன்களை பெற்றுத் தருவதாக இருக்கும்.

    தேனி மாவட்டத்தில் இருக்கின்ற ஆழ்வார்திருநகரி கோவிலுக்கு சென்று அங்கிருக்கும் ஆதிநாதர் பெருமாளையும் தாயாரையும் வழிபாடு செய்வதால் குரு பகவானின் தோஷங்கள் நீங்கி வாழ்வில் அதிகரிக்கும். உங்கள் வீட்டில் அருகில் இருக்கும் கோவிலுக்கு வியாழக்கிழமைகள் தோறும் மஞ்சள் நிற மலர்கள், சந்தனம் போன்றவற்றை தானமாக அளிப்பது உங்களுக்கு குரு பகவானின் அருள் கிடைத்து மிகுதியான வாழ்வில் யோகங்கள் உண்டாக வழி வகுக்கும்.

    வியாழக்கிழமைகளில் கோயில் பசுக்கள், யானை போன்றவற்றிற்கு உணவாக வாழைப்பழங்கள் கொடுப்பது அதிர்ஷ்டங்களை உண்டாக்கும். கோயில்களில் நடைபெறும் ஹோமங்களுக்கு நெய், அரிசி, போன்ற பொருட்களை தானம் அளிப்பதும் சிறந்த பரிகாரமாக இருக்கிறது.
    கண்திருஷ்டி, எதிரிகள் தொல்லை, பிறரின் பொறாமை எண்ண அதிர்வுகள் போன்றவை நம் வீட்டிலிருந்து நீங்கி, நன்மையான பலன்கள் உண்டாக எளிய பரிகாரத்தை அறிந்து கொள்ளலாம்.
    கண்திருஷ்டி, எதிரிகள் தொல்லை, பிறரின் பொறாமை எண்ண அதிர்வுகள் போன்றவை நம் வீட்டிலிருந்து நீங்கி, நன்மையான பலன்கள் உண்டாக வியாழக்கிழமை தினத்தில் ஒரு தாம்பூலத் தட்டு நிறைய வெண்கடுகுகளை போட்டு “ஓம் தும் துர்க்காய நமஹ” என்ற மந்திரத்தை 108 முறை உரு ஜெபித்து கொள்ள வேண்டும்.

    பின்பு வெண்கடுகு இருக்கும் தட்டை எடுத்துக்கொண்டு உங்கள் வீட்டு வாயிலில் நடுப்பகுதியில் “ஓம் துர்க்காயை நமஹ” என்ற மந்திரத்தை மூன்று முறை துதித்து சிறிது வெண்கடுகை அங்கு போட வேண்டும். இதுபோன்று வீட்டின் அக்னி மூலை, கன்னி மூலை, அக்னி மூலைக்கும், கன்னி மூலைக்கும் இடைப்பட்ட பகுதி, பிரம்மஸ்தானம், வாயு மூலை, வாயு மூலைக்கும் ஈசானிய முலைக்கும் நடுவான பகுதி, இறுதியில் ஈசானிய மூலை ஆகிய 8 இடங்களில் தட்டில் இருக்கின்ற வெண்கடுகுகளை மந்திரம் உரு ஜெபித்து போட வேண்டும்.

    வீட்டின் எட்டுப் பகுதிகளிலும் போட முடியாதவர்கள் வீட்டின் நான்கு திசைகளில் மந்திரம் துதித்து வெண்கடுகுகளை போட்டு விடலாம். இந்த எளிய பரிகாரத்தை செய்த பிறகு நமக்கு நேரடி மற்றும் மறைமுக எதிரிகளால் செய்யப்பட்ட செய்வினை மாந்திரீகம் போன்றவற்றின் பாதிப்பு உடனடியாக நீங்கும். வீட்டில் துஷ்ட சக்திகள் இருப்பின் அவை வெளியேறும். மேலும் எத்தகைய தீய சக்திகளும் வீட்டிற்குள் நுழையாதவாறு தடுக்கும். சக மனிதர்களின் கண் திருஷ்டி, பொறாமை எண்ணங்களின் அதிர்வுகளால் பாதிப்புகள் ஏற்படாமல் உங்களை காக்கும்.
    அகத்தீஸ்வரமுடையார் என்னும் சதாசிவ நாதர் திருக்கோவிலில் அபிஷேகம் செய்து மாலை சாற்றி வழிபட்டால் விரைவில் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை.
    சென்னையில் இருந்து புதுச்சேரி செல்லும் கிழக்குக் கடற்கரைச் சாலையில் மாமல்லபுரத்தில் இருந்து 8 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது, மணமை கிராமம். இங்கு அகத்தீஸ்வரமுடையார் என்னும் சதாசிவ நாதர் திருக்கோவில் இருக்கிறது.

    இந்தக் கோவிலில் பிரதோஷ வழிபாடு, சங்காபிஷேகம், நவராத்திரி, சிவராத்திரி, திருவாதிரை, ஆருத்ரா தரி சனம் போன்ற சிறப்பு வழிபாடுகளும், திருமுறை ஓதுதல் போன்றவைகளும் நடைபெற்று வருகின்றன. இங்கு எழுந்தருளியுள்ள அம்பாள் சன்னிதியில் மூன்று பவுர்ணமி தினங்களில் சுவாமிக்கும், அம்பாளுக்கும் அபிஷேகம் செய்து மாலை சாற்றி வழிபட்டால் விரைவில் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை. தீராத நோய்களையும் தீர்த்து வைக்கும் திருத்தலமாக இது விளங்குகிறது.

    திருக்கழுக்குன்றம் வட்டத்தில், மணமை மதுரா லிங்கமேடு கிராமம் என இவ்வூர் குறிக்கப்படுகிறது. கிழக்கு கடற்கரை சாலையில் மணமை பேருந்து நிலையத்தில் இருந்து 2 கி.மீ. தொலைவிலும், திருக்கழுக்குன்றத்தில் இருந்து 15 கி.மீ. தொலைவிலும் இவ்வூர் அமைந்துள்ளது.
    சைதாப்பேட்டையில் உள்ள கடும்பாடி சின்னம்மன் கோவிலில் கடன் தொல்லைகள் தீர, கணவன்-மனைவி ஒற்றுமை மேலோங்க, திருமண தடை நீங்க இந்த அம்மனை பிரார்த்தனை செய்கிறார்கள்.
    சென்னை சைதாப்பேட்டையில் உள்ள கடும்பாடி சின்னம்மன் ஆலயம் சுமார் 400 வருடங்கள் பழமை வாய்ந்த ஆலயமாகும். இந்தப் பகுதி மக்களுக்கு சின்னம்மன்தான் இஷ்டதெய்வம், காவல் தெய்வம் எல்லாமே! அழகிய கோபுரத்துடன் திகழ்கிறது கோவில். நுழைவாயிலின் வலப்புறத்தில் மதுரை வீரனும், இடப்புறத்தில் காத்தவராயனும் காட்சி தருகின்றனர். உள்ளே... கருணையும், உக்கிரமும் பொங்க, தன்னை நாடி வருவோருக்கெல்லாம் அருள்மழை பொழிந்து கொண்டிருக்கிறாள் சின்னம்மன்.

    கடன் தொல்லைகள் தீர, கணவன்-மனைவி ஒற்றுமை மேலோங்க, திருமண தடை நீங்க இந்த அம்மனை பிரார்த்தனை செய்கிறார்கள்.
    பக்தர்கள் ஆடி மாதம் பொங்கல் படையலிட்டும், அபிஷேகம் செய்தும், அம்மனுக்குப் புடவை சார்த்தியும், மஞ்சள் சரடு கட்டியும் தங்களின் நேர்த்திக் கடனைச் செலுத்துகின்றனர்.

    கோவில் உள்ளே இருக்கும் புற்றுச் சன்னதி ரொம்பவே விசேஷமானது எனப் போற்றுகின்றனர் பக்தர்கள். சின்னம்மனை வணங்கிவிட்டு, புற்றுக்கு பால் அல்லது முட்டை படைத்து வேண்டிக் கொண்டால் சகல தோஷங்களும் விரைவில் நீங்கும். சந்தோஷம் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    ஆடி மாதம் செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சின்னம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து வேண்டிக் கொண்டால், குழந்தை பாக்கியம் கிட்டும் என்கிறார்கள் பக்தர்கள். வெள்ளிக்கிழமைகளில் மதியம் 12 மணிக்கு (ராகு காலம் நிறைவுறும் நேரம்) அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும். அப்போது அம்மனுக்குப் பாலாபிஷேகம் செய்து மனதாரப் பிரார்த்தித்தால், கடன் தொல்லையில் இருந்து நிவாரணம் பெறலாம். கணவன்-மனைவி இடையே ஒற்றுமை மேலோங்கும் என்பது ஐதீகம்!

    கோவிலில் வேப்ப மரமும், பனைமரமும் பல வருடங்களாக இருந்து வருகின்றன. வேப்ப மரத்துக்கு மஞ்சள் சரடு கட்டி, சின்னம்மனை வேண்டிக் கொண்டால், தடைப்பட்ட திருமணம் விரைவில் நடந்தேறும் என்பது நம்பிக்கை!

    கடும்பாடி சின்னம்மன் திருக்கோவிலில் அம்மன் சுயம்பு வடிவில் அருள்பாலிப்பதும், இவரை அணுகினால் கடன் தொல்லைகள் தீரவும், கணவன் மனைவி அன்னியோன்யமாய் கருத்து வேறுபாடு நீங்கி ஒற்றுமையாய் வாழவும் திருமணத் தடை நீங்கவும் அனுக்கிரகம் செய்வார் என்பது சிறப்பு.

    பித்ரு தோஷம் தீர்ந்து நற்பலன்கள் ஏற்படுவதற்கான சிறந்த பரிகாரங்கள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
    தை, மாசி, வைகாசி மாதங்களில் பிறந்த ஆண், பெண் இருவரும் தங்களின் முற்பிறவியில் தந்தைக்கான ஈமக்கிரியை செய்யாததால் பித்ரு தோஷம் பெற்றவர்களாகவும், கார்த்திகை மாதத்தில் பிறந்த ஆண், பெண் இருவரும் முற்பிறவியில் தங்களின் பெற்ற தாய்க்கு ஈமக்கிரியை செய்யாததால் பித்ரு தோஷம் பெற்றவர்களாக இருப்பதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இத்தகைய காரணங்களால் ஏற்படும் பித்ரு தோஷத்தை போக்க கீழ்கண்ட எளிய பரிகாரங்களை செய்வதன் மூலம் நல்ல பலன்களை பெற முடியும்.

    ஒரு அமாவாசை தினத்தில் 100 கிராம் சந்தனக்கட்டை வாங்கிக் கொண்டு சிவன் கோவிலுக்கு சென்று, அங்கு அந்த சந்தனத்தை உரசி எடுத்து, அந்த சந்தனத்தை அர்ச்சகரிடம் கொடுத்து சிவபெருமானுக்கு சந்தன அபிஷேகம் செய்ய சொல்ல வேண்டும். சிவனுக்கு செய்யப்படும் அந்த அபிஷேகத்தைப் பார்த்த நாள் முதல் உங்கள் பித்ரு தோஷம் நீங்கும்.

    சிவன் கோவிலில் மேற்கூறிய பரிகாரத்தை செய்ய முடியாதவர்கள் 100 கிராம் பச்சரிசி, ஒரு அகத்திக்கீரை கட்டு, 50 கிராம் கருப்பு எள், 100 கிராம் வெல்லம், வாழைக்காய் ஆகியவற்றை அமாவாசை தினத்தில் ஒரு பசு மாட்டிற்கு உண்ணக் கொடுக்க உங்களின் பித்ரு தோஷம் நீங்கும். இந்த பரிகாரத்தை தொடர்ந்து 9 அமாவாசை தினத்தில் செய்வதால் பித்ரு தோஷங்கள், சாபங்கள் முழுமையாக நீங்கி வாழ்வில் மேன்மையான பலன்கள் ஏற்பட தொடங்கும்.
    திருவேற்காடு கருமாரி அம்மன் தலத்தில் எந்தெந்த நாட்களில் வழிபாடு செய்தால், என்னென்ன பிரச்சனைகள் தீரும் என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.
    திருவேற்காடு கருமாரி அம்மன் தலத்தில் எந்தெந்த நாட்களில் வழிபாடு செய்தால், என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்ற விவரம் வருமாறு:-


    ஆடி மாத ஞாயிற்றுக்கிழமை - நீண்ட ஆயுள் கிடைக்கும்.
    மாசி மாத அமாவாசை - குழந்தை பாக்கியம் உண்டாகும்.
    மாசி பவுர்ணமி - எதிரிகளை வெல்லலாம்.
    தை மாத ஞாயிற்றுக்கிழமை - தீய சக்திகள் விலகும்.
    தை மாத பவுர்ணமி - பல புனித நதிகளில் நீராடிய பலன்.
    தை மாத அமாவாசை - நோய்கள் குணமாகும்.
    பூச நட்சத்திர தினம் - அரிய செல்வம் சேரும்.
    பூர நட்சத்திரம் - கலைகளில் வல்லமை பெறலாம்.
    சித்திரை மாத பவுர்ணமி - நினைத்தது நிறைவேறும்.
    புரட்டாசி, ஐப்பசி மாத பவுர்ணமி நாட்கள் - புனிதம் பெறலாம் பாவம் நீங்கும்.
    நவராத்திரி நாட்கள் - பிரார்த்தனைகள் நிறைவேறும்
    பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு அருகில் ஓடிக் கொண்டிருக்கும் வராக நதியின் இரு கரைகளிலும் இருக்கும் ஆண், பெண் மருத மரங்களைப் பார்த்து வழிபட்டுச் செல்லும் தம்பதியர்கள், மனம் ஒன்றுபட்டு அதிகக் காலம் வாழ்வர்.
    தேனி மாவட்டம், பெரியகுளம் நகரில் பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் இருக்கிறது. இந்த ஆலயத்தில் இருக்கும் ராஜேந்திர சோழீஸ்வரர், அறம் வளர்த்த நாயகி மற்றும் பாலசுப்பிரமணிய சுவாமியை வழிபடுபவர்கள், வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து வளங்களும் கிடைக்கப் பெற்று, மனமகிழ்ச்சியுடன் வாழ்வார்கள் என்பது நம்பிக்கை. இந்த ஆலயத்தின் வரலாற்றைப் பார்க்கலாம்..

    இந்தக் கோவிலுக்கு அருகில் ஓடிக் கொண்டிருக்கும் வராக நதியின் இரு கரையிலும், நேரெதிராகப் பல நூற்றாண்டுகளைக் கடந்த ஆண் மருத மரமும், பெண் மருத மரமும் இருக்கின்றன. காசிக்கு அடுத்ததாக இங்கு மட்டுமே இரண்டு மருத மரங்களுக்கு இடையில் நதி பயணிக்கிறது என்கின்றனர். எனவே, காசிக்குச் சென்று வழிபட்டால் கிடைக்கும் பலன்கள் அனைத்தும், இந்த ஆலயத்திற்கு சென்று வழிபட்டாலும் கிடைக்கும் என்கிறார்கள்.

    திருமணத்தடை உள்ளவர்கள், வராக நதியில் நீராடி, பின்னர் கோவிலுக்குச் சென்று, இறைவனையும் இறைவியையும் வழிபட்டால் அவர்களுக்குத் திருமணத் தடை நீங்கி, விரைவில் திருமணம் நடைபெறும். இதே போல், குழந்தைப்பேறு வேண்டும் கணவன் - மனைவி இருவரும் இங்கு நீராடிவிட்டு, கோவிலுக்குச் சென்று வழிபட்டால் குழந்தைப் பேறு கிடைக்கும் என்கின்றனர்.

    மேலும் வராக நதியின் இரு கரைகளிலும் இருக்கும் ஆண், பெண் மருத மரங்களைப் பார்த்து வழிபட்டுச் செல்லும் தம்பதியர்கள், மனம் ஒன்றுபட்டு அதிகக் காலம் வாழ்வர். அவர்களுக்கு இடையே எவ்விதக் கருத்து வேறுபாடுகளும் ஏற்படாது என்பது நம்பிக்கையாக இருக்கிறது.

    இக்கோவிலில் சிவபெருமான், பார்வதி தேவி மற்றும் முருகப் பெருமான் என்று மூன்று சன்னிதிகளுக்கும் தனித்தனியாக மூன்று கொடி மரங்கள் அமைந்திருப்பது மிகச் சிறப்புடையதாகக் கருதப்படுகிறது. இக்கோவிலுக்கு வந்து மூவரையும் வழிபடுபவர்களுக்கு, வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து வளங்களும் கிடைப்பதுடன் மனமகிழ்ச்சியோடு வாழ்வார்கள் என்கிறார்கள்.

    தேனி மாவட்டம், பெரியகுளம் நகரின் மேற்குப் பகுதியில் அமைந்திருக்கும் இக்கோவிலுக்குச் செல்ல, பெரியகுளம் நகரப் பேருந்து நிலையத்தில் இருந்து நகரப்பேருந்து மற்றும் சிற்றுந்து வசதிகள் இருக்கின்றன.
    மகர ராசியில் பிறந்தவர்கள் தங்கள் வாழ்வில் மிகுந்த செல்வமும், அதிர்ஷ்டமும் யோகங்களையும் பெறுவாதற்கு செய்ய வேண்டிய எளிய பரிகாரங்களை அறிந்து கொள்ளலாம்.
    மகர ராசியினர் தங்கள் வாழ்வில் மிகுதியான அதிர்ஷ்டத்தையும், யோகங்களையும் பெறுவதற்கு வருடத்திற்கு ஒருமுறையாவது திருப்பதி திருமலை ஏழுமலையான் கோவிலுக்கு சென்று வெங்கடாசலபதியை வழிபாடு செய்ய வேண்டும்.

    அதே போன்று ஒரு மாதத்திற்கொரு முறை அல்லது வருடத்திற்கு ஒரு முறை திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சென்று முருகப் பெருமானுக்கு அபிஷேகம் செய்து வழிபாடு செய்ய வேண்டும். உங்கள் வீட்டிற்கருகில் இருக்கும் கோயிலுக்கு சனிக்கிழமை தோறும் தீபமேற்றும் எண்ணையை தானமாக கொடுத்து வருவதால், உங்களின் கிரக தோஷங்கள் நீங்கி வாழ்வில் நன்மைகள் உண்டாகும்.

    செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் அனுமன் கோவிலுக்கு சென்று, அனுமனுக்கு தீபமேற்றி வெண்ணெய் சாற்றி வழிபாடு செய்ய வேண்டும். நவக்கிரக சன்னிதியில் சனிபகவானுக்கு சங்கு பூக்களை சமர்ப்பித்து, நல்லெண்ணெய் தீபம் ஏற்றி சனி காயத்ரி மந்திரங்கள் துதித்து சனீஸ்வர பகவானை வழிபட வேண்டும்.

    வசதி குறைந்த மக்களுக்கு இரும்பினால் செய்யப்பட்ட பாத்திரங்கள் அல்லது இன்ன பிற இரும்பு பொருட்களையும் வழங்குவது நல்லது. உடல் ஊனமுற்றவர்களுக்கு சனிக்கிழமை தினத்தில் புத்தாடை தானம் செய்வது உங்களுக்கு சனி பகவானின் அருட்கடாட்சத்தை முழுமையாக பெற்றுத் தரும் ஒரு சிறந்த பரிகாரமாக இருக்கிறது.
    இந்த ஆண்டுக்கான சந்திர கிரகணம் 17.7.2019 (ஆனி 31-ந் தேதி) புதன்கிழமை அதிகாலை 1.31 மணி முதல் 4.30 மணி வரை உத்திராடம் நட்சத்திரத்தில் நிகழ்கிறது. கிரகண தோஷம் வராமல் இருக்க, கடைப்பிடிக்க வேண்டிய எளிய வழிமுறைகளை பார்க்கலாம்.
    நவக்கிரகங்கள் ஒன்பதும் ‘நவ நாயகர்கள்’ எனப்படுவர். மேஷம் முதல் மீனம் வரையிலான ராசிகள், பன்னிரண்டு. இதில் சூரியன் முதல் சனி வரையிலான ஏழு கிரகங்களுக்கும் சொந்த வீடு உண்டு. ராகு- கேதுக்கள் நிழல் கிரகம் என்பதால், அவர்களுக்கு சொந்த வீடு கிடையாது.

    விண்வெளியில் சூரியனுடைய சுழற்சிப் பாதையும், சந்திரனுடைய சுழற்சிப் பாதையும் ஒரு குறிப்பிட்ட எல்லையில் சந்திக்கும். அப்படி வடதிசையில் ஏற்படும் சந்திப்பை ராகுவாகவும், அதே நேரத்தில் அதற்கு நேர் எதிரில் 180-வது டிகிரியில் சம சப்தமமாக ஏற்படும் தென்திசைச் சந்திப்பை கேதுவாகவும் குறிப்பிடுவார்கள். அதனால்தான் அவை நிழல் கிரகங்கள் என்று சொல்லப்படுகிறது.

    சூரியனும், சந்திரனும் பன்னிரு ராசிகளை வலமாகச் சுற்றி வரும்போது, ராகு- கேது இடமாகச் சுற்றி வரும். அப்போது சூரியனும் சந்திரனும் ஒரே ராசியில் ஒரே டிகிரியில் சந்திக்கும் போது அமாவாசை. அந்த நேரத்தில் அவர்களோடு ராகு சேரும்போது, அதற்கு ஏழாவது ராசியில் 180 டிகிரியில் கேது வரும்போது ‘சூரிய கிரகணம்’ ஏற்படும்.

    அதேபோல் பவுர்ணமியன்று சூரியனும் சந்திரனும் நேருக்கு நேர் எதிரில் 180-வது டிகிரியில் வரும்போது, சூரியனுடன் ராகுவும் சந்திரனுடன் கேதுவும் அதே டிகிரியில் சேரும்போது ‘சந்திர கிரகணம்’ ஏற்படும். அதாவது சூரியன், சந்திரன், பூமி, ராகு, கேது ஆகிய ஐந்தும் ஒரே நேர்க்கோட்டில் சந்திக்கும் போது கிரகணம் உண்டாகிறது.

    ஒவ்வொரு வருடமும் பூமியில், சூரிய கிரகணம் 2, சந்திர கிரகணம் 2 என 4 கிரகணங்கள் சம்பவிக்கும். சில நேரங்களில் 3 கிரகணங்கள் கூட ஏற்படும். நடப்பு விகாரி வருடத்தில் 2 சூரிய கிரகணமும், ஒரு சந்திர கிரகணமும் நடக்கிறது. இதில் ஒரு சூரிய கிரகணம் கடந்த 2-ந் தேதி நடை பெற்றது. அடுத்த சூரிய கிரகணம் 26.12.2019 (மார்கழி 10-ந் தேதி) வியாழக்கிழமை காலை 8 மணி முதல் பகல் 1.35 மணி வரை மூல நட்சத்திரத்தில் நிகழ்கிறது.

    இந்த ஆண்டுக்கான சந்திர கிரகணம் 17.7.2019 (ஆனி 31-ந் தேதி) புதன்கிழமை அதிகாலை 1.31 மணி முதல் 4.30 மணி வரை உத்திராடம் நட்சத்திரத்தில் நிகழ்கிறது. சந்திர கிரகணம் என்பது சந்திரன், பூமியின் பின்னால் கடந்து செல்லும் போது, பூமியானது சூரியனின் கதிர்களை நிலவின் மீது விழுவதை மறைத்து விடுவதால் ஏற்படுவதாகும். சந்திர கிரகணம் முழுமையாக ஏற்பட்டால் ‘பூரண சந்திர கிர கணம்’ என்றும், அரைகுறையாக ஏற்பட்டால் ‘பார்ச்சுவ (பகுதி) சந்திர கிரகணம்’ என்றும் சொல்வார்கள்.

    கிரகணம் நிகழும் போது சூரிய- சந்திரர்கள் ராகுவின் பிடியில் இருந்தால் ‘ராகு கிரகஸ்தம்’ என்றும், கேதுவின் பிடியில் இருந்தால் ‘கேது கிரகஸ்தம்’ என்றும் அழைக்கப்படும். வருகிற 17-ந் தேதி ஏற்படஉள்ள சந்திர கிரகணம், கேது கிரகஸ்தம் ஆகும். இந்த சந்திர கிரகணம் தோராயமாக 3 மணி நேரம் சம்பவிக்க உள்ளது.

    விண்வெளியில் உள்ள அனைத்து கோள்களும் சூரியனின் ஒளியை பெற்று இயங்குவதால், சூரிய ஒளியில் இருந்து வரும் புற ஊதா கதிர்கள் மற்றும் அகச் சிவப்பு கதிர்களே பூமிக்கு பரிபூரண இயக்கத்தை தருகிறது. இந்த சூரிய ஒளியை நிழல் கிரகங்களான ராகு - கேதுக்கள் மறைக்கும் போது, பூமிக்கு கிடைக்கும் ஒளி சக்தி திறன் குறைகிறது. அதனால் கிரகண காலத்திற்கு முன், பின் 7 நாட்கள் பூமிக்கு தோஷ காலமாகும். அப்படிப்பட்ட இந்த நேரத்தில் ஏற்படும் இயற்கையின் சக்தியை, அற் புதங்களை அளவிட முடியாது.

    சந்திர கிரகணம்-

    மனிதனை இல்லற வாழ்விற்கு அழைத்து துன்பத்தை வழங்குபவர் ராகு பகவான். அதே நேரம் துன்பத்தில் இருந்து விடுபடும் ஞானத்தினை அள்ளி வழங்குபவர் கேது பகவான் ஆவார். தவறான எண்ணங்களை, தர்மம் இல்லாத தீங்கான செயல்களை செய்தால், ராகு- கேது ஜாதகத்தில் தோஷமாக அமர்ந்து மன வேதனையை தருகிறது. நேர்மை, நாணயத்துடன் இருப்பவர்களுக்கு யோகம் தரும் இடத்தில் அமர்ந்து சுப பலன்களை வாரி வழங்குவார்கள்.

    ஆத்மகாரகன் சூரிய பகவானுடன் ராகு சேரும்போது, ஆன்மிகத்தன்மை அற்றவராகவும், சூரியனால் கிடைக்கக் கூடிய அரசாங்க யோகம், தந்தையின் ஆதரவின்மை, பூர் வீகத்தை விட்டு வெளியேறும் நிலை, முன்னேற்றமின்மை போன்றவற்றை ஏற்படுத்தும். ‘சாட்சிக்காரன் காலில் விழுவதை விட சண்டைக்காரன் காலில் விழுவது மேல்’ என்ற பழ மொழிக்கு ஏற்ப, ராகு-கேதுவால் ஏற்பட்ட பிரச்சினைக்கு, அவர்களை கிரகண நேரங்களில் வழிபட்டால் நற் பலன் மிகுதியாகும்.

    நியாயமான, நீண்ட நாட்களாக நிறைவேறாத கோரிக்கை இருப்பவர்கள், ஜனன கால ஜாதகத்தில் கிரகண தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள், கிரகண நேரத்தில் கடலில் நீராடி தியானம், ஜெபம் செய்தால் ஆன்ம பலம் கிடைக்கும். ஆன்மா சுத்தி அடையும் போது, அடைய முடியாத வெற்றியே கிடையாது.

    தீராத கடன் பிரச்சினையால் அவதிப்படுபவர்கள், கிரகணம் விடும் நேரத்தில் தங்களால் முடிந்த கடன் தொகையை செலுத்தினால், வாட்டி வதைத்த கடன் பிரச்சினைகள் விரைவில் தீரும். 17-ந் தேதி ஏற்படும் சந்திர கிரகணம் நிறைவும் நேரம் காலை 4 மணியில் இருந்து 4.30 மணிக்குள். அன்றைய தினம் ஆடி மாதம் பிறப்பதற்கு முன், அதிகாலை 4 மணிக்குள் சந்திர கிரகண தர்ப்பணம் செய்ய வேண்டும். பொழுது விடிந்ததும் காலை 6 மணிக்கு மேல் சூரிய உதயத்தின் போது, தட்சிணாயன புண்ணியகால தர்ப்பணம் செய்ய வேண்டும்.

    16-ந் தேதி (இன்று) செவ்வாய்க் கிழமை பகல் 3 மணிக்கு மேல் உணவு அருந்தக்கூடாது. தர்ப்பை இட்ட நீரே அருந்த வேண்டும். கர்ப்பிணி பெண்கள் வெளியே செல்லக்கூடாது. உயிர் காக்க தேவையான நிலையில் அறுவை சிகிச்சை செய்யலாம். மற்றவர்கள் ஒரு நாள் கழித்து அறுவை சிகிச்சை செய்யலாம். வெளியூர் பயணம் தவிர்ப்பது நல்லது. கிரகணம் நடந்து கொண்டிருக்கும் போது, காயத்ரி மந்திரம், ராம நாம பாராயணம், திருக்கோளாற்று பதிகம் படிக்கலாம். பூராடம், உத்திராடம், திருவோணம், கார்த்திகை, உத்திரம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் சாந்தி செய்துகொள்வது சிறப்பு. கிரகணம் முடிந்த பிறகு நீராடிவிட்டு, அருகிலுள்ள கோவிலுக்குச் சென்று வழிபாடு செய்து புதியதாக சமைத்த உணவை உண்ணலாம்.

    தோஷம் வராமல் தடுக்கும் வழிமுறை

    ஒருவருக்கு கிரகண தோஷம் வராமல் இருக்க, கடைப்பிடிக்க வேண்டிய எளிய வழி முறைகள். குலதெய்வம் மற்றும் ஊரின் எல்லை, காவல் தெய்வ வழிபாட்டை முறையாக செய்ய வேண்டும். வட்டித் தொழில் செய்பவர்கள், இயலாதவரை துன்புறுத்தக்கூடாது. முன்னோர்களுக்கு முறையான திதி தர்ப்பணம் செய்ய வேண்டும். முன்னோர்களின் சொத்துக்களையோ, அவர்கள் வாழ்ந்த வீடுகளையோ நியாயமில்லாத காரணத்திற்கு விற்கவோ, அழிக்கவோ கூடாது. பொய் சாட்சி சொல்லக் கூடாது. குருவிக் கூடு, பாம்புப் புற்று இருந்தால், அவை யாருக்கும் தொந்தரவாக இல்லாத பட்சத்தில் அதை இடிக்கக் கூடாது. நிழல் தரும் மரங்களை வெட்டக்கூடாது. அரசுக்கு சொந்தமான இடத்தை, கோவில் சொத்துகளைத் தந்திரமாக கையகப்படுத்தக் கூடாது. புனித தீர்த்தங்களை, நீர்நிலைகளை மாசுபடுத்தக் கூடாது.

    பிரசன்ன ஜோதிடர் ஐ.ஆனந்தி
    நகர்ப்புற நெருக்கடிகள் காரணமாகவும், இடப்பற்றாக்குறையாலும் பல வீடுகளில் வாஸ்து முறைகளை கடைப்பிடிக்க இயலாமல் போகிறது. அந்த நிலையில் வாஸ்து தோஷத்தை எளிதாக அகற்றும் வழிமுறை பற்றி இங்கே காணலாம்.
    இன்றைய காலகட்டத்தில் வாடகை வீடுகளில் குடியிருப்பவர்களும் வாஸ்து விதிகளை கவனத்தில் கொள்கின்றனர். குறிப்பாக, அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்கள், தங்களது வீடுகளும் வாஸ்து சாஸ்திர விதிகளுக்கு ஏற்ப இருக்க வேண்டும் என்பதில் ஆர்வமாக இருப்பது அறியப்பட்டுள்ளது. ஆனால், நகர்ப்புற நெருக்கடிகள் காரணமாகவும், இடப்பற்றாக்குறையாலும் பல வீடுகளில் வாஸ்து முறைகளை கடைப்பிடிக்க இயலாமல் போகிறது. அந்த நிலையில் வாஸ்து தோஷத்தை எளிதாக அகற்றும் வழிமுறை பற்றி இங்கே காணலாம்.

    விநாயகர் மற்றும் மகாலட்சுமி ஆகிய தெய்வங்களின் அருளை பெறக்கூடிய வழியாகவும் இந்த முறை அமைகிறது. வார நாட்களில் செவ்வாய் அல்லது வெள்ளி ஆகிய ஏதாவது ஒரு கிழமையில் வீட்டின் தலைவாசல் நிலையின் நீள, அகலத்துக்கேற்ப அருகம்புல் மாலை மற்றும் வெற்றிலை மாலை ஆகியவற்றை சூட்ட வேண்டும்.

    அந்த இரண்டு மாலைகளையும் மறுநாள் காலையில் அகற்றி, தண்ணீர் நிரப்பப்பட்ட பாத்திரத்தில் சிறிது நேரம் மூழ்கும்படி வைக்க வேண்டும். பின்னர், ஒரு சுபஹோரையில் அந்த தண்ணீரை வீட்டின் எட்டுத் திக்குகளிலும் மாவிலை கொண்டு தெளிக்க வேண்டும். பின்னர், அருகம்புல் மற்றும் வெற்றிலை மாலை ஆகியவற்றை ஒரு வெள்ளைத்துணியில் கட்டி எடுத்துச்சென்று ஆறு அல்லது கடலில் போட்டு விடலாம். ஆறு மாதத்திற்கு ஒரு முறை என்று 3 அல்லது 4 முறை செய்து வந்தால் வாஸ்து ரீதியான பாதிப்புகள் அகலும் என்று வாஸ்து வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
    ×