search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கீழப்பாவூர் நரசிம்மர் கோவில்
    X
    கீழப்பாவூர் நரசிம்மர் கோவில்

    கடன், கல்யாணத்தடைக்கு சிறந்த பரிகாரத்தலம்

    கீழப்பாவூர் நரசிம்மர் கோவில் கல்யாணத்தடை, கடன் தொல்லை, கோர்ட் வழக்கு, கடுமையான நோய் ஆகியவற்றுக்கான மிகச் சிறந்த பரிகாரத்தலமாக விளங்குகிறது.
    நரசிம்மருக்கு பக்தவஸலன் என்று திருநாமம் உண்டு. அதாவது தன் பக்தனுக்கு குழந்தை போன்றவன் என்று பொருள். வத்ஸ: என்றால் குழந்தை. அன்றே ஈன்றெடுத்த கன்றிடம் தாய்ப்பசுவிற்கு ஏற்படும் அளவற்ற பாசமே வாத்ஸல்யம். நாம் அனைவரும் இறைவனின் குழந்தைகளே! பக்தர்களாகிய புத்திரர்களுக்கும் அன்பு காட்டுபவனே பக்தவஸலன். பகவானை அணுகும் பக்தன் தன் குற்றங்களை நினைத்து அஞ்சும்போது எப்பெருமானின் வாத்சல்யத்தை நினைத்து அச்சம் தீரலாம்.

    குழந்தையைக் கண்டதும் தாயின் முகம் மலர்கிறது. அதைப்போல பக்தனைக் கண்டதும் பகவானின் முகம் மலர்கிறது. ஏராளமான பக்தர்களை ஒருங்கே காண நேரிடும் போது நரசிம்மனுக்கு ஆனந்தக்களிப்பு தலைக்கேறி முகமலர்ச்சி உண்டாகிறது. ஆகவே, குழந்தை முகமும் குணமும் கொண்ட கீழப்பாவூர் நரசிம்மரை தரிசிக்க இன்றே வருகை தாருங்கள்.

    பரிகாரத்தலம்: கீழப்பாவூர் நரசிம்மர் கோவில் கல்யாணத்தடை, கடன் தொல்லை, கோர்ட் வழக்கு, கடுமையான நோய் ஆகியவற்றுக்கான மிகச் சிறந்த பரிகாரத்தலமாக விளங்குகிறது. சுவாதி நட்சத்திரக் கார்களுக்குரிய ஸ்தலமாகவும் திகழ்கிறது.

    வழிபட உகந்த நாட்கள்: நரசிம்மரை வழிபடுவதற்கு செவ்வாய், புதன், சனி ஆகிய நாட்களும் மாலை வேளையும் உகந்ததாகும். திருவோணம், பிரதோஷம், வளர்பிறை சதுர்தசி தினங்களில் சிறப்பு பூஜை நடக்கிறது.

    நடை திறப்பு: காலை 8.00-11.30, மாலை 5.00-800

    அர்ச்சகர்: இரா.ஆனந்தன் 9442330643.

    இருப்பிடம்: திருநெல்வேலி-தென்காசி நெடுஞ்சாலையில் திருநெல்வேலி மேற்காக 44 கி.மீ. தொலைவிலும் தென்காசியில் இருந்து கிழக்காக 10 கி.மீ. தொலைவிலும் உள்ளது பாவூர்சத்திரம் என்னும் ஊர். இங்கிருந்து 2 கி.மீ. அருகில் சுரண்டை என்ற ஊருக்கு செல்லும் வழியில் கீழப்பாவூர் அமைந்துள்ளது.

    - கி.ஸ்ரீமுருகன், கீழப்பாவூர். 
    Next Story
    ×