search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கடும்பாடி சின்னம்மன்
    X
    கடும்பாடி சின்னம்மன்

    கடன் தொல்லை தீர்க்கும் கடும்பாடி சின்னம்மன்

    சைதாப்பேட்டையில் உள்ள கடும்பாடி சின்னம்மன் கோவிலில் கடன் தொல்லைகள் தீர, கணவன்-மனைவி ஒற்றுமை மேலோங்க, திருமண தடை நீங்க இந்த அம்மனை பிரார்த்தனை செய்கிறார்கள்.
    சென்னை சைதாப்பேட்டையில் உள்ள கடும்பாடி சின்னம்மன் ஆலயம் சுமார் 400 வருடங்கள் பழமை வாய்ந்த ஆலயமாகும். இந்தப் பகுதி மக்களுக்கு சின்னம்மன்தான் இஷ்டதெய்வம், காவல் தெய்வம் எல்லாமே! அழகிய கோபுரத்துடன் திகழ்கிறது கோவில். நுழைவாயிலின் வலப்புறத்தில் மதுரை வீரனும், இடப்புறத்தில் காத்தவராயனும் காட்சி தருகின்றனர். உள்ளே... கருணையும், உக்கிரமும் பொங்க, தன்னை நாடி வருவோருக்கெல்லாம் அருள்மழை பொழிந்து கொண்டிருக்கிறாள் சின்னம்மன்.

    கடன் தொல்லைகள் தீர, கணவன்-மனைவி ஒற்றுமை மேலோங்க, திருமண தடை நீங்க இந்த அம்மனை பிரார்த்தனை செய்கிறார்கள்.
    பக்தர்கள் ஆடி மாதம் பொங்கல் படையலிட்டும், அபிஷேகம் செய்தும், அம்மனுக்குப் புடவை சார்த்தியும், மஞ்சள் சரடு கட்டியும் தங்களின் நேர்த்திக் கடனைச் செலுத்துகின்றனர்.

    கோவில் உள்ளே இருக்கும் புற்றுச் சன்னதி ரொம்பவே விசேஷமானது எனப் போற்றுகின்றனர் பக்தர்கள். சின்னம்மனை வணங்கிவிட்டு, புற்றுக்கு பால் அல்லது முட்டை படைத்து வேண்டிக் கொண்டால் சகல தோஷங்களும் விரைவில் நீங்கும். சந்தோஷம் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    ஆடி மாதம் செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சின்னம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து வேண்டிக் கொண்டால், குழந்தை பாக்கியம் கிட்டும் என்கிறார்கள் பக்தர்கள். வெள்ளிக்கிழமைகளில் மதியம் 12 மணிக்கு (ராகு காலம் நிறைவுறும் நேரம்) அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும். அப்போது அம்மனுக்குப் பாலாபிஷேகம் செய்து மனதாரப் பிரார்த்தித்தால், கடன் தொல்லையில் இருந்து நிவாரணம் பெறலாம். கணவன்-மனைவி இடையே ஒற்றுமை மேலோங்கும் என்பது ஐதீகம்!

    கோவிலில் வேப்ப மரமும், பனைமரமும் பல வருடங்களாக இருந்து வருகின்றன. வேப்ப மரத்துக்கு மஞ்சள் சரடு கட்டி, சின்னம்மனை வேண்டிக் கொண்டால், தடைப்பட்ட திருமணம் விரைவில் நடந்தேறும் என்பது நம்பிக்கை!

    கடும்பாடி சின்னம்மன் திருக்கோவிலில் அம்மன் சுயம்பு வடிவில் அருள்பாலிப்பதும், இவரை அணுகினால் கடன் தொல்லைகள் தீரவும், கணவன் மனைவி அன்னியோன்யமாய் கருத்து வேறுபாடு நீங்கி ஒற்றுமையாய் வாழவும் திருமணத் தடை நீங்கவும் அனுக்கிரகம் செய்வார் என்பது சிறப்பு.

    Next Story
    ×