என் மலர்
தோஷ பரிகாரங்கள்
கீழப்பாவூர் நரசிம்மர் கோவிலில் நடக்கும் மூலமந்திர ஹோமத்தில் கலந்து கொள்பவர்களுக்கு வாழ்வில் சகலவிதமான கஷ்டங்கள் நீங்கி பரிபூர்ண நிலை உண்டாகும்.
திருநெல்வேலி-தென்காசி சாலையில் திருநெல்வேலியில் இருந்து மேற்காக 44 கி.மீ. தொலைவிலும் தென்காசியில் இருந்து கிழக்காக 10 கி.மீ. தூரத்திலும் உள்ளது பாவூர்சத்திரம் என்னும் ஊர். இங்கிருந்து 2 கி.மீ. அருகில் சுரண்டை என்னும் ஊருக்கு செல்லும் வழியில் அமைந்துள்ளது கீழப்பாவூர்.
தமிழகத்தில் இங்கு மட்டும் 16 திருக்கரங்களுடன் இரணியனை மடியில் கிடத்தி வதம் செய்யும் விதமாக திரிபங்க நிலையில் அபூர்வ வடிவச் சிறப்புடன் அவர் காட்சி தருகிறார். சூரியனும் சந்திரனும் வெண்சாமரங்கள் வீசி சாந்தப்படுத்திக் கொண்டிருக்க வெண்கொற்றக் குடையுடன் தியானித்தபடி கம்பீரமாக வீற்றிக்கிறார்.
ஒவ்வொரு மாதமும் நரசிம்மர் அவதரித்த சுவாதி நட்சத்திரத்தன்று பிரதோஷ வேளையில் பூஜை இங்கு நடக்கிறது. மாலை 3.30 மணிக்கு 16 வகை மூலிகைகளால் மூலமந்திர ஹோமம் நடக்கிறது. தொடர்ந்து இதில் கலந்து கொள்பவர்களுக்கு வாழ்வில் சகலவிதமான கஷ்டங்கள் நீங்கி பரிபூர்ண நிலை உண்டாகும்.

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்கள் வாழ்வில் மிகுதியான யோகங்களை பெற செய்ய வேண்டிய பரிகாரங்கள் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.
ராகு பகவானுக்குரிய ஒரு அற்புத நட்சத்திரமாக திருவாதிரை நட்சத்திரம் இருக்கிறது. அந்த திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்கள் வாழ்வில் மிகுதியான யோகங்களை பெற செய்ய வேண்டிய பரிகாரங்கள் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.
திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்களின் ஜென்ம நட்சத்திர தினத்தன்று தஞ்சை மாவட்டத்திலிருக்கும் திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி கோவிலுக்கு சென்று, சிவபெருமானுக்கும் பார்வதிக்கும் அபிஷேகம் மற்றும் அர்ச்சனை செய்து, வஸ்திரம் சாற்றி வழிபாடு செய்ய வேண்டும்.
பிறகு அங்கிருக்கும் ராகு பகவானின் பாலாபிஷேக பூஜைக்கு, பால் தானம் தந்து வழிபாடு செய்வதால் உங்கள் நட்சத்திரத்திற்கு ஏற்பட்டிருக்கும் ராகு கிரகத்தின் தோஷங்கள் அனைத்தும் நீங்கும். தினமும் காலை எழுந்து குளித்து முடித்ததும் சிவபெருமானுக்குரிய ருத்ர மகாமந்திரத்தை உங்களால் முடிந்த எண்ணிக்கையில் துதித்து வழிபடுவது உங்கள் வாழ்வில் நன்மைகள் அதிகம் ஏற்பட செய்யும்.
திருவாதிரை நட்சத்திரக்காரர்களுக்கு உரிய தலவிருட்சமாக செங்காலி மரம் இருக்கிறது. செங்காலி மரம் தல விருட்சமாக இருக்கும் கோவில்களுக்கு சென்று செங்காலி மரத்தையும், அங்கிருக்கும் இறைவனையும் வழிபடுவது உங்களின் அனைத்து வகையான தோஷங்களையும் நீக்கி, நன்மைகளை கிடைக்கச் செய்யும். புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகள் யாரேனும் ஒருவருக்கு ஆடைகள், புற்று நோய் குணமாக மருந்துகள் வாங்கித் தருவது ராகுபகவானின் மனம் குளிரச் செய்து உங்களுக்கு மிகுந்த நன்மைகளை அளிக்கச் செய்யும் ஒரு சிறந்த பரிகாரமாக இருக்கிறது.

சுதர்சன ஹோமத்தை செய்து கொள்வதால் தனிப்பட்ட முறையிலும் தொழில், வியாபார வழியில் ஏற்படும் எதிர்ப்புகள், எதிரிகள் என அனைத்தும் ஒழியும்.
பௌர்ணமி தினங்கள், புதன்கிழமை மற்றும் சனிக்கிழமை தினங்களில் வருகின்ற ஏகாதசி, துவாதசி தினங்களில் சுதர்சன ஹோமம் செய்தால் பலன்கள் வேகமாகவும், அதிகமாகவும் கிடைக்கும். இந்த சுதர்சன ஹோமத்தை வீடுகளிலோ அல்லது கோயில்களிலோ செய்துகொள்ளலாம். கோயில்களில் செய்வது பலன்களை விரைவாக தர வல்லதாகும்.
யாக குண்டம் அமைத்து, ஹோமம் செய்வதில் பல ஆண்டு அனுபவம் வாய்ந்த வேதியர்கள் சக்தி வாய்ந்த மந்திரங்களை துதித்து, யாகத்தீ வளர்த்து முறையாக ஹோமத்தை செய்வதால் நிச்சயமான பலன்களை நமக்கு தருகிறது.ஹோம பூஜை முடிந்த பிறகு இறைவனுக்கு சமர்ப்பிக்கப்பட்ட நைவேத்தியப் பொருட்கள் மற்றும் ஹோம குண்டத்தில் இடப்பட்ட பொருட்களின் புனித அஸ்தி போன்றவை பிரசாதமாக நமக்கு தரப்படுகிறது இவற்றை பூஜையறையில் வைத்து தினமும் நாம் வழிபடுவதும் அந்த சாம்பலில் தினமும் சிறிது எடுத்து நெற்றியில் இட்டுக் கொள்வதும் நம்முடைய தோஷங்களை போக்குகிறது.
சுதர்சன ஹோமத்தை செய்து கொள்வதால் தனிப்பட்ட முறையிலும் தொழில், வியாபார வழியில் ஏற்படும் எதிர்ப்புகள், எதிரிகள் என அனைத்தும் ஒழியும். உங்களுக்குள் நேர்மறையான சக்திகள் நிரம்பி நன்மைகள் உண்டாகும். துக்கங்கள், துயரங்கள் போன்றவை உங்களை என்றும் அணுகாது.வேலை மற்றும் தொழில், வியாபாரம் ஆகியவற்றில் வேகமான முன்னேற்றங்கள் ஏற்படும்.
மகாவிஷ்ணுவின் பூரணமான கடாட்சம் உங்களுக்கு கிடைக்கச் செய்யும். நீண்ட நாள் நோய்களிலிருந்து விடுதலைக் கிடைக்கும். விபத்துக்கள் ஏற்படாமல் உங்களையும், உங்கள் குடும்பத்தைச் சார்ந்தவர்களுக்கும் காக்கும். செய்வினை, மாந்திரீகம் ஏவல்கள், துஷ்ட சக்திகள் போன்றவை உங்களை எப்போதும் அணுகாமல் காக்கும்.

சேலம் நங்கவள்ளி நரசிம்மர் கோவிலில் வழிபட்டால் தீராத நோய்கள், தோல் சமந்தமான நோய்கள், கடன் பிரச்சனை, குழந்தை பாக்கியம் முதலான அனைத்து வேண்டுதல்களுக்கும் நிறைவேறும் என்று நம்பப்படுகிறது.
சேலம் மாவட்டம் நங்கவள்ளி என்னும் ஊரில் அமைந்துள்ள நரசிம்மர் கோவில் சுமார் ஆயிரம் வருடம் பழமையானது. இங்குள்ள வைணவ தலங்களில் மிகவும் புகழ்பெற்றது. நரசிம்மர் சுயம்புவாக இங்கு காட்சியாளிகின்றார்.
இங்கு சிவன் சிலைகளும் உண்டு, சைவ, வைணவ ஒற்றுமைக்கு சிறந்த எடுத்துக்காட்டான ஒரு தலம். 75 அடி ராஜ கோபுரத்தோடு காட்சி அளிக்கும் இக்கோவிலில் பல கடவுளர்களுக்கு தனி தனியே கோவில்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தீராத நோய்கள், தோல் சமந்தமான நோய்கள், கடன் பிரச்சனை, குழந்தை பாக்கியம் முதலான அனைத்து வேண்டுதல்களுக்கும் இங்கு வந்து வழிபட்டால் தீரும் என்று நம்பப்படுகிறது. இக்கோவில் சோமேசுவரர் கோவில் என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு சிவனும், பெருமாளும் ஒரு சேர இருப்பதால் இப்பெயர் வந்தது.
ஏறக்குறைய ஆயிரம் வருடம் முன்பு ஆந்திரம் பகுதியில் இருந்து சேலம் பகுதிகளில் குடியேறிய தொட்டிய நாயக்கர்கள் அதிகமாக பசுமாடுகளை வளர்த்து வந்தனர். இவர்களில் தொட்டிய நங்கை என்ற பெண் ஒரு கூடையுடன் மாடு மேய்க்க செல்கையில் கூடை கனத்தது.
கூடையினுள் பார்க்க ஒரு சாளக்ராம வடிவக் கல்லினைக் கண்டாள். அக்கல் எப்படி வந்தது என்று தெரியாமல் அதனை தூக்கி எறிந்து விட்டாள். சற்று நேரத்தில் மறுபடியும் கூடை கனக்க அதில் திரும்பவும் அக்கல் இருந்ததைக் கண்டாள். பயந்து போன அவள் மறுபடியும் அக்கல்லினை ஒரு குளத்தில் போட்டு சென்றுவிட்டாள்.
பிறகு ஊருக்கு திரும்பிய அவள் அன்றாட வேலைகளை செய்துகொண்டு இருக்க அவ்வூரில் ஒரு பெண்ணுக்கு சாமி வந்து, தான் லட்சுமி என்றும் உங்களுடன் பெல்லாரி என்னும் பகுதியில் இருந்தே உங்களுடனே வந்துவிட்டேன் என்றும் உன்னோடு கல்வடிவில் வந்தது தான் தான் என்றும், எனக்கு உங்கள் ஊரில் கோவில் அமைத்து வழிபட்டால் உங்களை என்றும் குறைவில்லாமல் காப்பேன் என்றும் கூறியது. அதன்பிறகு அக்கல்லினை ஒரு புற்றில் ஊர்மக்கள் கண்டு எடுத்தனர்.
கூரையினால் சிறிய அளவில் கோவிலமைத்து வழிபட்டு வந்தனர். இக்கோவில் பிறகு கம்பளத்து பாளைய கட்டுப்பாட்டில் வந்ததும் இக்கோவில் நல்ல வளர்ச்சி அடைந்து கோபுரங்கள் அமைக்கப்பட்டன. இங்கு லட்சுமி மற்றும் பெருமாள் சிலைகள் அமைக்கப்பட்டு லட்சுமி நரசிம்மர் என்று பெயர் வழங்கினர்.
கருவறையில் உள்ள சிலைகளுக்கு அக்காலகட்டத்தில் பால் அபிசேகம் செய்து கற்பூர தீபம் காட்டும் முன்னரே புற்று மண் வந்து சிலைகளை மூடிவிடுமாம். இதனால் இங்குள்ள புற்றினை மறைத்து வைத்துள்ளனர். இப்புற்றில் எவ்வளவு தண்ணீர் ஊற்றினாலும் அது நிரம்பாது என்கின்றனர். இப்புற்று மண்ணினை தோல் நோய்கள் உள்ளோர் எடுத்து பூசினால் உடனே சரியாகிவிடும் என்று நம்பப்படுகிறது.

இந்த பிறவியில் தோஷம் இல்லாமல் வாழ வேண்டும் என்று விரும்புபவர்களும், மறுமையில் பிறவியே வேண்டாம் என்று நினைப்பவர்களும் அவசியம் அத்தி வரதரை வழிபட வேண்டும்.
அடுத்த மாதம் (ஆகஸ்டு) 17-ந்தேதி வரை அத்தி வரதரை நாம் வழிபடலாம். 40 ஆண்டுகளுக்கு ஒரு தடவை கிடைக்கும் வாய்ப்பு இது. இந்த வாய்ப்பை தவற விடாமல் அத்தி வரதரை வழிபட்டு பலன் பெற வேண்டியது ஒவ்வொரு பக்தனின் கடமையாகும்.
தமிழ்நாட்டில் வேறு எந்த திவ்யதேசத்திலும் பெருமாள் இப்படி தண்ணீருக்குள் தன்னை ஆழ்த்திக் கொண்டது இல்லை. அதுபோல 40 ஆண்டுகளுக்கு ஒரு தடவை தண்ணீருக்குள் இருந்து வெளியில் வந்து பக்தர்களுக்கு ஆசி வழங்குவதும் இல்லை. எனவே அத்தி வரதர் வழிபாடு மிகுந்த புண்ணியம் தரும் வழிபாடாக கருதப்படுகிறது.
அத்தி வரதரை வழிபட்டால் முக்கிய கிரக தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம். குறிப்பாக முக்தி வேண்டுபவர்களுக்கு மிக எளிதாக அதை தரும் அவதாரமாக அத்தி வரதர் கருதப்படுகிறார். நம்மாழ்வார் தனது பாசுர பாடல்களில் இதை தெளிவாக குறிப்பிட்டுள்ளார். எனவே இந்த பிறவியில் தோஷம் இல்லாமல் வாழ வேண்டும் என்று விரும்புபவர்களும், மறுமையில் பிறவியே வேண்டாம் என்று நினைப்பவர்களும் அவசியம் அத்தி வரதரை வழிபட வேண்டும்.

காஞ்சிபுரத்தில் உள்ள சித்ரகுப்தர் கோவிலில் கேது தோஷத்திற்கு சிறப்பு பரிகாரம் செய்யப்படுகிறது. இந்த பரிகாரத்தை செய்தால் கேது தோஷம் நிவர்த்தியாகும் என்பது நிச்சயம்.
பார்வதி தேவி ஒருதடவை விளையாட்டாக ஓவியம் ஒன்று வரைந்தாள். அது மிகவும் அழகாக இருந்தது. உடனே பார்வதிதேவியின் தோழியர்கள் இதற்கு உயிர் கொடுங்கள் என்று வேண்டினர். அன்னை உமையாளும் தான் வரைந்த சித்திரத்திற்கு உயிர் ஊட்டினாள்.
அது அழகான இளைஞனாக மாறியது. சித்திரத்தில் இருந்து வந்ததால் சித்ரா குப்தன் என்று பெயர் சூட்டினாள். பின் உலகைக் காக்கும் பரம்பொருளான சிவபெருமானிடம் சித்ரகுப்தனை அழைத்துச் சென்ற பார்வதிதேவி, நடந்தவற்றை விளக்கி சித்ரகுப்பனுக்கு ஏதாவது ஒரு பொறுப்பைக் கொடுக்க வேண்டும் என்று வேண்டினாள்.
அந்தச் சமயத்தில் மரணத்திற்குப் பிறகு உயிர்களின் பாவ புண்ணிய கணக்கை ஆராய்ந்து சொல்ல, தனக்கு உதவியாக ஒருவர் வேண்டும் என்று எமலோகத்தின் அதிபதியான எமதர்ம ராஜன் இறைவனிடம் வேண்டினான். உடனே இறைவனும் சித்ரா குப்தனை எமனின் உதவியாளனாக உயிர்களின் பாவ புண்ணிய கணக்கை எழுதும் பொறுப்பை ஒப்படைத்தார்.
காஞ்சீபுரம் பஸ் நிலையத்துக்கு மேற்கில் உள்ள நெல்லுக்காரன் தெரு, இரட்டை மண்டபத்திற்கு வடக்கில் சித்ரகுப்தர் கோவில் உள்ளது. சூரிய பகவானுக்கும், நிலா தேவிக்கும் தோன்றியவர் சித்ர குப்தர். சென்னி சோழர் என்ற மன்னரின் அமைச்சர் திருகணக்காரயன் அவர்களால் அமைக்கப்பட்டது இத்திருக்கோவில்.
இங்கு உள்ள மூலவர் எழுத்தாணியை வலது கையில் ஏந்தியும், இடது கையில் பனைஓலை ஏட்டையும் ஏந்தியும் உள்ளார். சித்ரா பவுர்ணமி இத்தலத்தில் மிகவும் விசேஷம் ஆகும். இந்தச் சித்ரகுப்தரைப் பரிகார வழிபாடு செய்யக் காலை 9 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் சிறந்த நேரமாகும். இந்த நேரத்தில் அர்ச்சனை செய்வது மிகுந்த நன்மை தரும்.
இங்கு உள்ள சித்ரகுப்தருக்கு கேது தோஷ நிவர்த்தியாகச் செய்யப்படும் பரிகார விவரம்:
1. கருப்பு நிறமான உடைக்கப்படாத முழு உளுந்து -200 கிராம். 2. கொள்ளு-200 கிராம். 3. பல வர்ணங்களுடன் கூடிய சீட்டித்துணி 1 மீட்டர் மேற்கண்டவற்றுடன் அர்ச்சனை பொருள்களையும் சேர்த்து இறைவனுக்குச் சஹஸ்ர நாம அர்ச்சனை செய்து, அதன்பிறகு அந்தச் சீட்டித் துணியைச் சித்திரகுப்தர் உடுத்தும் ஆடையாகக் கொடுத்து விட வேண்டும். பிறகு அர்ச்சனை செய்யப்பட்ட அந்த உளுந்தையும், கொள்ளையும் கொண்டு வந்து தண்ணீரில் ஊற வைத்து, பால் கறக்கக்கூடிய பசுவுக்கு உண்ணக்கொடுத்து விட வேண்டும்.
இந்த பரிகாரத்தை செய்வதால் கேது தோஷம் நிவர்த்தியாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

விண்ட் சைம்கள் தொங்க விடப்பட்டிருக்கும் வீடுகளில் துஷ்ட சக்திகள் நுழைய முடியாது. வீட்டினுள் நபர்களால் அனுப்பப்படும் எதிர்மறை அதிர்வுகளை வீட்டிற்குள் வர விடாமல் விரட்டும் தன்மை அதிகம் உண்டு.
நமது நாட்டின் பாரம்பரிய கலையான “வாஸ்து சாஸ்திரம்” போலவே சீன நாட்டினருக்கும் பாரம்பரிய கலையாக “பெங் ஷூயி” கலை இருக்கிறது. இந்த பெங் ஷூயி கலையில் இருக்கும் சிறப்பே, நமக்கு அதிக செலவில்லாமல், அனைவரும் எளிமையாக செய்ய கூடிய சில பரிகார முறைகள் இருப்பது தான். அந்த வகையில் நமக்கு தொடர்ந்து அதிர்ஷ்டங்கள் உண்டாகவும், வீட்டில் எதிர்மறை அதிர்வுகள் நுழையாமல் தடுக்கும் “விண்ட் சைம்கள்” உபயோகிப்பதால் ஏற்படும் பலன்களை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
சீன வாஸ்து பரிகார முறையாக இந்த விண்ட் சைம்கள் கருதப்பட்டாலும் பழங்கால இந்தியாவில் சிறு, சிறு மணிகள் கோர்த்து கோவில்களில் காற்று வீசும் போது ஒலி எழுப்பும் வகையில், இதை உபயோகப்படுத்தியிருக்கின்றனர் என்று கூறபடுகிறது. உலோகங்கள் கொண்டு செய்யப்பட்ட விண்ட் சைம்கள் காற்றில் அசையும் போது, தொங்கிக்கொண்டிருக்கும் உலோக குழாய்கள் ஒன்றுடன் ஒன்று மோதி, ஒரு விதமான ஆன்மீக சக்தி கொண்ட ஒலியை எழுப்புகிறது.
இந்த ஒலிக்கு, நமது வீட்டை சுற்றிலும் இருக்கும் பகுதிகளில் நேர்மறை அதிர்வுகளை அதிகம் பரப்பும் தன்மை கொண்டது. மேலும் இந்த ஒலிக்கு மனிதர்களின் மனதில் தீய எண்ணங்கள், சிந்தனைகள் ஏற்படாமல் தடுக்கும் சக்தி கொண்டதாகும். வீட்டினுள் வெளிப்புற சூழல்கள் மற்றும் நபர்களால் அனுப்பப்படும் எதிர்மறை அதிர்வுகளை வீட்டிற்குள் வர விடாமல் விரட்டும் தன்மை அதிகம் உண்டு.
விண்ட் சைம்கள் தொங்க விடப்பட்டிருக்கும் வீடுகளில் துஷ்ட சக்திகள் நுழைய முடியாது. அந்த விண்ட் சைம்கள் அடிக்கடி எழுப்பும் ஒலியை கேட்பவர்களுக்கு உடல் மற்றும் மனநிலை நன்றாக இருக்கும். தொடர்ந்து பல அதிர்ஷ்டங்கள் உண்டாகும். தொழில், வியாபாரம் போன்றவற்றில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு நல்ல லாபங்கள் கிடைக்கும். செல்வ நிலை உயரும். அனைத்திலும் வெற்றி பெறும் நிலையையும் உண்டாக்கும். இந்த விண்ட் சைம்களை வீட்டின் தலைவாசலுக்கு மேலாக தொங்கவிடுவது நல்லது.

கொங்கு தேசத்து மக்கள் தங்கள் உடலில் ஏதேனும் தீராத நோய் வந்து அவதிப்பட்டால், உடனே ஸ்ரீபண்ணாரி அம்மனை நாடி வந்து, தங்கள் கோரிக்கையை வைத்துச் செல்கின்றனர்.
கொங்கு தேசத்து மக்கள் தங்கள் உடலில் ஏதேனும் தீராத நோய் வந்து அவதிப்பட்டால், உடனே ஸ்ரீபண்ணாரி அம்மனை நாடி வந்து, தங்கள் கோரிக்கையை வைத்துச் செல்கின்றனர். அவளும் நோய் தீர்க்கும் மருத்துவச்சியாகத் திகழ்கிறாள்.
கோயம்புத்தூர் ரெயில் நிலையத்தில் இருந்தும், காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இருந்தும் சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ளது ஆவாரம்பாளையம். கோயிலுக்குச் செல்ல, அடிக்கடி பஸ் வசதி உண்டு. ஷேர் ஆட்டோவும் உள்ளது. சுமார் 150 வருடங்கள் பழைமை வாய்ந்த இந்தக் கோயிலில் இருந்தபடி, தன்னை நாடி வருவோரின் நோய்களைத் தீர்த்து அருள்கிறாள் ஸ்ரீபண்ணாரி அம்மன்.
மனத்தில் எப்போதும் கவலை, தொழிலில் ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும்போதும் பிரச்சனை, குடும்பத்தில் பூசல் என வாழ்வில் என்ன சிக்கல்கள் வந்தாலும், 'பண்ணாரியம்மா இருக்கும்போது நமக்கென்னப்பா கவலை?’ என்று சொல்லியபடி, அவளின் சந்நிதிக்கு வருவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள், பக்தர்கள். சத்தியமங்கலம் பண்ணாரி அம்மனுக்கு வேண்டிக் கொண்டு, ஏதேனும் காரணங்களால் அங்கே செல்ல இயலாதவர்கள், தங்களது நேர்த்திக்கடனை இங்கு வந்து செலுத்திச் செல்வதாகத் தெரிவிக்கிறார்கள்.

துர்க்கை அம்மனை தொடர்ந்து வழிபடுவர்களுக்கு எதிரிகளே இல்லாத நிலையும் உண்டாகும். செய்வினை, மாந்திரீக ஏவல்கள் மற்றும் துஷ்ட சக்திகளால் பாதிப்புகள் ஏற்படாமல் காக்கும்.
வடமொழியில் துர்க்கை என்றால் “வெல்ல முடியாதவள்” என்று பொருள். அவளை மனதார வணங்குபவர்களுக்கு அவர் பல அற்புத சக்திகளை தருவாள் என்பது உண்மை.
பராசக்தியான பார்வதியின் ஒரு அம்சமாக தோன்றியவர் தான் துர்கா தேவி. தன்னை வழிபடும் பக்தர்களுக்கு அனைத்தையும் அருள்கின்ற தெய்வம் துர்கா தேவி. அதிலும் குறிப்பாக எதிர்ப்புகளை சமாளிக்கும் வெற்றி பெறும் ஆற்றலை வழங்குகிறார். புராண காலத்தில் அயோத்தி சக்கரவர்த்தியான ஸ்ரீராமச்சந்திரமூர்த்தி துர்கா தேவியை வழிபட்ட பிறகே, இலங்கை வேந்தன் ராவணனை வெற்றி கொள்ளும் சக்தியை பெற்றதாக கூறப்படுகிறது.
வாழ்வில் மிகுந்த கஷ்டங்களை சந்திப்பவர்கள், நேரடி மற்றும் மறைமுக எதிர்ப்புகளால் அவதிப்படுபவர்கள் வாழ்நாள் முழுவதும் துர்க்கை தேவியை வழிபட்டு வருவதால் சிறப்பான பலன்கள் ஏற்படும். துஷ்ட சக்திகளை அழிக்கும் தெய்வமாக தோன்றியவர் தான் துர்க்கை அம்மன். எனவே துர்க்கையம்மனை முறைப்படி வழிபடுபவர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக எதிரிகளால் ஏற்படும் தொல்லைகள் நீங்கும்.
துர்க்கை அம்மனை தொடர்ந்து வழிபடுவர்களுக்கு எதிரிகளே இல்லாத நிலையும் உண்டாகும். செய்வினை, மாந்திரீக ஏவல்கள் மற்றும் துஷ்ட சக்திகளால் பாதிப்புகள் ஏற்படாமல் காக்கும். குடும்பத்தில் பொருளாதார கஷ்ட நிலையை அறவே நீக்கும். சுபிட்சங்கள் பெருகும். பெண்களுக்கு சீக்கிரத்தில் நல்ல முறையில் திருமணம் நடக்கும். ஈடுபடும் காரியங்கள் அனைத்திலும் தாமதங்கள், தடைகள் நீங்கி மகத்தான வெற்றி உண்டாகும்.

மிருகசீரிட நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்கள் வாழ்வில் ஏற்படக்கூடிய தோஷங்கள் அனைத்தும் நீங்கி அதிர்ஷ்டங்களும், யோகங்களும் உண்டாக செய்ய வேண்டிய பரிகாரங்களை பார்க்கலாம்.
மிருகசீரிடம் நட்சத்திரத்தின் அதிபதியாக செவ்வாய் பகவான் இருக்கிறார். இந்த நட்சத்திரத்தின் அதிதேவதையாக சந்திர பகவான் இருக்கிறார். செவ்வாய் பகவானின் ஆதிக்கம் கொண்டிருப்பதால் இயற்கையிலேயே மிகுந்த தன்னம்பிக்கை மற்றும் தைரியம் கொண்டவர்களை மிருகசீரிடம் நட்சத்திரக்காரர்கள் தங்களின் வாழ்வில் மிக உயர்வான நிலையையும், செல்வங்களையும் பெறுவதர்க்கு கீழ்க்கண்ட பரிகாரகங்களை செய்து வருவது நல்லது.
மிருகசீரிட நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வருடத்திற்கு ஒருமுறையாவது நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருக்கும் வைத்தீஸ்வரன் கோயில் அருள்மிகு வைத்தியநாத சுவாமி கோவிலுக்கு சென்று, சிவனுக்கும் அம்பாளுக்கும் அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். பிறகு அங்கிருக்கும் செவ்வாய் பகவானுக்கு அபிஷேகம் செய்து, சிகப்பு நிற வஸ்திரம் சாற்றி, பூஜைகள் செய்து வழிபட வேண்டும். இந்த பரிகாரத்தை செய்து வந்தாலே செவ்வாய் பகவானால் நன்மையான பலன்கள் ஏற்படும்.
செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் வள்ளி-தெய்வானையுடன் இருக்கின்ற முருகன் கோவிலுக்கு சென்று முருகப் பெருமானுக்கு அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். இந்த வழிபாடு வாழ்வில் அதிர்ஷ்டங்களை அதிகரிக்கச் செய்யும். திங்கட்கிழமைகள் மற்றும் பௌர்ணமி தினங்களில் சிவபெருமான் சந்திரசூடேஸ்வரராக இருக்கும் சிவன் கோயில்களுக்கு சென்று சிவனை வழிபடுவது மிகவும் சிறப்பானதாகும்.
மிருகசீரிடம் நட்சத்திரத்துக்குரிய தலவிருட்சமாக கருங்காலி மரம் இருக்கிறது. கருங்காலி மரம் தலவிருட்சமாக இருக்கும் கோவில்களுக்கு சென்று வழிபாடு செய்வதால் மிருகசீரிட நட்சத்திரங்களின் தோஷங்கள் நீங்குகிறது. கஷ்டத்தில் இருக்கும் உங்கள் உடன்பிறந்த சகோதர, சகோதரிகளுக்கு உங்களால் முடிந்த பொருள் உதவி செய்வதும் செவ்வாய் பகவானின் நல்லருளை உங்களுக்கு கிடைக்கச் செய்யும் சிறந்த பரிகாரமாகும். ஏழை பெண்களின் சீமந்தத்திற்கு பொருளுதவி செய்தல் மற்றும் கோயில் குளம், பொதுமக்களுக்கான கிணறு வெட்டுதல் போன்ற காரியங்கள் செய்வதால் உங்களுக்கு தோஷங்கள் நீங்கி வாழ்வில் மேன்மேலும் அதிர்ஷ்டங்களையும், யோகங்களையும் ஏற்படுத்தக்கூடிய பரிகாரமாக இருக்கிறது.

சிவபெருமானின் வடிவமாக திகழும் சொர்ண ஆகர்ஷண பைரவர் வணங்கி இவருக்கு உரிய மந்திரத்தை கூறினால் கடன் தொல்லைகள் நீங்கி தனவிருத்தி அடையலாம்.
இன்றைய சூழ்நிலையில் கடன் தொல்லையால் அவதிப்படாதவர்களே இருக்க முடியாது. செல்வந்தர்களாக இருந்தாலும் ஏதேனும் ஒரு வகையில் கடனை வாங்கி அதனை அடைக்க முடியாமல் அள்ளல்படுவார்கள்.
வாங்கிய கடனை அடைக்க முடியாமல் தவிப்பவர்கள், தங்களுடைய அனைத்து கடன் பிரச்சினைகளுக்கும் ஏதாவது ஒரு வழியில் தீர்வு கிடைக்காதா என்றுதான் நினைப்பார்கள். இறை வழிபாட்டில் ஆர்வம் உள்ளவர்கள் ஆலயங்களுக்குச் சென்று, ஏதாவது எளிய பரிகாரத்தைச் செய்யலாமா என்று யோசிப்பார்கள்.
நாம் பொருளாதார சிக்கலில் இருந்து மீண்டு வர உதவும் தெய்வமாக திகழ்வர், சொர்ண ஆகர்ஷண பைரவர். சிவபெருமானின் வடிவமாக திகழும் பைரவரை, ‘சொர்ண ஆகர்ஷண பைரவர்’ என்றும் அழைப்பதுண்டு. இவரை வணங்கி இவருக்கு உரிய மந்திரத்தை கூறினால் கடன் தொல்லைகள் நீங்கி தனவிருத்தி அடையலாம். அந்த வழிபாட்டு வேளையில் அசைவ உணவை தவிர்ப்பது நல்லது.
வழிபடும் முறை
அகல்விளக்கில் நெய்யை நிரப்பி, தாமரை நூல் திரியை வைத்து தீபம் ஏற்றிட வேண்டும். ஏற்றிய தீபத்தை சொர்ண ஆகர்ஷண பைரவரின் படத்தின் முன்பாக வைக்க வேண்டும். இந்த தீபம் தினமும் சுமார் 30 நிமிடம் மட்டும் எரிந்தால் போதுமானது. பிறகு, சந்தனத்தை சொர்ண ஆகர்ஷண பைரவரின் நெற்றியிலும், பைரவியின் நெற்றியிலும் வலது மோதிர விரலால் வைக்க வேண்டும். அப்படி வைக்கும்போது, சந்தனம் பைரவர், பைரவியின் கண்களை மறைக்கக்கூடாது. பிறகு, சொர்ண ஆகர்ஷண பைரவரின் பாதத்திலும் அதே போல் சந்தனத்தை வைக்க வேண்டும். சந்தன பத்தியால் மூன்றுமுறை ஆராதிக்க வேண்டும். அப்படி ஆராதித்த பின்னர், கீழ்காணும் ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவரின் மந்திரத்தை தினமும் 33 முறை வாசிக்க வேண்டும்.
ஓம் த்ரிபுராயை ச வித் மஹே
பைரவ்யை ச தீமஹி
தந்நோஹ் பைரவி ப்ரசோதயாத்.

மாந்தி கிரகத்தால் நம் ஜாதகத்தில் ஏற்படக்கூடிய பலன்கள் என்ன என்பது பற்றியும், அந்த மாந்தி கிரகத்தின் தோஷம் நீங்க செய்ய வேண்டிய பரிகாரங்கள் பற்றியும் பார்க்கலாம்.
ஜோதிட சாஸ்திரத்தின் படி மாந்தி கிரகம் சனி கிரகத்தின் உபகிரகமாகவும், சனி பகவானின் மைந்தன் என்றும் சொல்லப்படுகிறது. மாந்தி கொடிய பாவ கிரகமாகும். மாந்தி ஒரு நபரின் ஜாதகத்தில் எந்த வீட்டில் இருக்கிறதோ, அந்த ஸ்தானம் பாதக ஸ்தானமாகிறது. அந்த ஸ்தான அதிபதியும் பாதகாதிபதியாகிறார். மாந்தி இருக்கும் நட்சத்திரமும் பாதகமாகிறது.
ஜாதகத்தில் மாந்தி தான் இருக்கும் வீட்டில் இருந்து 2, 7, 12 ம் இடங்களை பார்க்கும். மாந்தியின் பார்வை பதியும் வீடுகளும் தோஷத்தை பெறுகிறது. உதாரணமாக மாந்தி லக்னத்திற்கு நான்காம் வீட்டில் இருந்தால் ஜாதகருக்கு மனை தோஷம் ஏற்படுகிறது. இதன் காரணமாக ஜாதகரின் வீட்டில் தெய்வ சக்தி குடியிருக்காது. வீடு களையிழந்து போய்விடும். அவ்வீட்டிலிருப்பவர்களுக்கு சுக வாழ்க்கை அமையாது. தொடர்ந்து வீண் வம்பு வழக்குகள், மருத்துவ செலவுகள் ஏற்பட்டு கொண்டிருக்கும். குடும்பம், தொழில், அந்தஸ்து முதலியவற்றில் பாதிப்பு இருக்கும்.
ஜாதகத்தில் ஐந்தாம் வீட்டில் மாந்தி இருந்தால் பிரேத சாபம் ஏற்படும். ஆறில் மாந்தி இருந்தால் தீராத கடன் உண்டாகும். எழலில் மாந்தி கணவன் – மனைவி உறவு பாதிப்படையும். ஒன்பதில் மாந்தி இருந்தால் அவருக்கு கடந்த ஜென்ம பாவங்களால் இந்த ஜென்மத்தில் உண்டாகும் தோஷங்களை குறிக்கும். இது போன்று இது போன்று எண்ணற்ற கெடுபலன்கள் மாந்தியால் ஏற்படுகின்றது.
இத்தகைய கொடுமையான மந்தி தோஷம் நீங்கி வாழ்வில் நன்மைகள் ஏற்பட திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் திருக்கோயிலுக்கு சனிக்கிழமை தினத்தில் சென்று, அங்கிருக்கும் பத்ரகாளி அம்மனை வணங்க வேண்டும். அம்மனை வணங்கிய பிறகு, அங்கிருக்கும் மாந்தீஸ்வரரை வழிபடுவது எப்படிப்பட்ட மாந்தி தோஷங்களையும் நீக்கும் சிறந்த பரிகாரமாக இருக்கிறது.
மேலும் மாந்தியல் ஏற்படும் கேடுப்பலன்களை நீக்க நீங்கள் வசிக்கும் இடத்திலோ அல்லது அருகிலுள்ள ஆலயத்திலோ மஹா மிருத்யுஞ்சய யாகம், சுதர்சன யாகம் செய்து, யாக கும்ப நீரில் ஸ்நானம் எனப்படும் குளியல் செய்வதால் நீங்கும். தரமான கனக புஷ்பராக கல்லை, வெள்ளி மோதிரத்தில் பதித்து, உங்கள் கைகளில் எப்போதும் அணிந்து கொள்ள வேண்டும்.