search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sudarshana homam"

    குருவை அவமதித்த பாவம், சாதுக்களைத் திட்டிய பாவம், பெரியவர்களை மதிக்காமல் போன பாவம் நீங்குவதற்கும் சுதர்சன ஹோமத்தின் மூலம் பரிகாரம் தேடிக்கொள்ளலாம்.
    ஆலமர சமித்தைக் கொண்டு சுதர்சன ஹோமம் செய்ய வேண்டும். பால், நெய், சர்க்கரைப் பொங்கல் இவற்றை இந்த சமித்து மூலம் எடுத்து அக்னியில் விட்டு ஹோமம் செய்ய வேண்டும். ஒவ்வொன்றையும் தனித்தனியாக நான்காயிரம் தடவை செய்யவேண்டும்.

    இந்த ஹோமம் செய்வதன் மூலம் கோபத்தை முற்றிலுமாகக் குறைக்கலாம். குருவை அவமதித்த பாவம், சாதுக்களைத் திட்டிய பாவம், பெரியவர்களை மதிக்காமல் போன பாவம் நீங்குவதற்கும் சுதர்சன ஹோமத்தின் மூலம் பரிகாரம் தேடிக்கொள்ளலாம்.

    ஜாதகத்தில் 6, 8, 12-ம் அதிபதிகளின் திசைகள், புதன், சனி திசை நடப்பவர்கள் ஸ்ரீசுதர்சனரை வழிபட்டால் கிரக தோஷத்தில் இருந்து விடுபடலாம். புதன், சனி கிழமைகளில் சக்கரத்தாழ்வாருக்கு துளசி சாற்றி, துளசியால் அர்ச்சனை செய்து 12, 24, 48 முறை வலம் வந்து வழிபட்டால் பிரார்த்தனைகள், வேண்டுதல்கள் நிறைவேறும்.
    பெரிய பெரிய அலுவலகங்களிலும் தொழிற்சாலைகளிலும், வீட்டிலும் சத்ரு பயத்தை விரட்ட பிரமாண்ட அளவில் சுதர்சன ஹோமம் நடத்தப்படும்.
    நமது வீடுகளில் நடக்கும் கிரகப்பிரவேசம், ஆயுஷ்ய ஹோமம் போன்ற எந்த ஒரு விசேஷத்தின் போதும் குடும்ப ஐஸ்வர்யம் கருதி ஸ்ரீசுதர்சன ஹோமத்தையும் சேர்த்தே நடத்துவார்கள்.

    அதேபோல் பெரிய பெரிய அலுவலகங்களிலும் தொழிற்சாலைகளிலும் சத்ரு பயத்தை விரட்ட பிரமாண்ட அளவில் சுதர்சன ஹோமம் நடத்தப்படும்.
    வீட்டில் நடத்தப்படும் சுதர்சன ஹோம - தியான ஸ்லோகத்தின் பொருள் வருமாறு:-

    சூரியனின் பிரகாசத்தை மிஞ்சுபவரும், பயங்கரக் கண்கள் கொண்டவரும் சத்ருக்களை சம்ஹாரம் பண்ணுபவரும் பலமான - பயம் தரும் சிரிப்புக் கொண்டவரும், வலுவான பல் உடையவரும், பெரிய வாய் உள்ளவரும், செப்பு நிறத் தலைமுடி வாய்த்தவரும், கைகளில் சக்கரம் - கதை - சங்கு - தாமரைப்பூ - உலக்கை - பாசம் - அங்குசம் - தர்ஜணி போன்ற ஆயுதங்கள் பெற்றவரும், சத்ருக்களுக்கு பயம் தரும் ஆதிமூர்த்தியாக விளங்கும் ஸ்ரீசுதர்சனரை வணங்குகிறேன்.

    அலுவலகம் மற்றும் தொழிற்சாலைகளில் பிரமாண்டமாக நடத்தப்படும் சுதர்சன ஹோம, தியான ஸ்லோகத்தின் பொருள் வருமாறு:-

    சங்கு, சக்கரம், வில், மழு, வாள், அம்பு, சூலம், கயிறு, அங்குசம், கேடயம், கலப்பை, இரும்பு உலக்கை, அக்னி, கவசம், கதை, மூன்று முனைகள் கொண்ட சூலம் போன்ற ஆயுதம் ஆகியவற்றுடன் திகழும் பதினாறு கைகள் கொண்டவரும், பலமான பல் பெற்றவரும், மஞ்சள் நிறத் தலைமுடி உடையவரும், மூன்று கண்களுடன் தங்க நிற சரீரம் பெற்றிருப்பவரும், சகல சத்ருக்களின் உயிர்களை எடுப்பபவரும், அதி கயங்கரத் தோற்றம் உடையவருமான ஸ்ரீசுதர்சனரை ஷட்கோணத்தில் அமர வைத்துப் பிரார்த்திக்கிறேன்.

    சுதர்சன ஹோமத்தின் போது, சக்தி வாய்ந்த பல மந்திரங்கள் சொல்லி ஹோமப் பொருட்களை அக்னி பகவானுக்குச் சமர்ப்பிப்பார்கள். இந்த ஹோமத்தில் ஸ்ரீசுதர்சன சடாக்ஷரி, ஸ்ரீசுதர்சன காயத்ரி, ஸ்ரீசதர்சன மாலா மந்திரம், ஸ்ரீநரசிம்ம மந்திரம், ஸ்ரீநரசிம்ம காயத்ரி, ஸ்ரீவிஷ்ணு காயத்ரி, ஸ்ரீலட்சுமி காயத்ரி, ஸ்ரீலட்சுமி மந்திரம், ஸ்ரீதன்வந்திரி மந்திரம், பஞ்சஜன்ய காயத்ரி போன்ற பல மந்திரங்களையும் சொல்லிச் செய்வதால் பலன் அதிகமாக கிடைக்கும்.

    ஸ்ரீசுதர்சனரின் மூல மந்திரத்தை 12 லட்சம் தடவை உச்சரித்து ஒருவர் ஹோமம் செய்தால் இந்த மந்திரத்துக்கு உண்டான பலன் கிடைக்கும். எள், கடுகு, தாமரைப்பூ, வில்வ இலை, பால் பாயாசம் ஆகிய ஒவ்வொன்றையும் கொண்டு, குறிப்பிட்ட எண்ணிக்கையில் மந்திரத்தை உளமார உச்சரித்து ஜெபிக்க வேண்டும். முழுமனதோடு மிகுந்த முயற்சியுடள் செயல்பட்டால்தான் கிடைக்கிற பலன் முழு அளவில் இருக்கும்.

    ஹோமங்களை எந்த அளவுக்கு நாம் சிரத்தையாகப் செய்கிறோம் என்பதை வைத்து பகவான் அனுக்கிரஹம் செய்வார். பகவத் கீதையில் நீ என்னை நினைத்தால் நான் உன்னை நினைப்பேன் என்கிறார் பகவான்.

    எனவே வாழ்வில் பல நன்மைகளை பெறுவதற்கு நாம் ஸ்ரீசுதர்சன ஹோமம் செய்வது அவசியம். இதன் பலன்கள் ஏராளம்.

    ×