என் மலர்
தோஷ பரிகாரங்கள்
மூன்று கிருத்திகைக்குள் திருமண வரம் அருளும் நம்பிக்கை தெய்வம் என்ற சிறப்பு கொண்டதாக விளங்குவது ஈரோடு மாவட்டம், கெம்பநாயக்கன் பாளையத்தில் உள்ள பாலதண்டாயுதபாணி திருக்கோவில்.
முருகப்பெருமான் விரும்பிக் குடியேறியத் தலம், பழனியைப் போல மேற்கு நோக்கிய சன்னிதி அமைந்த கோவில், மூன்று கிருத்திகைக்குள் திருமண வரம் அருளும் நம்பிக்கை தெய்வம், பல்லாயிரக்கணக்கானோர் பங்கு பெறும் பார்வதி சுயம்வர யாகம் நடைபெறும் ஆலயம், சத்தியமங்கலம் மலைவாழ் மக்களின் அபிமான தெய்வம் என பல்வேறு சிறப்புகள் கொண்டதாக விளங்குவது ஈரோடு மாவட்டம், கெம்பநாயக்கன் பாளையத்தில் உள்ள பாலதண்டாயுதபாணி திருக்கோவில்.
திருமணத் தடைபட்டவர்கள், கிருத்திகை நாளன்று இந்த கோவிலுக்கு நேரில் வந்து மனமுருக வேண்டிக் கொண்டால், மூன்று கிருத்திகைக்குள் திருமணம் நடந்து முடிவதாக இவ்வூர் பக்தர்கள் உறுதிபட கூறுகின்றனர்.
இதேபோல, ஆண்டுதோறும் வைகாசி 26-ந் தேதி இலவசமாக நடைபெறும் பார்வதி சுயம்வர யாகத்தில் கலந்துகொண்டு, தங்கள் ஜாதகத்தை அவரின் பாதத்தில் வைத்து வணங்கிச் செல்பவருக்கு ஓராண்டிற்குள் திருமணம் கைகூடும் என்பதும் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.
இப்பகுதி, மலைவாழ் மக்களின் விருப்ப தெய்வமாக பாலதண்டாயுதபாணி திகழ்கின்றார். வியாபார நிமித்தமாக இந்தப் பகுதிக்கு வந்த முருக பக்தர் ஒருவர் கிருத்திகை நாளன்று, தள்ளிப்போகும் தன் மகளின் திரு மணத்திற்கு வேண்டிக்கொள்ள கைமேல் பலன் கிடைத்தது. மனம் மகிழ்ந்த அவர், திருப் பணிக்கு பெரும் தொகையினைத் தந்து, தன் நன்றியை தெரிவித்திருக்கிறார். இந்த ஆலயத்தில் கிருத்திகை நாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். இந்த ஆலயத்தின் மற்றொரு சிறப்பு, பித்ருக்கள் சாப விமோசனம் பெற பித்ருக்களுக்கான தனி ஆலயம் உள்ளது.
ஆண்டுக்கு ஒருமுறை வைகாசி 26-ந் தேதி, இக்கோவிலில் ‘பார்வதி சுயம்வர யாகம்’ வெகு விமரிசையாக நடைபெறுகிறது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். திருமணமாகாத ஏராளமான ஆண்களும், பெண்களும் தங்கள் ஜாதகத்தை இறைவன் பாதத்தில் செலுத்தி, வழிபாட்டில் பங்கேற்கின்றனர். மலையடிவாரக் கிராமத்தில், பல்லாயிரக்கணக்கில் கலந்து கொள்வதும், சலசலப்பு ஏதும் இன்றி வழி படுவதும் வியப்பாக உள்ளது. இதில் கலந்துகொள்ள கட்டணம் ஏதும் வசூலிப்பதில்லை என்பதும், அன்னதானம் நடைபெறுவதும் கூடுதல் சிறப்பு. சின்ன சின்ன விழாக்களுக்கெல்லாம், கட்டணம் வசூல் செய்பவர்களுக்கு நடுவில், ஒரு கிராம மக்கள் இலவசமாக இந்த யாகத்தை நடத்தி வருவது பாராட்டுக்குரியது. இக்கோவில் புதுப்பொலிவுடன் திகழ, முருகன் அடியார்கள் ஆதரவில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வட்டத்தில் சத்தியமங்கலத்தில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கெம்பநாயக்கன் பாளையம் கொருமடுவில் இத்திருக்கோவில் அமைந்துள்ளது. சத்தியமங்கலம் - கடம்பூர் வழித்தடத்தில், நால்ரோட்டில் இருந்து பெரும்பள்ளம் அணைக்குச் செல்லும் வழியில் 7 கிலோமீட்டர் தொலைவில் இந்த திருத்தலம் உள்ளது. சத்தியமங்கலம், கோபியில் இருந்து பேருந்து வசதி உள்ளது.
பனையபுரம் அதியமான்

ஆழ்வார்பேட்டை ஸ்ரீ ஆண்டாள் சமேத ஸ்ரீரெங்க மன்னார் கோவிலில் உள்ள நரசிம்மருக்கு மணி கட்டினால் வேண்டுதல் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
சென்னை ஆழ்வார்பேட்டை- அபிராமபுரம் பீமண்ண முதலி 2-வது தெருவில் இருக்கும் ஸ்ரீ ஆண்டாள் சமேத ஸ்ரீரெங்க மன்னார் கோவிலில் தனி சன்னதியில் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் அருள்பாலிக்கிறார். அவர் வீற்றிருக்கும் அளவில் மட்டுமே அந்நத சன்னதி மிக, மிக சிறியதாக அமைந்துள்ளது. ஆனால் இந்த நரசிம்மர் தரும் பலன்களோ, மிக மிக பெரியது, அளவிடை முடியாதது.
இந்த நரசிம்மரிடம் உள்ள சிறப்பு என்னவென்றால், உங்களுக்கு என்ன வேண்டுதல் உள்ளதோ, அதை மனதில் நினைத்துக் கொண்டு அந்த நரசிம்மர் சன்னதியில் சிறிய மணியை கட்ட வேண்டும். அந்த சிறிய மணியை ஆலய அர்ச்சகரே பூஜை செய்து தருவார். மணி கட்டிய ஒரு மண்டலத்துக்குள் உங்கள் வேண்டுதல்கள் நிறைவேறி விடும்.
அதன் பிறகு அந்த ஆலயத்துக்கு சென்று நரசிம்மருக்கு திருமஞ்சனம் செய்து வழிபடலாம். சென்னையில் உள்ள மிக சக்தி வாய்ந்த இந்த லட்சுமி நரசிம்மர் ஆலயம் நிறைய வைணவ பக்தர்களுக்கே தெரியாமல் இருப்பது ஆச்சரியமான விஷயமாகும்.

ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருப்பவர்கள், செவ்வாய் பகவானின் முழுமையான அருளைப் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள பரிகாரங்களை முறையாக செய்து வந்தால் நிச்சயம் நல்ல பலனை காணலாம்.
செவ்வாய் பகவானின் முழுமையான அருளைப் பெறுவதற்கு ஏதேனும் ஒரு செவ்வாய்க்கிழமையில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருக்கும் வைத்தீஸ்வரன் கோயில் என அழைக்கப்படும் அருள்மிகு வைத்தியநாத சுவாமி திருக்கோயிலுக்கு சென்று, சிவபெருமான், பார்வதிக்கு அபிஷேக அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். பிறகு அங்கிருக்கும் செவ்வாய் பகவானுக்கு அபிஷேகம் மற்றும் அர்ச்சனை செய்து, சிவப்பு நிற வஸ்திரம் சாற்றி வழிபட வேண்டும். இந்த பரிகார வழிபாட்டை ஆறு மாதத்திற்கு ஒருமுறையோ அல்லது வருடத்திற்கு ஒரு முறையோ செய்வது சிறப்பு.
மேற்கூறிய பரிகாரத்தை செய்ய இயலாதவர்கள் உங்கள் வீட்டுற்க்கு அருகிலேயே இருக்கும் சிவன் கோயிலில் இருக்கும் நவக்கிரக சந்நிதிக்கு செவ்வாய் கிழமைகளில் காலை 9 லிருந்து 10 மணிக்குள்ளாக சென்று, செவ்வாய் பகவானுக்கு செந்நிற மலர்களை சாற்றி, சிறிது துவரம் பருப்புகளை சமர்ப்பித்து, நெய் தீபம் ஏற்றி செவ்வாய் பகவானின் காயத்ரி மந்திரத்தை 108 முறை 1008 வரை துதிக்க வேண்டும். இந்த பரிகாரத்தை 9 முதல் 27 வாரங்கள் வரை செய்தால் மட்டுமே முழுமையான பலனை பெற முடியும்.
இந்த இரண்டு பரிகாரங்களையும் செய்ய இயலாதவர்கள் செவ்வாய்க்கிழமைகளில் வீட்டில் இருக்கும், பூஜையறையில் முருகப்பெருமான் படத்திற்கு தீபமேற்றி, தூபங்கள் கொளுத்தி, முருக மந்திரங்களை 108 எண்ணிக்கை வரை துதிப்பதால் செவ்வாய் பகவானின் அருள் கிட்டும். உங்களின் இடது கையில் தரமான செம்பு வளையம் ஒன்றை செவ்வாய்க்கிழமையில் அணிந்து கொள்ள வேண்டும்.
கோயில்களில் சிறப்பு பூஜைகள், விழாக்கள் நடைபெறும் காலத்தில் கோயில் பூஜைகளுக்கு செந்நிற மலர்கள் மற்றும் துவரம் பருப்புகளை தானமாக தரலாம். ஓய்வு பெற்ற முன்னாள் ராணுவ வீரர்கள், காவல் துறையினர் போன்றோர்களின் நலன்களுக்கான விடயங்களுக்கு உங்கள் சக்திக்கேற்ப நிதி அளிப்பது செவ்வாய் பகவானின் நல்லருளை உங்களுக்கு பெற்றுத்தரும் சிறந்த பரிகாரமாக காரணமாக இருக்கிறது.

கீழப்பாவூர் நரசிம்மர் ஆலயம் கடன் தொல்லை, கல்யாணத் தடை, நீண்ட நாள் நோய், நீதிமன்ற வழக்கு ஆகியவற்றிற்குரிய பரிகாரத் தலமாகும்.
சுமார் 300 வருடங்களுக்கு முன்னால் இத்திருக்கோவில் அமைந்திருக்கும் பகுதியில் சாயரட்ச வேளையில் சிங்கம் கர்ஜிக்கும் சத்தம் கேட்குமாம். இதனால் பக்தர்கள் அப்பகுதிக்குச் செல்லப் பயந்தனர். பிற்காலங்களில் நரசிம்மருக்கு இளநீர் மற்றும் பால் அபிஷேகம் செய்ய ஆரம்பித்த பிறகு சாந்த சொரூபியாக மாறிவிட்டார் என்று கூறுகின்றனர்.
தலம், மூர்த்தி, தீர்த்தம் மட்டுமின்றிப் பல்வேறு சிறப்புகள் நிறைந்தது கீழப்பாவூர் நரசிம்மர் ஆலயம். இந்தியாவில் மூன்று இடங்களில்தான் 16 திருக்கரங்களுடன் கூடிய நரசிம்மர் ஆலயம் உள்ளது. ஒன்று இராஜஸ்தான் மாநிலத்திலும், மற்றொன்று பாண்டிச்சேரி அருகே சிங்ககிரி எனும் சிறுகுன்றிலும் உள்ளது. மூன்றாவதாகக் கீழப்பாவூரில் மட்டுமே சமதளமான பகுதியில் ஆலயம் அமைந்துள்ளது.
எல்லாவற்றிற்கும் மேலாக ரிஷிகளுக்குக் காட்சி கொடுத்தது மட்டுமின்றி, நிரந்தரமாகத் தங்கி இருப்பதும் இங்கு மட்டுமே! இவ்வாலயத்தில் கால் வைத்ததும் பதற்றம், கவலை, மன அழுத்தம் முற்றிலும் நீங்குகிறது.
சுவாதி நட்சத்திர வழிபாடு இங்குச் சிறப்புடன் நடந்து வருகிறது. அன்று 16 வகை மூலிகைகளால் மூலமந்திர ஹோமம் நடைபெறுகிறது. பால், இளநீர் அபிஷேகம், நீராஞ்சனம் வழிபாடு, நெய்தீபம் ஏற்றுதல் ஆகியவற்றுடன் சிறப்புப் பூசைகளும் நடக்கின்றன.
கடன் தொல்லை, கல்யாணத் தடை, நீண்ட நாள் நோய், நீதிமன்ற வழக்கு ஆகியவற்றிற்குரிய பரிகாரத் தலமாகும். செவ்வாய், புதன், சனி முதலிய நாள்களும் திருவோணம், பிரதோஷம், புரட்டாசி சனிக்கிழமை, நரசிம்ம ஜெயந்தி முதலிய தினங்களும் மற்றும் மாலைவேளையும் வழிபடுவதற்கு உரிய நாள்களாகும்.

சுய ஜாதகத்தில் சூரியனின் பலம் குறைந்திருந்தால், தினமும் அதிகாலையில் சூரிய நமஸ்காரம் செய்வதோடு, ஆதித்ய ஹிருதயம் பாராயணம் செய்ய வேண்டும்.
சுய ஜாதகத்தில் சூரியனின் பலம் குறைந்திருந்தால், தினமும் அதிகாலையில் சூரிய நமஸ்காரம் செய்வதோடு, ஆதித்ய ஹிருதயம் பாராயணம் செய்ய வேண்டும். அதன்மூலம் உடல் ஆரோக்கியத்தையும், பலத்தையும் பெருக்க முடியும். அடையவே முடியாத வெற்றிகளைக் கூட அடையலாம். ஞாயிறு காலை 6 மணி முதல் 7 மணிக்குள் கோதுமை தானம் செய்ய வேண்டும். கோதுமை உணவு சாப்பிட வேண்டும்.
சிவ வழிபாடு சூரியனை வலுப்பெறச் செய்யும். சிவ பக்தர்கள், சிவத்தொண்டு புரிபவர்கள், சூரியனின் அருள் பெற்றவர்களாக இருப்பர். கும்பகோணம் அருகில் உள்ள சூரியனார் கோவிலுக்குச் சென்று வழிபடலாம்.

அருள்மிகு மாங்களீஸ்வரர் ஆலத்தில் உள்ள மாங்கல்ய மகரிஷியை வணங்கி பிரார்த்தனை செய்தால், அமைதியான அன்பான கணவனைப் பெண்கள் பெறலாம் என்பது நம்பிக்கை.
இடையாற்று மங்கலம் என்ற சிற்றூரில் உள்ளது அருள்மிகு மாங்களீஸ்வரர் ஆலயம். இங்கு அருள்பாலிக்கும் இறைவன் பெயர் மாங்களீஸ்வரர். இறைவியின் திருநாமம் மங்களாம்பிகை.
2006-ம் ஆண்டு ஜூன் முதல் நாள் இந்த ஆலயத்திற்கு கும்பாபிஷேகம் நடந்துள்ளது. இங்கு மேற்கு பிரகாரத்தில் அருள்பாலிக்கும் மாங்கல்ய மகரிஷி இந்த ஊரில் அவதரித்து இங்கேயே சித்தியானவர் எனக் கூறுகின்றனர் பக்தர்கள். இவர் இங்கு அருள்பாலிக்கும் இறைவனுக்கும், இறைவிக்கும் திருமணம் செய்து வைத்தவர் என்றும் தல வரலாறு சொல்லப்படுகிறது.
இந்த மாங்கல்ய மகரிஷி கன்னிப் பெண்களின் கண்கண்ட தெய்வமாக விளங்குகிறார். திருமணமாகாதவர்கள் உத்திர நட்சத்திரத்தில் இந்த மகரிஷிக்கும், இறைவன் இறைவிக்கும் அபிஷேக ஆராதனைகள் செய்து, சீப்பு, கண்ணாடி, குங்குமம், மஞ்சள், சட்டைத்துணி, பழம், பூ போன்ற மங்கலப்பொருள்களை பெண்களுக்கு தானம் செய்ய வேண்டும். இப்படி வழிபடும் கன்னியரின் கல்யாணக் கனவு பலிக்கிறது. மனதிற்கு பிடித்த மணாளனை அவர்கள் கரம் பற்றுகின்றனர்.
மணமானதும் அவர்கள் தம் கணவருடன் இந்த ஆலயம் வந்து, மாங்கல்ய மகரிஷியை வழிபட்டு சர்க்கரைப் பொங்கல், கேசரி, அக்கார வடிசல் போன்ற இனிப்பு பிரசாதங்களை அவருக்கு நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு வினியோகம் செய்கின்றனர். தவிர அந்தக் கன்னியர்கள் தங்களது வேண்டுதல் பலித்து, திருமணம் நிச்சயமாகி, பத்திரிகை அடித்ததும், அந்த முதல் பத்திரிகையை சமர்பிப்பது மாங்கல்ய மகரிஷியின் பாதத்தில்தான்.
இந்த மாங்கல்ய மகரிஷியை வணங்கி பிரார்த்தனை செய்தால், அமைதியான அன்பான கணவனைப் பெண்கள் பெறலாம் என்பது நம்பிக்கை.
தினசரி நான்கு கால பூஜைகள் நடைபெறும் இந்த ஆலயத்தில் உள்ள இறைவன் - இறைவியை, உத்திர நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஆராதனை செய்து வழிபட்டால் கூடுதல் பலன் கிடைக்கக்கூடும் என்பது ஐதீகம்.
திருச்சி - அன்பில் சாலையில் உள்ள லால்குடி பேருந்து நிலையத்தில் இருந்து 8 கி.மீ தொலைவில் உள்ளது இடையாற்று மங்கலம் என்ற தலம்.

ஜோதிடத்தில் திருமண தோஷத்தை இரண்டு வகையாகப் பார்க்க வேண்டும். இரண்டு வகையான தோஷத்திற்கு காரணத்தையும், பரிகாரத்தையும் அறிந்து கொள்ளலாம்.
ஜோதிடத்தில் திருமண தோஷத்தை இரண்டு வகையாகப் பார்க்க வேண்டும். அதாவது ஒரு சில ஜாதகங்களுக்கு திருமணமே தேவையில்லை என்ற அமைப்பு இருக்கும். அதற்கு காரணம் சூரியன், செவ்வாய், புதன், சனி ஆகிய கிரகங்கள், 10ஆம் வீட்டில் சேர்க்கை பெற்றிருந்தால் அவர் சன்னியாசம் செல்வார் என ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளது.
அதுபோன்ற அமைப்பு உடையவர்கள் சிறுவயது முதலே காதல், கல்யாணம் என்ற எண்ணம் சிறிதும் இல்லாமல் இருப்பார்கள். எனவே, அவர்களுக்கு திருமணம் தேவையில்லை.
ஆனால், ஒரு சிலருக்கு திருமண தோஷம் இருந்தாலும், மனதில் திருமண ஆசை இருக்கும். ஆனால் பெண் அமையாமல்/கிடைக்காமல் அவதிப்பட நேரிடும். திருமண வயதிற்குப் பின்னரும் திருமணம் நடைபெறாமல் இருப்பதும் ஒரு வகையில் தோஷம்தான்.
இதுபோன்ற நிலையில் இருப்பவர்கள், ஏற்கனவே மணம் முடித்துப் பிரிந்தவர்கள், விதவைகளைத் திருமணம் செய்து கொள்ளலாம். அப்படிச் செய்யும் போது தோஷம் நிவர்த்தியாகி வாழ்க்கையும் சிறப்பானதாக அமையும் என சில ஜோதிட நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் கோழிகுத்தி என்ற இடத்தில் உள்ள வானமுட்டி பெருமாளை வேண்டினால், பிதுர் தோஷம், பிரம்மஹத்தி தோஷம், சனி தோஷம் உள்ளிட்ட தோஷங்கள் விலகும் என்கிறார்கள்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் கோழிகுத்தி என்ற இடத்தில் வானமுட்டி பெருமாள் ஆலயம் இருக்கிறது. 1200 ஆண்டுகள் பழமையான இந்த ஆலயம், இந்து அறநிலையத் துறையின் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.
கருவறையில் 14 அடி உயரத்தில் வானமுட்டி பெருமாளின் தோற்றத்தைக் கண்டு நாம் சிலிர்க்காமல் இருக்க முடியாது. பெருமாளின் வலது மார்பில் தாயார் தயாலட்சுமி உள்ளார். இடதுபுறம் பூமாதேவியின் சிலை வடிவம் உள்ளது. மிகப் பெரிய அத்திமரமே பெருமாளாக மாறி இருப்பதால், மரத்தின் வேரே திருவடிகளை தாங்கி நிற்கும் அதிசயத்தை உலகில் வேறு எங்கும் நாம் காண இயலாது.
மூலவர் அத்தி மரத்தால் ஆனவர் என்பதால், அவருக்கு எந்தவித அபிஷேகமும் கிடையாது. வெறும் சாம்பிராணி காப்பு மட்டுமே சாத்தப்படுகிறது. இந்தப் பெருமாளை வேண்டினால், பிதுர் தோஷம், பிரம்மஹத்தி தோஷம், சனி தோஷம் உள்ளிட்ட தோஷங்கள் விலகும் என்கிறார்கள்.
இந்த ஆலயம் தினமும் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் பக்தர்களின் தரிசனத்திற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.
நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையில் இருந்து 6 கி.மீ தொலைவில் உள்ளது கோழிகுத்தி கிராமம். மயிலாடுதுறையில் இருந்து செல்ல மினி பஸ், ஆட்டோ வசதி உள்ளது.

சுவாதி நட்சத்திரத்தன்று மூலிகை மூல மந்திர ஹோமம் செய்தால் சகல தோஷங்களும் நிவர்த்தி ஆகும். சுவாதி நட்சத்திரத்தன்று நடைபெறும் மூலிகை ஹோமத்தில் எந்த மூலிகைக்கு என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
சுவாதி நட்சத்திரத்தன்று நடைபெறும் மூலிகை ஹோமம் மூலிகைகள் விவரம் வருமாறு:-
அருகம்புல் - காரியத்தடை நீங்குதல்
தேன் கலந்த மல்லிகை புஷ்பம் - கல்யாணத் தடை நீங்குதல்
துளசி பத்ரம் - சர்வபாப நிவர்த்தி
எள் - பிதுர்தோஷம் நீக்கும்.
அரசு சமித்து - சந்தான பாக்யம்
பச்சைக் கற்பூரம் - கல்வியல் முன்னேற்றம்
சிந்தில் - ஆயுள் அபிவிருத்தி
செந்தாமரை - கடன் தொல்லை நீங்குதல்
வில்வ பத்ரம் - மகாலட்சுமி கடாஷம்
வெண் கடுகு - எதிரிகள் தொல்லை நீங்குதல்
நாயுருவி - நவக்கிரக தோஷ நிவர்த்தி
கருங்காலி - பில்லி, சூன்யம் நிவர்த்தி
குங்குமப்பூ - ரத்தம் சம்பந்தப்பட்ட வியாதி நிவர்த்தி
வெற்றிவேர், விளாமுச்சுவேர் - சகலகாரிய அனுகூலம்
விஷ்ணுக்ரந்தி - சர்வதோஷ நிவாரணம்.

கடக ராசியில் பிறந்தவர்கள் வாழ்நாளில் எப்போதும் யோகங்களையும் அதிர்ஷ்டங்களையும் பெறுவதற்கு செய்ய வேண்டியவை என்ன என்பதை இங்கே தெரிந்து கொள்ளலாம்.
“கடகம்” என்ற வார்த்தை “கர்க்கடகம்” எனப்படும் சமஸ்கிருத வார்த்தையில் இருந்து உருவான ஒன்றாகும். இந்த வார்த்தையின் பொருள் “நண்டு” ஆகும். நண்டு பொதுவாக நீரில் வசிக்கும் ஓரு உயிரனமாகும். பஞ்சபூதத்தில் நீரை ஆளும் கிரகமாக “சந்திர பகவான்” இருக்கிறார். எனவே சந்திர பகவானின் “சொந்த” ராசியாக கடக ராசி இருப்பதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை. கடக ராசியினர் தங்கள் வாழ்வில் என்றென்றும் மேன்மையான பலன்களையும், அதிர்ஷ்டங்கள் பெருகவும் கீழ்கண்ட எளிய பரிகாரங்களை செய்து வந்தால் பலன்களை பெறலாம்.
திங்கட் கிழமைகள் தோறும் சிவபெருமானின் அபிஷேகத்திற்கு பசும் பால் வழங்க வேண்டும். அதேபோல கோயிலில் இருக்கும் அம்பாளுக்கு மல்லிகைப்பூ சாற்றி வணங்க வேண்டும். வாழ்நாள் முழுவதும் பௌர்ணமி மற்றும் அமாவாசை தினங்களில் உங்கள் ராசிக்குரிய நவக்கிரக நாயகனான சந்திர பகவானை வழிபடுவது உங்கள் ராசிக்குரிய தோஷங்களை போக்கும் சிறந்த பரிகாரமாகும்.
சந்திரன் பெண் தன்மை நிறைந்த ஒரு கிரகம் ஆவார். எனவே வருடம் ஒரு முறை உங்கள் உறவுகளில் இருக்கும் சுமங்கலிப் பெண்கள் மற்றும் கன்னிப்பெண்கள் மனமகிழ புடவை, அலங்காரப் பொருட்கள் போன்றவற்றை தானமாகத் தந்து அவர்களின் ஆசிகளைப் பெறுவது உங்களுக்கு இருக்கும் எத்தகைய தோஷங்களையும் போக்கும்.
முக்கியமான காரியங்கள் செய்யும் போதும், பணம் சம்பந்தமான விவகாரங்களில் ஈடுபடும் அன்று அதிகாலை எழுந்து குளித்து முடித்ததும், உங்கள் வீட்டிலோ அல்லது வேறு எங்கோ இருக்கும் வெள்ளை நிற பசு மாட்டிற்க்கு அகத்திகீரை, பழம் போன்றவற்றை தந்து பசுமாட்டை வணங்கி செல்வது உங்களின் தனவரவை அதிகப்படுத்தும். உங்கள் தாயார் கையால் ஒரு வெள்ளி நாணயம் மற்றும் சிறிது அரிசியை வாங்கிக்கொண்டு, ஒரு வெள்ளை நிறத் துணியில் அவற்றை போட்டு ஒன்றாக முடிந்து, உங்களுடன் எப்போதும் வைத்துக் கொள்வது நன்மையான பலன்களை உங்களுக்கு ஏற்படுத்தும்.

ஜாதகத்தில் சந்திர பகவானால் ஏற்படும் தோஷங்களுக்கு சிறந்த பரிகாரங்கள் உள்ளன. இந்த பரிகாரங்களை முறையாக செய்தால் நிச்சயம் நல்ல பலனை காணலாம்.
சந்திர பகவானுக்குரிய சிறந்த பரிகாரத் தலமாக தஞ்சை மாவட்டத்தில் இருக்கும் திங்களூர் சந்திரன் கோவில் இருக்கிறது. ஏதேனும் ஒரு வளர்பிறை திங்கட்கிழமை தினத்தில் காலை 9 மணிக்குள்ளாக திங்களூர் சந்திர பகவான் கோவிலுக்கு, சென்று சந்திர பகவானுக்கு அபிஷேகம் மற்றும் அர்ச்சனை செய்து, வெள்ளை நிற வஸ்திரம் சாற்றி வழிபடுவதால் ஜாதகத்தில் சந்திர பகவானால் ஏற்படும் தோஷங்கள் நீங்கி நன்மைகள் உண்டாகும்.
இந்த பரிகாரத்தை ஆறு மாதத்திற்கு ஒரு முறையோ அல்லது வருடத்திற்கு ஒருமுறையோ செய்வது சிறப்பு. திங்களூர் சந்திர பகவான் கோவிலுக்கு சென்று வழிபட முடியாதவர்கள் வளர்பிறை திங்கட்கிழமை மற்றும் பௌர்ணமி தினங்களில் அருகில் உள்ள கோவிலில் இருக்கும் நவக்கிரக சந்நிதியில் சந்திரனுக்கு மல்லிகை பூ சாற்றி, நிறமி சேர்க்கப்படாத கேசரி அல்லது தயிர் சாதம் நைவேத்தியம் வைத்து, சந்திர காயத்ரி மந்திரத்தை 108 அல்லது 1008 முறை வரை துதித்து வழிபாடு செய்வதால் சந்திர பகவானின் அருளால் வாழ்வில் மங்களமான பலன்கள் அதிகம் ஏற்படும்.
மேற்கூறிய இரண்டு பரிகாரங்களையும் செய்ய முடியாதவர்கள் திங்கட்கிழமைகள் மற்றும் பௌர்ணமி தினங்களில் அருகில் உள்ள சிவ பெருமான் கோவிலில், சிவபெருமான் அபிஷேகத்திற்கு தரமான பசும்பாலை தானமாக கொடுக்க வேண்டும். தினமும் காலையில் எழுந்ததும் பெற்ற தாயாரிடம் காலை தொட்டு, ஆசிர்வாதம் வாங்குவது சந்திரனின் அருளை உங்களுக்கு தரும்.
வெள்ளியில் சந்திரகாந்தக்கல் பதித்த மோதிரத்தை எப்போதும் உங்கள் வலது கை மோதிர விரலில் அணிந்து கொள்வது சிறந்தது. மேலும் உங்கள் சக்திக்கு ஏற்ப திங்கட்கிழமைகளில் மனநலம் குன்றியவர்கள் மற்றும் ஏழைகளுக்கு தயிர்சாதம், நீர்மோர் போன்றவற்றை தானம் வழங்க வேண்டும்.
கோடைக்காலங்களில் மக்கள் குடிப்பதற்கு தண்ணீர் பந்தல் அமைப்பது, சாலையில் திரிகின்ற விலங்குகள் தாகம் தணிப்பதற்கு வீட்டிற்கு வெளியே தண்ணீர் தொட்டியில் நீர் ஊற்றி வைப்பதும் சந்திர பகவானின் அருளைப் பெறுவதற்கான சிறந்த பரிகாரங்களாக இருக்கிறது.

“பரணி நட்சத்திரம்” பற்றியும், இந்நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ஏற்படும் தோஷங்கள் பற்றியும், அதற்கு செய்ய வேண்டிய பரிகாரம் பற்றியும் அறிந்து கொள்ளலாம்.
27 நட்சத்திரங்களில் இரண்டாவதாக வரும் நட்சத்திரம் பரணி நட்சத்திரம் ஆகும். பரணி நட்சத்திரத்தின் நவகிரகங்களில் அதிபதியாக சுக்கிர பகவான் இருக்கிறார். செல்வ வளத்திற்கும், சுகத்திற்கும் அதிபதியான சுக்கிரனின் நட்சித்திரமாக இருந்தாலும், பரணி நட்சத்திரக்காரர்கள் அனைவரும் சிறப்பான வாழ்க்கையை வாழ்கிறார்கள் என கூறமுடியாது. இவர்கள் தங்களுக்கு ஏற்படும் தோஷங்கள் நீங்கி, வாழ்வில் வளம் பெற கீழ்கண்ட பரிகாரங்களை நம்பிக்கையுடன் செய்து வந்தால் நிச்சயமான பலன்கள் உண்டாகும்.
சுக்கிரனுக்குரிய நட்சத்திரங்களான பரணி, பூரம், பூராடம் ஆகிய நட்சத்திர தினங்களில் தஞ்சை மாவட்டத்தில் இருக்கும் கஞ்சனூர் கோவிலுக்கு சென்று சுக்கிர பகவானுக்கு அர்ச்சனை செய்து வழிபடுவதால் உங்களை பீடித்திருக்கும் நட்சத்திர தோஷம் நீங்கும். உங்கள் உறவுகளில் திருமணம் வயதுள்ள பெண்களுக்கு புதுப்புடவை, வாசனை திரவியங்கள் போன்றவற்றை பரிசாக அளிப்பதால் சுக்கிரபகவானின் ஆசிகள் உங்களுக்கு கிடைத்து உங்களின் தோஷங்கள் நீங்கும்.
நீங்கள் எந்த ஒரு காரியத்திற்காகவும் வெளியில் செல்லும் போது சிறிது சர்க்கரை அல்லது இனிப்பை சாப்பிட்டு வெளியே செல்வதால் காரியசித்தி உண்டாகி நன்மையான பலன்கள் உண்டாகும். வெள்ளிக்கிழமைகளில் இளம் பச்சை வண்ண உடைகளை அணிந்து கொள்வது உங்களுக்கு பொருளாதார ரீதியான அதிர்ஷ்ட வாய்ப்புகளை அதிகரிக்கும்.
வசதி உள்ளவர்கள் தரமான வைரத்தை ஒரு வெள்ளி மோதிரத்தில் பதித்து வளர்பிறை வெள்ளிக்கிழமையில் சுக்கிர ஓரை வேளையில் உங்கள் வலது கை மோதிர விரலில் அணிந்து கொள்ள வேண்டும். பிற உயிர்களை துன்புறுத்தாமல் இருப்பதும், நாய்கள், பறவைகளுக்கு உணவளிப்பதும் உங்களின் தோஷங்களை போக்கி நன்மைகள் பலவற்றை ஏற்படுத்தும்.