என் மலர்tooltip icon

    தோஷ பரிகாரங்கள்

    கண் திருஷ்டி எனப்படும் தீயபார்வை மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். குடும்பத்தில் ஏற்படும் காரணம் புரியாத இன்னல்கள் மூலம் இதனை நாம் உணரலாம்.
    உலகில் கண் திருஷ்டிக்குப் பயப்படாதவர்களே இல்லை. கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது என்பார்கள்.

    பிரபல தத்துவ ஞானி பிரான்ஸிஸ் பேகன், ஒருவருக்கு பொறாமை மேலிடும் போது முதலில் அது அவரது கண்களில்தான் வெளிப்படுகிறது என்கிறார்.
    மனிதனின் கண்களிலிருந்து வெளிவரும் ஆற்றல் சில சமயங்களில் மிருகங்களை அல்லது குழந்தைகளைக் கூடக் கொல்லும் ஆற்றல் படைத்தது. சிலருக்கு இன்னும் அதீதமான ஆற்றல் கண் பார்வையில் இருக்கிறது. அவர்கள் பார்வையினாலேயே சாபம் இட வல்லவர்கள்’ என்கிறார் திருஷ்டியை அறிவியல் ரீதியில் விளக்கம் அளித்த அறிஞர் ப்ளூடார்க்!

    இதே போல கி.பி.மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஹெலியோடோரஸ், “ அருமையான ஒன்றை பொறாமை கொண்ட கண்ணுடன் ஒருவன் பார்த்தானானால் சுற்றி இருக்கும் சூழ்நிலையையே அவன் மாற்றுகிறான். உயிரைப் போக்கும் அளவு மோசமான சூழ்நிலையை உருவாக்குகிறான், அத்துடன் தனது விஷத்தைக் கண்கள் மூலம் தனக்கு அருகில் இருக்கும் அனைத்தின் மீதும் பாய்ச்சுகிறான்” என்கிறார்.

    கண் திருஷ்டி எனப்படும் தீயபார்வை மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். குடும்பத்தில் ஏற்படும் காரணம் புரியாத இன்னல்கள் மூலம் இதனை நாம் உணரலாம்.

    சில பேருடைய பார்வை பட்டாலேயே போதும் திருஷ்டிக்கு உள்ளானவர் பல விதத்திலும் பாதிக்கப்படுவர். ஏன், சில சமயம் உயிருக்கே ஆபத்து ஏற்படுவதுண்டு!
    பார்த்த பார்வையில் புதுச்சட்டை கிழியும்,பால் புளித்துப் போகும், பார்த்த பார்வையில் பல நாட்களுக்குச் சாப்பிடவே பிடிக்காது. வாந்தி எடுக்கும். இப்படி கெட்ட திருஷ்டியின் “மகிமையை”ச் சொல்லிக் கொண்டே போகலாம்.

    இதனால்தான் எந்தவொரு நல்ல காரியம் நடந்து முடிந்தாலும் அதன் பின்னர் திருஷ்டி கழிக்கிறார்கள். திருஷ்டியிலிருந்து எப்படித் தப்புவது? முதல் வழி அப்படிப்பட்ட ஆட்களைப் பார்க்கவே பார்க்காதே என்பது தான். அடுத்த வழி சில தாயத்துகளை அணிவது தான். அரைஞாண் கயிற்றில் ஆரம்பித்து மணிக் கட்டு, புஜத்தின் மேல் பகுதியில் கயிறு கட்டுதல், கழுத்தில் தாயத்தை அணிவது என்று பல ரகங்களில் திருஷ்டியிலிருந்து தன்னைப் பாதுகாக்க ஒவ்வொருவரும் முயல்கின்றனர்.

    நமது ஊரில் மிளகாயைப் மரக்கால் படியில் வைத்து திருஷ்டி சுற்றிப் போடுவர். கடல் உப்பை (கல் உப்பு ) வைத்து திருஷ்டி கழிப்பது அன்றாடப் பழக்கம். பூசணிக்காய் பற்றிச் சொல்லவே வேண்டாம். தமிழர் தம் பழக்க வழக்கங்களில் திருஷ்டியிலிருந்து பாதுகாக்க பல வழிகள் உண்டு.

    கண்ணுக்கு அழகூட்டுவதற்காக மட்டும் தமிழ் மங்கையர் மையைத் தீட்டிக் கொள்ளவில்லை. தன்னைத் தீயபார்வையிலிருந்து காத்துக் கொள்வதற்காகவும்மையைத் தீட்டிக்கொள்கின்றனர். குழந்தைகளுக்கு மை தீட்டும் தாய்மார் மறந்து விடாமல் அதே மையினாலேயே குழந்தையின் கன்னத்தில் ஒரு திருஷ்டிப் பொட்டை வைக்க மறக்கமாட்டார்கள். சில பொல்லாத கண்களிலிருந்து பாது காப்பதற்காகத் தான் இந்த திருஷ்டிப் பொட்டு.

    மணமக்கள் வீட்டிற்குள் நுழைவதற்கு முன்னர் அவர்களை வாசலிலேயே நிறுத்தி வைத்து வீட்டில் அவர்களுக்கு மிகவும் வேண்டியவர்கள், வயதானவர்கள் கற்பூரத்தை ஏற்றி அவர்களைச் சுற்றி திருஷ்டி கழிப்பது பழக்கம். இந்தியாவில் அனைத்து மாநில மக்களும் கண் திருஷ்டியைக் கழிக்க நவரத்தினங்களை அணி வதைப் பழக்கமாகக் கொண்டுள்ளனர்.

    பல வித மணிகளினால் ஆன மாலை, ருத்ராட்ச மாலை போன்றவையும் தீய திருஷ்டிகளை விலக்கும் ஆற்றல் படைத்தவை என நம்பப் படுகின்றன! இப்படி தமிழகத்தில் மட்டுமல்ல, உலகின் எல்லா நாடுகளிலும் உள்ள மக்கள் திருஷ்டி கழிக்கப் பல்வேறு வழிமுறைகள், தாயத்துக்கள், மணிகள் அணிவது ஆகிய வற்றைக் கடைப்பிடித்து வந்திருக்கின்றனர். வருகின்றனர்.

    இவற்றுக்கெல்லாம் மேலாக கண் திருஷ்டி கழிப்பதற்கு அனைத்து தேசத்தினரும் பயன்படுத்தியது, பயன்படுத்தி வருவது ஒரு எளிய சாதனம் தான். கல் உப்பு அல்லது கடல் உப்பு என்று சொல்கிறோமே அது தான்! (உப்புப் பொடி அல்ல; அதைப் பயன்படுத்தல் கூடாது) பிசாசு, பேய் உள்ளிட்ட தீய சக்திகள் அதைக் கண்டால் பயப்படுகின்றன என்று மக்கள் நம்புகின்றனர்.

    உப்பு மனிதர்களை தீய திருஷ்டியிலிருந்து காக்கிறது என்பதையும் அது சற்று வெப்பப்படுத்தப்பட்டாலோ அல்லது மேலே தெளிக்கப்பட்டாலோ அதன் சக்தி இன்னும் மிக அதிகமாகிறது என்பதும் மக்களின் நம்பிக்கை. உப்பை எடுத்து ஆழாக்கில் அல்லது கையில் வைத்து திருஷ்டி கழிக்கப்பட வேண்டியவர்களை எதிரில் நிறுத்தி இட மாகவும் வலமாகவும் மூன்று முறை சுற்றி அந்த உப்பை நீரில் போட்டுக் கரைய விட வேண்டியது தான்! சிலர் சுற்றிய பின் னர் அதில் எதிரிலிருப்பவரை எச்சிலைத் துப்பச் சொல்வது உண்டு. அத்தோடு சரி, அவர் களைப் பிடித்த திருஷ்டி தோஷம் நீங்குகிறது.

    வீட்டில் நச்சுக் கிருமிகளைக் கொண்ட கழிவறை, குளியலறை தீய சக்திகளின் இருப்பிடமாகக் கருதப்படுகிறது. இந்தக் கழிவறையின் கதவுகளை ஒரு போதும் திறந்து வைத்திருக்கக் கூடாது. மிகவும் சுத்தமாக வைத்திருக்க வேண்டிய ஒரு அறை இது. ஆனால் பெரும்பாலானோரின் வீடுகளில் இதைக் கவனிப்பதே இல்லை. அவர்கள் அடையும் துன்பங்களுக்கெல்லாம் காரணம் இந்தக் கழிவறையிலிருந்து எழும் நெகடிவ் அல்லது தீய சக்தியே என்பதை அவர்கள் உணர்வதில்லை.

    இந்த நெகடிவ் எனர்ஜியை அல்லது தீய விளைவை நீக்க ஒவ்வொரு கழிவறையிலும் கல் உப்பை ஒரு கிண்ணம் நிறைய நிரப்பி அங்குள்ள ஜன்னல் விளிம்பில் அல்லது சவுகரியமான ஒரு இடத்தில் வைக்க வேண்டும். இந்த கல் உப்பு உடனடியாக நெகடிவ் எனர்ஜியை உறிஞ்ச ஆரம்பிக்கும். இதனால் வீட்டில் ஏற்படும் பலன்கள் அற்புதமாக இருக்கும். அது உடனே தெரியவும் ஆரம்பிக்கும்.

    உப்பு சொதசொதப்பாக ஆனாலோ அல்லது ஈரப்பதம் அதிகமாகி விட்டாலோ அதை அப்புறப்படுத்தி விட்டு புதியதாக கல் உப்பை நிரப்ப வேண்டும். சில வீடுகளில் கழிப்பறை வட கிழக்கு திசையில் அமைந்திருக்கக் கூடும்! வீட்டை இடிக்க முடியாது. இந்த அமைப்பு ஏற்படுத்தும் நெகடிவ் எனர்ஜியைப் போக்க ஒரு சிறிய பாத்திரத்தில் கல் உப்பைப் போட்டு அதை ஓரிடத்தில் அப்படியே வைக்க வேண்டியது தான். அதை அவ்வப்பொழுது மாற்றிக் கொண்டே இருந்தால் வீட்டின் பொருளாதார நிலை உள்ளிட்டவை அற்புதமாக மாறி உயர் நிலையை அடையமுடியும்.

    உலகம் கண்ட மிகப்பெரும் விஞ்ஞானிகளுள் ஒருவரான ராபர்ட் ஓப்பன்ஹீமரின் வாழ்க்கை வரலாற்றில் வரும் ஒரு செய்தி கண் திருஷ்டியைப் பற்றியது.
    “இந்துக்கள் உப்பை ஒரு சிறு பாத்திரத்தில் போட்டு இடது புறமும் வலது புறமும் தலையைச் சுற்றி திருஷ்டியைக் கழிக்கின்றனர். அப்போது லட்சக்கணக்கான நெகடிவ் ஐயான்கள் அவர்கள் உடம்பை விட்டு வெளியேற்றப்படுகின்றன.”

    எப்படி இப்படி திருஷ்டியைக் கழிக்கும் ஒரு அரிய பழக்கத்தை இந்துக்கள் கண்டு பிடித்தனர்? இது வியப்புக்குரிய ஒரு விஷயம்!

    வீட்டில் உள்ள நெகடிவ் எனர்ஜியை எப்படிப் போக்குவது? இதுவும் சுலபம் தான்!

    வீட்டைப் பெருக்கிய பின்னர் மெழுகும் போது அல்லது நீரால் துடைக்கும் போது பக்கெட்டில் உள்ள நீரில் சிறிது (சுத்தி கரிக்கப்படாத, அசல்) கல் உப்பைச் சேர்க்க வேண்டியது தான்! கல் உப்பைப் போட்டுக் கரைத்து வீட்டைத் துடைக்கும் போது தீய சக்திகள் எல்லாம் அகன்று ஓடி விடும். கிருமிகள், ஈக்கள் உள்ளிட்டவை வராது என்பது ஒரு புறம் இருக்க தீமைகள் விலகி நன்மைகள் பெருகும்.

    சுவர்க்க அதிர்ஷ்டம் என்று கூறப்படும் எர்த் (நிலம்) சக்தி வலிமையானதாக ஒரு வீட்டில் ஆக்கப்பட்டால் எல்லா நலங்களும் தானே வந்து சேரும். உறவுகள் மேம்படும். வீட்டில் அமைதி நிலவும். எல்லா குடும்ப உறுப்பினர்களும் அன்யோன்யமாக அன்புடன் பழகுவர்.

    இதற்கு நேச்சுரல் குவார்ட்ஸ் கிறிஸ்டலை ஹாலில் வைக்க வேண்டும். மங்கலாக அழுக்குடன் இருக்கும் கிறிஸ்டலைப் பயன்படுத்தவே கூடாது. பிரகாசமாக பளிச்சென்று இருக்கும் கிறிஸ் டல்கள் மட்டுமே பயன் தரும். சூரிய ஒளி இவற்றின் மீது பட்டவுடன் அற்புதமான ஆற்றல் பேரலையாக உருவாகி வீடு முழு வதும் பரவி ஒரு புத்துணர்ச்சியையும் எல்லையற்ற சாந்தியையும் தரும்.

    இன்னும் அதிக ஆற்றலைப் பெற விரும்புபவர்கள் ஏழு விதமான கிறிஸ்டல்களை தென் மேற்கு திசையில் வைக்க வேண்டும். சித்திர வேலைப்பாடுகளுடனான அழகிய அமைப்புகள் கொண்ட போர்செலெய்ன் அல்லது களிமண்ணால் ஆன பொருட்கள் கூட நெகடிவ் எனர்ஜியை எடுத்து எர்த் எனர்ஜி எனப்படும் நில ஆற்றலை மேம்படுத்தும். இவற்றினால் ஆன ஜாடிகளை அலங்காரமாக வரவேற்பறையில் வைக்கலாம்.

    திருஷ்டியைப் பற்றி இவ்வளவு விவரங்களை அறிந்த நீங்கள் எல்லோரிடமும் இதைப் பற்றி அறிவியல் ரீதியாக விளக்கினால், உங்கள் வீட்டார் உங்களுக்குத் திருஷ்டி சுற்றிப் போட வேண்டி வரும். திருஷ்டி பற்றிய உங்கள் அறிவைக் கண்டு உங்கள் மீது திருஷ்டி பட்டு விட்டால்?!

    என்ன இருந்தாலும் கண் திருஷ்டி பொல்லாதது தானே!
    பஞ்சேஷ்டி அகத்தீஸ்வரர் தலத்தில் வழிபாடு செய்தால், சத்ரு தோஷம், திருமண தோஷம், முன்னேற்றத்தடை தோஷம் உள்ளிட்ட அனைத்து தோஷங்கள் நீங்குவதுடன், மீண்டும் பிறவாத பேறினையும் அளிக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
    பஞ்சேஷ்டி சென்னை கொல்கத்தா நெடுஞ்சாலையில் 30 கி.மீ. தொலைவில் காரணோடை பாலம்-தச்சூர் கூட்ரோடு அருகில், தச்சூர் - பஞ்சேஷ்டி 1 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

    அகஸ்திய தீர்த்தத்தில் நீராடி கோவிலை அங்கப் பிரதட்சணம், அடிப்பிரதட்சணம் செய்து தீபம் ஏற்றி வழிபட்டால் நோய்கள் தீர்வதாக நம்பிக்கை உள்ளது.
    அம்பிகையின் நேர்பார்வையில் நவக்கிரகங்கள், அஷ்ட திக்பாலகர்கள் அமைந்துள்ளதால் நம்முடைய அனைத்து நவக்கிரக, வாஸ்து தோஷங்கள் நீங்கி விடும்.

    இதனால் இத்தலத்தை பரிகாரத் தலம் என்றும் கூறுகின்றனர். திருமணத் தடை நீங்க துர்கா யந்திரம் அமைந்துள்ள சன்னதியில் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் அம்பாளுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டால் எல்லாவித திருமணத் தடைகளும் நீங்கும்.

    ஒரு ஆலயத்தின் ராஜகோபுரம் தெற்குத் திசையை நோக்கி அமைக்கப்பட்டிருந்தால், அத்திருத்தலம் பரிகாரத் தலமாகக் கருதப்படும் என்பது ஐதீகம்.
    பஞ்சேஷ்டி திருக்கோவிலின் ராஜகோபுரமும் தெற்கு திசைநோக்கி அமைக்கப்பட்டுள்ளது. மேலும் சத்ரு சம்ஹாரியாக விளங்கும் அன்னை ஆனந்தவல்லிக்காக அமைக்கப்பட்டுள்ளது. எனவே பஞ்சேஷ்டி திருத்தலம் பரிகாரத் தலமே ஆகும்.

    இத்தலத்தில் வழிபாடு செய்தால், சத்ரு தோஷம், திருமண தோஷம், முன்னேற்றத் தடை தோஷம் உள்ளிட்ட அனைத்து தோஷங்கள் நீங்குவதுடன், மீண்டும் பிறவாத பேறினையும் அளிக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. இந்த சிறந்த பஞ்சேஷ்டி திருத்தலம் அகத்தியர் நாடி ஜோதிடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கோவில் திருக்குளத்தில் நீராடி கோவிலை வலம் வந்து தீபங்கள் ஏற்றி பரிகார சங்கல்பங்கள் செய்து அர்ச்சனை செய்ய வேண்டும். அகண்ட தீபமும் ஏற்ற வேண்டும்.
    உத்திரட்டாதி நட்சத்திரகாரர்கள் மிகுதியான செல்வங்களையும், யோகங்களையும் பெறுவதற்கு செய்ய வேண்டிய பரிகாரங்கள் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.
    உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வருடத்திற்கு ஒரு முறை தங்கள் நட்சத்திர அதிபதியான சனி பகவானின் முழுமையான நல்லருளை பெறுவதற்கு வருடத்திற்கு ஒரு முறை திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலுக்கு சென்று, சனீஸ்வரனுக்கு அபிஷேகம் மற்றும் அர்ச்சனை செய்து, கருப்பு நிற வஸ்திரம் சாற்றி வழிபட வேண்டும்.

    வாரந்தோறும் வரும் சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று ஆஞ்சநேயருக்கு நெய் தீபம் ஏற்றி, இனிப்பு அல்லது கற்கண்டுகள் நைவேத்தியம் வைத்து, வழிபட்டு வர வாழ்வில் சிறப்பான பலன்கள் ஏற்படுவதை காணலாம். சனி பிரதோஷ தினங்களில் சிவ பெருமானையும், அம்பாளையும் வழிபட்டு வர உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு வாழ்வில் பல நன்மைகள் உண்டாக்கும் ஒரு சிறந்த பரிகாரமாக இருக்கிறது.

    தினமும் நீங்கள் காலையில் உணவு சாப்பிடுவதற்கு முன்பாக சனிபகவானின் வாகனமாகிய காகங்களுக்கு சிறிது உணவை வைத்த பிறகு சாப்பிடுவதால், சனீஸ்வர பகவானின் அருட்பார்வை உங்களுக்கு கிடைத்து அதனால் வாழ்வில் நன்மையான பலன்கள் அதிகரிக்கும். ஏதேனும் சனிக்கிழமை தினத்தில் உடல் ஊனமுற்றவர்களுக்கு ஆடை மட்டும் இனிப்புகளை தானம் செய்வது நன்மை பயக்கும்.

    கோவில்களில் 2, 4, 6 போன்ற இரட்டைப்படை எண்ணிக்கையில் இருக்கும் பசுமாடுகளுக்கு ஒன்றுடன் ஒன்று ஒட்டிக் கொண்டிருக்கும் இரட்டை வாழைப்பழங்களை, சிறிது தேன் தடவி உணவாக கொடுப்பதன் மூலம் உங்கள் நட்சத்திரத்திற்கு மிகுதியான அதிர்ஷ்டங்கள் உண்டாக செய்யும் ஒரு சிறந்த பரிகாரமாகும்.
    சூரியனின் அருளாற்றல் நிறைந்த உத்திர நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்கள் வாழ்வில் யோகங்களும், அதிர்ஷ்டங்களும் மிகுதியாக பிற செய்யவேண்டிய பரிகாரங்களை பார்க்கலாம்.
    சூரியனுக்குரிய நட்சத்திரங்களில் ஒன்று தான் உத்திர நட்சத்திரமாகும். அத்தகைய சூரியனின் அருளாற்றல் நிறைந்த உத்திர நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்கள் வாழ்வில் யோகங்களும், அதிர்ஷ்டங்களும் மிகுதியாக பிற செய்யவேண்டிய பரிகாரங்களை பார்க்கலாம்.

    உத்திரம் நட்சத்திரக்காரர்கள் தங்கள் வாழ்வில் எப்போதும் சிறப்பான பலன்களை பெறுவதற்கு ஒரு வளர்பிறை ஞாயிற்றுக்கிழமை தினம் தஞ்சை மாவட்டத்தில் இருக்கும் சூரிய பகவானுக்குரிய சூரியனார் கோயிலுக்கு சென்று சூரிய பகவானுக்கு அபிஷேகம் மற்றும் அர்ச்சனை செய்து, ஆரஞ்சு நிற வஸ்திரம் சாற்றி வழிபாடு செய்ய வேண்டும்.

    உங்கள் வாழ்வில் தற்போது இருக்கின்ற பொருளாதார நிலை மேன்மேலும் பெருகுவதற்கு வெள்ளிக்கிழமைகள் தோறும் லட்சுமி தேவி கோவிலுக்கு சென்று லட்சுமிக்கு துளசி மாலை மற்றும் தாமரைப்பூ சமர்ப்பித்து வழிபடுவதால் செல்வ வளம் அதிகரிக்கும். ஞாயிற்றுக்கிழமை வருகின்ற பிரதோஷ தினத்தன்று சிவன் கோவிலுக்கு சென்று சிவபெருமானுக்கும், பார்வதிக்கும் பால் மற்றும் தேன் அபிஷேகம் செய்து வழிபடுவதாலும் உங்கள் வாழ்வில் ஏற்படுகின்ற துரதிர்ஷ்டங்கள் நீங்கி யோகங்களும், அதிர்ஷ்டங்களும் அதிகம் உண்டாகும்.

    தினந்தோறும் காலையில் எழுந்து குளித்து முடித்ததும் சூரிய பகவானை நோக்கி கரங்களை கூப்பி “ஓம் சூரிய தேவாய நமஹ” என்ற மந்திரத்தை 10 முறை துதித்து உங்கள் அன்றாட செயல்களில் ஈடுபடுவது ஏற்றமிகு பலன்களை தரும். வயதில் மூத்தவர்களை மதித்து அவர்களின் பாதங்களை தொட்டு ஆசீர்வாதம் பெறுவது சூரிய பகவானின் அருள் உங்களுக்கு முழுவதும் கிடைக்க செய்யும்.

    உத்திர நட்சத்திரக்காரர்களுக்குரிய தல விருட்சமாக இலந்தை பழ மரம் இருக்கிறது. இலந்தை பழ மரம் தலவிருட்சமாக இருக்கும் கோயில்களுக்கு ஞாயிற்றுக்கிழமை தினத்தில் சென்று இலந்தை மரத்தையும், அங்கிருக்கும் இறைவனையும் வழிபாடு செய்வதாலும் வாழ்வில் மிக அதிகமான யோகங்களை தரக்கூடிய ஒரு அற்புத பரிகாரமாக இருக்கிறது.
    பவானி கூடுதுறை பாவம் போக்கி புண்ணியம் அளிக்கும் சக்தி கொண்டதாக விளங்குவதால் ஆடி அமாவாசை, தை அமாவாசை நாட்களில் அங்கு நீராடி பித்ருகளுக்கு தர்ப்பணம் செய்தால் பித்ரு தோஷம் நீங்கும்.
    தமிழகம் முழுவதும் எத்தனையோ கோவில்கள் இருந்தாலும் ஒரு சில கோவில்களை மட்டுமே பரிகார ஸ்தலங்களாக முன்னோர்கள் வகுத்துள்ளனர். பவானி கூடுதுறை சங்கமம் பாவங்களை வேரோடுகளையும் தன்மை பெற்றது ஆகும். இங்குள்ள அரசமரத்தடியில் உள்ள விநாயகர் வினை தீர்க்கும் வல்லமை வாய்ந்தவராக உள்ளார். அவருக்கு கூடுதுறை நீரை எடுத்து அபிஷேகம் செய்தால் திருமணம் கைக்கூடும் என்பதால் கன்னி பெண்கள் கூடுதுறையில் நீராடி விநாயகருக்கு அபிஷேகம் செய்கிறார்கள்.

    பவானி கூடுதுறை பாவம் போக்கி புண்ணியம் அளிக்கும் சக்தி கொண்டதாக விளங்குவதால் ஆடி அமாவாசை, தை அமாவாசை நாட்களில் அங்கு நீராடி பித்ருகளுக்கு தர்ப்பணம் செய்தால் பித்ரு தோஷம் நீங்கும்.

    இங்கு ஒருமுறை குளித்து சென்றால் அவர் முக்தி அடைந்து விடுவார் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.
    நாகதோஷத்தால் திருமணம் தடைப்பட்டவர்கள், குழந்தைப் பாக்கியம் இல்லாதவர்கள் செவ்வாய்க்கிழமைகளில் ராகுகாலப் பூஜைகளில் பங்குபற்றுதல் நல்லது ஆகும்.
    ஆடி மாதம் வரும் செவ்வாய்க் கிழமை தோறும் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. இந்த நாட்களில் பெண்கள் அம்மன் கோவில்களுக்கு சென்று வழிபட்டால் நினைத்தது நடக்கும். இந்நாட்களில் பெண்கள் அதிகாலையிலேயே எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்.

    பிறகு குல தெய்வத்துக்கு வழிபாடு செய்து விட்டு அம்மனை வழிபட வேண்டும். ஆடி செவ்வாய் விரதம் துர்க்கை, முருகனுக்குரிய விரதமாகும். முருகப்பெருமானின் அவதாரமே செவ்வாய்கிரகம் என்று ஜோதிட நூல்கள் கூறுகின்றன.

    செவ்வாய்க் கிழமைகளில் ராகு காலத்தில் மாலை 3 மணிக்கு தொடங்கி 4.30 மணி வரை உள்ள காலத்தில் துர்க்கையை பூஜிப்பது விசேஷமானது. பத்திரகாளி ராகுவாக அவதாரம் செய்தார் என்பர். நாகதோஷத்தாலும் திருமண தடைப்பட்டவர்கள், குழந்தைப் பாக்கியம் இல்லாதவர்கள் செவ்வாய்க்கிழமைகளில் ராகுகாலப் பூஜைகளில் பங்குபற்றுதல் நல்லது ஆகும்.
    வேதனைகளைத் தரும் சனியை சாந்தப்படுத்த கீழே கொடுக்கப்பட்டுள்ள பரிகாரங்களை முறையாக செய்து வந்தால் வாழ்க்கையை ஜெயிப்பதற்கு சனி பகவான் அருள் தருகிறார்.
    • திருநள்ளாறு, குச்சானுர், சென்னை பொழிச்சலூரில் உள்ள அகத்தீஸ்வரர் திருக்கோவில் போன்ற சனியின் திருத்தலங்களுக்குச் சென்று சனிக்குரிய பரிகாரங்களைச் செய்யலாம்.

    • ஏழரைச்சனி முடியும்வரை சனிக்கிழமை இரவில் படுக்கும் போது கைப்பிடி அளவு சனியின் தானியமான எள்ளை தலைக்கு கீழே வைத்து உறங்கி, காலை எழுந்து அந்த எள்ளை புதிதாக வடித்த சாதத்துடன் கலந்து சனியின் வாகனமான காகத்திற்கு அன்னமிடலாம்.

    • சனியை திருப்திப்படுத்த மாற்றுத் திறனாளிகள், (குறிப்பாக பார்வை இழந்தவர்கள், நடக்க இயலாதவர்கள்) வயதானவர், ஆதரவற்றவர்களுக்கு உதவலாம். காலில்லாதவர்களுக்கு ஊன்றுகோல் தானம் தருவது நல்ல பரிகாரம்.

    • சைவர்கள் சனிக்கிழமைகளில் காலபைரவருக்கு வெள்ளைப் புதுத்துணியில் மிளகை முடிச்சிட்டு அகல் விளக்கில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றலாம். (எள் தீபம் கூடாது. எள்ளை எரிப்பது தோஷம். எரிக்கக் கூடாது)

    • வைணவர்கள் சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயருக்கு நெய் தீபம் ஏற்றி தொல்லைகளில் இருந்து விடுவிக்கும்படி மனமுருக வேண்டி வழிபடலாம்.

    • பெருமாளுக்கு சனிக்கிழமைகளில் விரதம் இருக்கலாம்.

    ஏழரைச் சனி என்பது அனுபவங்களின் தொகுப்பே. அக்காலத்தில் நல்லவர் யார் கெட்டவர் யார் என்று நீங்கள்தெரிந்து கொள்ளும்படி உங்கள் கண்களை திறக்கிறார் சனி. அந்த அனுபவங்களை ஏற்றுக் கொண்டு, அதன் துணை கொண்டு அதன்பின் வரும் வாழ்க்கையை ஜெயிப்பதற்கே அதனை சனி தருகிறார்.
    கல்யாணமாகாத பெண்கள் வெள்ளி, செவ்வாய், வரும் ராகுகாலத்தில் துர்க்கைக்கு எலுமிச்சம் பழத்தோலில் விளக்கேற்றினால் பெண்களுக்கு திருமணம் கைகூடும்.
    ராகுகால பூஜையைச் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் மட்டுமின்றி வாரத்தின் ஏழு நாட்களும் அன்றைய ராகுகால நேரத்தில் ஒவ்வொரு விதமான மலரைக் கொண்டு அர்ச்சிக்கலாம்.

    ராகு கால துர்க்கா பூஜை

    கல்யாணமாகாத பெண்கள் வெள்ளி, செவ்வாய், வரும் ராகுகாலத்தில் துர்க்கைக்கு எலுமிச்சம் பழத்தோலில் விளக்கேற்றினால் பெண்களுக்கு திருமணம் கைகூடும். திருமணமாகி குழந்தை இல்லாத பெண்களுக்குப் புத்திரபாக்கியம் உண்டாகும். குழந்தைகள் ஆரோக்கியம் பெறுவர். தடைப்பட்ட காரியம் நிறைவேறும்.

    கிரகம்: சூரியன்
    கிழமை: ஞாயிறுக்கிழமை
    மலர்: பாரிஜாதம், வில்வம்.

    கிரகம்: சந்திரன்
    கிழமை: திங்கட்கிழமை
    மலர்: வெள்ளை அலரி.

    கிரகம்: அங்காரகன்
    கிழமை: செவ்வாய்க்கிழமை
    மலர்: செந்தாமரை, செம்பருத்தி

    கிரகம்: புதன்
    கிழமை: புதன்கிழமை
    மலர்: துளசி.

    கிரகம்: குரு
    கிழமை: வியாழக்கிழமை
    மலர்: சாமந்தி

    கிரகம்: சுக்கிரன்
    கிழமை: வெள்ளிக்கிழமை
    மலர்: வெள்ளை அரளி.

    கிரகம்: சனி
    கிழமை: சனிக்கிழமை
    மலர்: சங்குபுஷ்பம்.

    பெண்கள் இம்மலர்களை ஒவ்வொரு நாளும் ராகுகாலத்தில் அந்தந்த கிரகத்துக்கு அர்ச்சனை செய்து வந்தால், திருமணம், புத்திரபாக்கியம், அமைதி, சுபிட்சம் இவை யாவும் ஒருங்கே அமையப் பெறும் என்பது ஐதீகம்.
    திருமணம் நடைபெறவும், பிள்ளைப் பேறுக்காகவும், தீராத நோய்கள் தீரவும், கடன்கள் தொலையவும் இப்படிப் பல பிரச்சனைகளுக்காகவும் மக்கள் இந்த எல்லம்மனை வேண்டி வழிபடுவது வழக்கம்.
    திருவல்லிக்கேணி ரயில் நிலையத்திலிருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் எல்லம்மன் ஆலயம் உள்ளது. இங்குள்ள சுந்தரமூர்த்தி விநாயகர் கோவில் வீதியில்தான் சீர்மிகு சிறப்புள்ள எல்லம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் கட்டப்பட்டு சுமார் 550 ஆண்டுகளாவது ஆகி இருக்கக்கூடும்.

    வெள்ளிக்கிழமை தோறும் அருள்மிகு எல்லம்மன் ஆலயத்துக்கு தாய்மார்கள் கூட்டம் அலைகடலோ என்று எண்ணும்படியாக வருகிறது. சுகாசினி மண்டலியைச் சேர்ந்த தாய்மார்கள் விளக்கு பூஜையும், குங்கும அர்ச்சனையும் செய்து அருள்மிகு எல்லம்மனை போற்றுகிறார்கள். கோரும் வரம் கொடுத்து கோரிக்கையை நிறைவேற்றுவதில் எல்லம்மனுக்கு இணை எல்லம்மனே என்று சொல்லி அந்த தாய்மார்கள் பூரிப்பதை காணலாம்.

    திருமணம் நடைபெறவும், பிள்ளைப் பேறுக்காகவும், தீராத நோய்கள் தீரவும், கடன்கள் தொலையவும் இப்படிப் பல பிரச்சனைகளுக்காகவும் மக்கள் இந்த அம்மனை வேண்டி வழிபடுவது வழக்கம். இப்படிப் பலவித பிரச்சினைகளுக்கும் வெள்ளி அன்று வந்து வழிபட்டால் உடனே வினை தீர்ந்து விடும். கேட்கும் வரமும் நிச்சயம் கிடைக்கும் என்கின்றனர்.

    மேலும் சர்க்கரை நோயுள்ளவர்கள் இக்கோவில் வந்து இந்த எல்லையம்மனை வேண்டிக் கொண்டு சர்க்கரைக் காப்புச் செய்தால் குணமாவது உறுதி என்கிறார்கள். பிறகு அவரவர்கள் தங்களது நிலைக்கேற்றவாறு சந்தனக்காப்பும், மஞ்சள் காப்பும், குங்குமக் காப்பும், கூடச் செய்து வழிபடுவதுண்டு. இவ்வாறு தங்களது வேண்டுதலையைச் செய்து பிரச்சினைகள்யாவும் நீங்கப்பெற்று மகிழ்வுடன் செல்வதைக் காணலாம்.

    இவ்வாலயத்திற்கு வந்து ஒருமண்டல கால அளவு 108 பிரதட்சணம் செய்து வந்தால் திருமண வாழ்க்கை நிச்சயம் கைகூடும் என்பர். 
    தாடிக்கொம்பு சவுந்தர்ராஜ பெருமாள் கோவில் வைபவத்தில் கலந்து கொண்டு பெருமாளை வழிபடுவதால் வாழ்வில் ஏற்படுகின்ற கடனால் ஏற்படும் கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி இன்பங்கள் அதிகரிக்கும்.
    திண்டுக்கல் மாவட்டத்தில் வேடச்சந்தூர் அருகில் இருக்கும் தாடிக்கொம்பு எனும் ஊரில் இருக்கும் புகழ் பெற்ற பழமையான ஆலயம் தான் தாடிக்கொம்பு ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவில்.

    தாடிக்கொம்பு சவுந்தர்ராஜ பெருமாள் கோவில் வைபவத்தில் கலந்து கொண்டு பெருமாளை வழிபடுவதால் வாழ்வில் ஏற்படுகின்ற கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி இன்பங்கள் அதிகரிக்கும். இன்றைய தினம் சுவாதி நட்சத்திரம் ஆகும். சுவாதி நட்சத்திரம் என்பது நரசிம்ம மூர்த்தியின் அவதார நட்சத்திரம் ஆகும்.

    எனவே இந்த தினத்தில் இந்த தாடிக்கொம்பு பெருமாள் கோவிலுக்கு வந்து நரசிம்ம மூர்த்திக்கு பூக்கள் மற்றும் துளசி மாலை சாற்றி, தீபமேற்றி வழிபாடு செய்வதால் தீர்க்க முடியாத கடன் பிரச்சனையில் இருந்து மீள முடியும். மனநிலை பாதிப்பு சித்தபிரம்மை பாதிக்கப்பட்டவர்களின் நோய்கள் நீங்கி மனத்தெளிவு உண்டாகும்.
    அகத்தீஸ்வரர் ஆலய தீர்த்தத்தில் ஆடி மாதச் செவ்வாய்க் கிழமைகளில் நீராடி விரதம் இருப்போர் புத்திரதோஷம் நீங்கப் பெறுவர். செவ்வாய் தோஷம் நீங்கித் திருமணம் நடைபெறும்.
    நவக்கிரகங்களில் அங்காரகன் (செவ்வாய்) தனக்கு ஏற்பட்ட சாபம் நீங்க, தீர்த்தம் உண்டாக்கி சிவனை வழிபட்ட தலம் இது. எனவே இது செவ்வாய் தோஷ பரிகார தலமாக திகழ்கிறது. அங்காரகன் உண்டாக்கிய தீர்த்தம் கோயிலுக்கு வெளியே இருக்கிறது. தீர்த்தக் கரையிலுள்ள அரசமரத்தடியில் அங்காரகன் காட்சி தருகிறார். அருகில் வடக்கு நோக்கி வலம்புரி விநாயகர் இருக்கிறார். பக்தர்கள் இக்கோயிலை, “செவ்வாய்க்கிழமை கோயில்’ என்றே அழைக்கிறார்கள். அகத்தியருக்கு சிவன், ஒரு ஆடி மாத செவ்வாய்க் கிழமையன்று காட்சி தந்ததாக ஐதீகம். எனவே இங்கு ஆடி செவ்வாய்க்கிழமைகளில் சுவாமி, அம்பாளுக்கு விசேஷ வழிபாடு நடக்கிறது.

    ஆடி செவ்வாய்க்கிழமைகளில் பொதுவாக சக்தி தலங்களில்தான் பக்தைகள் கூட்டம் நிரம்பி வழியும். பொங்கல் வைப்பதும், நாகர் சிலைகளுக்கு அபிஷேகம் செய்வதும், புற்றுக்கு முட்டை, பால் ஊற்றுவதும் கோலாகலமாக இருக்கும். ஆனால் சிவத்தலமான இங்கு செவ்வாய்க்கிழமைகளில் குவியும் பக்தைகள் கூட்டம் சக்தி தலங்களில் திரளும் கூட்டத்தையும் மிஞ்சுவதாக உள்ளது. அந்த வகையிலும் இந்த அகத்தீஸ்வரர் ஆலயம் செவ்வாய்க்கிழமை கோவில் என்ற புகழை பெற்றுள்ளது.

    ஆண்டுக்கு ஆண்டு இந்த தலத்தில் ஆடி செவ்வாய்க்கிழமைகளில் குவியும் பக்தைகள் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு பக்தைகள் எண்ணிக்கை கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு உயர்ந்துள்ளது.

    இங்குள்ள தீர்த்தம் அங்காரக தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. இந்த தீர்த்தத்தில் ஆடி மாதச் செவ்வாய்க் கிழமைகளில் நீராடி விரதம் இருப்போர் புத்திரதோஷம் நீங்கப் பெறுவர். செவ்வாய் தோஷம் நீங்கித் திருமணம் நடைபெறும். திருமணம் ஆகாதவர்கள் இந்தத் தீர்த்தத்தில் நீராடி விரதமிருந்து வழிபட்டால் தங்களுக்குரிய வாழ்க்கைத் துணையைப் பெறுவது உறுதி. அமாவாசையில் நீராடுவோர் சத்துரு பயமின்றி வாழ்வர். பவுர்ணமியில் நீராடுவோர் சகல சம்பத்துக்களும் பெற்றுச் சகல யோகம் மிக்க பெருவாழ்வு வாழ்வர்.
    மயிலாப்பூர் கோலவிழி அம்மன் கோவிலில் 7 முறை பிரதட்சிணம் செய்து அர்ச்சனை செய்தால் திருமணத் தடைகளும், தோஷங்களும் நீங்குவதாக பக்தர்கள் சொல்கிறார்கள்.
    மயிலாப்பூர் கோலவிழி அம்மன் கோவில், கபாலீஸ்வரர் ஆலயத்திற்கு இணையான தொன்மைச் சிறப்பு வாய்ந்தது.

    கோலவிழியம்மன் ஆலயத்தில் திரிசூலம் இரண்டு, பலி பீடம் இரண்டு, கருவறையில் தேவியின் திருவுருவம் இரண்டு என எல்லாமே இரண்டிரண்டாகவே உள்ளன. இதனால் தன்னை நாடி வரும் பக்தர்களின் கோரிக்கைகளை இரட்டிப்பாகவே நிறைவேற்றித் தருகிறாள் இந்த அன்னை.

    கருவறைக்கு முன் உள்ள மண்டபத்தில்  சப்த மாதர்கள் அருள்கின்றனர். ஞாயிறு, செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் ராகுகால நேரங்களில் மஞ்சள் நூலில் விராலி மஞ்சளைக் கோர்த்து, கோலவிழி அம்மனின் திருவடியில் வைக்கிறார்கள். பின் அந்த விராலி மஞ்சள் மாலையை சப்தமாதர்களில் ஒருவளாக அருளும் வாராகிக்கு அணிவித்து அந்த வாராகியை 7 முறை பிரதட்சிணம் செய்து அர்ச்சனை செய்தால் திருமணத் தடைகளும், தோஷங்களும் நீங்குவதாக பக்தர்கள் சொல்கிறார்கள்.

    தேவியின் வாகனமான சிங்கத்தின் முன் தேங்காயை உடைத்து நல்லெண்ணெய், இலுப்ப எண்ணெய், நெய், வேப்ப எண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகிய 5 எண்ணெய்களைக் கலந்து அந்த உடைத்த தேங்காய் மூடிகளில் ஊற்றி திரிபோட்டு விளக்கேற்றி, வாழை இலையில் அரிசியை பரப்பி அதன்மேல் அந்த விளக்கை வைத்து ஆல யத்தை வலம் வந்தால் எண்ணியதெல்லாம் கை கூடும்.

    இந்த அம்மனை வழிபட்டால் எவ்வளவு கொடூரமான ராகு தோஷமும் உடனே விலகி விடும். சிலர் 27 வாரம் பிரதட்சணம் செய்வதுண்டு. 9 வாரம் பிரதட்சணம் செய்தால் எடுத்த காரியத்தில் வெற்றி உண்டாகும். சந்திராஷ்டமம் நேரத்தில் ஏதாவது சொன்னாலோ, பேசினாலோ இடையூறு, பிரச்சினை ஏற்படும் என்று சொல்வார்கள். எனவே சந்திராஷ்டமம் உள்ள நாட்களில் உரியவர்கள் இந்த தலத்துக்கு வந்து வழிபட்டு சென்றால் சந்திராஷ்டமம் தாக்குதலால் எந்த பிரச்சினையும் வராது என்கிறார்கள்.
    ×