search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    எல்லம்மன்
    X
    எல்லம்மன்

    திருமண தடை, கடன் பிரச்சனைகளை தீர்க்கும் அம்மன்

    திருமணம் நடைபெறவும், பிள்ளைப் பேறுக்காகவும், தீராத நோய்கள் தீரவும், கடன்கள் தொலையவும் இப்படிப் பல பிரச்சனைகளுக்காகவும் மக்கள் இந்த எல்லம்மனை வேண்டி வழிபடுவது வழக்கம்.
    திருவல்லிக்கேணி ரயில் நிலையத்திலிருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் எல்லம்மன் ஆலயம் உள்ளது. இங்குள்ள சுந்தரமூர்த்தி விநாயகர் கோவில் வீதியில்தான் சீர்மிகு சிறப்புள்ள எல்லம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் கட்டப்பட்டு சுமார் 550 ஆண்டுகளாவது ஆகி இருக்கக்கூடும்.

    வெள்ளிக்கிழமை தோறும் அருள்மிகு எல்லம்மன் ஆலயத்துக்கு தாய்மார்கள் கூட்டம் அலைகடலோ என்று எண்ணும்படியாக வருகிறது. சுகாசினி மண்டலியைச் சேர்ந்த தாய்மார்கள் விளக்கு பூஜையும், குங்கும அர்ச்சனையும் செய்து அருள்மிகு எல்லம்மனை போற்றுகிறார்கள். கோரும் வரம் கொடுத்து கோரிக்கையை நிறைவேற்றுவதில் எல்லம்மனுக்கு இணை எல்லம்மனே என்று சொல்லி அந்த தாய்மார்கள் பூரிப்பதை காணலாம்.

    திருமணம் நடைபெறவும், பிள்ளைப் பேறுக்காகவும், தீராத நோய்கள் தீரவும், கடன்கள் தொலையவும் இப்படிப் பல பிரச்சனைகளுக்காகவும் மக்கள் இந்த அம்மனை வேண்டி வழிபடுவது வழக்கம். இப்படிப் பலவித பிரச்சினைகளுக்கும் வெள்ளி அன்று வந்து வழிபட்டால் உடனே வினை தீர்ந்து விடும். கேட்கும் வரமும் நிச்சயம் கிடைக்கும் என்கின்றனர்.

    மேலும் சர்க்கரை நோயுள்ளவர்கள் இக்கோவில் வந்து இந்த எல்லையம்மனை வேண்டிக் கொண்டு சர்க்கரைக் காப்புச் செய்தால் குணமாவது உறுதி என்கிறார்கள். பிறகு அவரவர்கள் தங்களது நிலைக்கேற்றவாறு சந்தனக்காப்பும், மஞ்சள் காப்பும், குங்குமக் காப்பும், கூடச் செய்து வழிபடுவதுண்டு. இவ்வாறு தங்களது வேண்டுதலையைச் செய்து பிரச்சினைகள்யாவும் நீங்கப்பெற்று மகிழ்வுடன் செல்வதைக் காணலாம்.

    இவ்வாலயத்திற்கு வந்து ஒருமண்டல கால அளவு 108 பிரதட்சணம் செய்து வந்தால் திருமண வாழ்க்கை நிச்சயம் கைகூடும் என்பர். 
    Next Story
    ×