என் மலர்tooltip icon

    தோஷ பரிகாரங்கள்

    சிலருக்கு திருமண தோஷம் இருக்கும் பட்சத்தில் திருமணம் நடக்க கால தாமதம் ஆகிறது. இந்த திருமண தோஷத்திற்கான பரிகாரம் என்ன என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.
    திருமண தோஷம் உள்ள ஆணோ அல்லது பெண்ணோ உங்கள் ஊரிலுள்ள துர்க்கை அம்மன் கோவில் அல்லது சந்நிதியில், வெள்ளிக்கிழமைகளில் ராகு காலத்தில் நெய் விளக்கேற்றி, வழிபட்டு வர வேண்டும். இது போன்று 27 வெள்ளிக்கிழமைகள் செய்து வர திருமண தோஷம் நீங்கி விரைவிலேயே நல்ல வரன் மற்றும் வது அமையும்.

    கும்பகோணத்திற்கு அருகே இருக்கும் “திருமணஞ்சேரி” என்ற கோவிலுக்கு சென்று அக்கோவிலின் இறைவனான சுந்தரேஸ்வரர் மற்றும் அம்பாளை வணங்கி, அக்கோயிலை 9 முறை வலம் வந்து வேண்டுதலை முடிக்க, 90 நாட்களுக்குள் திருமணம் தோஷம் கொண்ட ஆண்களுக்கும், பெண்களும் அத்தோஷங்கள் நீங்கி சிறப்பான திருமண சம்பந்தம் அமையும்.
    நூபுர கங்கை தீர்த்தத்தில் இரும்பு சத்தும், தாமிர சத்தும் அதிகம் இருப்பதாக ஆராய்ச்சி முடிவுகள் சொல்கிறது. நோய்கள் தீர்க்கும் சக்திக் கொண்டதாக இத்தீர்த்தம் விளங்குகிறது.
    பழமுதிர்சோலை முருகன் கோவிலில் இருந்து சிறிது தூரம் மேல் ஏறிச் சென்றால், வேடுவர்களின் குலதெய்வமான ராக்காயி கோவில் உள்ளது. இங்கு நூபுர கங்கை தீர்த்தம் காணப்படுகிறது. ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக இந்த தீர்த்தம் அறியப்படுகிறது. இந்த தீர்த்தம் உற்பத்தியாகும் இடம் பல ஆராய்ச்சிகளுக்கு இடையிலும் கூட இதுவரை கண்டுப்பிடிக்கப்படவில்லை என்று சொல்கிறார்கள்.

    யானையின் துதிக்கைப் போல, பருமனாக அமைந்த கோமுகியின் வழியாக மாதவி மண்டபத்தில் வந்து விழுகின்றது, இந்த நூபுர கங்கை தீர்த்தம். இந்தத் தீர்த்தத்தில் இரும்பு சத்தும், தாமிர சத்தும் அதிகம் இருப்பதாக ஆராய்ச்சி முடிவுகள் சொல்கிறது. நோய்கள் தீர்க்கும் சக்திக் கொண்டதாக இத்தீர்த்தம் விளங்குகிறது. இத்தீர்த்தம் தெற்கு நோக்கி பாயும்போது ‘சிலம்பாறு’ என்றும் அழைக்கப்படுகிறது. சோலைமலையின் கீழ் வீற்றிருக்கும் அழகரின் அடிகளை வருடிக்கொண்டு கடைசி யாக ஏரிகளில் கலந்து வயல்களில் பாய்கிறது. ஆற்று நீரின் ருசியும், ஆற்று நீரால் விளையும் தானியங் களின் ருசியும் மிகுந்திருப்பதால் இதற்கு ‘தேனாறு’ என்றும் பெயர். இந்தத் தீர்த்தத் தண்ணீரில்தான் புகழ் பெற்ற அழகர்கோவில் பிரசாதமான ‘சம்பா தோசை’ தயார் செய்யப்படுகிறது.

    இங்கிருந்து ஒன்றரை மைல் தூரத்தில் இருக்கிறது, அனுமன் தீர்த்தம். இங்கு ஒரு அனுமன் ஆலயமும் உள்ளது. இதற்குச் சற்று மேல் பகுதியில் கருட தீர்த்தம், கருடர் கோவில் இரண்டும் இருக்கின்றன. அதன் பக்கத்தில் பாண்டவ தீர்த்தமும், கோவிலும் காணப்படுகிறது. மலையின் வடக்கு பக்கத்து சரிவில், பார்த்த உடனேயே பாவத்தை போக்கக் கூடிய ‘பெரிய அருவி தீர்த்தம்’ இருக்கிறது. அழகர் கோவிலுக்குச் சிறிது வடக்கே போனால், ‘உத்தர நாராயண வாவி’ என்னும் தீர்த்தம் உள்ளது. இந்தத் தீர்த்தத்தைக் கொண்டுதான் அழகர் கோவிலின் பரிவார தேவதைகளுக்கு அபிஷேகமும், சமையலும் செய்ய வேண்டும் என்பது ஐதீகம்.

    அழகருடைய திருமஞ்சனத்துக்கு மட்டும் தினந்தோறும், 2 மைல் தூரத்தில் உள்ள நூபுர கங்கை தீர்த்தம் கொண்டு வரப்படுகிறது. சைத்ரோற்சவ காலத்தில் அழகர் மதுரைக்கும், வண்டியூருக்கும் போய்த் தங்கி இருப்பார். அப்போதும் கூட நூபுர கங்கை தீர்த்தம் கொண்டு வந்துதான் அவருக்கு திருமஞ்சனம் செய்யப்படுகிறது. வேறு தீர்த்தத்தில் அழகரை நீராட்டினால், அவர் உருவம் கருத்து விடுகிறது என்பதாலேயே இப்படி செய்யப்படுவதாக கூறுகிறார்கள்.
    பைரவரை வழிபட்டால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும். சிறப்புப் பூஜைகள் செய்வதால் தோஷ நிவர்த்திகளுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும்.
    பைரவரின் திருவுருவத்தில் பன்னிரண்டு ராசிகளும் அடக்கமாகியுள்ளன. தலையில் மேஷ ராசியும், வாய்ப் பகுதியில் ரிஷப ராசியும், கைகளில் மிதுனமும், மார்பில் கடகமும், வயிற்றுப் பகுதியில் சிம்மமும், இடையில் கன்னியும், புட்டத்தில் துலாமும், லிங்கத்தில் விருச்சிகமும், தொடையில் தனுசும், முழந்தாளில் மகரமும், காலின் கீழ்ப்பகுதியில் கும்பமும், அடித்தளங்களில் மீன ராசியும் அமைந்துள்ளதாக ஜாதக நூல்கள் விவரிக்கின்றன.
    பைரவர் பாம்பைப் பூணுலாகக் கொண்டு, சந்திரனை சிரசில் வைத்து, சூலம், மழு, பாசம், தண்டம் ஏந்தி காட்சி தருவார். 

    பைரவரை வழிபட்டால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும். சனி பகவானின் ஆசிரியர் பைரவர் என்று சொல்லப்படுவதால் சனியின் தொந்தரவு இருக்காது. எதிரிகள் அழிவர். பில்லி, சூன்யம், திருஷ்டி அகலும். அக்கம் பக்கத்தவர்களின் தொந்தரவு இருக்காது. யமபயம், தவிர்க்கப்படும்.
    பொதுவாக சிவாலயங்களில் காணப்படும் கால பைரவரை எந்த நேரத்தில் வழிபட்டாலும் அவர் அருள் நிச்சயம் கிட்டும். சிறப்புப் பூஜைகள் செய்வதால் தோஷ நிவர்த்திகளுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும்.
    நம் வாழ்வில் ஏற்படும் துன்பங்களைப் போக்க பல்வேறு பரிகார சிவன் கோவில்கள் உள்ளன. அவை எந்தெந்த மாவட்டங்களில் அமைந்துள்ளன. அந்தக் கோயில்களுக்கு சென்று வழிபட்டால் நாம் எவ்வாறு துன்பங்களில் இருந்து விடுபடலாம் என்பதைப் பார்ப்போம்.
    மனிதனாகப் பிறந்து விட்டாலே இந்த உலகில் ஏற்படும் இன்ப துன்பங்களை அனுபவித்தே ஆக வேண்டும் என்பது அவன் கட்டளை.

    இருப்பினும் நம் வாழ்வில் ஏற்படும் துன்பங்களைப் போக்க பல்வேறு பரிகார சிவன் கோயில்கள் உள்ளன. அவை எந்தெந்த மாவட்டங்களில் அமைந்துள்ளன. அந்தக் கோயில்களுக்கு சென்று வழிபட்டால் நாம் எவ்வாறு துன்பங்களில் இருந்து விடுபடலாம் என்பதைப் பார்ப்போம்.

    நீண்ட காலமாக திருமணம் நடக்காமல் இருப்போர், திருமணம் தட்டிப்போவோருக்கு - திருமணஞ்சேரி, திருவீழிமிழலை. இந்த இரு தலங்களுமே திருவாரூர் மாவட்டத்தில் அமைந்திருப்பது சிறப்பு. இக்கோவில்களில் பரிகார பூஜை செய்து வழிபடலாம்

    குழந்தைப்பேறு வேண்டுவோர் - திருவெண்காடு சென்று வழிபடலாம். இந்த தலம் நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ளது.

    நாகதோஷம் உள்ளவர்கள் - திருநாகேஸ்வரம் கோவில் (தஞ்சாவூர் மாவட்டம்), சங்கரன்கோயில் (திருநெல்வேலி மாவட்டம்).

    மூட்டு வலி போன்ற தீராத நோய்கள் நீங்க - வைத்தீஸ்வரன் கோயில் (நாகை மாவட்டம்), சூரியனார் கோயிலை ஒட்டியுள்ள திருமங்கலக்குடி (தஞ்சாவூர்).

    மனநோய் தீர திருமுருகன் பூண்டி சென்று வழிபட வேண்டும். இக்கோயில் கோவை மாவட்டத்தில் உள்ளது.

    குருவருள் பெற (குருஸ்தலம்) - ஆலங்குடி (திருவாரூர்), திருச்செந்தூர் (தூத்துக்குடி மாவட்டம்).

    தீமைகள் யாவும் தொலைய பவானி சங்கமேஸ்வரர் ஆலயம் சென்று வழிபட வேண்டும். ஈரோடு மாவட்டத்தில் இக்கோயில் உள்ளது.

    பிறவியற்ற நிலையை அடைய திருவாரூர், திருவண்ணாமலை, சிதம்பரம் ( சிவன் கோயில்களை வழிபடல் வேண்டும்.

    கடன் தொல்லை தீர்ந்து நிம்மதி பெற திருச்சேறை ரண ருண ஈஸ்வரரை (தஞ்சாவூர்) வழிபட வேண்டும்.

    கர்ப்பிணிப் பெண்கள் சுகப்பிரசவம் ஆவதற்கு திருக்கருகாவூர் கர்ப்பரட்சகாம்பிகை (தஞ்சை) மற்றும் குங்குமவல்லி சமேத தான்தோன்றீஸ்வரரை (திருச்சி) வணங்குதல் வேண்டும்.

    பித்ரு தோஷம் எனப்படும் முன்னோர்களை வழிபடத் தவறியவர்களுக்கு ஏற்படும் தீவினைகளுக்கு ராமேஸ்வரத்தில் (ராமநாதபுரம்) உள்ள ராமநாத சுவாமியை வழிபடலாம்.

    செவ்வாய் தோஷம் நீங்க வைத்தீஸ்வரன் கோயில் (நாகப்பட்டினம்).

    விஷக்கடி நிவாரணத்திற்கு சங்கரன் கோயில் (திருநெல்வேலி) சங்கரநயினாரை வழிபட வேண்டும். இராமநாதபுரம் அருகே உள்ள நயினார் கோயில் சென்றும் வழிபடலாம்.

    வழக்குகளில் வெற்றியடைய அய்யாவாடி பிரத்யங்கிரா தேவி கோவில் (தஞ்சாவூர்) கடவுள் வழிபாடு.

    சனி தோஷம் நீங்கி சுபிட்சம் பெற திருநள்ளாறு (காரைக்கால்), திருக்கொள்ளிக்காடு (தஞ்சாவூர்) சென்று வணங்கலாம்.

    ராகு கேது பரிகாரத்தை இணைந்து மேற்கொள்ள திருப்பாம்புரம் (திருவாரூர்) கோயில்.

    மேற்கண்ட கோயில்களில் உரிய காலங்களில் சென்று இறைவனை வழிபட்டு பரிகார பூஜைகள் செய்வது சிறப்பு. உங்களின் ஜென்ம நட்சத்திரம் வரும் நாளில் இந்த பரிகார பூஜைகளை செய்வது நலம் பயக்கும்.
    கார்த்திகை மாதம் தேய்பிறை அஷ்டமி பைரவருக்கு ஜென்ம அஷ்டமி ஆகும். ஒருவரின் உண்மையான கோரிக்கைகளை நம்பிக்கையுடன் பைரவரிடம் வேண்டும் போது 30 தினங்களுக்குள் நிறைவேறுகிறது.
    வெல்லம் கலந்த பாயசம், உளுந்து, வடை, பால், தேன், பழம், வில்வ இலைகளால் மூல மந்திரம் சொல்லி அர்ச்சனை செய்ய தொழில் விருத்தியாகும். ஸ்வர்ணாகர்ஷண பைரவ அஷ்டகம் தன செழிப்பை தரும். வெள்ளிக்கிழமை, திங்கட்கிழமை இரண்டு நாட்களிலும் சந்தியா காலங்களில் படிப்பவர்கள் வாழ்க்கையில் வெற்றியையும், தன விருத்தியையும் அடைவார்கள். 

    பெளர்ணமி அன்று இரவு எட்டு மணிக்கு தீபத்தை ஏற்றி வைத்துக்கொண்டு பதினெட்டு முறை பாராயணம் செய்ய வேண்டும். இவ்விதம் ஒன்பது பெளர்ணமிகளில் பாராயணம் செய்தால் கண்டிப்பாக தன வரத்தை அடையலாம். நீண்ட நாட்களாக உள்ள வறுமையிலிருந்து விடுபடலாம். ஒன்பதாவது பெளர்ணமியன்று அவலில் பாயசம் நைவேத்தியம் செய்யலாம். கார்த்திகை மாதம் தேய்பிறை அஷ்டமி பைரவருக்கு ஜென்ம அஷ்டமி ஆகும். இந்த தினத்தில் அடிப்படையாக கொண்டு ஒவ்வொரு மாதமும் தேய்பிறை அஷ்டமி அன்று பைரவர் வழிபாடு நடத்தப்படுகிறது. ஒருவரின் உண்மையான கோரிக்கைகளை நம்பிக்கையுடன் பைரவரிடம் வேண்டும் போது 30 தினங்களுக்குள் நிறைவேறுகிறது. சித்திரை- பரணி, ஐப்பசி- பரணி போன்ற மாதங்களில் வரக்கூடிய பரணி நட்சத்திரம் கால பைரவருக்கு விசேஷ நாட்கள் ஆகும். ஏனெனில் பரணி நட்சத்திரத்தில் தான் பைரவர் அவதரித்தார். எனவே பரணி நட்சத்திரக்காரர்கள் பைரவரை வழிபட்டால் புண்ணியமும், பலனும் அதிகம் கிடைக்கும். தை மாதம் செவ்வாய்க்கிழமைகளில் பைரவரை வழிபட்டு விரதம் இருப்பது மிகுந்த பலன்களை கொடுக்கும்.
    திருவண்ணாமலையை சுற்றி உள்ள 8 லிங்க கோவில்களுக்கும் சென்று வழிபட்டாலே கோடி புண்ணியம் பெற்றதற்கு சமமாகும்.
    வானுயர ஓங்கி வளம்பெற விளங்கும் மலையினை அண்ணாமலை அண்ணலின் புனித திருவடியாகவே மக்கள் போற்றி வணங்குவர். மலையை சுற்றி வரும் பக்தர்கள் ஆதி வாரத்தில் சிவபதமும், சோம வாரத்தில் தேவேந்திர வாழ்வும், மங்கல வாரத்தில் பிறவிப் பிணி நீங்கிய பெரு வாழ்வும், புதன் வாரத்தில் தேவராகும் தகுதியும், குருவாரத்தில் முனிவர்க்கம் மேலான பதவியும், சுக்ர வாரத்தில் விஷ்ணு பதமும், சனி வாரத்தில் நவக்கிரக பலனும் பெறுவர்.

    மலையை சுற்றி உள்ள 8 லிங்க கோவில்களுக்கும் சென்று வழிபட்டாலே கோடி புண்ணியம் பெற்றதற்கு சமமாகும். மலைப் பிரஹாரத்தில் சக்கர தீர்த்தம், அக்னி தீர்த்தம், பாண்டவ தீர்த்தம் உள்பட 360-க்கும் மேற்பட்ட தீர்த்தங் களும் உள்ளன. பால தீர்த்தம், சிம்ம தீர்த்தம், எமதீர்த்தம், சோணநதி, உண்ணாமலை தீர்த்தம், வருண தீர்த்தம், அசுவினி தீர்த்தங்களும் உள்ளன. வழிநெடுக உள்ள கோவில்களுக்கும் புண்ணிய தீர்த்தங்கள் உள்ளன.

    அண்ணாமலையாரை தரிசித்து அருளாசியை பெறுவோம்.
    பணம் ஏராளம் வந்தும் அது தங்கவில்லையென்றால் வீட்டில் ஏதோ தவறு இருக்கிறது அல்லது நம் செயலில் ஏதோ தவறு இருக்கிறது என்பது தான் உண்மை. அப்படிப்பட்டவர்கள் இந்த பரிகாரங்கள் செய்தால் உங்கள் வீட்டில் செல்வத்தை தங்க வைக்க முடியும்.
    வீட்டில் எவ்வளவு தான் பணம் வந்தாலும் தங்காது என்று புலம்புகிறவர்கள் தான் அதிகம். பணம் ஏராளம் வந்தும் அது தங்கவில்லையென்றால் வீட்டில் ஏதோ தவறு இருக்கிறது அல்லது நம் செயலில் ஏதோ தவறு இருக்கிறது என்பது தான் உண்மை. அப்படிப்பட்டவர்கள் இந்த பரிகாரங்கள் செய்தால் உங்கள் வீட்டில் செல்வத்தை தங்க வைக்க முடியும்.

    காலையில் எழுந்ததும் வீட்டுக்கதவை திறக்கும் போது, மகாலஷ்மியே வருக என்று 3 முறை கூற வேண்டும். காலை 4.30 லிருந்து 6 மணிக்குள் வீட்டு வாசலில் சாணம் தளித்து, அரிசி மாவினால் கோலம் போட வேண்டும். இவ்வாறு செய்வதால் மகாலஷ்மியின் அருள் கிடைக்கும்.
     
    பெண்கள் அதிகாலை நேரத்தில் படுக்கையை விட்டு எழ வேண்டும். அந்த நேரத்தில் தேவர்களும், பித்துருக்களும் வீடு தேடி வருவார்கள். அப்போது நாம் உறங்கக் கூடாது. காலையில் எழுந்தவுடன் யார் முகத்தையும் பார்க்காமல் வாய் கொப்பளித்து விட்டு, தண்ணீர் எடுத்து இரண்டு மடக்கு குடிக்க, லஷ்மி கடாட்சம் கிடைக்கும், கோபம் வராது.

    சந்தோச ஒலி, பறவைகள் எழுப்பும் இனிய கீதங்கள், வீணை, மிருதங்கம் போன்ற வாத்தியங்களின் இனிய இசை நம் இல்லங்களில் நிறைந்திருந்தால் லஷ்மி கடாட்சம் பெருகும். முதலில் பெண்குழந்தை பிறந்தால் லஷ்மி கடாட்சம் பெருகும். பின் ஆண்குழந்தை பிறந்தால் நல்லது.
     
    செவ்வாய், வெள்ளி ஆகிய இரண்டு நாட்களிலும் கொஞ்சம் மஞ்சள் எடுத்து ஒரு செம்பு தண்ணீரில் கரைத்து, அந்த கரைசலை வீட்டை சுற்றி தெளியுங்கள். மஞ்சளுக்கு துர்சக்திகளை விரட்டும் ஆற்றல் உண்டு. கண்திருஷடி நீக்கும், மஞ்சள் மகாலஷ்மியின் சொரூபம் என்பதால் செல்வத்தை அதிகமாக ஈர்க்கும்.

    செவ்வாய், வெள்ளி கிழமைகளில் இரவு 8-9 மணிக்குள் மூன்று வெள்ளை சூடங்களை கையில் எடுத்து வீட்டில் உள்ளவர்களுக்கு திருஷ்ட்டி சுற்றி, வீட்டின் முற்றத்தில் வைத்து ஏற்றுங்கள். குடும்பத்தின் மீதும், குடும்ப உறுப்பினர் மீதும் உள்ள கண்திருஷ் விலகி விடும். இதை தொடர்ந்து செய்து வரும்பொழுது குடும்பத்தில் செல்வ பெருக்கு ஏற்படுவதை பார்க்கலாம்.

    வீட்டு பூஜை அறையில் வெண்கல தட்டு ஓன்று வையுங்கள். அந்த தட்டில் ஒரு குபேரன் படம் அல்லது குபேரன் சிலையை வைத்து அந்த தட்டில் சில்லறை நாணயங்களை போட்டு வையுங்கள். வியாழக்கிழமை அன்று மாலை 4-5 வரை உள்ள நேரத்தை குபேர காலம் என்பார்கள்.

    குபேர காலத்தில் தாமரை திரையில் நெய் விளக்கேற்றி குபேரனை வழிபடும் போது, தட்டில் உள்ள சில்லறை நாணயங்களை இரு கைகளாலும் அள்ளி, தட்டில் சத்தம் வருகிற மாதிரி மீண்டும் போட வேண்டும். ஏனென்றால் நாணய சத்த ஒலி குபேரனுக்கு பிடித்த ஒன்றாகும். இதை குளித்து சுத்தமாக செய்ய வேண்டும். இப்படி செய்தால் வீட்டில் செல்வம் நிலைத்து நிற்கும்.
     
    செவ்வாய், வெள்ளிக்கு கிழமைகளில் 5 முகம் கொண்ட குத்து விளக்கு ஏற்றி திருமகளை வழிபட வேண்டும். வீட்டுக்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு குங்குமமும், தண்ணீரும் வழங்க வேண்டும். அவர்களுக்கு குங்குமம் கொடுக்கும் முன் தான் குங்குமம் இட்டுக் கொண்டு பிறகு அவர்களுக்கு கொடுக்க வேண்டும்.

    அவர்களுக்கு மஞ்சள் கிழங்கு கொடுப்பதால் பல ஜென்மங்களில் செய்த பாவங்கள் விலகி பாக்கியங்களும், பொருளும், சந்தோசமும் பெருகும். நெற்றியில் எப்பொழுதும் குங்குமம் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். பால் பொங்கி வழியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

    மாலையில் இருட்டுவதற்கு முன்பதாக வீட்டில் விளக்கேற்ற வேண்டும். மாலையில் விளக்கேற்றியவுடன் வெளியே செல்லக் கூடாது. விளக்கு வைத்த பிறகு, தலைவாருதல், பேன் பார்த்தல், முகம் கழுவுதல் போன்றவை செய்யக்கூடாது.

    விளக்கு வைத்த பிறகு குப்பைகூளங்களை வெளியே வீச கூடாது. பால், தயிர், பச்சைக்காய்கறிகள் ஆகியவற்றை இரவில் கடன் வாங்குதல், கடன் கொடுத்தல் கூடாது.
     
    ஒவ்வொரு பெளர்ணமி அன்று மாலை குளித்து சத்ய நாராயணரை செண்பக மலர், துளசி இவைகளால் அர்சித்து கல்கண்டு, பால், பாயாசம் மற்றும் கனிவகைகளை வைத்து வணங்கிய பின்னரே இரவு உணவு உண்ண வேண்டும்.

    வெள்ளிக் கிழமையன்று வீட்டிற்கு உப்பு வாங்குவது, அதிர்ஷ்டம் மற்றும் எல்லாவித செல்வங்களையும் கொடுக்கும். வெள்ளிக் கிழமைகளில் பணம் கடன் கொடுப்பது, அரிசி வறுப்பது ஆகியவை செய்யக் கூடாது.

    செவ்வாய் கிழமைகளில் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும். பெண்கள் சனிக்கிழமை தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளிக்க கூடாது. தண்ணீரும், நெருப்பும் சிக்கனமாக உபயோகிப்பவர்களுக்கு எப்போதும் லஷ்மி கடாட்சம் உண்டு.

    அன்றாடம் ஒரு பிடி அரிசியை ஒரு பெரிய பாத்திரத்தில் கடவுளுக்கு (அன்னதானம் செய்ய) என்று போட்டால் தான் லஷ்மி கடாட்சம் உண்டாகும். மட்டுமல்லாது லஷ்மி வீட்டில் வாசம் செய்வாள்.
     
    தினம் தோறும் மாலை வேளைகளில் வீட்டில் விளக்கேற்றும் பொழுது, வீட்டின் தலை வாசல் இருபுறமும் மணல் அகல்விளக்கு ஏற்றி வையுங்கள். இது செல்வத்தை ஏற்கும் சக்தி வாய்ந்தது. இதை நம் முன்னோர்கள் காலங்காலமாக கடைப்பிடித்து வந்த நடைமுறையாகும்.
    திருவெள்ளறை புண்டரீகாட்சபெருமாள் கோவிலில் தம்பதியினர் வழிபட்டால் குழந்தைப்பேறு கிடைக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.
    திருவெள்ளறை புண்டரீகாட்சபெருமாள் கோவில் 108 திவ்யதேசங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த கோவிலில் உள்ள பெருமாள் மற்றும் தாயாரை வணங்குவதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்துசெல்கின்றனர். 

    சிறப்புமிக்க இந்த கோவிலில்ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் வரும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை அன்றும், இக்கோவிலில் உள்ள பத்மதீர்த்தம், வராகதீர்த்தம், மணிகர்ணிகா தீர்த்தம், குசஹஸ்திதீர்த்தம், கந்தசீரபுஷ்கரணி தீர்த்தம் ஆகிய பஞ்ச தீர்த்தங்களில் புனிதநீராடி, பலிபீடத்தை 12 முறை சுற்றி வந்து, நெய்தீபம் ஏற்றியும், பொங்கல் படையலிட்டு புண்டரீகாட்சபெருமாள், பங்கஜவல்லி தாயாரை பயபக்தியுடன் வணங்கி, அதன்பிறகு படையலிட்ட பொங்கலை தம்பதியினர் சாப்பிட்டால் குழந்தைப்பேறு கிடைக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும். 

    இந்நிலையில், கார்த்திகை மாதஇரண்டாவது ஞாயிற்றுக்கிழமையானநேற்று திருமணமாகி பலவருடங்களாகியும் குழந்தை இல்லாத தம்பதியினர் நேற்று திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்து ஐந்து தீர்த்தங்களில் புனித நீராடி நெய்தீபம் ஏற்றி, பொங்கல் படையலிட்டு பெருமாள் மற்றும் தாயாரை பயபக்தியுடன் வணங்கிச் சென்றனர்.
    தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்கள் அகல, திருக்கார்த்திகைக்கு முந்திய நாளான பரணி நட்சத்திரமன்று (28.11.2020) அன்று மாலையில் இல்லம் எங்கும் விளக்கேற்றி, இறைவன் சன்னிதியிலும் விளக்கேற்றி வழிபட வேண்டும்.
    மனதால் கூட பாவம் செய்யக்கூடாது. பிறருக்கு தீங்கு செய்யவும் நினைக்கக்கூடாது என்று நம் முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள். ஆனால் பாவங்கள் அதிகரித்து வரும் யுகமாக, இந்த கலியுகம் இருக்கிறது. அப்படி நாம் அறியாமல் செய்யும் பாவங்களுக்கு பரிகாரமாக, தீபங்களை ஏற்றி தினமும் வழிபாடு செய்ய ஆலயங்களை நோக்கியும் மக்கள் அடியெடுத்து வைக்கின்றனர்.

    தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்கள் அகல, திருக்கார்த்திகைக்கு முந்திய நாளான பரணி நட்சத்திரமன்று (28.11.2020) அன்று மாலையில் இல்லம் எங்கும் விளக்கேற்றி, இறைவன் சன்னிதியிலும் விளக்கேற்றி வழிபட வேண்டும்.

    அகல் விளக்குகளை வீட்டின் வாசல் படிகளிலும், உள்ளே உள்ள வாசல்களிலும் படிக்கு மூன்று வீதம் ஏற்றி வைப்பது மரபு. வீட்டில் நல்லெண்ணெயிலும், முருகன் முன்னிலையில் இலுப்பெண்ணையிலும் விளக்கேற்றி வழிபடுவது நல்லது. அப்பொழுதுதான் அஷ்டலட்சுமியும் உங்கள் வீட்டில் அடியெடுத்து வைக்கும். ஐஸ்வர்யம் பெருகும். 
    செவ்வாய் தோஷம் இருப்பவர்கள் அச்சமின்றி வாழ, திருக்கார்த்திகை (29-11-2020) அன்று முருகப்பெருமான் வழிபாட்டையும், சக்தி வழிபாட்டையும் முறையாக மேற்கொண்டால் உடனடியாக நற்பலன்கள் கிடைக்கும்.
    திருமணப் பொருத்தம் பார்க்கின்ற போது, ‘செவ்வாய் ஜாதகமா?’ என்று சிலர் பார்ப்பார்கள். பெண்ணிற்கு செவ்வாய் தோஷ ஜாதகம் என்றால், மாப்பிள்ளைக்கும் அதேபோல் இருக்க வேண்டும். செவ்வாய்க்குரிய தெய்வம் முருகப்பெருமான் மற்றும் சக்தி என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது.

    எனவே செவ்வாய் தோஷம் இருப்பவர்கள் அச்சமின்றி வாழ, முருகப்பெருமான் வழிபாட்டையும், சக்தி வழிபாட்டையும் முறையாக மேற்கொண்டால் உடனடியாக நற்பலன்கள் கிடைக்கும். தோஷம் விலகி யோகம் சேரும்.

    இந்த மாதம் திருக்கார்த்திகை (29-11-2020) வருகின்றது. அன்றைய தினத்தில் வீட்டின் பூஜை அறையில், முருகப்பெருமானை நினைத்து உள்ளம் உருகி வழிபடலாம். திருப்புகழ் படித்தால் விருப்பங்கள் நிறைவேறும்.
    தஞ்சாவூர் கும்பகோணம் சாலையில் திருகருக்காவூர் தலத்தில் வழிபாடு மேற்கொண்டால் திருமணப்பாக்கியம், குழந்தைச்செல்வம் ஆகியவை கிட்டும்.
    திருகருக்காவூர் தஞ்சாவூர் கும்பகோணம் சாலையில் பாபநாசம் என்ற ஊரிலிருந்து தெற்கே சுமார் 7 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இத்தல இறைவன் முல்லைவனநாதர், அம்மை கர்ப்பகரட்சகி, கருகாத்தநாயகி என்று அழைப்படுகின்றனர். இத்தலமானது உசத் காலம் என்றழைக்கப்படும் (காலை 5.30 முதல் 6 மணி வரை) விடியற்காலை வழிபாட்டிற்கு ஏற்றது. இத்தலம் முல்லை வனம் ஆகும்.

    இத்தல இறைவன், விநாயகர், நந்தியெம்பெருமான் ஆகியோர் உளியால் செதுக்கப்படாத சுயம்பு மூர்த்தங்களாவர். ஊர்த்துவ முனிவரின் சாபத்தினால் பாதிக்கப்பட்ட நிருத்துவ முனிவரின் மனைவியான வேதிகை என்ற பெண்ணின் கர்ப்பத்தைக் காத்து அருள்புரிந்தால் அன்னை கருகாத்தநாயகி என்று அழைக்கப்படுகிறார்.

    இங்கு இறைவனுக்கு அபிசேகம் கிடையாது, புனுகு மட்டும் சாத்தப்படுகிறது. இத்தலத்தில் வழிபாடு மேற்கொண்டால் திருமணப்பாக்கியம், குழந்தைச்செல்வம் ஆகியவை கிட்டும். தேவார பாடல் பெற்ற தலங்களில் காவிரியின் தென்கரையில் அமைந்த 18வது தலமாகும்.
    இந்த மூன்று பொருட்களை வாங்கி, பின் சொல்லப்படும் பரிகாரத்தை முறையாக செய்தால் 48 நாட்களில் இந்த பூஜையைச் செய்பவர்களுக்கு, திருமணம் நிச்சயம் என்ற நம்பிக்கையோடு இந்த பதிவினை தொடங்கலாம்.
    உங்கள் வாழ்க்கையை மாற்றப் போகும் அந்த 3 பொருட்களில் முதலாவது லோஅத்திரைப்பட்டை அல்லது இதை லோத்திரைபட்டை என்று சொல்லுவார்கள். இரண்டாவதாக ஆவாரம்பூ, மூன்றாவதாக தாமரை பூ இதழ்கள், ஆவாரம் பூ காய்ந்ததாக இருந்தாலும் பரவாயில்லை. தாமரை பூ இதழ்கள் காய்ந்தது இருந்தாலும் பரவாயில்லை. தவறு ஒன்றும் கிடையாது. இந்த இரண்டு பூக்களும் வாடாமல் புதியதாக கிடைத்தாலும் சரி பயன்படுத்திக் கொள்ளலாம். ஒரு மஞ்சள் நிற துணியை எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் இந்த மூன்று பொருட்களையும் வைத்து ஒரு நூல் போட்டு சிறிய முடிச்சு போல கட்டி வைத்துக் கொள்ளுங்கள்.

    தயார் செய்த இந்த மூட்டை உங்கள் வீட்டு பூஜை அறையிலேயே ஒரு அலமாரியில் இருக்கலாம். தினமும் காலை எழுந்தவுடன் பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்து விட்டு, இந்த முடிச்சை உங்களது உச்சந்தலையில் ஒரு 30 வினாடிகள் வைத்து, மனதார உங்களுக்கு இருக்கக்கூடிய தோஷம் நீங்க வேண்டும். திருமணம் விரைவாக நடக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டு, மீண்டும் அந்த முடிச்சை உங்கள் முன்பாக ஒரு தட்டின் மீதோ அல்லது ஒரு சிறிய கிண்ணத்தின் மீதோ வைத்துக் கொள்ளுங்கள். (திருமணமாகாத ஆண்கள் பெண்கள் இரண்டு பேரும் இந்த பரிகாரத்தை செய்யலாம். பெண்களுக்கு பரிகாரம் செய்ய முடியாத மாதவிலக்கு நாட்களில், அந்த நாட்களை தவிர்த்துக் கொண்டு மீண்டும் தொடரலாம்.) - 

    அதன்பின்பு, வாசனை மிகுந்த தூபத்தை ஏற்றி வைத்துவிட்டு, இந்த முடிச்சுக்கு காண்பிக்க வேண்டும். அடுத்தபடியாக இருகைகளையும் கூப்பி பின்வரும் மந்திரத்தை 27 முறை உச்சரிக்க வேண்டும். உங்களுக்கான திருமணத்தடையை போக்கக்கூடிய அந்த மந்திரம் இதோ!

    ஓம் ஐம் க்லீம் ஸ்ரீம் ஐம் 
    ஐம் ஸ்ரீம் க்லீம் ஐம் ஓம். 

    அவ்வளவுதாங்க, 48 நாட்கள் இந்த முறையை பின்பற்றி பாருங்கள். 48வது நாள் இந்த பூஜை நிறைவடையும் இப்போது, உங்களுடைய வீட்டில் தூபம் போடும் தூபக்கால் கட்டாயம் இருக்கும். அதில் நெருப்பு மூட்டி விட்டு, நீங்கள் தயார் செய்து வைத்திருக்கும் அந்த மஞ்சள் நிற முடிச்சை லோத்திரப்பட்டை, ஆவாரம் பூ, தாமரை இதழ், கொண்ட முடிச்சை அந்த நெருப்பில் போட்டு, 2 ஸ்பூன் நெய் விட்டு அக்னி ஹோமம் நடத்தி விடுங்கள். முடிச்சு கழட்ட வேண்டாம். துணையோடு போட்டு ஹோமம் நடத்தி விடலாம். 

    உங்கள் பூஜை அறையில் இந்த ஹோமம் செய்து நிவர்த்தி செய்து விட்டால், உங்களுடைய தோஷம் அனைத்தும் நிவர்த்தி ஆகி, விமோசனம் கிடைக்கும். திருமணம் உங்களுக்கு கூடிய விரைவில் நிச்சயிக்கப்படும். உங்களுடைய ஜாதக கட்டத்தில் பிரச்சினை மிகவும் வலிமையாக இருந்தால் கூட மூன்று மாதத்திற்குள் உங்களுக்கு நிச்சயம் திருமணம் ஆகும் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.
    ×